திருத்துறைப்பூண்டி அருகே கோலாகலமாக நடைபெற்ற ஆவணி தீமிதி திருவிழா ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்பு திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே நெடும்பலத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ ஈஸ்வர காமாட்சி மாரியம்மன் கோயிலில் ஆவணி மாத தீமிதி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. ஆவணி திருவிழாவையொட்டி கடந்த நான்கு வாரங்களாக கோயிலில் சிறப்பு வழிபாடுகளும், அடிகளார் அருள்வாக்கு நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. இந்நிலையில், ஆவணி மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையான இன்று அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, திருத்துறைப்பூண்டி தச்சன்குளக்கரை பிள்ளையார் கோயிலில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம் மற்றும் காவடி எடுத்து ஊர்வலமாக வந்தனர். கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தில் பக்தர்கள் இறங்கி தீமிதித்து, தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். தொடர்ந்து ஸ்ரீ ஈஸ்வர காமாட்சி மாரியம்மனை பயபக்தியுடன் வழிபட்டனர். தீமிதி திருவிழாவையொட்டி திருத்துறைப்பூண்டி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். இதனால் கோயில் வளாகம் முழுவதும் பக்தர்களின் கூட்டத்தால் களைகட்டியது.
திருத்துறைப்பூண்டி அருகே கோலாகலமாக நடைபெற்ற ஆவணி தீமிதி திருவிழா ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்பு திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே நெடும்பலத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ ஈஸ்வர காமாட்சி மாரியம்மன் கோயிலில் ஆவணி மாத தீமிதி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. ஆவணி திருவிழாவையொட்டி கடந்த நான்கு வாரங்களாக கோயிலில் சிறப்பு வழிபாடுகளும், அடிகளார் அருள்வாக்கு நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. இந்நிலையில், ஆவணி மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையான இன்று அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, திருத்துறைப்பூண்டி தச்சன்குளக்கரை பிள்ளையார் கோயிலில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம் மற்றும் காவடி எடுத்து ஊர்வலமாக வந்தனர். கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தில் பக்தர்கள் இறங்கி தீமிதித்து, தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். தொடர்ந்து ஸ்ரீ ஈஸ்வர காமாட்சி மாரியம்மனை பயபக்தியுடன் வழிபட்டனர். தீமிதி திருவிழாவையொட்டி திருத்துறைப்பூண்டி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். இதனால் கோயில் வளாகம் முழுவதும் பக்தர்களின் கூட்டத்தால் களைகட்டியது.
- அதிமுக மாவட்ட செயலாளர் சிதம்பரத்தில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தார் கடலூர் கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு சிதம்பரம் வண்டி கேட்டில் அமைந்துள்ள அண்ணா சிலைக்கு மாவட்ட செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான கே ஏ பாண்டியன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் நிகழ்ச்சியில் கடலூர் கிழக்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.1
