ஸ்ரீவில்லிபுத்தூரில் வெற்றி சிறப்பு காய்கறிகள் தொகுப்பு திட்டத்தை தொடங்கி வைத்த சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக். தமிழகம் முழுவதும் கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பாக தீபாவளியை பொதுமக்கள் சிறப்பாக கொண்டாடும் விதமாக வெற்றி சிறப்பு காய்கறிகள் தொகுப்பு திட்டத்தை நேற்று மாநிலம் முழுவதும் அமைச்சர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் தொடங்கி வைத்தனர். இதன் ஒரு பகுதியாக விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் கூட்டுறவு தொடக்க வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியில் பொதுமக்கள் தீபாவளியை சிறப்பாக கொண்டாடும் விதமாக வெற்றி சிறப்பு காய்கறிகள் திட்டத்தை சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக் தொடங்கி வைத்தார். இந்த வெற்றி சிறப்பு காய்கறி திட்டத்தில் ஒரு தேங்காய், பெரிய வெங்காயம், உருளைக்கிழங்கு, கேரட், பீன்ஸ், எலுமிச்சை, இஞ்சி உள்ளிட்ட பொருட்கள் இடம்பெற்றுள்ளது. குடும்ப தலைவிகள் இத்தகைய பொருட்கள் வாங்குவதற்கு 250 முதல் 300 ரூபாய் வரை செலவாகும் எனவும் இத்தகைய திட்டத்தின் மூலம் காய்கறிகள் வழங்கி உள்ளது பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாகவும் தெரிவித்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூரில் வெற்றி சிறப்பு காய்கறிகள் தொகுப்பு திட்டத்தை தொடங்கி வைத்த சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக். தமிழகம் முழுவதும் கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பாக தீபாவளியை பொதுமக்கள் சிறப்பாக கொண்டாடும் விதமாக வெற்றி சிறப்பு காய்கறிகள் தொகுப்பு திட்டத்தை நேற்று மாநிலம் முழுவதும் அமைச்சர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் தொடங்கி வைத்தனர். இதன் ஒரு பகுதியாக விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் கூட்டுறவு தொடக்க வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியில் பொதுமக்கள் தீபாவளியை சிறப்பாக கொண்டாடும் விதமாக வெற்றி சிறப்பு காய்கறிகள் திட்டத்தை சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக் தொடங்கி வைத்தார். இந்த வெற்றி சிறப்பு காய்கறி திட்டத்தில் ஒரு தேங்காய், பெரிய வெங்காயம், உருளைக்கிழங்கு, கேரட், பீன்ஸ், எலுமிச்சை, இஞ்சி உள்ளிட்ட பொருட்கள் இடம்பெற்றுள்ளது. குடும்ப தலைவிகள் இத்தகைய பொருட்கள் வாங்குவதற்கு 250 முதல் 300 ரூபாய் வரை செலவாகும் எனவும் இத்தகைய திட்டத்தின் மூலம் காய்கறிகள் வழங்கி உள்ளது பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாகவும் தெரிவித்தனர்.
