Shuru
Apke Nagar Ki App…
புதுக்கோட்டை மாவட்டம் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற கிரிக்கெட் அரங்கத்தை திறந்து வைத்து கிரிக்கெட் விளையாடினார் மாண்புமிகு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் திரு.ஜா.முகமது பர்வேஸ் அவர்கள்..! புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டரங்கம் முதலமைச்சர் இளைஞர் விளையாட்டு அரங்கம் பாக்ஸ் கிரிக்கெட் மைதான திறப்பு விழாவில் கலந்துகொண்டு மைதானத்தை திறந்து வைத்தார்..!
6974
புதுக்கோட்டை மாவட்டம் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற கிரிக்கெட் அரங்கத்தை திறந்து வைத்து கிரிக்கெட் விளையாடினார் மாண்புமிகு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் திரு.ஜா.முகமது பர்வேஸ் அவர்கள்..! புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டரங்கம் முதலமைச்சர் இளைஞர் விளையாட்டு அரங்கம் பாக்ஸ் கிரிக்கெட் மைதான திறப்பு விழாவில் கலந்துகொண்டு மைதானத்தை திறந்து வைத்தார்..!
More news from தமிழ்நாடு and nearby areas
- புதுக்கோட்டை மாவட்டம் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற கிரிக்கெட் அரங்கத்தை திறந்து வைத்து கிரிக்கெட் விளையாடினார் மாண்புமிகு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் திரு.ஜா.முகமது பர்வேஸ் அவர்கள்..! புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டரங்கம் முதலமைச்சர் இளைஞர் விளையாட்டு அரங்கம் பாக்ஸ் கிரிக்கெட் மைதான திறப்பு விழாவில் கலந்துகொண்டு மைதானத்தை திறந்து வைத்தார்..!1
- செஞ்சை எல். எப். ஆர் . சி தொடக்க பள்ளியில் தீபாவளி பண்டிகை முன்னிட்டு கலை நிகழ்ச்சிகள் : சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மாநகராட்சி செஞ்சை எல். எப். ஆர் . சி தொடக்க பள்ளியில் தீபாவளி பண்டிகை முன்னிட்டு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் மாணவி,மாணவர்களுக்கு கலை நிகழ்ச்சிலையில் கலந்து கொண்டு பட்டாசு பாதுகாப்பாக வெடிப்பது பற்றி ஆடல் பாடல் மூலம் பள்ளி மாணவர்கள் நடனம் ஆடி புரிய வைத்தனர். பிறகு ஆசிரியர் தீபாவளி பண்டிகை பற்றியும் , பட்டாசு பாதுகாப்பாக வெடிப்பது பற்றியும் கூறினார்கள்.இதில் பங்கு தந்தை தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள்,பள்ளி மாணவ ,மாணவியர்கள் பெற்றோர் கலந்து கொண்டனர்.1
- அதிகாரி வாங்காமல் போடுவாரா? என ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவரின் சர்ச்சை பேச்சால் பரபரப்பு திருவாடானை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆவண ஏற்பாட்டாளர்கள் கூட்டமைப்பு சார்பில், பத்திரப் பதிவுத்துறை சார்ந்த அனைத்து சேவைகளையும் E -HUP திட்டத்தின் மூலம் தனியாரிடம் ஒப்படைக்கும் தவெக அரசின் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதற்கு முன்னதாக ஆவண ஏற்பாட்டாளர்கள் கூட்டமைப்பினர், இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் பத்திரப் பதிவுத்துறை சார்ந்த அனைத்து சேவைகளையும் தனியாரிடம் ஒப்படைப்பதால் பொதுமக்களுக்கு கூடுதல் கட்டணச் சுமை ஏற்படுவதோடு, நீண்டகாலமாக இத்துறையை நம்பி வாழ்ந்துவரும் ஆவண ஏற்பாட்டாளர்கள் மற்றும் ஆவண எழுத்தர்களின் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகும் நிலை உள்ளதாகக் கூறினர். எனவே பொதுமக்களின் நலன் மற்றும் பல்லாயிரக்கணக்கானோரின் வேலைவாய்ப்பைக் கருத்தில் கொண்டு, பத்திரப் பதிவுத்துறை சார்ந்த அனைத்து சேவைகளையும் தனியாரிடம் ஒப்படைக்கும் திட்டத்தை தவெக அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் எனவும் கூறினர். அப்போது காரைக்குடி பகுதியைச் சேர்ந்த பத்திர எழுத்தர் ஒருவர் பேசும்போது கூறுகையில் : அதிகாரிகள் வாங்காமல் போடுவாரா? என்றும், என்னதான் சரியான முறையில் பத்திரங்களை தயார் செய்து கொடுத்தாலும் 22A என்று சொல்லி மறுப்பதாகவும், கழுதைக்கு வாக்கப்பட்டால் உதைபட்டு தானே ஆக வேண்டும் என்றும் பேசினார். இது அங்கு இருப்பவர்கள் மத்தியில் ஒரு வித சர்ச்சையையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஆவண ஏற்பாட்டாளர்கள், ஆவண எழுத்தர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் உட்பட சுமார் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தின் போது திருவாடானை இன்ஸ்பெக்டர் வாசிவம் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.வலியுறுத்தப்பட்டது.1
