logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

தேவகோட்டையில் மாணவர்களுக்கு பாதுகாப்பான தீபாவளி விழிப்புணர்வு நிகழ்ச்சி சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் தீபாவளி பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. தீயணைப்பு நிலைய அலுவலர் கணேசன் தலைமையிலான வீரர்கள் பங்கேற்றனர். மாணவர்களுக்கு பட்டாசு வெடிக்கும் முறை, தீ விபத்தின்போது 'நில், படு, உருள்' (Stop, Drop, Roll) என்ற முறையைப் பின்பற்றுதல் உள்ளிட்ட நேரடி செயல்முறை விளக்கங்களை அளித்தனர். பெரியவர்களின் மேற்பார்வையில் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும்; நைலான் உடைகள் அணியக் கூடாது; பாட்டில், கொட்டாங்குச்சியில் பட்டாசு வெடிக்கக் கூடாது; பைகளில் பட்டாசு வைக்கக் கூடாது என அறிவுறுத்தப்பட்டது. மாணவர்களுக்கு விழிப்புணர்வுத் துண்டுப் பிரசுரங்களும் வழங்கப்பட்டன. தலைமை ஆசிரியர் சொக்கலிங்கம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

21 hrs ago
user_Devakottaigani news
Devakottaigani news
சிவகங்கை, சிவகங்கை, தமிழ்நாடு•
21 hrs ago

தேவகோட்டையில் மாணவர்களுக்கு பாதுகாப்பான தீபாவளி விழிப்புணர்வு நிகழ்ச்சி சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் தீபாவளி பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. தீயணைப்பு நிலைய அலுவலர் கணேசன் தலைமையிலான வீரர்கள் பங்கேற்றனர். மாணவர்களுக்கு பட்டாசு வெடிக்கும் முறை, தீ விபத்தின்போது 'நில், படு, உருள்' (Stop, Drop, Roll) என்ற முறையைப் பின்பற்றுதல் உள்ளிட்ட நேரடி செயல்முறை விளக்கங்களை அளித்தனர். பெரியவர்களின் மேற்பார்வையில் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும்; நைலான் உடைகள் அணியக் கூடாது; பாட்டில், கொட்டாங்குச்சியில் பட்டாசு வெடிக்கக் கூடாது; பைகளில் பட்டாசு வைக்கக் கூடாது என அறிவுறுத்தப்பட்டது. மாணவர்களுக்கு விழிப்புணர்வுத் துண்டுப் பிரசுரங்களும் வழங்கப்பட்டன. தலைமை ஆசிரியர் சொக்கலிங்கம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

More news from தமிழ்நாடு and nearby areas
  • தேவகோட்டையில் மாணவர்களுக்கு பாதுகாப்பான தீபாவளி விழிப்புணர்வு நிகழ்ச்சி சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் தீபாவளி பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. தீயணைப்பு நிலைய அலுவலர் கணேசன் தலைமையிலான வீரர்கள் பங்கேற்றனர். மாணவர்களுக்கு பட்டாசு வெடிக்கும் முறை, தீ விபத்தின்போது 'நில், படு, உருள்' (Stop, Drop, Roll) என்ற முறையைப் பின்பற்றுதல் உள்ளிட்ட நேரடி செயல்முறை விளக்கங்களை அளித்தனர். பெரியவர்களின் மேற்பார்வையில் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும்; நைலான் உடைகள் அணியக் கூடாது; பாட்டில், கொட்டாங்குச்சியில் பட்டாசு வெடிக்கக் கூடாது; பைகளில் பட்டாசு வைக்கக் கூடாது என அறிவுறுத்தப்பட்டது. மாணவர்களுக்கு விழிப்புணர்வுத் துண்டுப் பிரசுரங்களும் வழங்கப்பட்டன. தலைமை ஆசிரியர் சொக்கலிங்கம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
    1
    தேவகோட்டையில் மாணவர்களுக்கு பாதுகாப்பான தீபாவளி விழிப்புணர்வு நிகழ்ச்சி
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் தீபாவளி பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. தீயணைப்பு நிலைய அலுவலர் கணேசன் தலைமையிலான வீரர்கள் பங்கேற்றனர்.
