Shuru
Apke Nagar Ki App…
Sangili.v
More news from தமிழ்நாடு and nearby areas
- *தேனி புதிய பேருந்து நிலையத்தில் உள்ள அரசு பேருந்துகளில் "தமிழ்நாடு" என்ற ஸ்டிக்கரை ஒட்டி போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியினரால் பரபரப்பு* தமிழ்நாடு அரசு பேருந்துகளில் "தமிழ்நாடு" என்று பெயர் இல்லாமல் அரசு போக்குவரத்து கழகம் மட்டுமே இருப்பதாக கூறி அரசு பேருந்துகளில் தமிழ்நாடு என்ற வாசகத்தின் ஸ்டிக்கரை பேருந்துகளில் ஒட்டும் காணொளி ஒன்று கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியானது இதனைத் தொடர்ந்து நாம் தமிழர் கட்சியினர் சார்பில் தமிழக முழுவதும் உள்ள பேருந்து நிலையங்களில் உள்ள அரசு பேருந்துகளில் "தமிழ்நாடு" என்ற வாசகம் அடங்கிய ஸ்டிக்கர்களை ஒட்டி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் இதே போல் தற்போது தேனி புதிய பேருந்து நிலையத்தில் தேனி மாவட்ட நாம் தமிழர் கட்சியினர் சார்பில் திருப்பூர் மற்றும் மதுரை செல்லும் பேருந்துகளில் "தமிழ்நாடு" என்ற பெயர் கொண்ட ஸ்டிக்கர்களை பேருந்தில் ஒட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர் மேலும் அரசு பேருந்துகளில் தமிழ்நாடு என்கிற பெயர் இடம் பெற வேண்டும் என கூறி தமிழக அரசுக்கு எதிரான கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர் இதனால் புதிய பேருந்து நிலைய பகுதிகளில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்1
- Post by Mr Mr. Gandhi1
- கன்னியாகுமாரி. மணக்குடியில் சுனாமியில் உயிர் இழந்தவர்களுக்கு அந்த ஊர் மக்கள் அமைதி பேரணி நடத்தினர்.1
- புதுக்கோட்டை மாவட்டம் அண்டக்குளத்தில் நடைபெற்ற ஐயப்ப பக்தர்கள் பொது பஜனையில் இஸ்லாமியர்கள் பங்கேற்று தேநீர் வழங்கி அன்னதான நிகழ்வில் உணவு பரிமாறிய நிகழ்வு மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்கி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. தமிழ்நாட்டில் பல இடங்களில் மதநல்லிணக்கநிகழ்ச்சிகள் நடந்து வருகின்றனர். இந்து திருவிழாவுக்கு இஸ்லாமியர்கள் பேனர் அடிப்பது, இந்து கோவில் நிர்வாக கமிட்டியில் இஸ்லாமியர்கள் பொறுப்பில் இருப்பது உள்ளிட்ட சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றனர். மேலும் முக்கிய பண்டிகைகளின் போது மதங்களை கடந்து அனைவரும் இணைந்து உணவு பகிர்ந்து உண்ணும் சம்பவங்கள் தமிழ்நாட்டின் ஒவ்வொரு பகுதிகளிலும் இன்றுவரை நடந்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை மாவட்டம் அண்டக்குளத்தில் ஐயப்பன் பக்தர்கள் சார்பில் பொது பஜனை நடைபெற்றது. இதில் அண்டக்குளம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள 2000கும் மேற்பட்ட ஐயப்ப பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். மேலும் அதனை தொடர்ந்து அன்னதான நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த அண்ணதான நிகழ்ச்சியில் இஸ்லாமியர்கள் பங்கேற்று தேநீர் வழங்கியும் உணவு பரிமாறிய நிகழ்ச்சி மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்கியது. அதனை தொடர்ந்து தேநீர் வழங்கி உணவு பரிமாறிய இஸ்லாமிய சகோதரர்களை ஐயப்ப பக்தர்கள் தொழுகைக்கு பிறகு நேரில் சந்தித்து நன்றி தெரிவித்து தொப்புள் கொடி உறவின் அருமையை பறைசாற்றினார்கள்.1
