உலக ஓசோன் தினத்தை முன்னிட்டு அரசு உயர்நிலைப்பள்ளி மாந்தாங்குடியில் மாவட்ட வன அலுவலர் தலைமையில் 250 மரக்கன்றுகள் நடப்பட்டது. 16 செப்டம்பர் 2026 உலக ஓசோன் தினத்தை அனுசரிக்கும் விதமாக அரசு உயர்நிலைப்பள்ளி மாந்தாங் குடியில் மாவட்ட வன அலுவலர் திரு எஸ் கணேசலிங்கம் அவர்கள் தலைமையில் 250 மரக்கன்றுகள் பள்ளி வளாகத்தில் நட்டு வைக்கப்பட்டு மாணவருடைய உலக ஓசோன் தின விழிப்புணர்வு உரையாற்றினார். மாணவர்கள் உங்களால் முடிந்த பங்களிப்பை நீங்கள் மரக்கன்றுகளை நட்டு வைத்து இப் பூமிப்பந்தை பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டும். முடிந்தவரை நெகிழிப் பை பயன்படுத்துவதை தவிர்த்தல் வேண்டும் பயன்பாட்டில் இல்லாத போது முடிந்தவரை மின்விளக்குகள் மின் சாதனங்களை அனைத்து வைத்து மின்சாரத்தை சேமிக்கும் பழக்கத்தை கொண்டு வர வேண்டும் என பேசினார்.மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் முனைவர் சாலை செந்தில் பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் கலந்து கொண்டு ஓசோன் படலத்தை பாதுகாக்கும் விதமாக மாணவர்கள் ஒவ்வொருவரும் விழிப்புணர்வை பெற்று அவர்தம் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், சமூகத்திற்கும் விழிப்புணர்வை உருவாக்கும் வகையில் மாணவர்கள் செயல்பட வேண்டும் என்று எடுத்துக் கூறி மாவட்ட வன அலுவலர் அவர்கள் தலைமையில் விழிப்புணர்வு உறுதி மொழியை வாசிக்க மாணவர்கள் ஆசிரியர்கள் அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். தோப்புக்கொல்லை வனச்சரகர் திரு ஆ.ராஜேந்திரன் மற்றும் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் திரு ஆர் சடையாண்டி முன்னிலை வகித்தனர். முன்னதாக பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு இரா. சரவணன் பள்ளிக்கு மரக்கன்றுகளை வழங்கிய மன அலுவலர் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொண்டு அனைவரும் மரக்கன்றுகளை பாதுகாப்பாக வளர்த்து பள்ளி வளாகத்தை பசுமை வளாகமாக மாற்றிக் காட்டுவோம் என தகவல் அளித்து வரவேற்புரை ஆற்றினார். பள்ளியின் சுற்றுச்சூழல் மன்ற ஆசிரியர் திரு சண்முகம் நன்றி உரையாற்றினார். வனத்துறையைச் சார்ந்த திரு. கார்த்திக் சுற்றுச்சூழல் மன்றம் மற்றும் தேசிய பசுமை படை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

- ஶ்ரீ வைத்தியநாத தண்டாயுதபாணி ஆலயத்தில், செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு சிறப்பு சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மாநகராட்சி பழைய பேருந்து நிலையம் அருகிலுள்ள ஶ்ரீ வைத்தியநாத தண்டாயுதபாணி ஆலயத்தில், செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு சிறப்பு பூசை நடைபெற்றது. தண்டாயுதபாணிக்கு 16 வகை வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு சந்தானம் மற்றும் மலர் அலங்கரித்து மகா தீபராதனை காண்பிக்கப்பட்டது. இதில் பக்தர்கள் கலந்து வெற்றிலை விளக்கு ஏற்றி சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.1
- பேரறிஞர் அண்ணா பிறந்தநாள்: மணப்பாறையில் திமுக சார்பில் பிரம்மாண்ட ஊர்வலம் திருச்சி மாவட்டம் மணப்பாறையில் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் உற்சாகமாக ஊர்வலம் நடைபெற்றது. மணப்பாறை - திருச்சி சாலையில் உள்ள காந்தி சிலையிலிருந்து தொடங்கிய இந்த ஊர்வலம், ராஜகிரி வழியாக வந்து காமராஜர் சிலையைச் சுற்றி, மணப்பாறை பேருந்து நிலையத்தை வந்தடைந்தது. ஊர்வலத்தின் போது, "பேரறிஞர் அண்ணாவின் புகழ் ஓங்குக!", "டாக்டர் கலைஞரின் புகழ் ஓங்குக!", "முதலமைச்சர் தளபதி ஸ்டாலினின் புகழ் ஓங்குக!" மற்றும் "துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் புகழ் ஓங்குக!" உள்ளிட்ட பல்வேறு கழகக் கோஷங்களைத் தொண்டர்கள் விண்ணதிர எழுப்பினர். பேருந்து நிலையத்தை அடைந்த ஊர்வலத்தினர், அங்குள்ள தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து, பேருந்து நிலையம் முன்புறம் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணாவின் சிலைக்குப் பள்ளித் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, தொண்டர்களுடன் இணைந்து கோஷங்களை எழுப்பினார். இந்நிகழ்வில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.1
