logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விவசாயிகள் சாகுபடி செய்து உள்ள சாமந்தி பூவில் வாடல் நோயால் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக  விவசாயிகள் வேதனை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஆயுத பூஜையை முன்னிட்டு ராயக்கோட்டை ,ஆலப்பட்டி,பூவத்தி, பேரிகை, சூளகிரி, தாளி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் சாமந்திப்பூ , செண்டுமல்லி உள்ளிட்ட பல்வேறு வகையான மலர்களை சாகுபடி செய்வது வழக்கம், கடந்த ஆண்டை போல் வருகின்ற ஆயுத பூஜை முன்னிட்டு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பரவலாக விவசாயிகள் சாமந்திப்பூ மற்றும் செண்டுமல்லி மலர்களை அதிக அளவில் சாகுபடிசெய்துள்ளனர்,  தற்போது விவசாயிகள் சாகுபடி செய்து உள்ள சாமந்தி பூவில் மொட்டுகள்  வரும் தருவாயில் பரவலாக வாடல் நோய் தாக்கி  செடிகள் அப்படியே கருகி வருவதால்விவசாயிகள் மத்தியில் பெரும் மீதியை  ஏற்படுத்தி உள்ளது,

1 hr ago
user_FAYAZ
FAYAZ
பத்திரிகையாளர் கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி, தமிழ்நாடு•
1 hr ago

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விவசாயிகள் சாகுபடி செய்து உள்ள சாமந்தி பூவில் வாடல் நோயால் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக  விவசாயிகள் வேதனை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஆயுத பூஜையை முன்னிட்டு ராயக்கோட்டை ,ஆலப்பட்டி,பூவத்தி, பேரிகை, சூளகிரி, தாளி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் சாமந்திப்பூ , செண்டுமல்லி உள்ளிட்ட பல்வேறு வகையான மலர்களை சாகுபடி செய்வது வழக்கம், கடந்த ஆண்டை போல் வருகின்ற ஆயுத பூஜை முன்னிட்டு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பரவலாக விவசாயிகள் சாமந்திப்பூ மற்றும் செண்டுமல்லி மலர்களை அதிக அளவில் சாகுபடிசெய்துள்ளனர்,  தற்போது விவசாயிகள் சாகுபடி செய்து உள்ள சாமந்தி பூவில் மொட்டுகள்  வரும் தருவாயில் பரவலாக வாடல் நோய் தாக்கி  செடிகள் அப்படியே கருகி வருவதால்விவசாயிகள் மத்தியில் பெரும் மீதியை  ஏற்படுத்தி உள்ளது,

More news from தமிழ்நாடு and nearby areas
  • பாலக்கோட்டில் பாஜக சார்பாக பிரதமர் மோடியின் 76 வது பிறந்தநாள் விழா பாலக்கோட்டில் பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் 76வது பிறந்த நாளை முன்னிட்டு பாஜகவினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம் தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு பேருந்து நிலையம் முன்பு பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் 76வது பிறந்த நாளை முன்னிட்டு பாஜகவினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர். பாலக்கோடு நகர பாஜக சார்பில் நடைபெற்ற இந்த விழாவில் நகர பொதுசெயலாளர் ஜெய்கணேஷ், நகர பொருளாளர் முனியப்பன், ஓ.பி.சி.அணி நகர செயலாளர் வெங்கடேஷ் ஆகியோர் தலைமை வகித்தனர். நகர அமைப்பாளர் பெரியசாமி,மாவட்ட பொது செயலாளர் சங்கீதா, மாவட்ட துணைத் தலைவர் முனிராஜ், மகளிர் அணி மாவட்ட செயலாளர் ஸ்ரீவித்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் தொண்டர்கள் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புக்களை வழங்கினார். தொடர்ந்து பாரத பிரதமர் நரேந்திரமோடி அவர்களை வாழ்த்தி கோஷமிட்டு ஆராவாரமாக பிறந்த நாளை கொண்டாடி மகிழ்ந்தனர். இந்நிகழ்ச்சியில் பிரச்சார பிரிவு மாவட்ட செயலாளர் வேலு, மாவட்ட செயற்குழு உறுப்பினர் கிருஷ்ணன், நிர்வாகிகள் செல்வம், செந்தில், அண்ணாமலை, மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் மற்றும் கட்சி தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
    1
    பாலக்கோட்டில் பாஜக சார்பாக பிரதமர் மோடியின் 76 வது பிறந்தநாள் விழா
பாலக்கோட்டில் பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் 76வது  பிறந்த நாளை முன்னிட்டு பாஜகவினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு பேருந்து நிலையம் முன்பு பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் 76வது பிறந்த நாளை முன்னிட்டு பாஜகவினர் இனிப்பு வழங்கி  கொண்டாடினர்.