- ஸ்ரீவில்லிபுத்தூரில் வெற்றி சிறப்பு காய்கறிகள் தொகுப்பு திட்டத்தை தொடங்கி வைத்த சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக். தமிழகம் முழுவதும் கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பாக தீபாவளியை பொதுமக்கள் சிறப்பாக கொண்டாடும் விதமாக வெற்றி சிறப்பு காய்கறிகள் தொகுப்பு திட்டத்தை நேற்று மாநிலம் முழுவதும் அமைச்சர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் தொடங்கி வைத்தனர். இதன் ஒரு பகுதியாக விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் கூட்டுறவு தொடக்க வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியில் பொதுமக்கள் தீபாவளியை சிறப்பாக கொண்டாடும் விதமாக வெற்றி சிறப்பு காய்கறிகள் திட்டத்தை சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக் தொடங்கி வைத்தார். இந்த வெற்றி சிறப்பு காய்கறி திட்டத்தில் ஒரு தேங்காய், பெரிய வெங்காயம், உருளைக்கிழங்கு, கேரட், பீன்ஸ், எலுமிச்சை, இஞ்சி உள்ளிட்ட பொருட்கள் இடம்பெற்றுள்ளது. குடும்ப தலைவிகள் இத்தகைய பொருட்கள் வாங்குவதற்கு 250 முதல் 300 ரூபாய் வரை செலவாகும் எனவும் இத்தகைய திட்டத்தின் மூலம் காய்கறிகள் வழங்கி உள்ளது பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாகவும் தெரிவித்தனர்.1
- ஆண்டிப்பட்டி ஆட்டு சந்தையில் தீபாவளியை முன்னிட்டு ஆடுகள் விற்பனை தீவிரம்1
- சின்னமனூர் அருகே நள்ளிரவில் பட்டாசு கடையில் ஏற்பட்ட வெடி விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பட்டாசுகள் எரிந்து சேதம் தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே நள்ளிரவில் பட்டாசு கடையில் ஏற்பட்ட வெடி விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பட்டாசுகள் எரிந்து சேதம் பணியாளர் பெண் உட்பட நான்கு பேர் லேசான காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். தீயணைப்புத் துறையினர் தீவிரமாக பற்றி எரியும் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர் . தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே காமாட்சி புரத்தில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரும் திமுக பிரமுகருமான அழகு என்பவர் தனியார் பட்டாசு கடை வைத்து நடத்தி வருகின்றார். தற்போது தீபாவளி பண்டிகை தினத்தை முன்னிட்டு பட்டாசுகளை விற்பனை செய்வதற்காக பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பட்டாசுகளை கொள்முதல் செய்து விற்பனை செய்வதற்காக கடை மற்றும் கடையின் அருகில் உள்ள குடோனில் வைத்து விற்பனை செய்யும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். தீபாவளி பண்டிகைக்காக சுற்றுவட்ட கிராம பகுதிகளில் இருந்து ஏராளமானோர் பட்டாசுகளை வாங்குவதற்காக நள்ளிரவு என்றும் பாராமல் வருகை தந்த வண்ணம் இருந்துள்ளனர். இந்நிலையில் ஒரு பெண் உள்பட நான்கு பணியாளர்கள் இரவு நேர வியாபாரத்தில் பணிபுரிந்து வந்துள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக பட்டாசு கடையில் தீப்பற்றி எரிந்து பட்டாசுகள் வெடிக்க துவங்கியுள்ளது. இதனைப் பார்த்த கடையில் பணிபுரிந்த பணியாளர்களும் பட்டாசுகளை வாங்குவதற்காக வந்திருந்த வாடிக்கையாளர்களும் அலறி அடித்து ஓடியுள்ளனர். மேலும் தொடர்ந்து பட்டாசுகள் வெடித்ததால் கடையில் பணிபுரிந்த பெண் உள்பட நான்கு பணியாளர்களும் லேசான காயங்களுடன் தப்பி வந்துள்ளனர். மேலும் பட்டாசு வாங்க வந்த