logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

இம்மையிலும் நன்மை தருவார் கோவிலில் பிரதோஷ வழிபாட்டில் பக்தர்கள். மதுரை அருள்மிகு இம்மையிலும் நன்மை தருவார் திருக்கோயிலில் இன்று 06.11.2026 வெள்ளிக்கிழமை மாலை சுக்ரவார வார பிரதோசத்தை முன்னிட்டு மாலை ஸ்ரீ நந்தியம் பெருமானுக்கு மூலவர் பிரதோஷ நாயகர் நாயகி சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்று வெள்ளி ரிஷப வாகனத்தில் பிரதோஷ நாயகர் நாயகி திருக்கோவில் பிரகாரத்தை மூன்று முறை வலம் வந்து பிரதோஷ பூஜை நிறைவு பெற்றது. அதனை தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

19 hrs ago
user_சு.இரத்தினவேல்
சு.இரத்தினவேல்
Madurai South, Tamil Nadu•
19 hrs ago

இம்மையிலும் நன்மை தருவார் கோவிலில் பிரதோஷ வழிபாட்டில் பக்தர்கள். மதுரை அருள்மிகு இம்மையிலும் நன்மை தருவார் திருக்கோயிலில் இன்று 06.11.2026 வெள்ளிக்கிழமை மாலை சுக்ரவார வார பிரதோசத்தை முன்னிட்டு மாலை ஸ்ரீ நந்தியம் பெருமானுக்கு மூலவர் பிரதோஷ நாயகர் நாயகி சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்று வெள்ளி ரிஷப வாகனத்தில் பிரதோஷ நாயகர் நாயகி திருக்கோவில் பிரகாரத்தை மூன்று முறை வலம் வந்து பிரதோஷ பூஜை நிறைவு பெற்றது. அதனை தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

More news from Tamil Nadu and nearby areas
  • இம்மையிலும் நன்மை தருவார் கோவிலில் பிரதோஷ வழிபாட்டில் பக்தர்கள். மதுரை அருள்மிகு இம்மையிலும் நன்மை தருவார் திருக்கோயிலில் இன்று 06.11.2026 வெள்ளிக்கிழமை மாலை சுக்ரவார வார பிரதோசத்தை முன்னிட்டு மாலை ஸ்ரீ நந்தியம் பெருமானுக்கு மூலவர் பிரதோஷ நாயகர் நாயகி சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்று வெள்ளி ரிஷப வாகனத்தில் பிரதோஷ நாயகர் நாயகி திருக்கோவில் பிரகாரத்தை மூன்று முறை வலம் வந்து பிரதோஷ பூஜை நிறைவு பெற்றது. அதனை தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
    1
    இம்மையிலும் நன்மை தருவார் கோவிலில் பிரதோஷ வழிபாட்டில் பக்தர்கள்.
மதுரை அருள்மிகு இம்மையிலும் நன்மை தருவார் திருக்கோயிலில் இன்று 
06.11.2026 வெள்ளிக்கிழமை மாலை சுக்ரவார வார பிரதோசத்தை முன்னிட்டு  மாலை ஸ்ரீ நந்தியம் பெருமானுக்கு மூலவர் பிரதோஷ நாயகர் நாயகி சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்று வெள்ளி ரிஷப வாகனத்தில் பிரதோஷ நாயகர் நாயகி திருக்கோவில் பிரகாரத்தை மூன்று முறை வலம் வந்து பிரதோஷ பூஜை நிறைவு பெற்றது. அதனை தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
    user_சு.இரத்தினவேல்
    சு.இரத்தினவேல்
    Madurai South, Tamil Nadu•
    19 hrs ago
  • தேவகோட்டையில் மாணவர்களுக்கு பாதுகாப்பான தீபாவளி விழிப்புணர்வு நிகழ்ச்சி சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் தீபாவளி பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. தீயணைப்பு நிலைய அலுவலர் கணேசன் தலைமையிலான வீரர்கள் பங்கேற்றனர். மாணவர்களுக்கு பட்டாசு வெடிக்கும் முறை, தீ விபத்தின்போது 'நில், படு, உருள்' (Stop, Drop, Roll) என்ற முறையைப் பின்பற்றுதல் உள்ளிட்ட நேரடி செயல்முறை விளக்கங்களை அளித்தனர். பெரியவர்களின் மேற்பார்வையில் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும்; நைலான் உடைகள் அணியக் கூடாது; பாட்டில், கொட்டாங்குச்சியில் பட்டாசு வெடிக்கக் கூடாது; பைகளில் பட்டாசு வைக்கக் கூடாது என அறிவுறுத்தப்பட்டது. மாணவர்களுக்கு விழிப்புணர்வுத் துண்டுப் பிரசுரங்களும் வழங்கப்பட்டன. தலைமை ஆசிரியர் சொக்கலிங்கம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
    1
    தேவகோட்டையில் மாணவர்களுக்கு பாதுகாப்பான தீபாவளி விழிப்புணர்வு நிகழ்ச்சி
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் தீபாவளி பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. தீயணைப்பு நிலைய அலுவலர் கணேசன் தலைமையிலான வீரர்கள் பங்கேற்றனர்.