பாலக்கோடு நகர பாஜக சார்பில் நடைபெற்ற இந்த விழாவில் நகர பொதுசெயலாளர் ஜெய்கணேஷ், நகர பொருளாளர் முனியப்பன், ஓ.பி.சி.அணி நகர செயலாளர் வெங்கடேஷ் ஆகியோர் தலைமை வகித்தனர்.
நகர அமைப்பாளர் பெரியசாமி,மாவட்ட பொது செயலாளர் சங்கீதா, மாவட்ட துணைத் தலைவர் முனிராஜ், மகளிர் அணி மாவட்ட செயலாளர் ஸ்ரீவித்யா ஆகியோர்
முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் தொண்டர்கள் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புக்களை வழங்கினார். 
தொடர்ந்து  பாரத பிரதமர் நரேந்திரமோடி அவர்களை வாழ்த்தி கோஷமிட்டு ஆராவாரமாக பிறந்த நாளை கொண்டாடி மகிழ்ந்தனர்.
இந்நிகழ்ச்சியில் பிரச்சார பிரிவு மாவட்ட செயலாளர் வேலு, மாவட்ட செயற்குழு உறுப்பினர் கிருஷ்ணன், நிர்வாகிகள் செல்வம், செந்தில், அண்ணாமலை, 
மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் மற்றும்  கட்சி தொண்டர்கள் திரளாக  கலந்து கொண்டனர்.
    user_Just Now Karimangalam
    Just Now Karimangalam
    Media company கரீமங்கலம், தருமபுரி, தமிழ்நாடு•
    11 hrs ago
  • திருப்பத்தூரில் RDS நிறுவனத்தின் சமூகப் பொறுப்பு நிதியின் கீழ் ரூ30 லட்சம் மதிப்பீட்டில் மின்கல வாகனங்கள் வழங்கும் விழா! திருப்பத்தூரில் RDS நிறுவனத்தின் சமூகப் பொறுப்பு நிதியின் கீழ் ரூ30 லட்சம் மதிப்பீட்டில் மின்கல வாகனங்கள் வழங்கும் விழா! திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், RDS நிறுவனத்தின் சமூகப் பொறுப்பு நிதியின் கீழ், திருப்பத்தூர் மற்றும் ஜோலார்பேட்டை நகராட்சிகளுக்கு ரூ.30 இலட்சம் மதிப்பீட்டில் 15 மின்கல வாகனங்களை மாண்புமிகு வனத்துறை அமைச்சர் ஆர்.வீ.இரஞ்சித்குமார்  திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர்.திருப்பதி மாவட்ட வருவாய் அலுவலர் இரா.பாலசுப்ரமணியன் ஆகியோர் முன்னிலையில், சம்பந்தப்பட்ட நகராட்சிகளுக்கு வழங்கி, கொடியசைத்து துவக்கி வைத்தார்.  உடன்  மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சௌ.தமிழரசி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) பாபு, RDS நிறுவன தலைவர் சரவணன், நகராட்சி ஆணையாளர்கள் சாந்தி திருப்பத்தூர் இளையராணி ஜோலார்பேட்டை தமிழக வெற்றிக்கழக திருப்பத்தூர் மாவட்ட மேற்கு ஒன்றிய செயலாளர் முனிசாமி மாவட்ட கொள்கை பரப்பு அமைப்பாளர் TV.ஜெகன் மற்றும் தமிழக கட்சி கழக நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
    4
    திருப்பத்தூரில் RDS நிறுவனத்தின் சமூகப் பொறுப்பு நிதியின் கீழ் ரூ30 லட்சம் மதிப்பீட்டில் மின்கல வாகனங்கள் வழங்கும் விழா!