வாடிக்கையாளர்களும் அலறி அடித்துக் கொண்டு ஓடி உள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து வாடிக்கையாளர்கள் தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்ததை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினரும் தீயணைப்பு துறையினரும் காயம் அடைந்தவர்களை மீட்டி சிகிச்சைக்காக சின்னமனூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் விடிய விடிய கடை மற்றும் குடோனில் பற்றி எரியும் தீயினை கம்பம் சின்னமனூர் உள்பட நான்கு தீயணைப்பு நிலையத் துறையினர் தீயை அணைத்து வருகின்றனர். பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பட்டாசுகள் வெடித்து சிதறி சேதமாகி வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக உத்தமபாளையம் டிஎஸ்பி சந்திரசேகர் மற்றும் கோட்டாட்சியர் சையது முகமது மற்றும் ஓடைப்பட்டி போலீசார் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நாளை தீபாவளி தினம் உள்ள சூழ்நிலையில் பட்டாசு கடையில் எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டு பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பட்டாசுகள் எரிந்து வருகின்ற சம்பவம் அப்பகுதி மக்களிடம் பெரிதும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றது .1
- தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே பட்டாசு கடையில் வெடி விபத்து – பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதம் - நான்கு பேர் காயம். தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே காமாட்சிபுரத்தில் இருந்து பூமலைக்குண்டு செல்லும் சாலையில், காமாட்சிபுரம் ஊராட்சியைச் சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் அழகுமுத்து என்பவருக்குச் சொந்தமான 'அழகு பட்டாசு கடை' ஒன்று இயங்கி வருகிறது. சுமார் 10 ஆண்டுகளுக்கு மேலாக இந்த பட்டாசு கடையை அவர் நடத்தி வருகின்றார். இந்நிலையில், இரவில் எதிர்பாராத விதமாக கடையை மூடும் நேரத்தில், பட்டாசுகள் வைக்கப்பட்டிருந்த இடத்தில் திடீரென்று வெடிச்சத்தம் கேட்டது. அதைத் தொடர்ந்து உள்ளே இருந்த அனைவரும் வெளியே வந்து பார்த்தபொழுது, அது பெரிய தீ விபத்தாக மாறியிருந்தது. இதனைத் தொடர்ந்து உடனடியாகக் காவல்துறையினருக்கும் தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினரும் தீயணைப்புத் துறையினரும் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு தீயை முற்றிலும் அனைத்தனர். இந்த விபத்தில் தீபாவளி விற்பனைக்கு என்று வைக்கப்பட்டிருந்த சுமார் பல லட்சம் மதிப்பிலான பட்டாசுகள், இரண்டு பிக்கப் வாகனங்கள் ஆகியவை எரிந்து சாம்பலாகின. மேலும் இந்த விபத்தில் பட்டாசு கடையில் கடையில் இருந்த ஒரு பெண் உட்பட 4 பேருக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து ஓடைப்பட்டி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விபத்து எவ்வாறு ஏற்பட்டது என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.1
- இம்மையிலும் நன்மை தருவார் கோவிலில் பிரதோஷ வழிபாட்டில் பக்தர்கள். மதுரை அருள்மிகு இம்மையிலும் நன்மை தருவார் திருக்கோயிலில் இன்று 06.11.2026 வெள்ளிக்கிழமை மாலை சுக்ரவார வார பிரதோசத்தை முன்னிட்டு மாலை ஸ்ரீ நந்தியம் பெருமானுக்கு மூலவர் பிரதோஷ நாயகர் நாயகி சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்று வெள்ளி ரிஷப வாகனத்தில் பிரதோஷ நாயகர் நாயகி திருக்கோவில் பிரகாரத்தை மூன்று முறை வலம் வந்து பிரதோஷ பூஜை நிறைவு பெற்றது. அதனை தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.1