- தேவகோட்டையில் முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் 118-ஆவது பிறந்தநாள் விழா , சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை தியாகிகள் பூங்கா அருகில், 23-ஆவது வட்டக் கழகம் சார்பாக பேரறிஞர் அண்ணாவின் 118-ஆவது பிறந்தநாள் விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. நிகழ்வில், திமுக நிர்வாகியும் முன்னாள் கவுன்சிலருமான ஜாஹிர் உசேன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். திமுக, திக உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் அண்ணாவின் மலர் மாலை அணிவிக்கப்பட்ட புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். அண்ணாவின் சிந்தனைகளைப் போற்றும் வகையில் அமைந்த இந்நிகழ்வு, கலந்துகொண்ட அனைவராலும் சிறப்பிக்கப்பட்டது.1
- திருச்சி மாவட்டம் தொட்டியம் வட்டம் சீலை பிள்ளையார்புத்தூர் சமூக மக்கள் கொண்டாடும் மதுக்கரை செல்லாயி விநாயகர் சதுர்த்தி விழா திருச்சி மாவட்டம் தொட்டியம் வட்டம் சீலை பிள்ளையார் புத்தூரில் சமூக மக்கள் கொண்டாடும்... மதுக்கரை செல்லாயி - விநாயகர் சதுர்த்தி விழா பல ஆண்டுகளுக்கு முன்பு ஒருமுறை சீப்ளாபுத்தூர் கிராமத்தில் தூக்கு தேர் திருவிழா நடந்த போது... மதுக்கரை செல்லாயி தேர் - வன்னியர் தெரு வந்தது... பூஜை நிறைவு செய்த போது... பக்தர்களால் தேரை தூக்க முடியாமல் போனதால்... தேரை கலைத்து விட்டு.தனித்தனியாக. தூக்கி சென்றுள்ளனர்... அன்றிலிருந்து மதுக்கரை செல்லாயி வன்னியர் தெருவில் குடிகொண்டிருப்பதாக... மக்கள் நம்புகிறார்கள்... மேலும் தேர் நிற்கும் இடத்தில் தரையில் தினமும் பூஜை செய்து வழிபாடு செய்கின்றனர்...திருக்கோயிலில் விநாயகர் சதுர்த்தி விழா விமர்சையாக கொண்டாடினர் நிகழ்வில் பல்வேறு சமூக மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்1
- முசிறியில் அண்ணா பிறந்த தின விழா தமிழக வெற்றிக்கழக எம்எல்ஏ மற்றும் மாவட்டச் செயலாளர் இணைப்பு வழங்கி கொண்டாடினர். முசிறியில் அண்ணா பிறந்த தின விழா தமிழக வெற்றி கழக மாவட்ட செயலாளர் ஜெகன்மோகன், எம் எல் ஏ விக்னேஷ் ஆகியோர் அண்ணாவின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கி சிறப்பாக கொண்டாடினர். நிகழ்ச்சியில் முசிறி நகரக் கழக செயலாளர்கள் சந்தோஷ் குமார், சந்திரகுமார் வழக்கறிஞர் ராஜசேகர், நகர இளைஞரணி செயலாளர் ஸ்ரீராம், நகர துணை செயலாளர் சிவக்குமார் உள்ளிட்ட ஒன்றிய, நகர கிளைக் கழக நிர்வாகிகள் தொண்டர்கள் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி சிறப்பாக கொண்டாடினர்.1
- கன்னிவாடி அருகே கிணற்றில் வேலை பார்த்துக் கொண்டிருந்த தொழிலாளி தவறி விழுந்து படுகாயம் திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி அருகே சோமலிங்க சுவாமி கோவில் செல்லும் வழியில் நாட்ராயன் என்பவருக்கு சொந்தமான கிணற்றில் உரை அமைக்கும் பணி மேற்கொள்ள கிணற்றுக்குள் இறங்கிய பெரியகுளம், கல்லுப்பட்டி சேர்ந்த ஈஸ்வரன்(32) என்பவர் கம்பி வடம் அறுந்து விழுந்ததில் கிணற்றுக்குள் சென்ட்ரிங் கம்பி உடலில் குத்தி உயிருக்கு ஆபத்தான நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆத்தூர் தீயணைப்புதுறையினர் கம்பியை அறுத்து மீட்பு வலையை பயன்படுத்தி ஈஸ்வரனை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்1