- ஶ்ரீ வைத்தியநாத தண்டாயுதபாணி ஆலயத்தில், செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு சிறப்பு சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மாநகராட்சி பழைய பேருந்து நிலையம் அருகிலுள்ள ஶ்ரீ வைத்தியநாத தண்டாயுதபாணி ஆலயத்தில், செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு சிறப்பு பூசை நடைபெற்றது. தண்டாயுதபாணிக்கு 16 வகை வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு சந்தானம் மற்றும் மலர் அலங்கரித்து மகா தீபராதனை காண்பிக்கப்பட்டது. இதில் பக்தர்கள் கலந்து வெற்றிலை விளக்கு ஏற்றி சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.1
- அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் புதர்கள் மண்டி கிடப்பதால் மாணவிகள் அச்சம்: திருவாடானை பாரதிநகரில் செயல்பட்டு வரும் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், நூற்றுக்கணக்கான மாணவிகள் 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பயின்று வருகின்றனர்.இப்பள்ளி வளாகத்திற்குள் சீமைக்கருவேல மரங்கள் மற்றும் தேவையற்ற பொருட்கள் அடர்ந்து, புதர் மண்டி காணப்படுகிறது. இதன் காரணமாக, பள்ளி வளாகத்தில் அவ்வப்போது விஷப் பூச்சிகள் மற்றும் ஊர்வன நடமாட்டம் தென்படுவதாகக் கூறப்படுகிறது. இதனால், தினமும் பள்ளிக்கு வரும் மாணவிகள் அச்சத்துடனேயே கல்வி பயிலும் சூழல் நிலவுகிறது.எனவே, மாணவிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாகத் தலையிட்டு பள்ளி வளாகத்தில் உள்ள புதர்களை அகற்றி, தூய்மைப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனப் பொதுமக்கள் மற்றும் பெற்றோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.1
- பொன்னமராவதியில் திமுக சார்பாக பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி திமுக கட்சி அலுவலகத்தில் பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு கட்சி அலுவலகத்தில் பொன்னமராவதி திமுக நகரச் செயலாளர் அழகப்பன் தலைமையில் நடைபெற்ற விழாவில் தொடர்ந்து அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டன. அதில் திராவிடர் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.1
- பேரறிஞர் அண்ணா பிறந்தநாள்: மணப்பாறையில் திமுக சார்பில் பிரம்மாண்ட ஊர்வலம் திருச்சி மாவட்டம் மணப்பாறையில் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் உற்சாகமாக ஊர்வலம் நடைபெற்றது. மணப்பாறை - திருச்சி சாலையில் உள்ள காந்தி சிலையிலிருந்து தொடங்கிய இந்த ஊர்வலம், ராஜகிரி வழியாக வந்து காமராஜர் சிலையைச் சுற்றி, மணப்பாறை பேருந்து நிலையத்தை வந்தடைந்தது. ஊர்வலத்தின் போது, "பேரறிஞர் அண்ணாவின் புகழ் ஓங்குக!", "டாக்டர் கலைஞரின் புகழ் ஓங்குக!", "முதலமைச்சர் தளபதி ஸ்டாலினின் புகழ் ஓங்குக!" மற்றும் "துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் புகழ் ஓங்குக!" உள்ளிட்ட பல்வேறு கழகக் கோஷங்களைத் தொண்டர்கள் விண்ணதிர எழுப்பினர். பேருந்து நிலையத்தை அடைந்த ஊர்வலத்தினர், அங்குள்ள தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து, பேருந்து நிலையம் முன்புறம் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணாவின் சிலைக்குப் பள்ளித் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, தொண்டர்களுடன் இணைந்து கோஷங்களை எழுப்பினார். இந்நிகழ்வில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.1
