நத்தம் அருகே மதுக்கடையை மூடக்கோரி 5 நாட்கள் மக்கள் போராட்டம் எதிரொலி எஸ்.குரும்பபட்டி டாஸ்மாக் கடைக்கு அதிகாரிகள் சீல் திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி அருகே செங்குறிச்சியை அடுத்த எஸ்.குரும்பபட்டியில் கடந்த சில ஆண்டுகளாக இயங்கி வந்த அரசு டாஸ்மாக் மதுபானக் கடையை மூடக்கோரி, தமிழர் தேசம் கட்சியினர் மற்றும் சுற்றுவட்டார கிராம பொதுமக்கள் இணைந்து கடந்த 5 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த மதுக்கடையால் அருகிலுள்ள திருமலைக்கேணி முருகன் கோவில், அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் குடியிருப்புப் பகுதிகளுக்கு பாதிப்பு ஏற்படுவதாகவும், மதுபிரியர்களால் சமூக விரோத செயல்கள் மற்றும் அடிக்கடி விபத்துகள் நடைபெறுவதாகவும் குற்றம்சாட்டி கடையை மூட வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது. இந்நிலையில், இன்று காலை போராட்டம் நடைபெற்ற பகுதியில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். தொடர்ந்து, திண்டுக்கல் கிழக்கு வட்டாட்சியர் பானு லட்சுமி தலைமையில் டாஸ்மாக் அதிகாரிகள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் ஆகியோர் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையின் முடிவில், சம்பந்தப்பட்ட மதுபானக் கடை இனி செயல்படாது என அதிகாரிகள் எழுத்துப்பூர்வமாக உறுதியளித்தனர். இதையடுத்து, கடை பூட்டப்பட்டு சீல் வைக்கப்பட்டது. இதனால் மகிழ்ச்சியடைந்த போராட்டக்காரர்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர். இந்தப் போராட்டத்தில் தமிழர் தேசம் கட்சித் தலைவர் செல்லக்குமார், தலைமை ஒருங்கிணைப்பாளர் குருமணிகண்டன், மாநில அமைப்புச் செயலாளர் மகுடேஷ்வரன், மாவட்டச் செயலாளர் பிரபு மற்றும் நிர்வாகிகள் ஆண்டிச்சாமி, பெரியகருப்பன் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
நத்தம் அருகே மதுக்கடையை மூடக்கோரி 5 நாட்கள் மக்கள் போராட்டம் எதிரொலி எஸ்.குரும்பபட்டி டாஸ்மாக் கடைக்கு அதிகாரிகள் சீல் திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி அருகே செங்குறிச்சியை அடுத்த எஸ்.குரும்பபட்டியில் கடந்த சில ஆண்டுகளாக இயங்கி வந்த அரசு டாஸ்மாக் மதுபானக் கடையை மூடக்கோரி, தமிழர் தேசம் கட்சியினர் மற்றும் சுற்றுவட்டார கிராம பொதுமக்கள் இணைந்து கடந்த 5 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த மதுக்கடையால் அருகிலுள்ள திருமலைக்கேணி முருகன் கோவில், அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் குடியிருப்புப் பகுதிகளுக்கு பாதிப்பு ஏற்படுவதாகவும், மதுபிரியர்களால் சமூக விரோத செயல்கள் மற்றும் அடிக்கடி விபத்துகள் நடைபெறுவதாகவும் குற்றம்சாட்டி கடையை மூட வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது. இந்நிலையில், இன்று காலை போராட்டம் நடைபெற்ற பகுதியில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். தொடர்ந்து, திண்டுக்கல் கிழக்கு வட்டாட்சியர் பானு லட்சுமி தலைமையில் டாஸ்மாக் அதிகாரிகள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் ஆகியோர் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையின் முடிவில், சம்பந்தப்பட்ட மதுபானக் கடை இனி செயல்படாது என அதிகாரிகள் எழுத்துப்பூர்வமாக உறுதியளித்தனர். இதையடுத்து, கடை பூட்டப்பட்டு சீல் வைக்கப்பட்டது. இதனால் மகிழ்ச்சியடைந்த போராட்டக்காரர்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர். இந்தப் போராட்டத்தில் தமிழர் தேசம் கட்சித் தலைவர் செல்லக்குமார், தலைமை