Shuru
Apke Nagar Ki App…
மு க ஸ்டாலின் பாலக்கோடு பகுதியில் மக்களை சந்தித்தார் மு.க. ஸ்டாலின் பாலக்கோடு பகுதியில் நடைபயணம்.. மக்களை நேரில் சந்தித்தார். திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இன்று தருமபுரி மாவட்டத்தில் தேர்தல் பரப்புரையில் பங்கேற்க உள்ளார். இதற்காக நேற்றிரவே தருமபுரிக்கு வருகை தந்தவர், இன்று காலை பாலக்கோடு பகுதியில் நடைபயணம் மேற்கொண்டார். அப்போது கோட்டை தெருவில் உள்ள இஸ்லாமிய மக்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். ரொடர்ந்து ஸ்தூபி மைதானம், கடைவீதி, பேருந்து நிலையம் , தக்காளிமண்டி வரை நடந்து சென்று பொதுமக்களை சந்தித்தார்.
G Krishnan
மு க ஸ்டாலின் பாலக்கோடு பகுதியில் மக்களை சந்தித்தார் மு.க. ஸ்டாலின் பாலக்கோடு பகுதியில் நடைபயணம்.. மக்களை நேரில் சந்தித்தார். திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இன்று தருமபுரி மாவட்டத்தில் தேர்தல் பரப்புரையில் பங்கேற்க உள்ளார். இதற்காக நேற்றிரவே தருமபுரிக்கு வருகை தந்தவர், இன்று காலை பாலக்கோடு பகுதியில் நடைபயணம் மேற்கொண்டார். அப்போது கோட்டை தெருவில் உள்ள இஸ்லாமிய மக்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். ரொடர்ந்து ஸ்தூபி மைதானம், கடைவீதி, பேருந்து நிலையம் , தக்காளிமண்டி வரை நடந்து சென்று பொதுமக்களை சந்தித்தார்.
More news from தமிழ்நாடு and nearby areas
- வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் அதிமுக வேட்பாளர் டாக்டர் வி.பி.பி. பரமசிவத்திற்கு ஆதரவாக எரியோடு பேரூராட்சி மணியக்காரன்பட்டி கிராமத்தில் இன்று வாக்கு சேகரிப்பு நடைபெற்றது. இந்த நிகழ்வில் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டு பொதுமக்களிடம் அதிமுகவின் தேர்தல் அறிக்கையை கூறி இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டனர்.1
- Post by அன்பரசு1
- மணப்பாறை அருகே திடீரென சில கோரிக்கைகளை செய்து கொடுக்க கூறி திமுக வேட்பாளர் காலில் விழுந்த நபரால் பரபரப்பு திருச்சி மாவட்டம், மணப்பாறை தொகுதி, வையம்பட்டி ஒன்றியபகுதிகளில் திமுக கூட்டணி கட்சி வேட்பாளர் அப்துல் சமது வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்தார். ஆனாங்கரைப்பட்டியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட போது அங்கிருந்த மக்கள் சிலர் தங்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை என்று கூறி முறையிட்டனர். அப்போது அங்கிருந்த ஒருவர் திடீரென சாலை வசதி இல்லை, குடிநீர் வசதி இல்லை, ஜெயிச்சுட்டு போய் 5 வருடமா செஞ்சு தரவில்லை என்று கூறி எம்எல்ஏ காலில் விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.1
- தேன் கூட்டை அழிப்பது போல் சில பேர் விசிக வை அழிக்க பார்க்கிறார்கள் விசிக தலைவர் தொல். திருமாவளவன். கடலூர் மாவட்டம் புவனகிரி சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் துரை கி சரவணனுக்கு ஆதரவாக சேத்தியாதோப்பு குறுக்கு ரோடு பகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பிரச்சாரம் மேற்கொண்டார் . இந்த பிரச்சாரத்தில் வேட்பாளருக்கு உதய சூரியன் சின்னத்தில் ஆதரவு திரட்டி பேசினார் இதில் கடலூர் திமுக கிழக்கு மாவட்ட பொருளாளர் எம் ஆர் கே பி கதிரவன் மற்றும் கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர் . விடுதலை சிறுத்தைகள் வாக்குகள் தமிழக வெற்றி கழகத்திற்கு செல்லும் என பலரும் கூறி வருகிறார்கள் என்றும் தன் தொண்டர்களை பார்த்து சினிமா மோகமா உங்களுக்கு சினிமா மயக்கமா கதாநாயகன் மயக்கமா என உருக்கமாக கேள்வி எழுப்பினார் உங்களுக்காக வீதியில் இறங்கி போராடுவாரா உங்கள் துக்கத்தில் பங்கேற்பாரா உங்கள் கண்ணீரை துடைப்பாரா என தொண்டர்களை பார்த்து திருமாவளவன் கேள்வி எழுப்பினார்.1