- முசிறியில் அண்ணா பிறந்த தின விழா தமிழக வெற்றிக்கழக எம்எல்ஏ மற்றும் மாவட்டச் செயலாளர் இணைப்பு வழங்கி கொண்டாடினர். முசிறியில் அண்ணா பிறந்த தின விழா தமிழக வெற்றி கழக மாவட்ட செயலாளர் ஜெகன்மோகன், எம் எல் ஏ விக்னேஷ் ஆகியோர் அண்ணாவின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கி சிறப்பாக கொண்டாடினர். நிகழ்ச்சியில் முசிறி நகரக் கழக செயலாளர்கள் சந்தோஷ் குமார், சந்திரகுமார் வழக்கறிஞர் ராஜசேகர், நகர இளைஞரணி செயலாளர் ஸ்ரீராம், நகர துணை செயலாளர் சிவக்குமார் உள்ளிட்ட ஒன்றிய, நகர கிளைக் கழக நிர்வாகிகள் தொண்டர்கள் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி சிறப்பாக கொண்டாடினர்.1
- சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மாநகராட்சி வார சந்தை விலை நிலவரம் வெங்காயம் 2 கி ரூ.140 தக்காளி 1 .500 ரூ.50 உருளைக்கிழங்கு 1.500 ரூ. 50 பீட்ரூட் 1 தட்டு ரூ.20 அவரைக்காய் 1 தட்டு ரூ. 20 முட்டைகோஸ் ரூ. 30-40 இஞ்சி 100 கி ரூ.30 கொத்தமல்லி ரூ.10 வெண்டைக்காய்1/2 கி ரூ.50 முள்ளங்கி 1 தட்டு ரூ 20 கேரட் 1/2 கி ரூ 50 தேங்காய் 1 காய் 20 -50 ரூ கொடை மிளகாய் 3 காய் 20 ரூ முருங்கை காய் 3 காய் 20 ரூ ஆப்பிள் 1 கி 200 ரூ சாத்துக்குடி 1 கி 80 ரூ திராட்சை பழம் 1/2 கி 40 ரூ விநாயகர் சிலை 50 -200 ரூ அகல் விளக்கு 10 விளக்கு 10 ரூ பொரி 20 ரூ கதம்பம் 1 மோலம் 25 ரூ என்ற விலைக்கு விற்கப்பட்டது.1
- முசிறியில் மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் அண்ணாதுரை 118 வது பிறந்த தினம் அதிமுகவினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம். முசிறியில் மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணாதுரை 118 வது பிறந்த தின விழா அதிமுகவினர். இனிப்பு வழங்கி கொண்டாட்டம். முசிறியில் மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் அண்ணாதுரை 118 வது பிறந்த தின விழாவை முன்னிட்டு கைகாட்டியில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு அதிமுக மாவட்ட செயலாளர் யோகநாதன் தலைமையில் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்து இனிப்பு வழங்கி கொண்டாடினர் நிகழ்வில். முன்னால் அமைச்சர் டிபி பூனாச்சி, முன்னால் எம்எல்ஏக்கள் மல்லிகா சின்னசாமி, செல்வராஜ், முசிறி ஒன்றிய செயலாளர் ராஜமாணிக்கம், நகரச் செயலாளர் சுவிட் ராஜா என்கிறார் மாணிக்கம், எம் ஐ டி நடராஜன், மாவட்ட அவைத் தலைவர் ஈஞ்சூர் ராமு, மாவட்ட பொருளாளர் குட்டி என்கிற ஜெயசீலன், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் ஆசிரியர் பொன் சேகர், நகரப் பொருளாளர் ராஜேந்திரன், பேங்க் ராமசாமி, புரட்சித்தலைவி பேரவை மாவட்டச் செயலாளர் பாலகுமார், எம்ஜிஆர், இளைஞர் அணி மாவட்ட துணை செயலாளர் சாய் மோகன்ராஜ், மாவட்ட பிரதிநிதி ரவிச்சந்திரன், உள்ளிட்ட மாவட்ட ஒன்றிய நகர கிளைக் கழக அணி பிரிவினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.1
- தலைமலை பட்டிஸ்ரீ காசி விஸ்வநாதர் மற்றும் ஸ்ரீ சென்னிமலை ஆண்டவர் ஆலயத்தில் 48 வது நாள் மண்டல பூஜை நிறைவு விழா நடைபெற்றது திருச்சி மாவட்டம் தொட்டியம் வட்டம் தலைமலைப்பட்டி அருள்மிகு ஸ்ரீ காசி விஸ்வநாதர் மற்றும் ஸ்ரீ சென்னிமலை ஆண்டவர் ஆலயத்தில் புதிதாக எழுந்து அருள்பாலிக்க உள்ள அருள்மிகு அஷ்டபுஜமங்கள வாராஹி அம்மன் சுவாமிக்கு மகா கும்பாபிஷேக விழா சிறப்பாக முடிந்தது.அதனைத் தொடர்ந்து 48 வது நாள் மண்டல பூஜைகள் நடைபெற்று சுவாமிகள் யாகம் செய்து மண்டல பூஜைகள் நிறைவு விழாவில் ஏராளமான பக்தர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் அனைவருக்கும் கோவில் நிர்வாக சார்பில் அன்னதானம் பிரசாதம் வழங்கினர்1