logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

கிருஷ்ணகிரி அருகேயுள்ள மகராஜகடை அடுத்த பெலவர்த்தி சுற்றுவட்டாரப் பகுதியில், கடந்த ஏழு ஆண்டுகளாகக் காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன. இந்த யானைகள் வனப்பகுதியை ஒட்டியுள்ள காட்டூர், தின்னூர், நாகமரத்துப்பள்ளம் போன்ற கிராமங்களில் உள்ள விவசாய நிலங்களுக்குள் புகுந்து தொடர்ச்சியாக அட்டகாசம் செய்து வருகின்றன. இதனால் பாதிக்கப்பட்ட அப்பகுதி மக்கள், தங்களுக்கு சோலார் மின்வேலிகள் அமைத்துத் தருமாறு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.

3 hrs ago
user_FAYAZ
FAYAZ
பத்திரிகையாளர் கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி, தமிழ்நாடு•
3 hrs ago

கிருஷ்ணகிரி அருகேயுள்ள மகராஜகடை அடுத்த பெலவர்த்தி சுற்றுவட்டாரப் பகுதியில், கடந்த ஏழு ஆண்டுகளாகக் காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன. இந்த யானைகள் வனப்பகுதியை ஒட்டியுள்ள காட்டூர், தின்னூர், நாகமரத்துப்பள்ளம் போன்ற கிராமங்களில் உள்ள விவசாய நிலங்களுக்குள் புகுந்து தொடர்ச்சியாக அட்டகாசம் செய்து வருகின்றன. இதனால் பாதிக்கப்பட்ட அப்பகுதி மக்கள், தங்களுக்கு சோலார் மின்வேலிகள் அமைத்துத் தருமாறு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.

More news from Tamil Nadu and nearby areas
  • தர்மபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி அருகே உள்ள கொலசனஅள்ளி கிராமத்தில் அமைந்துள்ள ஓம் தர்மராஜன் சுவாமி - திரவுபதி அம்மன் கோயில் திருவிழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கிய இந்த திருவிழாவின் முக்கிய நாளான இன்று அதிகாலை முதலே ஓம் தர்மராஜா, திரவுபதி அம்மன், பீமன், அர்ஜூனன், நகுலன், சகாதேவன் ஆகிய மூர்த்திகளுக்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் மற்றும் ஆராதனை செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரத்தில் சுவாமிகள் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். கொலசனஅள்ளி, வேப்பிலஅள்ளி, நல்லாம்பட்டி ஆகிய மூன்று கிராம மக்களும் ஒன்றிணைந்து கொண்டாடிய இத்திருவிழாவில், பக்தர்கள் ஒரு அடிக்கு ஒரு தேங்காய் உடைத்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி வழிபட்டனர். கோயிலுக்கு வந்திருந்த பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் நீர்மோர் வழங்கப்பட்டதுடன், தொடர்ந்து சுவாமி வீதி உலாவும் நடைபெற்றது. இவ்விழாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை தர்மகர்த்தா, ஊர் கவுண்டர்கள், மந்திரி கவுண்டர்கள், நாட்டு கவுண்டர்கள், ஊர் பொதுமக்கள் மற்றும் விழாக் குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர்.
    1
    தர்மபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி அருகே உள்ள கொலசனஅள்ளி கிராமத்தில் அமைந்துள்ள ஓம் தர்மராஜன் சுவாமி - திரவுபதி அம்மன் கோயில் திருவிழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கிய இந்த திருவிழாவின் முக்கிய நாளான இன்று அதிகாலை முதலே ஓம் தர்மராஜா, திரவுபதி அம்மன், பீமன், அர்ஜூனன், நகுலன், சகாதேவன் ஆகிய மூர்த்திகளுக்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் மற்றும் ஆராதனை செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரத்தில் சுவாமிகள் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

கொலசனஅள்ளி, வேப்பிலஅள்ளி, நல்லாம்பட்டி ஆகிய மூன்று கிராம மக்களும் ஒன்றிணைந்து கொண்டாடிய இத்திருவிழாவில், பக்தர்கள் ஒரு அடிக்கு ஒரு தேங்காய் உடைத்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி வழிபட்டனர்.