திருப்பத்தூரில் RDS நிறுவனத்தின் சமூகப் பொறுப்பு நிதியின் கீழ் ரூ30 லட்சம் மதிப்பீட்டில் மின்கல வாகனங்கள் வழங்கும் விழா!
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், RDS நிறுவனத்தின் சமூகப் பொறுப்பு நிதியின் கீழ், திருப்பத்தூர் மற்றும் ஜோலார்பேட்டை நகராட்சிகளுக்கு ரூ.30 இலட்சம் மதிப்பீட்டில் 15 மின்கல வாகனங்களை மாண்புமிகு வனத்துறை அமைச்சர் ஆர்.வீ.இரஞ்சித்குமார்  திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர்.திருப்பதி மாவட்ட வருவாய் அலுவலர் இரா.பாலசுப்ரமணியன் ஆகியோர் முன்னிலையில், சம்பந்தப்பட்ட நகராட்சிகளுக்கு வழங்கி, கொடியசைத்து துவக்கி வைத்தார். 
உடன்  மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சௌ.தமிழரசி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) பாபு, RDS நிறுவன தலைவர் சரவணன், நகராட்சி ஆணையாளர்கள் சாந்தி திருப்பத்தூர் இளையராணி ஜோலார்பேட்டை தமிழக வெற்றிக்கழக திருப்பத்தூர் மாவட்ட மேற்கு ஒன்றிய செயலாளர் முனிசாமி மாவட்ட கொள்கை பரப்பு அமைப்பாளர் TV.ஜெகன் மற்றும் தமிழக கட்சி கழக நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
    user_Flower
    Flower
    Fruit & Vegetable Wholesaler திருப்பத்தூர், திருப்பத்தூர், தமிழ்நாடு•
    6 hrs ago
  • விளையாட்டு மைதானத்தில் உள்ள விளையாட்டு வீராங்கனைகள் விடுதியில் மாணவிகளுக்கு இடையே ஏற்பட்ட பிரச்சினையை தொடர்ந்து பெற்றோர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சேலம் காந்தி விளையாட்டு மைதானத்தில் முதல்வர் கோப்பைக்கான தடகள போட்டி நடைபெற்ற நிலையில், விடுதியில் தங்கி பயிற்சி பெறும் சேலம் கிச்சிப்பாளையத்தைச் சேர்ந்த மாணவி மற்றும் பெரம்பலூரைச் சேர்ந்த மாணவிக்கு இடையே முன்விரோதம் காரணமாக தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து விடுதி மேலாளர் கோகிலா, இரு மாணவிகளின் பெற்றோர்களையும் அழைத்து பேசியபோது, அவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது. தகவலறிந்து வந்த அஸ்தம்பட்டி போலீசார், இரு தரப்பு பெற்றோர்களையும் விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். இதனிடையே, தங்களது மகளை மற்றொரு தரப்பினர் தாக்கியதாக ஒரு மாணவியின் பெற்றோர் குற்றம்சாட்டிய நிலையில், விடுதி மேலாளர் இதனை மறுத்து, மாணவிகளுக்கு இடையே ஏற்பட்ட சிறிய பிரச்சினை மட்டுமே என்றும், மற்ற குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்றும் தெரிவித்தனர். இதனால் காந்தி விளையாட்டு மைதானத்தில் பரபரப்பு நிலவியது.