- சுரண்டை அருகே அடையாளம் தெரியாத பெண் எரித்து கொலை வழக்கில் துப்பு துவங்கியது கள்ளக்காதலை கைவிட மறுத்ததால் கொழுந்தன் அண்ணியை கழுத்தை நெறித்து கொலை செய்தது அம்பலம் . கணவர், கொழுந்தன், மாமியார் கைது கொல்லப்பட்ட பெண்ணின் இரண்டு குழந்தைகளின் தாய் கொல்லப்பட்ட விவரம் தெரியாமல் தீபாவளி தினத்தில் பரிதவிப்பு தென்காசி மாவட்டம், சுரண்டை அருகே சுரண்டை சுந்தரபாண்டிபுரம் செல்லும் சாலை அருகே சுந்தர் சொந்தமான வாழை தோட்டத்தில் எரிந்த நிலையில் 35 வயது மதிக்கத்தக்க பெண் சடலம் கிடப்பதை வயல்களுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்கு சென்ற தொழிலாளி பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார் உடனே இது குறித்து தோட்டத்தின் உரிமையாளருக்கு தகவல் தெரிவித்தார் அவர் சுரண்டை காவல் துறைக்கு தகவல் தெரிவித்தத்தை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் மற்றும் ஆலங்குளம் துணை காவல் கண்காணிப்பாளர் கிளாட்சன் ஜோஸ் சுரண்டை இன்ஸ்பெக்டர் மதன் ராம்குமார்,இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் தடயவியல் துறை ,வருவாய் ஆய்வாளர் முருகேஸ்வரிஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர் ஆலங்குளம் டிஎஸ்பி தலைமையில் 3 தனி படைகள் அமைக்கப்பட்டுள்ளது அதில் கடையம் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் சுரண்டை இன்ஸ்பெக்டர் மதன் ராம்குமார் மற்றும் சப் இன்ஸ்பெக்டர் போலீசார் அடங்கிய 3 தனி படைகள் இறந்தது யார் எந்த ஊரைச் சேர்ந்த பெண் சமீபத்தில் காணாமல் போனவர்கள் குறித்த தகவல்கள் சுரண்டை சாலை சுந்தரபாண்டியபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர் இதில் எரித்துக் கொல்லப்பட்டது குட்டி மாரி என்பது தெரிய வந்தது கடையநல்லூர் அருகே மேல கடையநல்லூர் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்த குட்டி மாரி கணவர் முருகன் ,குட்டி மாரியின் கொழுந்தன் ரவி, மாமியார் சிவகாமி ஆகியோர் தெருத்தெருவா துணிமணி வியாபாரங்களை செய்து வருகின்றனர் வியாபாரத்திற்காக சுரண்டையில் ஒரு தங்கும் விடுதியில் ரூம் எடுத்து தங்கி துணி வியாபாரம் செய்து வருகின்றனர் குட்டி மாரி கடையநல்லூரில் பெட்ரோல் பங்கில் வேலை செய்து வந்தார் இதில் குட்டி மாரிக்கும் அதே பகுதியில் உள்ள உள்ள ஒரு நபருக்கும் நீண்ட காலம் கள்ளத் தொடர்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது இது கணவர் முருகனுக்கு தெரிந்து கள்ளக்காதலை கைவிடுமாறு தனது மனைவி குட்டி மாரி இடம் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் கேட்கவில்லை இந்த விஷயம் முருகனின் தம்பி ரவிக்கு தெரியவந்தது நேற்று முன்தினம் இரவு 7 மணி அளவில் கடையநல்லூரில் இருந்து கணவர் தங்கி வியாபாரம் செய்யும் சுரண்டையில் உள்ள தங்கும் விடுதிக்கு குட்டி மாரி வந்து உள்ளார் அப்பொழுது அங்கே இருந்த கொழுந்தன் ரவி குட்டி மாறி இருவருக்கும் மத்தியில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது இதில் வாக்குவாதம் முற்றவே ரவி அண்ணியின் கழுத்தில் துணியை வைத்து இறுக்கி கொலை செய்துள்ளார் சிறிது நேரத்தில் தங்கம் விடுதிக்கு வந்த அண்ணன் முருகன் தாய் சிவகாமி ஆகியோரிடம் ரவி அண்ணி குட்டி மாரியை கொலை செய்து விட்டதாக கூறுகிறார் உடனடியாக கொலையை மறைப்பதற்கு இரவு