கோயிலுக்கு வந்திருந்த பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் நீர்மோர் வழங்கப்பட்டதுடன், தொடர்ந்து சுவாமி வீதி உலாவும் நடைபெற்றது. இவ்விழாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை தர்மகர்த்தா, ஊர் கவுண்டர்கள், மந்திரி கவுண்டர்கள், நாட்டு கவுண்டர்கள், ஊர் பொதுமக்கள் மற்றும் விழாக் குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர்.
    user_SURENDIRAVARMA. C
    SURENDIRAVARMA. C
    Local News Reporter Dharmapuri, Tamil Nadu•
    4 hrs ago
  • திருப்பத்தூர் ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (15) நடைபெற்ற குறைத்தீர்வு கூட்டத்தின்போது, பொதுமக்கள் தங்கள் மனுக்களை அளிக்க வந்தனர். ஆனால், அங்கு பணியில் இருந்த பல அதிகாரிகள் செல்போனில் பேசிக்கொண்டும், ஒருவருக்கொருவர் சிரித்துக்கொண்டும் அலட்சியமாக செயல்பட்டனர். அதிகாரிகளின் இந்த பொறுப்பற்ற செயல் குறித்து மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
    1
    திருப்பத்தூர் ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (15) நடைபெற்ற குறைத்தீர்வு கூட்டத்தின்போது, பொதுமக்கள் தங்கள் மனுக்களை அளிக்க வந்தனர். ஆனால், அங்கு பணியில் இருந்த பல அதிகாரிகள் செல்போனில் பேசிக்கொண்டும், ஒருவருக்கொருவர் சிரித்துக்கொண்டும் அலட்சியமாக செயல்பட்டனர். அதிகாரிகளின் இந்த பொறுப்பற்ற செயல் குறித்து மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
    user_ARVINDAN TV VNG
    ARVINDAN TV VNG
    Reporter Ambur, Tirupathur•
    3 hrs ago
  • கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலை வட்டத்தில் உள்ள வெள்ளிமலை வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில், 1435-ம் பசலி ஆண்டுக்கான வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) கூட்டம் நடைபெற்று வருகிறது. வருவாய் தீர்வாய அலுவலர் வி. முத்தையா தலைமையில் இக்கூட்டம் நடந்து வருகிறது. இந்தக் கூட்டத்தில் மேலாளர் ராமகிருஷ்ணன், வருவாய் வட்டாட்சியர் கோவிந்தராஜ், தனி வட்டாட்சியர் குமரன், துணை வட்டாட்சியர் தாமோதரன், சமூக பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியர் மணி, மண்டல துணை வட்டாட்சியர் சக்திவேல், வருவாய் ஆய்வாளர் ராம்ஜி, வட்ட துணை ஆய்வாளர் சுரேஷ், கிராம நிர்வாக அலுவலர்கள் வடிவேல், வெங்கடேஷ் மற்றும் கிராம நிர்வாக உதவியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இன்று பெருமாள்நத்தம், கீழ்நிலவூர், மேல்நிலவூர், வில்வித்தி, கீழாத்துக்குழி மற்றும் மேலாத்துக்குழி ஆகிய வருவாய் கிராமங்களுக்கான ஜமாபந்தி கூட்டம் நடைபெற்று வருகிறது. பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு, அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
    1
    கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலை வட்டத்தில் உள்ள வெள்ளிமலை வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில், 1435-ம் பசலி ஆண்டுக்கான வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) கூட்டம் நடைபெற்று வருகிறது. வருவாய் தீர்வாய அலுவலர் வி. முத்தையா தலைமையில் இக்கூட்டம் நடந்து வருகிறது.

இந்தக் கூட்டத்தில் மேலாளர் ராமகிருஷ்ணன், வருவாய் வட்டாட்சியர் கோவிந்தராஜ், தனி வட்டாட்சியர் குமரன், துணை வட்டாட்சியர் தாமோதரன், சமூக பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியர் மணி, மண்டல துணை வட்டாட்சியர் சக்திவேல், வருவாய் ஆய்வாளர் ராம்ஜி, வட்ட துணை ஆய்வாளர் சுரேஷ், கிராம நிர்வாக அலுவலர்கள் வடிவேல், வெங்கடேஷ் மற்றும் கிராம நிர்வாக உதவியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இன்று பெருமாள்நத்தம், கீழ்நிலவூர், மேல்நிலவூர், வில்வித்தி, கீழாத்துக்குழி மற்றும் மேலாத்துக்குழி ஆகிய வருவாய் கிராமங்களுக்கான ஜமாபந்தி கூட்டம் நடைபெற்று வருகிறது.

பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு, அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
    user_M.P.Palani Samy
    M.P.Palani Samy
    கல்வராயன் மலைகள், கள்ளக்குறிச்சி, தமிழ்நாடு•
    3 hrs ago
  • நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே குருசாமிபாளையம் தோப்புக்காடு பகுதியைச் சேர்ந்த மெய்ஞானமூர்த்தி என்பவரின் பல்சர் இருசக்கர வாகனம் நள்ளிரவில் திருடப்பட்டது. வழக்கம் போல் தனது வாகனத்தை வீட்டின் முன்பு நிறுத்திவிட்டு உறங்கச் சென்ற அவர், மறுநாள் காலை எழுந்து பார்த்தபோது வாகனம் காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து புதுச்சத்திரம் காவல் நிலையத்தில் மெய்ஞானமூர்த்தி அளித்த புகாரின் பேரில், காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை நடத்தினர். அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, ஓர் இளைஞர் நள்ளிரவில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களை நோட்டமிட்டு, பல்சர் வாகனத்தைத் திருடி தள்ளிச் செல்லும் காட்சி தெளிவாகப் பதிவாகியுள்ளது. இந்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில், மர்ம நபரை அடையாளம் காணும் பணியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். ராசிபுரம் பகுதியில் அண்மைக் காலமாக இருசக்கர வாகனத் திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருவது பொதுமக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. இதனால், இரவு நேரக் காவல் ரோந்தினை மேலும் தீவிரப்படுத்த வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் காவல்துறையினருக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    1
    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே குருசாமிபாளையம் தோப்புக்காடு பகுதியைச் சேர்ந்த மெய்ஞானமூர்த்தி என்பவரின் பல்சர் இருசக்கர வாகனம் நள்ளிரவில் திருடப்பட்டது. வழக்கம் போல் தனது வாகனத்தை வீட்டின் முன்பு நிறுத்திவிட்டு உறங்கச் சென்ற அவர், மறுநாள் காலை எழுந்து பார்த்தபோது வாகனம் காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இதுகுறித்து புதுச்சத்திரம் காவல் நிலையத்தில் மெய்ஞானமூர்த்தி அளித்த புகாரின் பேரில், காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை நடத்தினர். அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, ஓர் இளைஞர் நள்ளிரவில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களை நோட்டமிட்டு, பல்சர் வாகனத்தைத் திருடி தள்ளிச் செல்லும் காட்சி தெளிவாகப் பதிவாகியுள்ளது. இந்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில், மர்ம நபரை அடையாளம் காணும் பணியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

ராசிபுரம் பகுதியில் அண்மைக் காலமாக இருசக்கர வாகனத் திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருவது பொதுமக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. இதனால், இரவு நேரக் காவல் ரோந்தினை மேலும் தீவிரப்படுத்த வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் காவல்துறையினருக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    user_ILAYARAJA
    ILAYARAJA
    Local News Reporter ராசிபுரம், நாமக்கல், தமிழ்நாடு•
    6 hrs ago
  • கோவிலுக்குச் செல்லும் வழியில் அமைந்துள்ள காவாய் மற்றும் சாலைகள் சேதமடைந்துள்ளதால், பக்தர்களுக்குப் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது. சேதமடைந்த காவாய் மற்றும் சாலையின் வழியே செல்ல முடியாததால், பக்தர்கள் கோவிலுக்குச் செல்வதில் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இது குறித்து அரசு உடனடியாகக் கவனம் செலுத்தி, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
    2
    கோவிலுக்குச் செல்லும் வழியில் அமைந்துள்ள காவாய் மற்றும் சாலைகள் சேதமடைந்துள்ளதால், பக்தர்களுக்குப் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது. சேதமடைந்த காவாய் மற்றும் சாலையின் வழியே செல்ல முடியாததால், பக்தர்கள் கோவிலுக்குச் செல்வதில் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இது குறித்து அரசு உடனடியாகக் கவனம் செலுத்தி, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
    user_Mohanraj
    Mohanraj
    ஆரணி, திருவண்ணாமலை, தமிழ்நாடு•
    9 hrs ago
  • காஞ்சிபுரம் மாவட்டம் மணிமங்கலம் அருகே, 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகப் புகார் எழுந்துள்ளது. பீகாரைச் சேர்ந்த ஜெய் சாந்த் (43) என்ற வடமாநில நபரை பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் தற்போது அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பந்தப்பட்ட 10 வயது சிறுமி வசித்து வரும் வீட்டின் அருகில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றன. அங்கு கட்டுமானப் பணிகளில் கூலி வேலை செய்வதற்காக ஜெய் சாந்த் ஈடுபட்டு வந்துள்ளார். நேற்று இரவு, சிறுமி சாலையில் நடந்து சென்றபோது, அவரை பின்தொடர்ந்து சென்ற ஜெய் சாந்த் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகத் தெரிகிறது. இதனால் கத்தி கூச்சலிட்ட சிறுமி, அந்த நபரிடமிருந்து தப்பித்து வீட்டிற்குச் சென்று நடந்தவற்றைத் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பொதுமக்கள், அந்த வடமாநில நபரை மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். பொதுமக்கள் தாக்கியதில் ஜெய் சாந்திற்கு லேசான காயம் ஏற்பட்டது. அவருக்கு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மணிமங்கலம் காவல் உதவி ஆணையர் சுந்தர் தலைமையிலான போலீசார் ஜெய் சாந்தை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ஜெய் சாந்தை ரகசிய இடத்தில் வைத்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    1
    காஞ்சிபுரம் மாவட்டம் மணிமங்கலம் அருகே, 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகப் புகார் எழுந்துள்ளது. பீகாரைச் சேர்ந்த ஜெய் சாந்த் (43) என்ற வடமாநில நபரை பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் தற்போது அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