ஒருங்கிணைப்பாளர் குருமணிகண்டன், மாநில அமைப்புச் செயலாளர் மகுடேஷ்வரன், மாவட்டச் செயலாளர் பிரபு மற்றும் நிர்வாகிகள் ஆண்டிச்சாமி, பெரியகருப்பன் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு திண்டுக்கல்லில் மல்லிகைப் பூ விலை கிடுகிடு உயர்வு: ஒரு கிலோ ரூ.2,000-க்கு விற்பனை திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே மாநகராட்சிக்குச் சொந்தமான அண்ணா வணிக வளாகத்தில் பூ மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. திண்டுக்கல்லைச் சுற்றியுள்ள வெள்ளோடு, சிறுநாயக்கன்பட்டி, கலிக்கம்பட்டி, செம்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து நாள்தோறும் டன் கணக்கில் பூக்கள் இங்கு கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. இந்நிலையில், தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு திண்டுக்கல் பூ மார்க்கெட்டில் பூக்களின் தேவை பன்மடங்கு அதிகரித்துள்ளதால் அவற்றின் விலையும் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. குறிப்பாக, மல்லிகைப் பூ தேவை அதிகரித்ததன் காரணமாக ஒரு கிலோ ரூ.2,000 வரை விற்பனையாகி வருகிறது. மேலும் கனகாம்பரம் பூ தட்டுப்பாடு காரணமாக கிலோ ரூ.1,200 முதல் ரூ.1,500 வரை உச்சத்தைத் தொட்டுள்ளது. இதேபோல், பண்டிகைக் கால வழிபாட்டிற்குப் பயன்படும் பிற பூக்களான அரளி மற்றும் சிகப்பு அரளி கிலோ ரூ.200 முதல் ரூ.400 வரையிலும், சம்மங்கி கிலோ ரூ.130 முதல் ரூ.150 வரையிலும், பன்னீர் ரோஸ் கிலோ ரூ.70 முதல் ரூ.100 வரையிலும், விருச்சிப் பூ கிலோ ரூ.120 முதல் ரூ.150 வரையிலும், சிகப்பு செண்டுமல்லி கிலோ ரூ.60 முதல் ரூ.80 வரையிலும், செண்டுமல்லி கிலோ ரூ.40 முதல் ரூ.60 வரையிலும், கோழிக்கொண்டைப் பூ கிலோ ரூ.60 முதல் ரூ.70 வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது. தீபாவளிப் பண்டிகை வழிபாட்டிற்காகவும் மாலைகள் கட்டுவதற்காகவும் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் பூக்களை ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர். பூக்களுக்கு நல்ல விலை கிடைத்து வருவதால் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.1
- திண்டுக்கல் மதுக்கடையில் தொழில்நுட்பக் கோரல் காரணமாக மதுக்கடைகள் மூடப்பட்டன தற்பொழுது மது கடைகள் திறக்கப்பட்டு நீண்ட வரிசையில் காத்துக் கிடந்து மதுக்களை வாங்கிச் செல்லும் மது பிரியர்கள்1
- ஆண்டிப்பட்டி ஆட்டு சந்தையில் தீபாவளியை முன்னிட்டு ஆடுகள் விற்பனை தீவிரம்1
- தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே பட்டாசு கடையில் வெடி விபத்து – பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதம் - நான்கு பேர் காயம். தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே காமாட்சிபுரத்தில் இருந்து பூமலைக்குண்டு செல்லும் சாலையில், காமாட்சிபுரம் ஊராட்சியைச் சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் அழகுமுத்து என்பவருக்குச் சொந்தமான 'அழகு பட்டாசு கடை' ஒன்று இயங்கி வருகிறது. சுமார் 10 ஆண்டுகளுக்கு மேலாக இந்த பட்டாசு கடையை அவர் நடத்தி வருகின்றார். இந்நிலையில், இரவில் எதிர்பாராத விதமாக கடையை மூடும் நேரத்தில், பட்டாசுகள் வைக்கப்பட்டிருந்த இடத்தில் திடீரென்று வெடிச்சத்தம் கேட்டது. அதைத் தொடர்ந்து உள்ளே இருந்த அனைவரும் வெளியே வந்து பார்த்தபொழுது, அது பெரிய தீ விபத்தாக மாறியிருந்தது. இதனைத் தொடர்ந்து