மாணவர்களுக்கு பட்டாசு வெடிக்கும் முறை, தீ விபத்தின்போது 'நில், படு, உருள்' (Stop, Drop, Roll) என்ற முறையைப் பின்பற்றுதல் உள்ளிட்ட நேரடி செயல்முறை விளக்கங்களை அளித்தனர். பெரியவர்களின் மேற்பார்வையில் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும்; நைலான் உடைகள் அணியக் கூடாது; பாட்டில், கொட்டாங்குச்சியில் பட்டாசு வெடிக்கக் கூடாது; பைகளில் பட்டாசு வைக்கக் கூடாது என அறிவுறுத்தப்பட்டது.
மாணவர்களுக்கு விழிப்புணர்வுத் துண்டுப் பிரசுரங்களும் வழங்கப்பட்டன. தலைமை ஆசிரியர் சொக்கலிங்கம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
    user_Devakottaigani news
    Devakottaigani news
    சிவகங்கை, சிவகங்கை, தமிழ்நாடு•
    21 hrs ago
  • செஞ்சை எல். எப். ஆர் . சி தொடக்க பள்ளியில் தீபாவளி பண்டிகை முன்னிட்டு கலை நிகழ்ச்சிகள் : சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மாநகராட்சி செஞ்சை எல். எப். ஆர் . சி தொடக்க பள்ளியில் தீபாவளி பண்டிகை முன்னிட்டு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் மாணவி,மாணவர்களுக்கு கலை நிகழ்ச்சிலையில் கலந்து கொண்டு பட்டாசு பாதுகாப்பாக வெடிப்பது பற்றி ஆடல் பாடல் மூலம் பள்ளி மாணவர்கள் நடனம் ஆடி புரிய வைத்தனர். பிறகு ஆசிரியர் தீபாவளி பண்டிகை பற்றியும் , பட்டாசு பாதுகாப்பாக வெடிப்பது பற்றியும் கூறினார்கள்.இதில் பங்கு தந்தை தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள்,பள்ளி மாணவ ,மாணவியர்கள் பெற்றோர் கலந்து கொண்டனர்.
    1
    செஞ்சை எல். எப். ஆர் . சி தொடக்க பள்ளியில் தீபாவளி பண்டிகை முன்னிட்டு கலை நிகழ்ச்சிகள் :
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மாநகராட்சி செஞ்சை எல். எப். ஆர் . சி தொடக்க பள்ளியில் தீபாவளி பண்டிகை முன்னிட்டு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இதில் மாணவி,மாணவர்களுக்கு கலை நிகழ்ச்சிலையில் கலந்து கொண்டு 
பட்டாசு பாதுகாப்பாக 
வெடிப்பது பற்றி ஆடல் பாடல் மூலம்
பள்ளி மாணவர்கள் 
நடனம் ஆடி புரிய வைத்தனர். பிறகு ஆசிரியர் தீபாவளி பண்டிகை பற்றியும் , பட்டாசு
பாதுகாப்பாக வெடிப்பது பற்றியும் கூறினார்கள்.இதில் பங்கு தந்தை தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள்,பள்ளி மாணவ ,மாணவியர்கள் பெற்றோர் கலந்து கொண்டனர்.
