விருதுநகர் மாவட்டம் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று உயர்கல்வியில் சேராத மாணவர்களுக்காக சிறப்பு முகாம் 27.08.2026 அன்று பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கிலும், 28.08.2026 அன்று சிவகாசி நகராட்சி மேல்நிலைப்பள்ளியிலும் நடத்தப்பட உள்ளன- மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் தகவல். விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், உயர்கல்வியில் சேராத மாணவர்களுக்காக சிறப்பு முகாம் நடத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது: மாவட்டத்தில் பள்ளிப்படிப்பை முடித்த மாணவர்கள், 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் தனித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற மாணவர்கள் என அனைத்து மாணவர்களையும் உயர் கல்வியில் சேர்ப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெறாத 561 மாணவர்கள் மற்றும் 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற 190 மாணவர்கள் உயர்கல்வி, ஐ.டி.ஐ, தொழில்நுட்ப கல்லூரிகளில் சேரவில்லை என கண்டறியப்பட்டுள்ளது. அவர்களை கண்டறிந்து உயர்கல்வியில் சேர்ப்பது தொடர்பாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று உயர்கல்வியில் சேராத மாணவர்களுக்காக சிறப்பு முகாம் 27.08.2026 அன்று பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கிலும், 28.08.2026 அன்று சிவகாசி நகராட்சி மேல்நிலைப்பள்ளியிலும் நடத்தப்பட உள்ளன. இந்த சிறப்பு முகாமில், மாணவர்களிடமிருந்து, உயர்கல்வி பயில்வதற்கான சந்தேகங்கள் மற்றும் குறைகளையும் கேட்டறிந்து மாணவர்கள் உயர்கல்வி சேர்வதற்கான வழிமுறைகள் குறித்து எடுத்துக் கூறி, பள்ளிப் படிப்பை நிறைவு செய்த மாணவர்கள் அனைவரும் விடுபடாமல் உயர்கல்வியில் சேருவதை உறுதி செய்ய வேண்டும். குறிப்பாக, தொழிற்கல்வி படிப்புகளான ITI மற்றும் பல் தொழில்நுட்பக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை உயர்த்த அனைத்துக் கல்லூரி முதல்வர்களும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்டத்தில் உயர்கல்வி சேர்க்கை விகிதத்தை அதிகரிக்கும் வகையில், அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டு, தகுதியுள்ள மாணவர்கள் அனைவரும் உயர்கல்வி வாய்ப்புகளைப் பெறுவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார். இக்கூட்டத்தில், கல்லூரி முதல்வர்கள், தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் பல் தொழில்நுட்பக் கல்லூரிகளின் முதல்வர்கள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்டம் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று உயர்கல்வியில் சேராத மாணவர்களுக்காக சிறப்பு முகாம் 27.08.2026 அன்று பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கிலும், 28.08.2026 அன்று சிவகாசி நகராட்சி மேல்நிலைப்பள்ளியிலும் நடத்தப்பட உள்ளன- மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் தகவல். விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், உயர்கல்வியில் சேராத மாணவர்களுக்காக சிறப்பு முகாம் நடத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது: மாவட்டத்தில் பள்ளிப்படிப்பை முடித்த மாணவர்கள், 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் தனித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற மாணவர்கள் என அனைத்து மாணவர்களையும் உயர் கல்வியில் சேர்ப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெறாத 561 மாணவர்கள் மற்றும் 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற 190 மாணவர்கள் உயர்கல்வி, ஐ.டி.ஐ, தொழில்நுட்ப கல்லூரிகளில் சேரவில்லை என கண்டறியப்பட்டுள்ளது. அவர்களை கண்டறிந்து உயர்கல்வியில் சேர்ப்பது தொடர்பாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில்