உடனடியாகக் காவல்துறையினருக்கும் தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினரும் தீயணைப்புத் துறையினரும் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு தீயை முற்றிலும் அனைத்தனர். இந்த விபத்தில் தீபாவளி விற்பனைக்கு என்று வைக்கப்பட்டிருந்த சுமார் பல லட்சம் மதிப்பிலான பட்டாசுகள், இரண்டு பிக்கப் வாகனங்கள் ஆகியவை எரிந்து சாம்பலாகின. மேலும் இந்த விபத்தில் பட்டாசு கடையில் கடையில் இருந்த ஒரு பெண் உட்பட 4 பேருக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து ஓடைப்பட்டி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விபத்து எவ்வாறு ஏற்பட்டது என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.1
- திண்டுக்கல் மாவட்டம் டாஸ்மாக் கடைகள் தொழில்நுட்ப காரணமாக பல கடைகள் மூடப்பட்டுள்ள நிலையில், திறந்துள்ள மற்ற கடைகளில் நீண்ட வரிசையில் மதுவை காத்திருந்து வாங்கிச் செல்லும் மது பிரியர்கள்.1
- இம்மையிலும் நன்மை தருவார் கோவிலில் பிரதோஷ வழிபாட்டில் பக்தர்கள். மதுரை அருள்மிகு இம்மையிலும் நன்மை தருவார் திருக்கோயிலில் இன்று 06.11.2026 வெள்ளிக்கிழமை மாலை சுக்ரவார வார பிரதோசத்தை முன்னிட்டு மாலை ஸ்ரீ நந்தியம் பெருமானுக்கு மூலவர் பிரதோஷ நாயகர் நாயகி சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்று வெள்ளி ரிஷப வாகனத்தில் பிரதோஷ நாயகர் நாயகி திருக்கோவில் பிரகாரத்தை மூன்று முறை வலம் வந்து பிரதோஷ பூஜை நிறைவு பெற்றது. அதனை தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.1
- சின்னமனூர் அருகே நள்ளிரவில் பட்டாசு கடையில் ஏற்பட்ட வெடி விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பட்டாசுகள் எரிந்து சேதம் தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே நள்ளிரவில் பட்டாசு கடையில் ஏற்பட்ட வெடி விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பட்டாசுகள் எரிந்து சேதம் பணியாளர் பெண் உட்பட நான்கு பேர் லேசான காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். தீயணைப்புத் துறையினர் தீவிரமாக பற்றி எரியும் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர் . தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே காமாட்சி புரத்தில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரும் திமுக பிரமுகருமான அழகு என்பவர் தனியார் பட்டாசு கடை வைத்து நடத்தி வருகின்றார். தற்போது தீபாவளி பண்டிகை தினத்தை முன்னிட்டு பட்டாசுகளை விற்பனை செய்வதற்காக பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பட்டாசுகளை கொள்முதல் செய்து விற்பனை செய்வதற்காக கடை மற்றும் கடையின் அருகில் உள்ள குடோனில் வைத்து விற்பனை செய்யும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். தீபாவளி பண்டிகைக்காக சுற்றுவட்ட கிராம பகுதிகளில் இருந்து ஏராளமானோர் பட்டாசுகளை வாங்குவதற்காக நள்ளிரவு என்றும் பாராமல் வருகை தந்த வண்ணம் இருந்துள்ளனர். இந்நிலையில் ஒரு பெண் உள்பட நான்கு பணியாளர்கள் இரவு நேர வியாபாரத்தில் பணிபுரிந்து வந்துள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக பட்டாசு கடையில் தீப்பற்றி எரிந்து பட்டாசுகள் வெடிக்க துவங்கியுள்ளது. இதனைப் பார்த்த கடையில் பணிபுரிந்த பணியாளர்களும் பட்டாசுகளை வாங்குவதற்காக வந்திருந்த வாடிக்கையாளர்களும் அலறி அடித்து ஓடியுள்ளனர். மேலும் தொடர்ந்து பட்டாசுகள் வெடித்ததால் கடையில் பணிபுரிந்த பெண் உள்பட நான்கு