    user_Nirmala Devi R
    Nirmala Devi R
    காரைக்குடி, சிவகங்கை, தமிழ்நாடு•
    8 hrs ago
  • அதிகாரி வாங்காமல் போடுவாரா? என ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவரின் சர்ச்சை பேச்சால் பரபரப்பு திருவாடானை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆவண ஏற்பாட்டாளர்கள் கூட்டமைப்பு சார்பில், பத்திரப் பதிவுத்துறை சார்ந்த அனைத்து சேவைகளையும் E -HUP திட்டத்தின் மூலம் தனியாரிடம் ஒப்படைக்கும் தவெக அரசின் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதற்கு முன்னதாக ஆவண ஏற்பாட்டாளர்கள் கூட்டமைப்பினர், இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் பத்திரப் பதிவுத்துறை சார்ந்த அனைத்து சேவைகளையும் தனியாரிடம் ஒப்படைப்பதால் பொதுமக்களுக்கு கூடுதல் கட்டணச் சுமை ஏற்படுவதோடு, நீண்டகாலமாக இத்துறையை நம்பி வாழ்ந்துவரும் ஆவண ஏற்பாட்டாளர்கள் மற்றும் ஆவண எழுத்தர்களின் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகும் நிலை உள்ளதாகக் கூறினர். எனவே பொதுமக்களின் நலன் மற்றும் பல்லாயிரக்கணக்கானோரின் வேலைவாய்ப்பைக் கருத்தில் கொண்டு, பத்திரப் பதிவுத்துறை சார்ந்த அனைத்து சேவைகளையும் தனியாரிடம் ஒப்படைக்கும் திட்டத்தை தவெக அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் எனவும் கூறினர். அப்போது காரைக்குடி பகுதியைச் சேர்ந்த பத்திர எழுத்தர் ஒருவர் பேசும்போது கூறுகையில் : அதிகாரிகள் வாங்காமல் போடுவாரா? என்றும், என்னதான் சரியான முறையில் பத்திரங்களை தயார் செய்து கொடுத்தாலும் 22A என்று சொல்லி மறுப்பதாகவும், கழுதைக்கு வாக்கப்பட்டால் உதைபட்டு தானே ஆக வேண்டும் என்றும் பேசினார். இது அங்கு இருப்பவர்கள் மத்தியில் ஒரு வித சர்ச்சையையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஆவண ஏற்பாட்டாளர்கள், ஆவண எழுத்தர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் உட்பட சுமார் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தின் போது திருவாடானை இன்ஸ்பெக்டர் வாசிவம் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.வலியுறுத்தப்பட்டது.
    1
    அதிகாரி வாங்காமல் போடுவாரா? என ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவரின் சர்ச்சை பேச்சால் பரபரப்பு
திருவாடானை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆவண ஏற்பாட்டாளர்கள் கூட்டமைப்பு சார்பில், பத்திரப் பதிவுத்துறை சார்ந்த அனைத்து சேவைகளையும் E -HUP திட்டத்தின் மூலம் தனியாரிடம் ஒப்படைக்கும் தவெக அரசின் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதற்கு முன்னதாக ஆவண ஏற்பாட்டாளர்கள் கூட்டமைப்பினர்,  இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் பத்திரப் பதிவுத்துறை சார்ந்த அனைத்து சேவைகளையும் தனியாரிடம் ஒப்படைப்பதால் பொதுமக்களுக்கு கூடுதல் கட்டணச் சுமை ஏற்படுவதோடு, நீண்டகாலமாக இத்துறையை நம்பி வாழ்ந்துவரும் ஆவண ஏற்பாட்டாளர்கள் மற்றும் ஆவண எழுத்தர்களின் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகும் நிலை உள்ளதாகக் கூறினர். எனவே பொதுமக்களின் நலன் மற்றும் பல்லாயிரக்கணக்கானோரின் வேலைவாய்ப்பைக் கருத்தில் கொண்டு, பத்திரப் பதிவுத்துறை சார்ந்த அனைத்து சேவைகளையும் தனியாரிடம் ஒப்படைக்கும் திட்டத்தை தவெக அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் எனவும் கூறினர்.