மாணவர்களுக்கு பட்டாசு வெடிக்கும் முறை, தீ விபத்தின்போது 'நில், படு, உருள்' (Stop, Drop, Roll) என்ற முறையைப் பின்பற்றுதல் உள்ளிட்ட நேரடி செயல்முறை விளக்கங்களை அளித்தனர். பெரியவர்களின் மேற்பார்வையில் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும்; நைலான் உடைகள் அணியக் கூடாது; பாட்டில், கொட்டாங்குச்சியில் பட்டாசு வெடிக்கக் கூடாது; பைகளில் பட்டாசு வைக்கக் கூடாது என அறிவுறுத்தப்பட்டது.
மாணவர்களுக்கு விழிப்புணர்வுத் துண்டுப் பிரசுரங்களும் வழங்கப்பட்டன. தலைமை ஆசிரியர் சொக்கலிங்கம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
    user_Devakottaigani news
    Devakottaigani news
    சிவகங்கை, சிவகங்கை, தமிழ்நாடு•
    22 hrs ago
  • ஆண்டிப்பட்டி ஆட்டு சந்தையில் தீபாவளியை முன்னிட்டு ஆடுகள் விற்பனை தீவிரம்
    1
    ஆண்டிப்பட்டி ஆட்டு சந்தையில் தீபாவளியை முன்னிட்டு
ஆடுகள் விற்பனை தீவிரம்
    user_VIGNESH
    VIGNESH
    Photographer ஆண்டிபட்டி, தேனி, தமிழ்நாடு•
    5 hrs ago
  • சின்னாளபட்டி லெட்சுமி நாராயண சுவாமி கோயிலில் ஸ்ரீதன்வந்திரி பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நோய்கள் தீர நேர்த்திக்கடன செலுத்திய பக்தர்கள் திண்டுக்கல் சின்னாளபட்டி லெட்சுமி நாராயண சுவாமி கோயிலில் ஸ்ரீதன்வந்திரி பெருமாளுக்கு அஸ்தம் நட்சத்திரத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. தமிழ் மருத்துவத்தின்படி தன்வந்திரி என்பவர் பதினெண் சித்தர்களுள் ஒருவராக உள்ளார். இவ்வாறு புகழ்வாய்ந்த தன்வந்திரி பெருமாளின் திருவுருவச் சிலையை வேலூர் பொற்கோவிலைச் சேர்ந்த நாராயிணி அம்மா சின்னாபட்டி லெட்சுமிநாராயண பெருமாள் கோவிலுக்கு வழங்கினார். தற்போது தனி சன்னிதியில் தன்வந்திரி பெருமாள் பக்தர்களுக்காக அருள்பாலித்து வருகிறார். வெள்ளிக்கிழமை தன்வந்திரி பெருமாள் அவதரித்த நட்சத்திரமான அஸ்தம் நட்சத்திரத்தை முன்னிட்டு தன்வந்திரி பெருமாளுக்கு பால், தேன், தயிர், இளநீர், மாப்பொடி உட்பட 16 வகை சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு மலர்களை கொண்டு சிறப்பு அலங்காரம் செய்திருந்தனர். காலை முதல் பக்தர்கள் கோவிலுக்கு வந்து தன்வந்திரி பெருமாளை வணங்கி மகாபிரசாதம் பெற்றுச் சென்றனர். தன்வந்திரி பெருமாளின் சிறப்பு அலங்காரம் குறித்து