பணியாளர்களும் லேசான காயங்களுடன் தப்பி வந்துள்ளனர். மேலும் பட்டாசு வாங்க வந்த வாடிக்கையாளர்களும் அலறி அடித்துக் கொண்டு ஓடி உள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து வாடிக்கையாளர்கள் தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்ததை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினரும் தீயணைப்பு துறையினரும் காயம் அடைந்தவர்களை மீட்டி சிகிச்சைக்காக சின்னமனூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் விடிய விடிய கடை மற்றும் குடோனில் பற்றி எரியும் தீயினை கம்பம் சின்னமனூர் உள்பட நான்கு தீயணைப்பு நிலையத் துறையினர் தீயை அணைத்து வருகின்றனர். பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பட்டாசுகள் வெடித்து சிதறி சேதமாகி வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக உத்தமபாளையம் டிஎஸ்பி சந்திரசேகர் மற்றும் கோட்டாட்சியர் சையது முகமது மற்றும் ஓடைப்பட்டி போலீசார் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நாளை தீபாவளி தினம் உள்ள சூழ்நிலையில் பட்டாசு கடையில் எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டு பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பட்டாசுகள் எரிந்து வருகின்ற சம்பவம் அப்பகுதி மக்களிடம் பெரிதும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றது .1
- சின்னாளபட்டி லெட்சுமி நாராயண சுவாமி கோயிலில் ஸ்ரீதன்வந்திரி பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நோய்கள் தீர நேர்த்திக்கடன செலுத்திய பக்தர்கள் திண்டுக்கல் சின்னாளபட்டி லெட்சுமி நாராயண சுவாமி கோயிலில் ஸ்ரீதன்வந்திரி பெருமாளுக்கு அஸ்தம் நட்சத்திரத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. தமிழ் மருத்துவத்தின்படி தன்வந்திரி என்பவர் பதினெண் சித்தர்களுள் ஒருவராக உள்ளார். இவ்வாறு புகழ்வாய்ந்த தன்வந்திரி பெருமாளின் திருவுருவச் சிலையை வேலூர் பொற்கோவிலைச் சேர்ந்த நாராயிணி அம்மா சின்னாபட்டி லெட்சுமிநாராயண பெருமாள் கோவிலுக்கு வழங்கினார். தற்போது தனி சன்னிதியில் தன்வந்திரி பெருமாள் பக்தர்களுக்காக அருள்பாலித்து வருகிறார். வெள்ளிக்கிழமை தன்வந்திரி பெருமாள் அவதரித்த நட்சத்திரமான அஸ்தம் நட்சத்திரத்தை முன்னிட்டு தன்வந்திரி பெருமாளுக்கு பால், தேன், தயிர், இளநீர், மாப்பொடி உட்பட 16 வகை சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு மலர்களை கொண்டு சிறப்பு அலங்காரம் செய்திருந்தனர். காலை முதல் பக்தர்கள் கோவிலுக்கு வந்து தன்வந்திரி பெருமாளை வணங்கி மகாபிரசாதம் பெற்றுச் சென்றனர். தன்வந்திரி பெருமாளின் சிறப்பு அலங்காரம் குறித்து கோவில் குருக்கள் ஜெகன்நாதன் கூறுகையில் அகத்தியர் பதஞ்சலி கமலமுனி திருமூலர் குதம்பைச்சித்தர் கோரக்கர் சுந்தரானந்தர் கொங்கணர், சட்டைமுனி வால்மீகி இராமதேவர் போல் தன்வந்திரி பெருமாளும் சித்தர்கள் வரிசையில் உள்ளார். இவரை வணங்கினால் நோய் நொடிகள் தீரும் என்பது ஐதீகம். தன்வந்திரி பெருமாளுக்கு மருத்துவ திரவியங்கள், உளுந்தங்களி, தயிர்சாதம், வெண் பொங்கல் படைத்து வழிபட்டால் நோய் நொடிகள் தீரும் என்பது ஐதீகம் என்பதால் பக்தர்கள் இவற்றில் ஏதாவது ஒன்றை தன்வந்திரி பெருமாளுக்கு படைத்து மனதார வேண்டினால் நோய்நொடிகள் தீரும். ஒவ்வொரு மாதமும் தன்வந்திரி அவதரித்த அஸ்தம் நட்சத்திரம் அன்று வழிபாடு செய்தால் சிறப்பு பலன்கள் கிடைக்கும் என்றார். கோவில் நிர்வாகம் சார்பாக பக்தர்களுக்கு மகாபிரசாதம் வழங்கப்பட்டது.1