அப்போது காரைக்குடி பகுதியைச் சேர்ந்த பத்திர எழுத்தர் ஒருவர் பேசும்போது கூறுகையில் : அதிகாரிகள் வாங்காமல் போடுவாரா? என்றும், என்னதான் சரியான முறையில் பத்திரங்களை தயார் செய்து கொடுத்தாலும் 22A என்று சொல்லி மறுப்பதாகவும், கழுதைக்கு வாக்கப்பட்டால் உதைபட்டு தானே ஆக வேண்டும் என்றும் பேசினார். இது அங்கு இருப்பவர்கள் மத்தியில் ஒரு வித சர்ச்சையையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஆவண ஏற்பாட்டாளர்கள், ஆவண எழுத்தர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் உட்பட சுமார் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தின் போது திருவாடானை இன்ஸ்பெக்டர் வாசிவம் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.வலியுறுத்தப்பட்டது.
    user_அனல் ஆனந்த்
    அனல் ஆனந்த்
    திருவாடானை, ராமநாதபுரம், தமிழ்நாடு•
    19 hrs ago
  • இம்மையிலும் நன்மை தருவார் கோவிலில் பிரதோஷ வழிபாட்டில் பக்தர்கள். மதுரை அருள்மிகு இம்மையிலும் நன்மை தருவார் திருக்கோயிலில் இன்று 06.11.2026 வெள்ளிக்கிழமை மாலை சுக்ரவார வார பிரதோசத்தை முன்னிட்டு மாலை ஸ்ரீ நந்தியம் பெருமானுக்கு மூலவர் பிரதோஷ நாயகர் நாயகி சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்று வெள்ளி ரிஷப வாகனத்தில் பிரதோஷ நாயகர் நாயகி திருக்கோவில் பிரகாரத்தை மூன்று முறை வலம் வந்து பிரதோஷ பூஜை நிறைவு பெற்றது. அதனை தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
    1
    இம்மையிலும் நன்மை தருவார் கோவிலில் பிரதோஷ வழிபாட்டில் பக்தர்கள்.
மதுரை அருள்மிகு இம்மையிலும் நன்மை தருவார் திருக்கோயிலில் இன்று 
06.11.2026 வெள்ளிக்கிழமை மாலை சுக்ரவார வார பிரதோசத்தை முன்னிட்டு  மாலை ஸ்ரீ நந்தியம் பெருமானுக்கு மூலவர் பிரதோஷ நாயகர் நாயகி சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்று வெள்ளி ரிஷப வாகனத்தில் பிரதோஷ நாயகர் நாயகி திருக்கோவில் பிரகாரத்தை மூன்று முறை வலம் வந்து பிரதோஷ பூஜை நிறைவு பெற்றது. அதனை தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
    user_சு.இரத்தினவேல்
    சு.இரத்தினவேல்
    Madurai South, Tamil Nadu•
    19 hrs ago
  • புதுக்கோட்டை மாவட்டம் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற கிரிக்கெட் அரங்கத்தை திறந்து வைத்து கிரிக்கெட் விளையாடினார் மாண்புமிகு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் திரு.ஜா.முகமது பர்வேஸ் அவர்கள்..! புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டரங்கம் முதலமைச்சர் இளைஞர் விளையாட்டு அரங்கம் பாக்ஸ் கிரிக்கெட் மைதான திறப்பு விழாவில் கலந்துகொண்டு மைதானத்தை திறந்து வைத்தார்..!
    1
    புதுக்கோட்டை மாவட்டம் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற  கிரிக்கெட்  அரங்கத்தை திறந்து வைத்து கிரிக்கெட்  விளையாடினார்
மாண்புமிகு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் திரு.ஜா.முகமது பர்வேஸ் அவர்கள்..!
புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டரங்கம் முதலமைச்சர் இளைஞர் விளையாட்டு அரங்கம் பாக்ஸ் கிரிக்கெட் மைதான திறப்பு விழாவில் கலந்துகொண்டு மைதானத்தை திறந்து வைத்தார்..!
    user_6974
    6974
    புதுக்கோட்டை, புதுக்கோட்டை, தமிழ்நாடு•
    4 hrs ago
  • சின்னாளபட்டி லெட்சுமி நாராயண சுவாமி கோயிலில் ஸ்ரீதன்வந்திரி பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நோய்கள் தீர நேர்த்திக்கடன செலுத்திய பக்தர்கள் திண்டுக்கல் சின்னாளபட்டி லெட்சுமி நாராயண சுவாமி கோயிலில் ஸ்ரீதன்வந்திரி பெருமாளுக்கு அஸ்தம் நட்சத்திரத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. தமிழ் மருத்துவத்தின்படி தன்வந்திரி என்பவர் பதினெண் சித்தர்களுள் ஒருவராக உள்ளார். இவ்வாறு புகழ்வாய்ந்த தன்வந்திரி பெருமாளின் திருவுருவச் சிலையை வேலூர் பொற்கோவிலைச் சேர்ந்த நாராயிணி அம்மா சின்னாபட்டி லெட்சுமிநாராயண பெருமாள் கோவிலுக்கு வழங்கினார். தற்போது தனி சன்னிதியில் தன்வந்திரி பெருமாள் பக்தர்களுக்காக அருள்பாலித்து வருகிறார். வெள்ளிக்கிழமை தன்வந்திரி பெருமாள் அவதரித்த நட்சத்திரமான அஸ்தம் நட்சத்திரத்தை முன்னிட்டு தன்வந்திரி பெருமாளுக்கு பால், தேன், தயிர், இளநீர், மாப்பொடி உட்பட 16 வகை சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு மலர்களை கொண்டு சிறப்பு அலங்காரம் செய்திருந்தனர். காலை முதல் பக்தர்கள் கோவிலுக்கு வந்து தன்வந்திரி பெருமாளை வணங்கி மகாபிரசாதம் பெற்றுச் சென்றனர். தன்வந்திரி பெருமாளின் சிறப்பு அலங்காரம் குறித்து கோவில் குருக்கள் ஜெகன்நாதன் கூறுகையில் அகத்தியர் பதஞ்சலி கமலமுனி திருமூலர் குதம்பைச்சித்தர் கோரக்கர் சுந்தரானந்தர் கொங்கணர், சட்டைமுனி வால்மீகி இராமதேவர் போல் தன்வந்திரி பெருமாளும் சித்தர்கள் வரிசையில் உள்ளார். இவரை வணங்கினால் நோய் நொடிகள் தீரும் என்பது ஐதீகம். தன்வந்திரி பெருமாளுக்கு மருத்துவ திரவியங்கள், உளுந்தங்களி, தயிர்சாதம், வெண் பொங்கல் படைத்து வழிபட்டால் நோய் நொடிகள் தீரும் என்பது ஐதீகம் என்பதால் பக்தர்கள் இவற்றில் ஏதாவது ஒன்றை தன்வந்திரி பெருமாளுக்கு படைத்து மனதார வேண்டினால் நோய்நொடிகள் தீரும். ஒவ்வொரு மாதமும் தன்வந்திரி அவதரித்த அஸ்தம் நட்சத்திரம் அன்று வழிபாடு செய்தால் சிறப்பு பலன்கள் கிடைக்கும் என்றார். கோவில் நிர்வாகம் சார்பாக பக்தர்களுக்கு மகாபிரசாதம் வழங்கப்பட்டது.
    1
    சின்னாளபட்டி லெட்சுமி நாராயண சுவாமி கோயிலில் ஸ்ரீதன்வந்திரி பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நோய்கள் தீர நேர்த்திக்கடன செலுத்திய பக்தர்கள்
திண்டுக்கல் சின்னாளபட்டி லெட்சுமி நாராயண சுவாமி கோயிலில் ஸ்ரீதன்வந்திரி பெருமாளுக்கு அஸ்தம் நட்சத்திரத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. 