- திருச்சி மாவட்டம் மணப்பாறை சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளராக டாக்டர். பி.எல். விஜயகுமார் போட்டியிடுகிறார். இந்நிலையில் பொன்னம்பட்டி (துவரங்குறிச்சி) மற்றும் சுற்றியுள்ள பல பகுதிகளில் இன்று பிரச்சாரம் மேற்கொண்டார். இந்த நிகழ்வில் பொன்னம்பட்டி பேரூராட்சியை சேர்ந்த அதிமுக மற்றும் என்டிஏ கூட்டணியை சேர்ந்த கட்சியினர் பங்கேற்றனர்.1
- கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அருகே உத்தம சோழகன் பகுதியில் இருந்து திருச்சின்னபுரம் உள்ளிட்ட பகுதிகள் வரை தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் போட்டியிடும் அன்பு சோழன் அவர்களை ஆதரித்து கூட்டணி கட்சிகளுடன் இணைந்து மாம்பழ சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர் இதில் கூட்டணி கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்1
- திருச்சி மாவட்டம் மணப்பாறை சட்டமன்றத் தொகுதியின் தவெகவின் வேட்பாளர் ஆர். கதிரவன் விசில் சின்னத்தில் வாக்குகள் கேட்டு இன்று காலை முதல் மணப்பாறை தெற்கு ஒன்றியம் ஆவாரமபட்டி மற்றும் சுற்றியுள்ள பகுதிகள் முழுவதும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார். இதில் திருச்சி புறநகர் தெற்கு மாவட்டம் மணப்பாறையை சேர்ந்த நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்றுள்ளனர்.1
- Post by ஆ.கார்த்திக் (P F H R.)1
- திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட செம்பட்டி, கோடாங்கி பட்டி, புது கோடாங்கி பட்டி, சீவல் சரகு , அக்கரைப்பட்டி, வேல கவுண்டன்பட்டி, இராமநாதபுரம், மல்லையாபுரம், பாறைப்பட்டி, வீரக்கல், கூத்தாம்பட்டி , ஆத்தூர் போன்ற பகுதிகளில் தமிழக வெற்றி க்கழக ஆத்தூர் சட்டமன்ற வேட்பாளர் நா. கலைச்செல்வி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இதில் தங்கள் கட்சிகளின் பத்து அம்ச மகளிர்க்கான தேர்தல் வாக்குறுதிகள்: 1 -பெண்கள் குழந்தைகளுக்கு தனி இலாகா உருவாக்கப்படும், 2 -அன்னபூரணி சூப்பர் ஆண்டுக்கு 6 சிலிண்டர்கள் வழங்கப்படும், 3 -மகளிர் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் வேலு நாச்சியார் படை ஏற்படுத்தப்படும் ,4 -மகளிர் சுய உதவி குழுக்களுக்கு 5லட்சம் கடன் மானியத்துடன் வழங்கப்படும், 5 -தாய் மாமன் தங்க மோதிரம் திட்டம் மூலம் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கப்படும், 6 -60 வயது வரையிலான அனைத்து மகளிர்க்கும் உதவித்தொகை மாதம் ரூபாய் 2500 வழங்கப்படும், 7 தமிழகம் முழுவதும் அனைத்துப் பெண்களுக்கும் இலவச பேருந்து சேவை வழங்கப்படும், 8 -அண்ணன் சிர் திட்டத்தின் படி திருமணத்தின்போது ஒரு சவரன் தங்கம் ,பட்டு சேலை வழங்கப்படும், 9 -இலவச சானிட்டரி ஃபேட்ஸ் பொது விநியோகம் இடமான ரேஷன் கடைகள், பள்ளிகள், கல்லூரிகளில் வழங்கப்படும், 10 -பொது போக்குவரத்தில் ஸ்மார்ட் அவசர பொத்தான்கள் பொருத்தப்படும் உள்ளிட்ட பத்து அம்ச வாக்குறுதிகளை மக்களிடம் எடுத்துக் கூறி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். இந்நிகழ்வில் அனைத்து பகுதிகளில் உள்ள பொதுமக்கள் வேட்பாளருக்கு பூர்ண கும்பம் மரியாதை செய்து ஆரத்தி எடுத்து உற்சாகத்துடன் வரவேற்றனர். இந்நிகழ்வில் உடன் தமிழக வெற்றிக்கழக மத்திய மாவட்ட செயலாளர்ML. வாசுதேவன், ஒன்றிய செயலாளர்கள் முருகானந்தம் ,லக்ஷ்மணன் , அருண்குமார், மாவட்ட ஒன்றிய பேரூர் கிளை கழக மகளிர் அணி நிர்வாகிகள், மாணவ இளைஞர் அணி நிர்வாகிகள், மற்றும் தவெக பொறுப்பாளர்கள் ,பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்..1