தொழிலாளியும் முதலாளியும் இணைந்து பணியாற்றினால் தான் எல்லா தொழிலுக்கும் நல்லது உப்பு கூலி உயா்வு ஓப்பந்த உடன்பாடு மேயா் ஜெகன் பொியசாமி பேச்சு. தூத்துக்குடி மாவட்ட உப்பு பண்டல் கட்டும் தொழிலாளர்கள் உப்பு உற்பத்தியாளா்களுடன் கூலி உயா்வு குறித்து ஆலோசனை கூட்டம் டூவிபுரத்திலுள்ள தன்பாடு உப்பு ஏற்றுமதியாளா்கள் சங்கத்தில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு மாநகராட்சிமேயரும் உப்பு பண்டல் கட்டும் தொழிலாளா்கள் சங்கத்தின் தலைவருமான ஜெகன் பொியசாமி கூறுகையில் எந்த ஓரு தொழிலை செய்தாலும் அதை முறையாக செய்ய வேண்டும். அப்போது தான் அந்த தொழிலுக்கும் மாியாதை இருக்கும் தொழிலாளா்களும் நன்றாக இருக்க முடியும் முதலீடு செய்து தொழில் செய்யும் முதலாளிகளுடன் தொழிலாளியும் எல்லா வகையிலும் இணைந்து பணியாற்றினால் தான் நல்ல வளர்ச்சி அந்த தொழிலுக்கு கிடைக்கும் இருவரும் இரண்டு கண்களை போன்றவா்கள் கூலி உயா்வு இரண்டு ஆண்டுகளுக்கு ஓரு முறை நடைபெறும் கூட்டத்தில் முடிவு செய்யப்படும் அதன்படி தற்போது பருமணி உப்பு பண்டல் ஓன்றுக்கு 1.20, தூள் உப்பு பண்டலுக்கு 1.80 கூலி உயா்வு இரு தரப்பிலும் முறையாக பேசி உயா்த்தப்பட்டுள்ளது. அனைவரும் ஓற்றுமையாக பணியாற்ற வேண்டும் தூத்துக்குடியிலிருந்து தான் உப்பு இந்தியா மட்டுமின்றி பல நாடுகளுக்கும் சென்ற நிலை இருந்தது. தற்போது சில மாநிலங்களில் உற்பத்தி மூலம் நம்முடைய தொழில் சற்று குறைந்துள்ளது பழைய நிலை வர வேண்டும் இதில் என்னுடைய ஓத்துழைப்பு முழுமையாக இருக்கும் என்று தொிவித்தாா். உடன் தன்பாடு உப்பு ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் பொன்பாண்டி, செயலாளா் தேன்ராஜ், பொருளாளா் ரெங்கநாதன், உப்பு பண்டல் கட்டும் தொழிலாளா் சங்க செயலாளா் கோட்டுராஜா, திமுக மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளர் அந்தோணி கண்ணன், வட்ட செயலாளர்கள் ரவீந்திரன், சந்திரசேகர், கவுன்சிலா்கள் பச்சிராஜன், முத்துவேல், போல்பேட்டை பகுதி பிரதிநிதி பிரபாகா், உள்பட உப்பு உற்பத்தியாளா்கள் ஏற்றுமதியாளா்கள் சங்க நிா்வாகிகள் தொழிலாளா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

- மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்து தண்ணீருக்கு தவிக்கும் கிராம மக்கள் ஒட்டப்பிடாரம் தாலுகாவை சேர்ந்தது மாப்பிள்ளை யூரனி.. இங்கு தற்போது குடிநீர் பிரச்சனை தலைவிரித்தாடுகிறது நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி ஏற்பாட்டில் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் தனியாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு குடிநீர் பைப் லைன் புதியதாக பதிக்கப்பட்டு அதற்கான நிதி ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது ஆனால் தற்போது அந்தத் திட்டம் கிடப்பில் போடப்பட்டுவிட்டது அதுபோக மங்களக்குறிச்சி கூட்டு குடிநீர் திட்டத்திலிருந்து மாப்பிள்ளை யூரணிக்கு வரும் குடிநீர் பைப் லைன் 18 லட்சம் தண்ணீர் வரக் கூடிய அளவுக்கு தான் பைப்லைன் பதிக்கப்பட்டுள்ளது. அதுவும் ஒரு பிரச்சினையாகவே உள்ளது கடந்த திமுக ஆட்சியின் இறுதி கட்டத்தில் மாப்பிள்ளையூரனிபஞ்சாயத்தில் குடிநீர் பிரச்சனை தீர்ப்பதற்கு பஞ்சாயத்து மாநகராட்சி உடன் இணைக்கப்படுவதால் தூத்துக்குடி மாநகராட்சியில் இருந்து மாப்பிள்ளை யூரணி பஞ்சாயத்துக்கு தேவையான 95 லட்சம் லிட்டர் தண்ணீர் வழங்குவதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது தற்போது அந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. இத்தனைக்கும் இந்தத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் மதன் ராஜா அவர் அமைச்சராகவும் உள்ளார் ஆனால் இதுவரை மாப்பிள்னளயூரனிபஞ்சாயத்தில் வந்து மக்களுக்கு தேவையான பிரச்சனைகளை தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் அமைச்சருமான மதன் ராஜா வந்து இதுவரை மக்களை சந்தித்து குறைகளை கேட்கவில்லை நாங்கள் குடிநீர் பிரச்சனையில் திண்டாடி வருகிறோம் என்ற ஒரு குற்றச்சாட்டும் வருகிறது இது பற்றி அப்பகுதியைச் சேர்ந்த பல்வேறு பெண்களிடம் கேட்டபோது சொன்ன ஒரே பதில் ஒரு குடம் தண்ணீர் 10 ரூபாய் முதல் 15 ரூபாய் வரை பணம் கொடுத்து வாங்க வேண்டிய சூழ்நிலை தான் உள்ளது . என்றனர்.1