சம்பந்தப்பட்ட 10 வயது சிறுமி வசித்து வரும் வீட்டின் அருகில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றன. அங்கு கட்டுமானப் பணிகளில் கூலி வேலை செய்வதற்காக ஜெய் சாந்த் ஈடுபட்டு வந்துள்ளார். நேற்று இரவு, சிறுமி சாலையில் நடந்து சென்றபோது, அவரை பின்தொடர்ந்து சென்ற ஜெய் சாந்த் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகத் தெரிகிறது. இதனால் கத்தி கூச்சலிட்ட சிறுமி, அந்த நபரிடமிருந்து தப்பித்து வீட்டிற்குச் சென்று நடந்தவற்றைத் தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பொதுமக்கள், அந்த வடமாநில நபரை மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். பொதுமக்கள் தாக்கியதில் ஜெய் சாந்திற்கு லேசான காயம் ஏற்பட்டது. அவருக்கு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மணிமங்கலம் காவல் உதவி ஆணையர் சுந்தர் தலைமையிலான போலீசார் ஜெய் சாந்தை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ஜெய் சாந்தை ரகசிய இடத்தில் வைத்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    user_Venkat
    Venkat
    Local News Reporter காஞ்சிபுரம், காஞ்சிபுரம், தமிழ்நாடு•
    1 hr ago
  • கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் அண்ணா சிலை எதிரில் இன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிரான ஒரு மாபெரும் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த பேரணி லண்டன் டேட்டை சாலை, பெங்களுர் சாலை உள்ளிட்ட நகரின் முக்கிய சாலைகள் வழியாக சென்று தாலுகா அலுவலகத்தில் நிறைவடைந்தது. பேரணியில் பங்கேற்றோர் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கைகளில் ஏந்தியபடி அணிவகுத்துச் சென்றனர்.
    1
    கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் அண்ணா சிலை எதிரில் இன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிரான ஒரு மாபெரும் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த பேரணி லண்டன் டேட்டை சாலை, பெங்களுர் சாலை உள்ளிட்ட நகரின் முக்கிய சாலைகள் வழியாக சென்று தாலுகா அலுவலகத்தில் நிறைவடைந்தது.