    1
    விளையாட்டு மைதானத்தில் உள்ள விளையாட்டு வீராங்கனைகள் விடுதியில் மாணவிகளுக்கு இடையே ஏற்பட்ட பிரச்சினையை தொடர்ந்து பெற்றோர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சேலம் காந்தி விளையாட்டு மைதானத்தில் முதல்வர் கோப்பைக்கான  தடகள போட்டி நடைபெற்ற நிலையில், விடுதியில் தங்கி பயிற்சி பெறும் சேலம் கிச்சிப்பாளையத்தைச் சேர்ந்த மாணவி மற்றும் பெரம்பலூரைச் சேர்ந்த மாணவிக்கு இடையே முன்விரோதம் காரணமாக தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து விடுதி மேலாளர் கோகிலா, இரு மாணவிகளின் பெற்றோர்களையும் அழைத்து பேசியபோது, அவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது. தகவலறிந்து வந்த அஸ்தம்பட்டி போலீசார், இரு தரப்பு பெற்றோர்களையும் விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். இதனிடையே, தங்களது மகளை மற்றொரு தரப்பினர் தாக்கியதாக ஒரு மாணவியின் பெற்றோர் குற்றம்சாட்டிய நிலையில், விடுதி மேலாளர் இதனை மறுத்து, மாணவிகளுக்கு இடையே ஏற்பட்ட சிறிய பிரச்சினை மட்டுமே என்றும், மற்ற குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்றும் தெரிவித்தனர். இதனால் காந்தி விளையாட்டு மைதானத்தில் பரபரப்பு நிலவியது.
    user_G Krishnan
    G Krishnan
    பத்திரிகையாளர் பாலக்கோடு, தருமபுரி, தமிழ்நாடு•
    14 hrs ago
  • சேலம் ஆட்சியர் அலுவலக நுழைவாயிலில் சாலையில் அமர்ந்து பொதுமக்கள் போராட்டம்! சேலம் மாவட்டம் நெய்க்காரப்பட்டி அடுத்துள்ள ராக்கிப்பட்டி பகுதியில் ஏராளமான பட்டியல் இன மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அவர்கள் வசிக்கும் பகுதிக்கு அருகே உள்ள சிலர் பட்டியலின மக்களை உடனடியாக வீடுகளை காலி செய்து வெளியேற வேண்டும் இல்லையென்றால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று அப்பகுதியில் உள்ள சிலர் தங்களுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதால் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து நிற்பதாகவும் இதற்கு மாவட்ட ஆட்சியர் தலையிட்டு நேரடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இன்று அப்பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஆட்சியர் அலுவலக நுழைவாயில் சாலையில் அமர்ந்து பெரும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் காவல்துறையினர் நடத்திய சமாதான பேச்சை தொடர்ந்து சமாதானம் அடைந்த மக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை வழங்குவதற்கு ஆட்சியரிடம் சென்று முறையிட்டு நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினர். இந்த சம்பவத்தால் ஆட்சி அலுவலக வளாகத்தில் பெரும் பரபரப்பில் ஏற்பட்டது.
    1
    சேலம் ஆட்சியர் அலுவலக நுழைவாயிலில் சாலையில் அமர்ந்து பொதுமக்கள் போராட்டம்!
சேலம் மாவட்டம் நெய்க்காரப்பட்டி அடுத்துள்ள ராக்கிப்பட்டி பகுதியில் ஏராளமான பட்டியல் இன மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அவர்கள் வசிக்கும் பகுதிக்கு அருகே உள்ள சிலர் பட்டியலின மக்களை உடனடியாக வீடுகளை காலி செய்து வெளியேற வேண்டும் இல்லையென்றால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று அப்பகுதியில் உள்ள சிலர் தங்களுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதால் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து நிற்பதாகவும் இதற்கு மாவட்ட ஆட்சியர் தலையிட்டு நேரடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இன்று அப்பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஆட்சியர் அலுவலக நுழைவாயில் சாலையில் அமர்ந்து பெரும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் காவல்துறையினர் நடத்திய சமாதான பேச்சை தொடர்ந்து சமாதானம் அடைந்த மக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை வழங்குவதற்கு ஆட்சியரிடம் சென்று முறையிட்டு நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினர். இந்த சம்பவத்தால் ஆட்சி அலுவலக வளாகத்தில் பெரும் பரபரப்பில் ஏற்பட்டது.