12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று உயர்கல்வியில் சேராத மாணவர்களுக்காக சிறப்பு முகாம் 27.08.2026 அன்று பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கிலும், 28.08.2026 அன்று சிவகாசி நகராட்சி மேல்நிலைப்பள்ளியிலும் நடத்தப்பட உள்ளன. இந்த சிறப்பு முகாமில், மாணவர்களிடமிருந்து, உயர்கல்வி பயில்வதற்கான சந்தேகங்கள் மற்றும் குறைகளையும் கேட்டறிந்து மாணவர்கள் உயர்கல்வி சேர்வதற்கான வழிமுறைகள் குறித்து எடுத்துக் கூறி, பள்ளிப் படிப்பை நிறைவு செய்த மாணவர்கள் அனைவரும் விடுபடாமல் உயர்கல்வியில் சேருவதை உறுதி செய்ய வேண்டும். குறிப்பாக, தொழிற்கல்வி படிப்புகளான ITI மற்றும் பல் தொழில்நுட்பக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை உயர்த்த அனைத்துக் கல்லூரி முதல்வர்களும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்டத்தில் உயர்கல்வி சேர்க்கை விகிதத்தை அதிகரிக்கும் வகையில், அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டு, தகுதியுள்ள மாணவர்கள் அனைவரும் உயர்கல்வி வாய்ப்புகளைப் பெறுவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார். இக்கூட்டத்தில், கல்லூரி முதல்வர்கள், தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் பல் தொழில்நுட்பக் கல்லூரிகளின் முதல்வர்கள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- டாஸ்மாக் கடைகள் விடுமுறை: மதுபான கடைகளில் குவிந்த மது பிரியர்கள். தமிழகத்தில் மிலாடி நபியை முன்னிட்டு நாளை (ஆக.26) டாஸ்மார்க் கடைகள் விடுமுறை அளிக்கப்பட்டு கடைகள் அடைக்கப்படும் என்று தமிழக அரசின் அறிவிப்பை தொடர்ந்து இன்று (ஆக.25) இரவில் மதுரை நகரில் பல்வேறு பகுதிகளில் டாஸ்மார்க் கடைகளில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. பல டாஸ்மாக் கடைகளில் மது பிரியர்கள் நீண்ட நேரம் வரிசையில் நின்று தங்களுக்கு வேண்டிய மது பாட்டில்களை வாங்கி சென்றார்கள்.1
- கொல்லங்குடியில் கோவில் திருவிழா முன்னிட்டு களைகட்டிய மாட்டு வண்டி பந்தயம், சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் அருகே உள்ள கொல்லங்குடியில் முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் வெகு விமரிசையாக நடைபெற்றது. கொல்லங்குடியில் இருந்து முதல் வலையம்பட்டி வரை நடைபெற்ற இந்தப் போட்டி, பெரிய மாடு மற்றும் சிறிய மாடு என இரண்டு பிரிவுகளாக நடத்தப்பட்டது. சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 38 ஜோடி மாடுகள் பங்கேற்றன. மதுரை தொண்டி தேசிய நெடுஞ்சாலையில் நடைபெற்ற இந்தப் போட்டியில், 7 கிலோமீட்டர் பந்தய எல்லையாக நிர்ணயிக்கப்பட்ட பெரிய மாடு பிரிவில் 11 ஜோடிகளும், 5 கிலோமீட்டர் பந்தய எல்லையாக நடைபெற்ற சிறிய மாடு பிரிவில் 27 ஜோடிகளும் கலந்து கொண்டு சீறிப் பாய்ந்தன. பந்தயத்தில் முதல் நான்கு இடங்களைப் பிடித்த மாடுகளின் உரிமையாளர்கள் மற்றும் சாரதிகளுக்கு பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது. அழகாபுரி, மேப்பல், நரிக்கோட்டை, காளையார்கோவில், விட்டனேரி, கொல்லங்குடி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் சாலையின் இருபுறமும் திரண்டு நின்று, ஆர்வத்துடன் மாட்டு வண்டி பந்தயத்தை கண்டுகளித்தனர்.1