- தஞ்சாவூர் மாவட்டம். பாபநாசம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பண்டாரவாடை மேலதெரு தமிழக வெற்றி கழகம் சார்பில் பழுதடைந்துள்ள சாலையில் சாலையை சீர் செய்து தர வேண்டும் என்ற நோக்கத்தில் பி சான்டு பவுடர் மண்ணை கொட்டி மூடிவிட்டு சென்றதாக கூறப்படுகிறது. இதனால் இந்த சாலையில் புழுதி பறக்கும் நிலை ஏற்பட்டுள்ளதால் இந்த சாலையில் வாகனங்கள் செல்லும்போது கடுமையாக புழுதி பறப்பதால் சாலைகள் நடந்து செல்பவர் மற்றும் வாகனங்களுக்கு பின்னால் செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் குடியிருப்புவாசிகள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருவதாக வேதனையுடன் தெரிவிக்கின்றனர். குண்டு குழி பள்ளத்தை நிரப்புவதற்காக தமிழக வெற்றி கழகத்தினார் கொட்டிய பிசாண்டு பவுடர் மண்ணால் இப்போது அப்பகுதி மக்கள் கடும் பாதிப்புக்குள்ளாகி வருவதாக அப்பகுதி மக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். மேலம் அரசின் அதிகாரிகள் ஆய்வு செய்து தரமான சாலை அமைத்துரவேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.1
- கடலூர் மாவட்டம் வேப்பூர் வட்டம் மா புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கவிதா 36 கணவர் பெயர் சுரேஷ்,மகேஸ்வரி வயது 37 கணவர் பெயர் பாலகிருஷ்ணன் இருவரும் நேற்று மங்களூர் பெட்ரோல் பங்கில் தனது டிவிஎஸ் எக்ஸ்எல் இருசக்கர வாகனத்திற்கு பெட்ரோல் போட்டுவிட்டு வீட்டிற்கு செல்ல முயற்சி செய்யும்போது எதிரே வந்த டிஎன் 15 எம் பி 6617 என்ற பதிவெண் கொண்ட ட்ரைபர் கார் அதிவேகமாக மோதி விபத்து ஏற்பட்டு இருசக்கர வாகனத்தில் வந்த இருவருக்கும் தலை மற்றும் கால்களில் அடிபட்டு வேப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று என் மேல் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார்கள்காரில் வந்தவர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது இச்சம்பம் குறித்து சிறுப்பாக்கம் போலிசார் விசாரணை செய்து வருகிறார்கள்.1
- திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையத்தில் தற்போது பேருந்து மராமத்து பணி நிறைவு பெற்ற நிலையில் பொதுமக்கள் கழிக்க பொது கழிப்பிடம் இல்லாமல் கண்ட இடங்களில் சிறுநீர் கழிக்கும் அவள நிலை ஏற்பட்டுள்ளது. நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை.1
- ஆண்டிப்பட்டி பகுதியில் ஆந்திராவிலிருந்து விற்பனைக்காக கொண்டுவரப்பட்ட 12 கிலோ கஞ்சா பறிமுதல். 4 பேர் கைது. தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே வைகை அணை காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்ட போது அந்த வழியாக வந்த சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட, 8 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். கஞ்சா கடத்தி வந்த திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் பகுதியை சேர்ந்த கருப்பையா(35) மற்றும் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தை சேர்ந்த அஜ்மீர் அலி(39) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.இதே போல தேனியில் இருந்து அரசு பேருந்தில் கஞ்சா கடத்தி வருவதாக மயிலாடும்பாறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு பேருந்தில் வந்த நபரை பிடித்து சோதனை செய்தபோது, அவர் வைத்திருந்த பையில் 4 கிலோ கஞ்சா இருப்பது தெரிய வந்தது. அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் கஞ்சாவை ஆந்திராவில் இருந்து விற்பனைக்காக கொண்டுவரப்பட்டதாகவும், வருசநாடு அருகே உள்ள சீல முத்தையாபுரம் கிராமத்தை சேர்ந்த செல்வராஜ் அவருடைய மனைவி சுமதி ஆகியோரிடம் கொடுக்க வந்ததாகவும் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து கஞ்சா கொண்டு வந்த சுதாகர் மற்றும் சுமதி ஆகியோரை கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் தலைமறைவான செல்வராஜை காவலதுறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். தேனி மாவட்டத்தில் ஒரே நாளில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.1
- Post by Mr Mr. Gandhi1