கோவில் குருக்கள் ஜெகன்நாதன் கூறுகையில் அகத்தியர் பதஞ்சலி கமலமுனி திருமூலர் குதம்பைச்சித்தர் கோரக்கர் சுந்தரானந்தர் கொங்கணர், சட்டைமுனி வால்மீகி இராமதேவர் போல் தன்வந்திரி பெருமாளும் சித்தர்கள் வரிசையில் உள்ளார். இவரை வணங்கினால் நோய் நொடிகள் தீரும் என்பது ஐதீகம். தன்வந்திரி பெருமாளுக்கு மருத்துவ திரவியங்கள், உளுந்தங்களி, தயிர்சாதம், வெண் பொங்கல் படைத்து வழிபட்டால் நோய் நொடிகள் தீரும் என்பது ஐதீகம் என்பதால் பக்தர்கள் இவற்றில் ஏதாவது ஒன்றை தன்வந்திரி பெருமாளுக்கு படைத்து மனதார வேண்டினால் நோய்நொடிகள் தீரும். ஒவ்வொரு மாதமும் தன்வந்திரி அவதரித்த அஸ்தம் நட்சத்திரம் அன்று வழிபாடு செய்தால் சிறப்பு பலன்கள் கிடைக்கும் என்றார். கோவில் நிர்வாகம் சார்பாக பக்தர்களுக்கு மகாபிரசாதம் வழங்கப்பட்டது.
    1
    சின்னாளபட்டி லெட்சுமி நாராயண சுவாமி கோயிலில் ஸ்ரீதன்வந்திரி பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நோய்கள் தீர நேர்த்திக்கடன செலுத்திய பக்தர்கள்
திண்டுக்கல் சின்னாளபட்டி லெட்சுமி நாராயண சுவாமி கோயிலில் ஸ்ரீதன்வந்திரி பெருமாளுக்கு அஸ்தம் நட்சத்திரத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. 
தமிழ் மருத்துவத்தின்படி தன்வந்திரி என்பவர் பதினெண் சித்தர்களுள் ஒருவராக உள்ளார். இவ்வாறு புகழ்வாய்ந்த தன்வந்திரி பெருமாளின் திருவுருவச் சிலையை வேலூர் பொற்கோவிலைச் சேர்ந்த நாராயிணி அம்மா சின்னாபட்டி லெட்சுமிநாராயண பெருமாள் கோவிலுக்கு வழங்கினார். 
தற்போது தனி சன்னிதியில் தன்வந்திரி பெருமாள் பக்தர்களுக்காக அருள்பாலித்து வருகிறார். வெள்ளிக்கிழமை தன்வந்திரி பெருமாள் அவதரித்த நட்சத்திரமான அஸ்தம் நட்சத்திரத்தை முன்னிட்டு தன்வந்திரி பெருமாளுக்கு பால், தேன், தயிர், இளநீர், மாப்பொடி உட்பட 16 வகை சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு மலர்களை கொண்டு சிறப்பு அலங்காரம் செய்திருந்தனர். 
காலை முதல் பக்தர்கள் கோவிலுக்கு வந்து தன்வந்திரி பெருமாளை வணங்கி மகாபிரசாதம் பெற்றுச் சென்றனர். தன்வந்திரி பெருமாளின் சிறப்பு அலங்காரம் குறித்து கோவில் குருக்கள் ஜெகன்நாதன் கூறுகையில் அகத்தியர் பதஞ்சலி கமலமுனி திருமூலர் குதம்பைச்சித்தர் கோரக்கர் சுந்தரானந்தர் கொங்கணர், சட்டைமுனி வால்மீகி இராமதேவர் போல் தன்வந்திரி பெருமாளும் சித்தர்கள் வரிசையில் உள்ளார். 