- RR AARI WORK, Aari Work, Aari Embroidery, Aari Blouse, RR AARI WORK1
- வத்திராயிருப்பு அருகே சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் பிரதோஷ வழிபாடு வத்திராயிருப்பு அருகே சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. ஸ்ரீவில்லிபுத்தூர் - மேகமலை புலிகள் காப்பகம் சாப்டூர் வனச்சரகத்தில் உள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் ஆவணி மாத பிரதோஷம் மற்றும் பௌர்ணமி வழிபாட்டிற்காக ஆகஸ்ட் 25 முதல் 28- ம் தேதி வரை 4 நாட்கள் பக்தர்கள் மலையேறி சென்று சுவாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது. முதல் நாளான செவ்வாய்க்கிழமை ஆவணி மாத பிரதோஷத்தை முன்னிட்டு தாணிப்பாறை வழியாக காலை 6 முதல் 12 மணி வரை பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட்டனர் சதுரகிரி மலையில் உள்ள சுந்தர மகாலிங்கம், சந்தன மகாலிங்கம் கோயில்களில் பிற்பகல் 4 மணிக்கு மேல் பிரதோஷ சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. சதுரகிரி மலையில் கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில், திரளான பக்தர்கள் மலையேறிச் சென்று சுவாமி தரிசனம் செய்தனர்.1
- சேர்மன் இல்ல திருமண விழா மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகராட்சி சேர்மனாக உள்ள ரமேஷ் அவர்களின் இல்ல திருமண விழா கதிரேசன் கோவில் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வெகு விமர்சையாக நடைபெற்றது இந்த திருமண விழாவிற்கு முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் சிப்பிப்பாறை ரவிச்சந்திரன் மற்றும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆகியோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி சிறப்புரையாற்றினார் தொடர்ந்து பல்வேறு பகுதியில் இருந்து வருகை தந்த மதிமுக மாவட்ட செயலாளர்கள் மணமக்களை வாழ்த்தினார்.1
- விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வீடு புகுந்து தந்தை மகனை வெட்டி கொலை செய்ய முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.... ஆத்திரமடைந்த பாதிக்கப்பட்ட பிரிவை சேர்ந்தோர் வீடு புகுந்து வெட்டிய கும்பல் வசிக்கும் பகுதிக்குச் சென்று 15 இருசக்கர வாகனங்கள் 3 ஆட்டோக்களை அடித்து நொறுக்கியதால் பதட்டம்... போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கான்சாபுரம் கிராமம், மங்கம்மாள் கோயில் தெருவை சேர்ந்த கணேச பாண்டி (49), மற்றும் அவரது மகன் கௌதம் (20) இருவரும் நேற்று நள்ளிரவு வழக்கம் போல் வீட்டில் தூக்கிக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த அருகில் வசிக்கும் மற்றொரு பிரிவை சேர்ந்த ஒரு கும்பல் வீடு புகுந்து தந்தை கணேச பாண்டி மற்றும் மகன் கௌதமை வெட்டி விட்டு தப்பி ஓடி உள்ளனர். இதில் இருவரும் பலத்த காயமடைந்த நிலையில் விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவத்தை கண்டு ஆத்திரமடைந்த கணேசபாண்டி மற்றும் அவரது உறவினர் தரப்பைச் சேர்ந்த ஒரு பிரிவினர் வீடு புகுந்து அறிவாளால் வெட்டிய கும்பல் வசித்த பகுதிக்கு சென்று அங்கிருந்த 15 ற்கும் இருசக்கர வாகனங்கள் மற்றும் 3 ஆட்டோக்களை அடித்து நொறுக்கினர். இதனால் இப்பகுதியில் இரு பிரிவினர் இடையே மோதல் ஏற்படும் பதட்டமான சூழல் நிலவுவதால் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் திருமண ஊர்வலம் நடந்த போது இரு பிரிவினரிடையே தகராறு ஏற்பட்டு சமாதான கூட்டம் மூலம் பிரச்சனைக்கு தீர்வு காணப்பட்ட நிலையில், அதனால் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக இச்சம்பவம் நிகழ்ந்திருக்கலாம் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.1