தமிழ் மருத்துவத்தின்படி தன்வந்திரி என்பவர் பதினெண் சித்தர்களுள் ஒருவராக உள்ளார். இவ்வாறு புகழ்வாய்ந்த தன்வந்திரி பெருமாளின் திருவுருவச் சிலையை வேலூர் பொற்கோவிலைச் சேர்ந்த நாராயிணி அம்மா சின்னாபட்டி லெட்சுமிநாராயண பெருமாள் கோவிலுக்கு வழங்கினார். 
தற்போது தனி சன்னிதியில் தன்வந்திரி பெருமாள் பக்தர்களுக்காக அருள்பாலித்து வருகிறார். வெள்ளிக்கிழமை தன்வந்திரி பெருமாள் அவதரித்த நட்சத்திரமான அஸ்தம் நட்சத்திரத்தை முன்னிட்டு தன்வந்திரி பெருமாளுக்கு பால், தேன், தயிர், இளநீர், மாப்பொடி உட்பட 16 வகை சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு மலர்களை கொண்டு சிறப்பு அலங்காரம் செய்திருந்தனர். 
காலை முதல் பக்தர்கள் கோவிலுக்கு வந்து தன்வந்திரி பெருமாளை வணங்கி மகாபிரசாதம் பெற்றுச் சென்றனர். தன்வந்திரி பெருமாளின் சிறப்பு அலங்காரம் குறித்து கோவில் குருக்கள் ஜெகன்நாதன் கூறுகையில் அகத்தியர் பதஞ்சலி கமலமுனி திருமூலர் குதம்பைச்சித்தர் கோரக்கர் சுந்தரானந்தர் கொங்கணர், சட்டைமுனி வால்மீகி இராமதேவர் போல் தன்வந்திரி பெருமாளும் சித்தர்கள் வரிசையில் உள்ளார். 
இவரை வணங்கினால் நோய் நொடிகள் தீரும் என்பது ஐதீகம். தன்வந்திரி பெருமாளுக்கு மருத்துவ திரவியங்கள், உளுந்தங்களி, தயிர்சாதம், வெண் பொங்கல் படைத்து வழிபட்டால் நோய் நொடிகள் தீரும் என்பது ஐதீகம் என்பதால் பக்தர்கள் இவற்றில் ஏதாவது ஒன்றை தன்வந்திரி பெருமாளுக்கு படைத்து மனதார வேண்டினால் நோய்நொடிகள் தீரும். 
ஒவ்வொரு மாதமும் தன்வந்திரி அவதரித்த அஸ்தம் நட்சத்திரம் அன்று வழிபாடு செய்தால் சிறப்பு பலன்கள் கிடைக்கும் என்றார். கோவில் நிர்வாகம் சார்பாக பக்தர்களுக்கு மகாபிரசாதம் வழங்கப்பட்டது.
    user_திண்டுக்கல் செய்திகள்
    திண்டுக்கல் செய்திகள்
    திண்டுக்கல் கிழக்கு, திண்டுக்கல், தமிழ்நாடு•
    16 hrs ago
  • ஆண்டிப்பட்டி ஆட்டு சந்தையில் தீபாவளியை முன்னிட்டு ஆடுகள் விற்பனை தீவிரம்
    1
    ஆண்டிப்பட்டி ஆட்டு சந்தையில் தீபாவளியை முன்னிட்டு
ஆடுகள் விற்பனை தீவிரம்
    user_VIGNESH
    VIGNESH
    Photographer ஆண்டிபட்டி, தேனி, தமிழ்நாடு•
    5 hrs ago
  • சிவகங்கை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் 10 அம்ச கோரிக்கையினை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம், நடைபெற்ற போது எடுத்த படம். போராட்டத்தின் போது பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி போராட்டம் நடத்தினர்.
    1
    சிவகங்கை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் 10 அம்ச கோரிக்கையினை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம், நடைபெற்ற போது எடுத்த படம். போராட்டத்தின் போது பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி போராட்டம் நடத்தினர்.
    user_Devakottaigani news
    Devakottaigani news
    சிவகங்கை, சிவகங்கை, தமிழ்நாடு•
    22 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.