- தேவகோட்டையில் மாணவர்களுக்கு பாதுகாப்பான தீபாவளி விழிப்புணர்வு நிகழ்ச்சி சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் தீபாவளி பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. தீயணைப்பு நிலைய அலுவலர் கணேசன் தலைமையிலான வீரர்கள் பங்கேற்றனர். மாணவர்களுக்கு பட்டாசு வெடிக்கும் முறை, தீ விபத்தின்போது 'நில், படு, உருள்' (Stop, Drop, Roll) என்ற முறையைப் பின்பற்றுதல் உள்ளிட்ட நேரடி செயல்முறை விளக்கங்களை அளித்தனர். பெரியவர்களின் மேற்பார்வையில் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும்; நைலான் உடைகள் அணியக் கூடாது; பாட்டில், கொட்டாங்குச்சியில் பட்டாசு வெடிக்கக் கூடாது; பைகளில் பட்டாசு வைக்கக் கூடாது என அறிவுறுத்தப்பட்டது. மாணவர்களுக்கு விழிப்புணர்வுத் துண்டுப் பிரசுரங்களும் வழங்கப்பட்டன. தலைமை ஆசிரியர் சொக்கலிங்கம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.1
- மனித உரிமை கழக மாவட்ட கழக செயலாளர் கே கே வி செல்வகுமார் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள் தெரிவித்தனர் திருச்சி மாவட்டம் தொட்டியம் வட்டம் மனித உரிமை கழக தலைமை கழக அமைப்பு செயலாளர் மற்றும் திருச்சி வடக்கு மாவட்ட கழக செயலாளர் கரட்டுப்பட்டி கே கே வி செல்வகுமார் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் தெரிவித்தனர் இதேபோல் திருச்சி வடக்கு மாவட்ட ஒன்றிய நகர கட்சியை நிர்வாகிகள் மற்றும் விவசாயிகள் பொதுமக்களுக்கு அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்1
- விலைவாசி உயர்வை கண்டித்து மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம். முசிறியில் விலைவாசி உயர்வை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம். முசிறியில் விலைவாசி உயர்வை கண்டித்து மார்க் ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மின் கட்டண உயர்வு அரிசி மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை வியர்வை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர்.மேலும் மத்திய மாநில அரசுகள் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தினர் ஒன்றிய செயலாளர் அசோக் குமார், மாவட்ட செயலாளர் சிவராஜ், மற்றும் தோழர் கிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். இந்நிகழ்வில் கட்சித் தொண்டர்கள், ஒன்றிய கமிட்டி உறுப்பினர்கள் மற்றும் சிஐடியு ஆட்டோ ஓட்டுநர் சங்க உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் திரளாகப் பங்கேற்று விலைவாசி உயர்வுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.1
- முசிரி ஸ்ரீ கற்பூரவல்லி சமேத ஸ்ரீ சந்திரமௌலீஸ்வரர் ஆலயத்தில் பிரதோஷ விழா திருச்சி மாவட்டம் முசிறிஸ்ரீகற்பூரவள்ளி உடனுறை ஸ்ரீசந்திரமௌஸ்வரர் திருக்கோயில் இன்றுநவம்பர் 6 வெள்ளிக்கிழமை மாலை பிரதோஷ விழா பிரதோஷத்தை முன்னிட்டு கோயிலில் உள்ள நந்தியம்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகமாக பால் தயிர் மற்றும் சந்தனம் பன்னீர் வாசனை திரவியங்கள் கொண்டு அபிஷேகம் செய்து புதிய வஸ்திரம் மற்றும் மலர்மாலைகள்அணிவித்து மகாதீப ஆராதனை நடைபெற்றது நிகழ்வில் ஆன்மீகமெய்யன்பர்கள் மற்றும் பக்தர்களும் கலந்து கொண்டு மதியம் பெருமான் மற்றும் சுவாமி அம்மனை தரிசனம் செய்து சென்றனர்1
- தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பர்வேஸ் தொழில்முனைவோருக்காண இணைப்பு வழங்கு விழாவில் கலந்து கொண்டார் மாண்புமிகு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் திரு.ஜா.முகமது பர்வேஸ் அவர்கள்..! புதுக்கோட்டை மாவட்டம் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு தொழில்முனைவோருக்காண நிதி இணைப்பு வழங்கும் விழாவில் கலந்து கொண்டு நிதி இணைப்பு வழங்கினார்..!1