- फ़िरोज़ाबाद में बंजारा समाज पर धारदार हथियारों से हमला, बाल-बाल बची जान पीड़ितों ने थाना एका में दी तहरीर कार्रवाई की मांग फ़िरोज़ाबाद जनपद के एका थाना एका थाना के क्षेत्र के हरी सिंह पुर गाँव में बंजारा समाज की महिलाओं एवं लोगों पर दबंगों द्वारा धारदार हथियारों से जानलेवा हमला करने का मामला सामने आया है जहां बंजारा समाज को दबाने वाली बात सामने आयी है घटना का एक वीडियो भी सोशल मीडिया पर वायरल हो रहा है, जिसमें महिलाएं और बच्चे सड़क पर भागते हुए दिखाई दे रहे हैं पीड़ितों के अनुसार दिनांक 22 अगस्त 2026 को दोपहर के समय गाँव के ही कुछ लोग लाठी-डंडा और धारदार हथियार लेकर उनके घरों पर आ गए और गाली-गलौज करते हुए हमला कर दिया अचानक हुए इस हमले से पूरे गाँव में अफरा-तफरी मच गई। महिलाओं और बच्चों ने भाग कर किसी तरह अपनी जान बचाई पीड़ित गांव वालो का आरोप है कि वे गरीब बंजारा समाज से हैं इसलिए उन्हें आए दिन डराया-धमकाया जाता है। इस घटना के बाद से पूरा समाज दहशत में है ग्रामीणों ने बताया कि बड़ी मुश्किल से उन लोगों ने कर मामला शांत कराया गया इस संबंध में पीड़ित गाँव के लोगों ने थाना एका पुलिस को लिखित तहरीर दी है और आरोपियों के खिलाफ सख्त कार्रवाई व सुरक्षा की मांग की है लिखे हुए आरोपी बार बार गांव पर चढ़ाई करते हुए जान से मारने की धमकी दे रहे हैं पुलिस द्वारा मामले की जांच ही नहीं की जा रही है। थाना प्रभारी एका से बात करने पर बताया कि तहरीर मिलने पर जाँच कर उचित कार्रवाई की जाएगी2
- அருப்புக்கோட்டை புதிய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள மதுபான கடை அருகே பழைய மது பாட்டில்கள் சேகரிக்கும் அடையாளம் தெரியாத முதியவர் உடலில் ரத்த காயங்களுடன் சடலமாக மீட்பு; கொலையா இல்லை வேறு ஏதேனும் காரணமா என போலீசார் விசாரணை விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகே அரசு மதுபான கடை அமைந்துள்ளது. இந்த மதுபான கடை அருகே பாரத ஸ்டேட் வங்கி எதிரே உள்ள காம்ப்ளக்ஸ் வாசலில் பழைய இரும்பு பொருட்கள் மது பாட்டில்கள் சேகரிக்கும் அடையாளம் தெரியாத சுமார் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் உடலில் ரத்த காயங்களுடன் இறந்து கிடப்பதாக நகர் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து அங்கு விரைந்து வந்த அருப்புக்கோட்டை துணை காவல் கண்காணிப்பாளர் விக்னேஸ்வரன் மற்றும் நகர் காவல் நிலைய ஆய்வாளர் சுஜாதா தலைமையில் போலீசார் அங்கு விசாரணை நடத்தியதில் அப்பகுதி முழுவதும் பல இடங்களில் ரத்தம் சிதறி கிடந்தது தெரியவந்தது. இறந்து கிடந்தவரின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் உடலில் ரத்த காயங்கள் இருப்பதாலும் பல இடங்களில் ரத்தம் சிதறி கிடப்பதாலும் யாரேனும் அவரை அடித்து கொலை செய்துவிட்டனரா என்ற கோணத்தில் போலீசார் இறந்து கிடப்பது யார் முன்விரோதம் காரணமாக கொலை நடைபெற்றதா இல்லை வேறு ஏதேனும் காரணமாக என விசாரணை நடத்தி வருகின்றனர்.1