இவரை வணங்கினால் நோய் நொடிகள் தீரும் என்பது ஐதீகம். தன்வந்திரி பெருமாளுக்கு மருத்துவ திரவியங்கள், உளுந்தங்களி, தயிர்சாதம், வெண் பொங்கல் படைத்து வழிபட்டால் நோய் நொடிகள் தீரும் என்பது ஐதீகம் என்பதால் பக்தர்கள் இவற்றில் ஏதாவது ஒன்றை தன்வந்திரி பெருமாளுக்கு படைத்து மனதார வேண்டினால் நோய்நொடிகள் தீரும். 
ஒவ்வொரு மாதமும் தன்வந்திரி அவதரித்த அஸ்தம் நட்சத்திரம் அன்று வழிபாடு செய்தால் சிறப்பு பலன்கள் கிடைக்கும் என்றார். கோவில் நிர்வாகம் சார்பாக பக்தர்களுக்கு மகாபிரசாதம் வழங்கப்பட்டது.
    user_திண்டுக்கல் செய்திகள்
    திண்டுக்கல் செய்திகள்
    திண்டுக்கல் கிழக்கு, திண்டுக்கல், தமிழ்நாடு•
    17 hrs ago
  • சின்னமனூர் அருகே நள்ளிரவில் பட்டாசு கடையில் ஏற்பட்ட வெடி விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பட்டாசுகள் எரிந்து சேதம் தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே நள்ளிரவில் பட்டாசு கடையில் ஏற்பட்ட வெடி விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பட்டாசுகள் எரிந்து சேதம் பணியாளர் பெண் உட்பட நான்கு பேர் லேசான காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். தீயணைப்புத் துறையினர் தீவிரமாக பற்றி எரியும் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர் . தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே காமாட்சி புரத்தில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரும் திமுக பிரமுகருமான அழகு என்பவர் தனியார் பட்டாசு கடை வைத்து நடத்தி வருகின்றார். தற்போது தீபாவளி பண்டிகை தினத்தை முன்னிட்டு பட்டாசுகளை விற்பனை செய்வதற்காக பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பட்டாசுகளை கொள்முதல் செய்து விற்பனை செய்வதற்காக கடை மற்றும் கடையின் அருகில் உள்ள குடோனில் வைத்து விற்பனை செய்யும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். தீபாவளி பண்டிகைக்காக சுற்றுவட்ட கிராம பகுதிகளில் இருந்து ஏராளமானோர் பட்டாசுகளை வாங்குவதற்காக நள்ளிரவு என்றும் பாராமல் வருகை தந்த வண்ணம் இருந்துள்ளனர். இந்நிலையில் ஒரு பெண் உள்பட நான்கு பணியாளர்கள் இரவு நேர வியாபாரத்தில் பணிபுரிந்து வந்துள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக பட்டாசு கடையில் தீப்பற்றி எரிந்து பட்டாசுகள் வெடிக்க துவங்கியுள்ளது. இதனைப் பார்த்த கடையில் பணிபுரிந்த பணியாளர்களும் பட்டாசுகளை வாங்குவதற்காக வந்திருந்த வாடிக்கையாளர்களும் அலறி அடித்து ஓடியுள்ளனர். மேலும் தொடர்ந்து பட்டாசுகள் வெடித்ததால் கடையில் பணிபுரிந்த பெண் உள்பட நான்கு பணியாளர்களும் லேசான காயங்களுடன் தப்பி வந்துள்ளனர். மேலும் பட்டாசு வாங்க வந்த வாடிக்கையாளர்களும் அலறி அடித்துக் கொண்டு ஓடி உள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து வாடிக்கையாளர்கள் தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்ததை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினரும் தீயணைப்பு துறையினரும் காயம் அடைந்தவர்களை மீட்டி சிகிச்சைக்காக சின்னமனூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் விடிய விடிய கடை மற்றும் குடோனில் பற்றி எரியும் தீயினை கம்பம் சின்னமனூர் உள்பட நான்கு தீயணைப்பு நிலையத் துறையினர் தீயை அணைத்து வருகின்றனர். பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பட்டாசுகள் வெடித்து சிதறி சேதமாகி வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக உத்தமபாளையம் டிஎஸ்பி சந்திரசேகர் மற்றும் கோட்டாட்சியர் சையது முகமது மற்றும் ஓடைப்பட்டி போலீசார் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நாளை தீபாவளி தினம் உள்ள சூழ்நிலையில் பட்டாசு கடையில் எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டு பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பட்டாசுகள் எரிந்து வருகின்ற சம்பவம் அப்பகுதி மக்களிடம் பெரிதும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றது .