- ஓட்டப்பிடாரம் அருகே நான்கு வழி சாலையில் தவறான திசையில் சென்ற இருசக்கர வாகனம் மீது கார் மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்றவர் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழப்பு -புதியம்புத்தூர் போலீசார் விசாரணை ஓட்டப்பிடாரம் அருகே தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தைச் சேர்ந்த சுதாகர் (40)என்பவர் டைல்ஸ் ஒட்டும் வேலை செய்து வந்துள்ளார்.இந்த நிலையில் தூத்துக்குடி டூ மதுரை தேசிய நெடுஞ்சாலையில் புதூர்பாண்டியபுரம் பாலத்தில் சுதாகர் தவறான திசையில் இருசக்கர வாகனத்தில் சென்றதாக கூறப்படுகிறது. அப்போது எதிரே வந்த மாருதி ஆல்ட்டோ கார் அதிவேகமாக இருசக்கர வாகனம் மீது மோதியதில் சுதாகர் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்த நிலையில் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி சுதாகர் பரிதாபமாக உயர்ந்தார். சம்பவம் குறித்து புதியம்புத்தூர் காவல் நிலைய போலீசார் விபத்தை ஏற்படுத்திய கார் டிரைவரான ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்த மோகனசுந்தரம் (40 )என்பவரிடம் விசாரணை செய்து வருகின்றனர்1
- திருச்செந்தூர் அருகே பெருங்குளம் குளத்தில் குவியும் உள்நாட்டு பறவைகளை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் மற்றும் வன அலுவலர். பெருங்குளம் குளத்தில் குவியும் உள்நாட்டு பறவைகளை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் மற்றும் வன அலுவலர். தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக கடும் வெயிலும், வறட்சியும் நிலவி வருகிறது. இதனால் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான குளங்கள் தண்ணீரின்றி வறண்டு காணப்படும் நிலையில், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள பெருங்குளம் குளத்தில் அதிகளவு தண்ணீர் தேங்கியுள்ளது. தாமிரபரணி ஆற்றின் மருதூர் அணைக்கட்டில் இருந்து பிரியும் கீழக்கால்வாயின் கடைசி குளமாக பெருங்குளம் அமைந்துள்ளது. சுமார் 900 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட இந்த குளத்தில் தற்போது தண்ணீர் அதிகளவில் இருப்பதால், ஏராளமான உள்நாட்டு பறவைகள் குவிந்து வருகின்றன. குறிப்பாக நத்தை கொத்தி நாரை, கருப்புகோட்டான், கரண்டிவாயன், அரிவாள் மூக்கன், மஞ்சள் மூக்கு நாரை, ஜம்பு நாரை, சாம்பல் நாரை, மூக்குழிப்பான், பாம்பு தாரா, கூழைக்கடா உள்ளிட்ட பல்வேறு வகையான பறவைகள் பெருங்குளத்தில் முகாமிட்டுள்ளன. இதுதவிர வெள்ளைக் கொக்கு, பெரிய கொக்கு, சாம்பல் கொக்கு உள்ளிட்ட பல்வேறு வகையான கொக்குகளும் காணப்படுகின்றன. தற்போது 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பறவைகள் பெருங்குளம் குளத்தில் முகாமிட்டுள்ளது. அதிகாலை மற்றும் மாலை நேரங்களில் கூட்டம் கூட்டமாக குளத்தில் இறங்கும் பறவைகள், அங்குள்ள மீன்கள் மற்றும் நீர்வாழ் உயிரினங்களை உணவாக உட்கொண்டு வருகின்றன. இந்நிலையில் இன்றைய தினம் பெருங்குளம் குளத்தில் காணப்படும் உள்நாட்டு பறவைகளை பார்வையிட தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் நேரில் வருகை தந்தார். வருகை தந்த அவர் பைனாகுலர் கொண்டு குளத்தில் காணப்படும் பறவைகளை பார்வையிட்டு அங்கு நின்ற மாவட்ட வன அலுவலர் இளையராஜா மற்றும் வனத்துறை அதிகாரிகளிடம் விவரங்கள் கேட்டறிந்தார். தொடர்ந்து பறவைகளை பாதுகாப்பது குறித்து ஆலோசனை வழங்கினார்.1