    user_Rajendran
    Rajendran
    salem mail & City mail Reporter சேலம், சேலம், தமிழ்நாடு•
    6 hrs ago
  • கல்லாங்குளம் அண்ணாமலையார் கோயிலில் அதிகாலை நடைபெற்ற சிறப்பு வழிபாடு...  நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே கல்லாங்குளத்தில் அமைந்துள்ள அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயிலில் இன்று அதிகாலை நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து, கோயில் விநாயகர் சன்னதியில் மூலவர் விநாயகருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.  பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு விநாயகரை வழிபட்டனர்.இதனைத் தொடர்ந்து, வரவிருக்கும் கார்த்திகை தீபத் திருவிழாவிற்கான பந்தக்கால் முகூர்த்த நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, பந்தக்கால் நட்டு தீபத் திருவிழாவிற்கான பணிகளை தொடங்கி வைத்தனர்.
    1
    கல்லாங்குளம் அண்ணாமலையார் கோயிலில் அதிகாலை நடைபெற்ற சிறப்பு வழிபாடு... 
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே கல்லாங்குளத்தில் அமைந்துள்ள அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயிலில் இன்று அதிகாலை நடை திறக்கப்பட்டது.
தொடர்ந்து, கோயில் விநாயகர் சன்னதியில் மூலவர் விநாயகருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. 
பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு விநாயகரை வழிபட்டனர்.இதனைத் தொடர்ந்து, வரவிருக்கும் கார்த்திகை தீபத் திருவிழாவிற்கான பந்தக்கால் முகூர்த்த நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, பந்தக்கால் நட்டு தீபத் திருவிழாவிற்கான பணிகளை தொடங்கி வைத்தனர்.
    user_Aravinth
    Aravinth
    ராசிபுரம், நாமக்கல், தமிழ்நாடு•
    1 hr ago
  • ராசிபுரம் அருகே வீட்டின் அருகே புகுந்த 8 அடி நீள மலைப்பாம்பு – தீயணைப்பு வீரர்கள் உயிருடன் மீட்பு... ராசிபுரம் அருகே வீட்டின் அருகே புகுந்த 8 அடி நீள மலைப்பாம்பு – தீயணைப்பு வீரர்கள் உயிருடன் மீட்பு... ராசிபுரம் அருகே நாமகிரிப்பேட்டை குள்ளாண்டிக்காடு பகுதியில் வீட்டின் அருகே புகுந்த சுமார் 8 அடி நீளமுள்ள மலைப்பாம்பை தீயணைப்பு வீரர்கள் உயிருடன் மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த நாமகிரிப்பேட்டை குள்ளாண்டிக்காடு பகுதியைச் சேர்ந்தவர் கவின்குமார். கொல்லிமலை அடிவாரப் பகுதியில் வசித்து வரும் இவரது வீட்டின் அருகே மலைப்பாம்பு ஒன்று புகுந்ததாக ராசிபுரம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு நிலைய வீரர்கள், வீட்டின் அருகே பதுங்கியிருந்த மலைப்பாம்பை பாம்பு பிடிக்கும் இடுக்கி மூலம் லாவகமாக உயிருடன் மீட்டனர். பின்னர் மீட்கப்பட்ட மலைப்பாம்பு வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. மீட்கப்பட்ட மலைப்பாம்பு சுமார் 8 அடி நீளம் கொண்டதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.
    1
    ராசிபுரம் அருகே வீட்டின் அருகே புகுந்த 8 அடி நீள மலைப்பாம்பு – தீயணைப்பு வீரர்கள் உயிருடன் மீட்பு...

ராசிபுரம் அருகே வீட்டின் அருகே புகுந்த 8 அடி நீள மலைப்பாம்பு – தீயணைப்பு வீரர்கள் உயிருடன் மீட்பு...