- முசிறி அருகே காட்டுப்புத்தூரில் சைக்கிளில் பைக் மோதியதில் சம்பவ இடத்திலேயே இருவர் பலி காட்டுப்புத்தூர் போலீஸ் விசாரணை கே குமார் செய்தியாளர் முசிறி முசிறி அருகே காட்டுப்புத்தூர் அருகே பைக் –சைக்கிள் மோதல் இருவர் உயிரிழப்பு திருச்சி மாவட்டம் முசிறி அருகே காட்டுப்புத்தூர் அருகே பைக் மற்றும் சைக்கிளும் நேருக்கு நேர் நேற்று இரவு மோதி கொண்டதில் இருவரும் உயிரிழந்தனர். காட்டுப்புத்தூர் காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் சண்முகசுந்தரம் (50). விவசாய வேலை செய்து வந்தவர் நேற்று இரவு வளையப்பட்டிக்கு தனது பைக்கில் சென்றுவிட்டு, காட்டுப்புத்தூர் நோக்கி வந்துள்ளார், இதேபோல், குளத்துப்பாளையம் கிராமத்தை சேர்ந்த கணேசன் (52) கூலி வேலை செய்து வரும் இவர் காட்டுப்புத்தூர் சென்று விட்டு தனது சைக்கிளில் குளத்துப்பாளையம் அருகே சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக பைக்கும், சைக்கிளும் நேருக்கு நேர் மோதிக்கொண்டது .விபத்தில் காயமடைந்த இருவரையும் அப்பகுதியில் இருந்தவர்கள் மீட்டு காட்டுப்புத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சேர்த்தனர் , அங்கு அவர்களை பரிசோதித்த மருத்துவர் இருவரும் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார். இதையடுத்து காட்டுப்புத்தூர் போலீஸார் சம்பவயிடத்திற்க்கு விரைந்து சென்று, இருவரது உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, இந்த விபத்து குறித்து காட்டுப்புத்தூர் போலீஸார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.1
- அரியலூர் கட்டுமான தொழிலாளர்களுக்கு தீபாவளி பண்டிகை போனஸ் ஐயாயிரம் வழங்க கோரி ஆர்ப்பாட்டம். அரியலூர் கட்டுமான தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் கட்டுமான தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் 5,000 ஆயிரம் வழங்க வேண்டும். மணல் ஜல்லி கம்பி பொருட்களின் விலை உயர்வை ஏற்படுத்த வேண்டும். மாநில நல வாரியங்கள் அதிகாரங்கள் பறிக்கும் சமூக பாதுகாப்பு சட்ட தொகுப்பை உடனடியாக வாபஸ் பெற வேண்டும். உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான கட்டுமான தொழிலாளர் கலந்து கொண்டனர்.1
- திருத்துறைப்பூண்டி அருகே கோலாகலமாக நடைபெற்ற ஆவணி தீமிதி திருவிழா ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்பு திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே நெடும்பலத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ ஈஸ்வர காமாட்சி மாரியம்மன் கோயிலில் ஆவணி மாத தீமிதி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. ஆவணி திருவிழாவையொட்டி கடந்த நான்கு வாரங்களாக கோயிலில் சிறப்பு வழிபாடுகளும், அடிகளார் அருள்வாக்கு நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. இந்நிலையில், ஆவணி மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையான இன்று அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, திருத்துறைப்பூண்டி தச்சன்குளக்கரை பிள்ளையார் கோயிலில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம் மற்றும் காவடி எடுத்து ஊர்வலமாக வந்தனர். கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தில் பக்தர்கள் இறங்கி தீமிதித்து, தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். தொடர்ந்து ஸ்ரீ ஈஸ்வர காமாட்சி மாரியம்மனை பயபக்தியுடன் வழிபட்டனர். தீமிதி திருவிழாவையொட்டி திருத்துறைப்பூண்டி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். இதனால் கோயில் வளாகம் முழுவதும் பக்தர்களின் கூட்டத்தால் களைகட்டியது.1