    1
    சின்னமனூர் அருகே
 நள்ளிரவில் பட்டாசு கடையில் ஏற்பட்ட வெடி விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பட்டாசுகள் எரிந்து சேதம்
தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே
நள்ளிரவில் பட்டாசு கடையில் ஏற்பட்ட வெடி விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பட்டாசுகள் எரிந்து சேதம்
பணியாளர் பெண் உட்பட நான்கு பேர் லேசான காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
தீயணைப்புத் துறையினர் தீவிரமாக பற்றி எரியும் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர் .
தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே காமாட்சி புரத்தில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரும் திமுக பிரமுகருமான அழகு என்பவர் தனியார் பட்டாசு கடை வைத்து நடத்தி வருகின்றார்.
தற்போது தீபாவளி பண்டிகை தினத்தை முன்னிட்டு பட்டாசுகளை விற்பனை செய்வதற்காக பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பட்டாசுகளை கொள்முதல் செய்து விற்பனை செய்வதற்காக கடை மற்றும் கடையின் அருகில் உள்ள குடோனில் வைத்து விற்பனை செய்யும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார்.
தீபாவளி பண்டிகைக்காக சுற்றுவட்ட கிராம பகுதிகளில் இருந்து ஏராளமானோர் பட்டாசுகளை வாங்குவதற்காக நள்ளிரவு என்றும் பாராமல் வருகை தந்த வண்ணம் இருந்துள்ளனர்.
இந்நிலையில் ஒரு பெண் உள்பட நான்கு பணியாளர்கள் இரவு நேர வியாபாரத்தில் பணிபுரிந்து வந்துள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக பட்டாசு கடையில் தீப்பற்றி எரிந்து பட்டாசுகள் வெடிக்க துவங்கியுள்ளது.
இதனைப் பார்த்த கடையில் பணிபுரிந்த பணியாளர்களும் பட்டாசுகளை வாங்குவதற்காக வந்திருந்த வாடிக்கையாளர்களும் அலறி அடித்து ஓடியுள்ளனர்.
மேலும் தொடர்ந்து பட்டாசுகள் வெடித்ததால் 
கடையில் பணிபுரிந்த பெண் உள்பட நான்கு பணியாளர்களும் லேசான காயங்களுடன் தப்பி வந்துள்ளனர்.
மேலும் பட்டாசு வாங்க வந்த வாடிக்கையாளர்களும் அலறி அடித்துக் கொண்டு ஓடி உள்ளனர்.
இந்தச் சம்பவம் குறித்து வாடிக்கையாளர்கள் தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்ததை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினரும் தீயணைப்பு துறையினரும் காயம் அடைந்தவர்களை மீட்டி சிகிச்சைக்காக சின்னமனூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும் விடிய விடிய கடை மற்றும் குடோனில் பற்றி எரியும் தீயினை கம்பம் சின்னமனூர் உள்பட நான்கு தீயணைப்பு நிலையத் துறையினர்  தீயை அணைத்து வருகின்றனர்.
பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பட்டாசுகள் வெடித்து சிதறி சேதமாகி வருகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக உத்தமபாளையம் டிஎஸ்பி சந்திரசேகர் மற்றும் கோட்டாட்சியர் சையது முகமது மற்றும் ஓடைப்பட்டி போலீசார் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நாளை தீபாவளி தினம் உள்ள சூழ்நிலையில் பட்டாசு கடையில் எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டு பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பட்டாசுகள் எரிந்து வருகின்ற சம்பவம் அப்பகுதி மக்களிடம் பெரிதும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றது .
    user_SARAVANAN K
    SARAVANAN K
    Local News Reporter தேனி, தேனி, தமிழ்நாடு•
    5 hrs ago
  • தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே பட்டாசு கடையில் வெடி விபத்து – பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதம் - நான்கு பேர் காயம். தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே காமாட்சிபுரத்தில் இருந்து பூமலைக்குண்டு செல்லும் சாலையில், காமாட்சிபுரம் ஊராட்சியைச் சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் அழகுமுத்து என்பவருக்குச் சொந்தமான 'அழகு பட்டாசு கடை' ஒன்று இயங்கி வருகிறது. சுமார் 10 ஆண்டுகளுக்கு மேலாக இந்த பட்டாசு கடையை அவர் நடத்தி வருகின்றார். இந்நிலையில், இரவில் எதிர்பாராத விதமாக கடையை மூடும் நேரத்தில், பட்டாசுகள் வைக்கப்பட்டிருந்த இடத்தில் திடீரென்று வெடிச்சத்தம் கேட்டது. அதைத் தொடர்ந்து உள்ளே இருந்த அனைவரும் வெளியே வந்து பார்த்தபொழுது, அது பெரிய தீ விபத்தாக மாறியிருந்தது. இதனைத் தொடர்ந்து உடனடியாகக் காவல்துறையினருக்கும் தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினரும் தீயணைப்புத் துறையினரும் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு தீயை முற்றிலும் அனைத்தனர். இந்த விபத்தில் தீபாவளி விற்பனைக்கு என்று வைக்கப்பட்டிருந்த சுமார் பல லட்சம் மதிப்பிலான பட்டாசுகள், இரண்டு பிக்கப் வாகனங்கள் ஆகியவை எரிந்து சாம்பலாகின. மேலும் இந்த விபத்தில் பட்டாசு கடையில் கடையில் இருந்த ஒரு பெண் உட்பட 4 பேருக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து ஓடைப்பட்டி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விபத்து எவ்வாறு ஏற்பட்டது என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    1
    தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே பட்டாசு கடையில் வெடி விபத்து – பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதம் - நான்கு பேர் காயம்.
தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே காமாட்சிபுரத்தில் இருந்து பூமலைக்குண்டு செல்லும் சாலையில், காமாட்சிபுரம் ஊராட்சியைச் சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் அழகுமுத்து என்பவருக்குச் சொந்தமான 'அழகு பட்டாசு கடை' ஒன்று இயங்கி வருகிறது. சுமார் 10 ஆண்டுகளுக்கு மேலாக இந்த பட்டாசு கடையை அவர் நடத்தி வருகின்றார்.
இந்நிலையில், இரவில் எதிர்பாராத விதமாக கடையை மூடும் நேரத்தில், பட்டாசுகள் வைக்கப்பட்டிருந்த இடத்தில் திடீரென்று வெடிச்சத்தம் கேட்டது. அதைத் தொடர்ந்து உள்ளே இருந்த அனைவரும் வெளியே வந்து பார்த்தபொழுது, அது பெரிய தீ விபத்தாக மாறியிருந்தது.
இதனைத் தொடர்ந்து உடனடியாகக் காவல்துறையினருக்கும் தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. 
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினரும் தீயணைப்புத் துறையினரும் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு தீயை முற்றிலும் அனைத்தனர்.
இந்த விபத்தில் தீபாவளி விற்பனைக்கு என்று வைக்கப்பட்டிருந்த சுமார் பல லட்சம் மதிப்பிலான பட்டாசுகள், இரண்டு பிக்கப் வாகனங்கள் ஆகியவை எரிந்து சாம்பலாகின.
