தமிழக முதல்வர் சென்னையில் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கும் நிகழ்வை தொடங்கி வைத்தார் இதனைத் தொடர்ந்து மாநிலம் முழுதும் உள்ள உள்ளாட்சி பிரதிநிதிகள் அந்தந்த பகுதியில் பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்ச்சியில் தொடங்கி வைத்தனர் இதன் ஒரு பகுதியாக நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ராஜா கவுண்டன் பாளையம் நியாய விலை கடையில் பொங்கல் பரிசு தொகை திருச்செங்கோடு நகர மன்ற தலைவர் நளினி சுரேஷ் பாபு வழங்கினார் ஒரு கிலோ அரிசி ஒரு கிலோ சர்க்கரை ஒரு சல்லை கரும்பு 3000 ரூபாய் பணம் ஆகியவற்றை கொண்ட தொகுப்பை அப்பகுதியில் உள்ள 858 குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கும் நிகழ்வை தொடங்கி வைத்தார் இந்த நிகழ்ச்சியில் திருச்செங்கோடு கூட்டுறவு வேளாண் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் மேலான் அதிகாரி யசோதா சங்கத்தின் தனி அதிகாரி கணேசன் முன்னாள் நகர மன்ற தலைவர் நடேசன் திருச்செங்கோடு கிழக்கு நகர திமுக செயலாளர் கார்த்திகேயன் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் ராயல் செந்தில் உள்ளிட்ட பல கலந்து கொண்டனர் இதேபோன்று நகரின் அனைத்து வார்டு பகுதிகளிலும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் வழங்கினார்கள்

- மாவட்டத்தில் இன்று பதிவான மழையின் விவரம் தர்மபுரி மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் நேற்று காலை முதல் தற்போது வரை பல இடங்களில் மழை பொழிந்து வருகிறது இந்த நிலையில் இன்று காலை 7 மணி நிலவரப்படி மாவட்டத்தில் பதிவான மழையின் விவரம். வேப்பம்பட்டி 4.4 மிமீ, சூரியக்கடை 4மிமீ, கேத்துரெட்டிபட்டி 2.8 மிமீ, பெரியப்பட்டி 2.8 மிமீ, மருதிப்பட்டி 2.4 மிமீ, தென்கரைக்கோட்டை 2.4 மிமீ, பையர்நத்தம் 2.4மிமீ, தீர்த்தமலை 2மிமீ என மழை பதிவாகி உள்ளது1
- தர்மபுரி மாவட்டம் அரூர் ஒன்றியத்தை சேர்ந்த செல்லம்பட்டி மோப்பிரிப்பட்டி அச்சல்வாடி பெரியப்பட்டி மொரப்பூர் போளையம்பள்ளி உள்ளிட்ட ஊராட்சிகளை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட திமுக,தவெக, உள்ளிட்ட மாற்றுக் கட்சிகளை சேர்ந்த இளைஞர்கள் அதிமுக நிர்வாகி விக்னேஷ் தலைமையில் இன்று அக்கட்சியில் இருந்து விலகி தர்மபுரி மாவட்ட அதிமுக அலுவலகத்தில் அமைப்பு செயலாளர் முன்னாள் அமைச்சர் மாவட்ட கழக செயலாளர் கே பி அன்பழகன் எம் எல் ஏ முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.புதியதாக இணைந்தவர்களுக்கு கழக துண்டினை அணிவித்து வரவேற்றார். இந்நிகழ்வில் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் எஸ்.ஆர்.வெற்றிவேல், பாப்பிரெட்டிப்பட்டி எம்எல்ஏ கோவிந்தசாமி,ஒன்றிய செயலாளர்கள் சிவபிரகாசம்,பழனி, முருகன்,மருத்துவர் சந்திரமோகன்,ஐடி விங் மாவட்ட செயலாளர் கோவிந்தசாமி முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினர் ஏகநாதன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.1
- திண்டுக்கல் பல இடங்களில் குண்டு குழியுமான தார் சாலைகள் உள்ளன அதில் ஈஸ்வரி ஸ்டோர்ஸ் அருகில் உள்ள சாலை குண்டும் குழியுமாக உள்ளதால் அவ்வப்போது டூவீலரில் செல்வோர் விபத்துக்குள்ளாகி வருகின்றனர் கரூர் திருச்சியில் இருந்து வரக்கூடிய வாகனங்கள் இதன் வழியாக வரும் முக்கிய சாலை1