நேரத்தில் குட்டிமாறியின் உடலை மோட்டார் சைக்கிளில் மூன்று பேரும் எடுத்துக் கொண்டு சுந்தராபாண்டிபுரம் செல்லும் சாலை ஓரத்தில் உள்ள வாழை தோப்பில் வைத்து தீ வைத்து எரித்தது தெரியவந்தது இது குறித்து சுரண்டை இன்ஸ்பெக்டர் மதன் ராம்குமார் வழக்கு பதிவு செய்து முருகன் ரவி சிவகாமி ஆகிய மூன்று பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் குட்டி மாரியின் இரண்டு குழந்தைகளும் தாய் இறந்ததும் தந்தை ஜெயிலுக்கு சென்றாலும் தெரியாமல் தீபாவளி நேரத்தில் பரிதவித்து கொண்டிருக்கிறது. அடையாளம் தெரியாத பெண் எரித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில், போலீசாரின் தீவிர விசாரணையில் கொலைக்கான காரணமும், குற்றவாளிகளும் கண்டறியப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொல்லப்பட்ட குட்டிமாரி கணவர் உடன் இருக்கும் புகைப்படம்4
- தூத்துக்குடி நடுக்கடலில் மீனவர் மாயம்! மீன்பிடிக்கச் சென்றபோது கடலில் தவறி விழுந்த தம்பி ராஜ் – சக மீனவர்கள் தீவிர தேடுதல்!1
- *தேனி மாவட்டத்தில் மின் மோட்டார் மற்றும் வயர்கள் தொடர் திருட்டு - உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி விவசாயிகள் எஸ்பி அலுவலகத்தில் மனு* *தேனி மாவட்டத்தில் மின் மோட்டார் மற்றும் வயர்கள் தொடர் திருட்டு - உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி விவசாயிகள் எஸ்பி அலுவலகத்தில் மனு* தேனி மாவட்டத்தில் விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் வகையில் மின் மோட்டார்கள் மற்றும் மின் வயர்கள் தொடர் திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்து வருவதாகக் கூறி, விவசாயிகள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர். தேனி மாவட்டம், குறிப்பாக கொடுவிலார்பட்டி, கோவிந்தநகரம் மற்றும் தாடிச்சேரி வருவாய் கிராமப் பகுதிகளில் மின் மோட்டார்கள் மற்றும் காப்பர் வயர்கள் தொடர்ச்சியாகத் திருடு போய் வருகின்றன. இரவு நேரங்களில் தோட்டங்களுக்குச் சென்று மோட்டார் இயக்கக் கூட முடியாத அளவுக்கு அச்சுறுத்தல் நிலவுகிறது. திருடர்கள் யார் என்பது காவல் துறைக்குத் தெரிந்திருந்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே, மாவட்ட காவல் துறை உடனடியாக தலையிட்டு இந்தத் திருட்டுச் சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும், என்று பாதிக்கப்பட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தேனி ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமங்களில் தொடரும் மின் மோட்டார் மற்றும் காப்பர் வயர் திருட்டுகளைத் தடுத்து, சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இரவு நேரங்களில் விவசாயிகள் பயமின்றி தோட்டங்களுக்குச் செல்லவும், விவசாயப் பொருட்களைப் பாதுகாக்கவும் காவல் துறையின் ரோந்துப் பணியைத் தீவிரப்படுத்த வேண்டும். அண்டை மாநிலங்களைப் போன்று (கேரளா, கர்நாடகா, ஆந்திரா) தமிழ்நாட்டிலும் தென்னை விவசாயிகளின் நலன்கருதி, உரிய அரசு அனுமதியுடன் கல் இறக்கி விற்பனை செய்ய அனுமதிக்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். விவசாயிகளின் இந்தப் பாதுகாப்புப் பிரச்சினை மற்றும் கோரிக்கைகள் குறித்து மாவட்ட நிர்வாகமும், காவல் துறையும் விரைந்து நடவடிக்கை எடுக்குமா என்ற எதிர்பார்ப்பு தேனி மாவட்ட விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ளது. பேட்டி : சீனி ராஜ் விவசாயி (மாவட்ட தலைவர்)2