ராசிபுரம் அருகே நாமகிரிப்பேட்டை குள்ளாண்டிக்காடு பகுதியில் வீட்டின் அருகே புகுந்த சுமார் 8 அடி நீளமுள்ள மலைப்பாம்பை தீயணைப்பு வீரர்கள் உயிருடன் மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த நாமகிரிப்பேட்டை குள்ளாண்டிக்காடு பகுதியைச் சேர்ந்தவர் கவின்குமார். கொல்லிமலை அடிவாரப் பகுதியில் வசித்து வரும் இவரது வீட்டின் அருகே மலைப்பாம்பு ஒன்று புகுந்ததாக ராசிபுரம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு நிலைய வீரர்கள், வீட்டின் அருகே பதுங்கியிருந்த மலைப்பாம்பை பாம்பு பிடிக்கும் இடுக்கி மூலம் லாவகமாக உயிருடன் மீட்டனர்.
பின்னர் மீட்கப்பட்ட மலைப்பாம்பு வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. மீட்கப்பட்ட மலைப்பாம்பு சுமார் 8 அடி நீளம் கொண்டதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.
    user_ILAYARAJA
    ILAYARAJA
    Local News Reporter ராசிபுரம், நாமக்கல், தமிழ்நாடு•
    6 hrs ago
  • கிருஷ்ணகிரி அருகே உள்ள மரிக்கம்பள்ளி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஹரித்திர கணபதி மற்றும்  அருள்மிகு  மாரியம்மன் திருக்கோயிலின் மகா கும்பாபிஷேகம் விழா கிருஷ்ணகிரி அருகே உள்ள மரிக்கம்பள்ளி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஹரித்திர கணபதி மற்றும்  அருள்மிகு  மாரியம்மன் திருக்கோயிலின் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்து வழிபட்டனர்'
    1
    கிருஷ்ணகிரி அருகே உள்ள மரிக்கம்பள்ளி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஹரித்திர கணபதி மற்றும்  அருள்மிகு  மாரியம்மன் திருக்கோயிலின்
மகா கும்பாபிஷேகம் விழா


கிருஷ்ணகிரி அருகே உள்ள மரிக்கம்பள்ளி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஹரித்திர கணபதி மற்றும்  அருள்மிகு  மாரியம்மன் திருக்கோயிலின்
மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்து வழிபட்டனர்'
    user_FAYAZ
    FAYAZ
    பத்திரிகையாளர் கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி, தமிழ்நாடு•
    8 hrs ago
  • தல அஜித்தையும் தளபதி விஜயையும் ஒன்றாக இணைந்து பார்த்தது கனவா என்று மெய்சிலிர்த்து போனதாக கே.பி.ஒய். பாலா தெரிவித்தார் தல அஜித்தையும் தளபதி விஜயையும் ஒன்றாக இணைந்து பார்த்தது கனவா என்று மெய்சிலிர்த்து போனதாக கே.பி.ஒய். பாலா தெரிவித்தார்* தமிழகத்தில் பல்வேறு நகரங்களில் செயல்பட்டு வரும் இ ஸ்பா மையம், தனது 6-வது கிளையை புதுச்சேரி எல்லைப் பிள்ளை சாவடி இந்திரா காந்தி சிலை அருகே தொடங்கியது. இதன் துவக்க விழாவில் கே.பி.ஒய் பாலா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஸ்பா மையத்தை திறந்து வைத்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர்.. தான் இந்த இடத்தில் நிற்பது மக்கள் போட்ட பிச்சை என்றும் தான் சம்பாதிக்கும் பணத்தில் ஒரு தொகையை தனது கடைசி உயிர் மூச்சு இருக்கும் வரை ஏழை மக்களுக்கு உதவி செய்து கொண்டே இருப்பேன் என்றும் ஏழை மக்களுக்கு உதவுவது மனதுக்கு மகிழ்ச்சியாக உள்ளது என்று தெரிவித்த அவர்.. தல அஜித்தையும் தளபதி விஜய்யும் ஒன்றாக இணைந்து பார்த்ததை கனவா என்று மெய்சிலிர்த்து போனதாகவும் குறிப்பிட்டார், நீங்கள் யாருடைய ரசிகர் என்ற கேள்விக்கு நான் அனைவருடைய ரசிகர் தான் என்று தெரிவித்தவரிடம் தவெக அரசின் செயல்பாடு எப்படி இருக்கிறது என்று கேள்வி கேட்கப்பட்டது,அதற்கு பதில் அளித்த பாலா, அரசியல் பேசும் அளவிற்கு தனக்கு அறிவில்லை என்றும் தெரிவித்தார். *பேட்டி: கே.பி.ஒய்.பாலா*