- மணப்பாறை அருகே தொடர் மழையால் இரண்டு வீடுகளில் ஓடுகள் இடிந்து விழுந்து சேதம். வருவாய்துறையினர் நேரில் ஆய்வு திருச்சி மாவட்டம், மணப்பாறை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று நள்ளிரவு முதல் மழை அவ்வபோது விட்டு விட்டு பெய்து வருகின்றது. இந்நிலையில் தொடர் மழையின் காரணமாக பொன்னக்கோன்பட்டி பகுதியில் கூலித் தொழிலாளியான ஆலீஸ் சோபியா ராணி (49) என்பவரின் வீட்டின் ஓட்டு வீட்டில் மேல் புறத்தில் இருந்து ஓடுகள் இடிந்து விழுந்தது. தொடர் மழையால் அவரும் அவரது மகனும் அருகில் உள்ள வீட்டில் தூங்கியதால் எந்தவித அசம்பாவிதமும் நிகழவில்லை. இருப்பினும் ஓடுகள் இடிந்து விழுந்ததால் வீட்டில் இருந்த பொருட்கள் சேதமடைந்தது. இதே போல் அருகில் ஜான்பால் என்பவரின் வீட்டின் மேல்புறத்தில் இருந்த ஓடுகள் இடிந்து விழுந்தது. இதனால் இரண்டு வீடுகளும் சேதமடைந்ததை அடுத்து வருவாய்துறையினர் நேரில் சென்று விசாரணை நடத்தினர். மிகவும் வறுமையில் உள்ள நிலையில் தாங்கள் வீடு இடிந்து விட்டதால் மிகவும் சிரமத்தில் இருப்பதாகவும், அரசு வீடு வழங்கிட வேண்டும் என்று ஆலீஸ் சோபியா ராணி அரசிற்கு கோரிக்கை விடுத்துள்ளார்.1
- ஆத்தூர்: அய்யம்பாளையத்தல் இரட்டை மாட்டுவண்டி பந்தயத்தில் சீறிபாய்ந்த காளைகள் வத்தலகுண்டு அருகே அய்யம்பாளையத்தில் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அவர்களின் 73 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு 13-ம் ஆண்டு மாநில அளவிலான இரட்டை மாட்டுவண்டி பந்தையம் நடைபெற்றது, இதில் மதுரை, புதுக்கோட்டை, நெல்லை, தூத்துக்குடி, இராமநாதபுரம், கோவை, தஞ்சை, திருச்சி, நாகப்பட்டினம், திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து 80-க்கும் மேற்பட்ட ஜோடி மாட்டு வண்டிகள் கலந்துகொண்டன பரிசுகளை பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ பி செந்தில் குமார் வழங்கினார்1
- அசாத்திய திறமையை பாருங்கள்.1
- கடத்தூரில் 9 லட்சத்திற்கு வெற்றிலைகள் விற்பனை தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி தொகுதிக்குட்பட்ட கடத்தூரில் ஞாயிறுதோறும் வெற்றிலை விற்பனைக்காக பிரசித்தி பெற்ற வாரச்சந்தை நடைபெறும் வழக்கம் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வார சந்தையில் தர்மபுரி மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும், பல்வேறு வெளி மாவட்டங்களில் இருந்து ஏராளமான விவசாயிகள் வெற்றிலைகளை விற்க & வாங்க வந்திருந்தனர் 128 கட்டுகளைக் கொண்ட ஒரு மூட்டை வெற்றிலை ரூ.10,000 முதல் ரூ.26,000 வரை விற்பனையானது மேலும் நேற்று ஒரே நாளில் சுமார் 9 லட்சத்திற்கு வெற்றிலை வர்த்தகம் நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்1
- தர்மபுரி கோட்டை பரவாசுதேவ பெருமாள் திருக்கோவி-லில் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியாருக்கும் "திருக்கல்யாண வைபவம். கோட்டை பரவாசுதேவ பெருமாள் திருக்கோவி-லில் வருகின்ற மார்கழி 27 காலை 9.30 - 12.30 மணிக்குள் பெருமாளுக்கும் "சூடிக்கொடுத்த சுடர்கொடி"ஸ்ரீ ஆண்டாள் நாச்சியாருக்கும் "திருக்கல்யாண வைபவம்"1
- கரூரை அடுத்த குளித்தலை அருகே மணத்தட்டை காவிரி ஆற்றின் படுகையிலிருந்து காவிரி குடிநீர் மணப்பாறை-குளித்தலை சாலையோரம் குழாய்கள் பதிக்கப்பட்டு மணப்பாறை மற்றும் மருங்காபுரி பகுதிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று மாலை மணப்பாறை அடுத்த கலிங்கப்பட்டி அருகே அமைத்துள்ள 2மீட்டர் அகலமும், 46.6 மீட்டர் நீளம் கொண்ட காவிரி குடிநீர் பிரதான குழாய் திடீரென உடைப்பு ஏற்பட்டு சுமார் 10 அடி தூரத்திற்கு குடிநீர் நாலாபக்கமும் பீறிட்டு அடித்து வருகிறது. இதையறிந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.1