- கயத்தாறு தாலுகா தலையால் நடந்தால் குளம் கிராமத்தில் தமிழக முதல்வர் தொடங்கி வைத்த புதிய பேருந்து புதிய வழித்தடத்தில் தொடக்கம் கயத்தாறு தாலுகா தெற்கு மயிலோடை பஞ்சாயத்தை சேர்ந்த தலையால் நடந்தான்குளம் கிராமத்திற்கு திருநெல்வேலி சங்கர் நகர் கங்கைகொண்டான் பார்த்திங்களா ராஜா பெருங்குடி வழியாக தலையால் நடந்தால் கிராமத்திற்கு தமிழக முதல்வர் தொடங்கி வைத்த பஸ்களில் இந்த 9 எல் என்ற வழித்தடத்தில் இந்த புதிய பஸ்சை தொடங்கி வைக்கப்பட்டது. இந்தத் தொடக்க விழாவில் தமிழக வெற்றி கழகத்தின் தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார்.இதில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட இணை செயலாளர் கருப்பசாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் அலெக்சாண்டர், தலையால் நடந்தால் குளம் கிளைச் செயலாளர் பால்பண்ணைமுத்து, ஏ.சி.பால்முருகன்,கவிதா, கிழக்கு ஒன்றிய துணைச் செயலாளர் பேச்சியம்மாள், மற்றும் கட்சி நிர்வாகிகள் வள்ளிவேல், முத்துமாலை, பலவேசமுத்து, இமானுவேல், முத்துக்குமார், ஊர் நாட்டாண்மைகள் ஊர் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.4
- குற்றால அருவிகளில் விடுமுறை தினத்தை முன்னிட்டு குடும்பம் குடும்பமாக ஆர்ப்பரித்த வரும் தண்ணீரில் சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியல் தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதியில் அமைந்துள்ள குற்றால அருவிகளில் தற்போது சீசன் களை கட்டி வரும் நிலையில் இங்குள்ள குற்றாலம் மெயின் அருவி ஐந்தருவி புலியருவி சிற்றருவி பழைய குற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் மிதமாக தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது இதன் காரணமாக பல பகுதிகளில் இருந்து வரும் ஏராளமான சுற்றுலா பயணிகள் தினந்தோறும் குளித்த மகிழ்ந்து செல்கின்றனர்.3
- சேர்மன் இல்ல திருமண விழா மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகராட்சி சேர்மனாக உள்ள ரமேஷ் அவர்களின் இல்ல திருமண விழா கதிரேசன் கோவில் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வெகு விமர்சையாக நடைபெற்றது இந்த திருமண விழாவிற்கு முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் சிப்பிப்பாறை ரவிச்சந்திரன் மற்றும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆகியோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி சிறப்புரையாற்றினார் தொடர்ந்து பல்வேறு பகுதியில் இருந்து வருகை தந்த மதிமுக மாவட்ட செயலாளர்கள் மணமக்களை வாழ்த்தினார்.1
- தூத்துக்குடி ஆவணி அவிட்டம் ஏராளமானோர் பூணூல் மாற்றிக் கொண்டனர் தூத்துக்குடி ஆவணி அவிட்டத்தை முன்னிட்டு ஏகாம்பரேஸ்வரர் உடனுறை காமாட்சி அம்மன் ஆலயத்தில் இன்று ஏராளமானோர் பூணூல் மாற்றி வழிபாடு செய்தனர். இன்று ஆவணி அவிட்டம் கொண்டாடப்படுகிறது இதை முன்னிட்டு பூணூல் போடுபவர்கள் ஆண்டுக்கு ஒரு முறை இந்த ஆவணி அவிட்ட தினத்தில் தங்கள் பூணூலை மாற்றி வழிபாடு நடத்துவர். இதைத்தொடர்ந்து தூத்துக்குடியில் தட்டார் தெரு பகுதியில் அமைந்துள்ள ஏகாம்பரேஸ்வரர் உடனுறை காமாட்சி அம்மன் ஆலயத்தில் காலை முதல் ஏராளமானோர் புதிய பூணூலை மந்திரங்களை ஓதி பூஜைக்கு பின் அணிந்து கொண்டு வழிபாடு நடத்தினர் இதைத்தொடர்ந்து காமாட்சியம்மன் மற்றும் விஸ்வகர்மாவிற்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு வழிபட்டு சென்றனர்.1
- குஜராத் அம்ரேலி கிடங்கில் தானிய மூட்டைகள் சரிந்து விழுந்த விபத்தில் சிக்கியவர்களில் ஒரு தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் நான்கு தொழிலாளர்கள் படுகாயமடைந்து அம்ரேலி சிவில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். குஜராத் அம்ரேலி கிடங்கில் தானிய மூட்டைகள் சரிந்து விழுந்த விபத்தில் சிக்கியவர்களில் ஒரு தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் நான்கு தொழிலாளர்கள் படுகாயமடைந்து அம்ரேலி சிவில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.1