    1
    தல அஜித்தையும் தளபதி விஜயையும் ஒன்றாக இணைந்து பார்த்தது கனவா என்று மெய்சிலிர்த்து போனதாக கே.பி.ஒய். பாலா தெரிவித்தார்
தல அஜித்தையும் தளபதி விஜயையும் ஒன்றாக இணைந்து பார்த்தது கனவா என்று மெய்சிலிர்த்து போனதாக கே.பி.ஒய். பாலா தெரிவித்தார்*
தமிழகத்தில் பல்வேறு நகரங்களில் செயல்பட்டு வரும் 
இ ஸ்பா மையம், தனது 6-வது கிளையை புதுச்சேரி எல்லைப் பிள்ளை சாவடி இந்திரா காந்தி சிலை அருகே தொடங்கியது.
இதன் துவக்க விழாவில்  
கே.பி.ஒய்  பாலா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஸ்பா மையத்தை திறந்து வைத்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர்.. தான் இந்த இடத்தில் நிற்பது மக்கள் போட்ட பிச்சை என்றும் தான் சம்பாதிக்கும் பணத்தில் ஒரு தொகையை தனது கடைசி உயிர் மூச்சு இருக்கும் வரை ஏழை மக்களுக்கு உதவி செய்து கொண்டே இருப்பேன் என்றும் ஏழை மக்களுக்கு உதவுவது மனதுக்கு மகிழ்ச்சியாக உள்ளது என்று தெரிவித்த அவர்..
தல அஜித்தையும் தளபதி விஜய்யும் ஒன்றாக இணைந்து பார்த்ததை கனவா என்று மெய்சிலிர்த்து போனதாகவும் குறிப்பிட்டார், நீங்கள் யாருடைய ரசிகர் என்ற கேள்விக்கு நான் அனைவருடைய ரசிகர் தான் என்று தெரிவித்தவரிடம் தவெக அரசின் செயல்பாடு எப்படி இருக்கிறது என்று கேள்வி கேட்கப்பட்டது,அதற்கு பதில் அளித்த பாலா, அரசியல் பேசும் அளவிற்கு தனக்கு அறிவில்லை என்றும் தெரிவித்தார்.
*பேட்டி: கே.பி.ஒய்.பாலா*
    user_G Krishnan
    G Krishnan
    பத்திரிகையாளர் பாலக்கோடு, தருமபுரி, தமிழ்நாடு•
    14 hrs ago
  • சேலம் மாநகர அதிமுக சார்பில் பெரியார் பிறந்தநாள் அனுசரிப்பு! சேலம் மாநகர் மாவட்ட அதிமுக சார்பில், தந்தை பெரியாரின் 148 வது பிறந்த நாளை முன்னிட்டு, சேலம் ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள அவரது திருஉருவ சிலைக்கு, மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் பாலு தலைமையில், இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏக்கள் மற்றும் முன்னாள் இந்நாள் மாமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
    1
    சேலம் மாநகர அதிமுக சார்பில் பெரியார் பிறந்தநாள் அனுசரிப்பு!
சேலம் மாநகர் மாவட்ட அதிமுக சார்பில், தந்தை பெரியாரின் 148 வது பிறந்த நாளை முன்னிட்டு, சேலம் ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள அவரது திருஉருவ சிலைக்கு, மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் பாலு தலைமையில், இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏக்கள் மற்றும் முன்னாள் இந்நாள் மாமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
    user_Rajendran
    Rajendran
    salem mail & City mail Reporter சேலம், சேலம், தமிழ்நாடு•
    11 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.