மேலும் இந்த விபத்தில் பட்டாசு கடையில் கடையில் இருந்த ஒரு பெண் உட்பட 4 பேருக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து ஓடைப்பட்டி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விபத்து எவ்வாறு ஏற்பட்டது என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    user_Shakthi
    Shakthi
    Local News Reporter பெரியகுளம், தேனி, தமிழ்நாடு•
    5 hrs ago
  • ஸ்ரீவில்லிபுத்தூரில் வெற்றி சிறப்பு காய்கறிகள் தொகுப்பு திட்டத்தை தொடங்கி வைத்த சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக். தமிழகம் முழுவதும் கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பாக தீபாவளியை பொதுமக்கள் சிறப்பாக கொண்டாடும் விதமாக வெற்றி சிறப்பு காய்கறிகள் தொகுப்பு திட்டத்தை நேற்று மாநிலம் முழுவதும் அமைச்சர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் தொடங்கி வைத்தனர்.  இதன் ஒரு பகுதியாக விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் கூட்டுறவு தொடக்க வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி  வங்கியில் பொதுமக்கள் தீபாவளியை சிறப்பாக கொண்டாடும் விதமாக வெற்றி சிறப்பு காய்கறிகள் திட்டத்தை சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக் தொடங்கி வைத்தார். இந்த வெற்றி சிறப்பு காய்கறி திட்டத்தில் ஒரு தேங்காய், பெரிய வெங்காயம், உருளைக்கிழங்கு, கேரட், பீன்ஸ், எலுமிச்சை, இஞ்சி உள்ளிட்ட பொருட்கள் இடம்பெற்றுள்ளது. குடும்ப தலைவிகள் இத்தகைய பொருட்கள் வாங்குவதற்கு 250 முதல் 300 ரூபாய் வரை செலவாகும் எனவும் இத்தகைய திட்டத்தின் மூலம் காய்கறிகள் வழங்கி உள்ளது பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாகவும் தெரிவித்தனர்.
    1
    ஸ்ரீவில்லிபுத்தூரில்  வெற்றி சிறப்பு காய்கறிகள் தொகுப்பு திட்டத்தை தொடங்கி வைத்த சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக்.
தமிழகம் முழுவதும் கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பாக தீபாவளியை பொதுமக்கள் சிறப்பாக கொண்டாடும் விதமாக வெற்றி சிறப்பு காய்கறிகள் தொகுப்பு திட்டத்தை நேற்று மாநிலம் முழுவதும் அமைச்சர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் தொடங்கி வைத்தனர். 
இதன் ஒரு பகுதியாக விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் கூட்டுறவு தொடக்க வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி  வங்கியில் பொதுமக்கள் தீபாவளியை சிறப்பாக கொண்டாடும் விதமாக வெற்றி சிறப்பு காய்கறிகள் திட்டத்தை சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக் தொடங்கி வைத்தார். இந்த வெற்றி சிறப்பு காய்கறி திட்டத்தில் ஒரு தேங்காய், பெரிய வெங்காயம், உருளைக்கிழங்கு, கேரட், பீன்ஸ், எலுமிச்சை, இஞ்சி உள்ளிட்ட பொருட்கள் இடம்பெற்றுள்ளது. குடும்ப தலைவிகள் இத்தகைய பொருட்கள் வாங்குவதற்கு 250 முதல் 300 ரூபாய் வரை செலவாகும் எனவும் இத்தகைய திட்டத்தின் மூலம் காய்கறிகள் வழங்கி உள்ளது பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாகவும் தெரிவித்தனர்.
    user_Praba
    Praba
    ஸ்ரீவில்லிபுத்தூர், விருதுநகர், தமிழ்நாடு•
    15 hrs ago
  • சிவகங்கை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் 10 அம்ச கோரிக்கையினை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம், நடைபெற்ற போது எடுத்த படம். போராட்டத்தின் போது பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி போராட்டம் நடத்தினர்.
    1
    சிவகங்கை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் 10 அம்ச கோரிக்கையினை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம், நடைபெற்ற போது எடுத்த படம். போராட்டத்தின் போது பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி போராட்டம் நடத்தினர்.
    user_Devakottaigani news
    Devakottaigani news
    சிவகங்கை, சிவகங்கை, தமிழ்நாடு•
    22 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.