பேரணியில் பங்கேற்றோர் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கைகளில் ஏந்தியபடி அணிவகுத்துச் சென்றனர்.
    user_FAYAZ
    FAYAZ
    பத்திரிகையாளர் கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி, தமிழ்நாடு•
    23 hrs ago
  • தர்மபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி அருகே உள்ள பெருங்காடு கிராமத்தில் 150 குடும்பங்களைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். சுதந்திரம் பெற்று 79 ஆண்டுகள் ஆகியும், ரேஷன்கடை, சுகாதார நிலையம், பேருந்து வசதி போன்ற அடிப்படை வசதிகள் எதுவுமின்றி இப்பகுதி மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும், இங்கு வசிப்பவர்களுக்கு நிலம் மற்றும் வீடுகளுக்கான பட்டா இதுவரை வழங்கப்படவில்லை. இவர்களின் பிரதான தொழில்களாக ஆடு, மாடு மேய்த்தல் மற்றும் செங்கல் சூளைக்கு வேலைக்கு செல்லுதல் ஆகியவை உள்ளன, மேலும் இங்கு படிப்பறிவு குறைந்த மக்களே வாழ்கின்றனர். இக்கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மட்டுமே உள்ளதால், மாணவர்கள் 8 ஆம் வகுப்பு வரை மட்டுமே படிக்க முடியும். 9 ஆம் வகுப்பிற்கு செல்ல சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மாரண்டஅள்ளிக்கு செல்ல வேண்டியுள்ளது. பேருந்து வசதி இல்லாததால், மாணவர்கள் நீண்ட தூரம் நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது, இதனால் சில மாணவர்கள் பாதியிலேயே படிப்பை கைவிடுகின்றனர். குறிப்பாக, பெண் பிள்ளைகள் உயர் கல்விக்கு செல்வதில்லை என கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். விவசாய பொருட்களை கொண்டு செல்லவும், உடல்நலம் சரியில்லாதபோது மருத்துவமனைக்கு செல்லவும் வாகன வசதிகள் இன்றி இப்பகுதி மக்கள் தவித்து வருகின்றனர். அடிப்படை வசதிகள் கேட்டு தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு பலமுறை மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என வேதனை தெரிவிக்கின்றனர். எனவே, தமிழக அரசு உடனடியாக துரித நடவடிக்கை மேற்கொண்டு தங்கள் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுமாறும், குறிப்பாக பேருந்து வசதியை ஏற்படுத்தித் தருமாறும் அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
    1
    தர்மபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி அருகே உள்ள பெருங்காடு கிராமத்தில் 150 குடும்பங்களைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். சுதந்திரம் பெற்று 79 ஆண்டுகள் ஆகியும், ரேஷன்கடை, சுகாதார நிலையம், பேருந்து வசதி போன்ற அடிப்படை வசதிகள் எதுவுமின்றி இப்பகுதி மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும், இங்கு வசிப்பவர்களுக்கு நிலம் மற்றும் வீடுகளுக்கான பட்டா இதுவரை வழங்கப்படவில்லை. இவர்களின் பிரதான தொழில்களாக ஆடு, மாடு மேய்த்தல் மற்றும் செங்கல் சூளைக்கு வேலைக்கு செல்லுதல் ஆகியவை உள்ளன, மேலும் இங்கு படிப்பறிவு குறைந்த மக்களே வாழ்கின்றனர்.

இக்கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மட்டுமே உள்ளதால், மாணவர்கள் 8 ஆம் வகுப்பு வரை மட்டுமே படிக்க முடியும். 9 ஆம் வகுப்பிற்கு செல்ல சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மாரண்டஅள்ளிக்கு செல்ல வேண்டியுள்ளது. பேருந்து வசதி இல்லாததால், மாணவர்கள் நீண்ட தூரம் நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது, இதனால் சில மாணவர்கள் பாதியிலேயே படிப்பை கைவிடுகின்றனர். குறிப்பாக, பெண் பிள்ளைகள் உயர் கல்விக்கு செல்வதில்லை என கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.

விவசாய பொருட்களை கொண்டு செல்லவும், உடல்நலம் சரியில்லாதபோது மருத்துவமனைக்கு செல்லவும் வாகன வசதிகள் இன்றி இப்பகுதி மக்கள் தவித்து வருகின்றனர். அடிப்படை வசதிகள் கேட்டு தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு பலமுறை மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என வேதனை தெரிவிக்கின்றனர். எனவே, தமிழக அரசு உடனடியாக துரித நடவடிக்கை மேற்கொண்டு தங்கள் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுமாறும், குறிப்பாக பேருந்து வசதியை ஏற்படுத்தித் தருமாறும் அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
    user_SURENDIRAVARMA. C
    SURENDIRAVARMA. C
    Local News Reporter Dharmapuri, Tamil Nadu•
    11 hrs ago
  • திருப்பத்தூர் ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (15) நடைபெற்ற குறைத்தீர்வு கூட்டத்தில், வாணியம்பாடி அடுத்த நெக்குந்தி ஊராட்சிக்குட்பட்ட மோதகுட்டை பகுதியைச் சேர்ந்த நூறுநாள் திட்டப் பணியாளர்கள் ஒரு முக்கிய புகார் மனுவை அளித்தனர். கடந்த பத்து ஆண்டுகளாக, தங்கள் பணிதளப் பொறுப்பாளர், வேலைக்கு வராத பல நபர்களை வேலைக்கு வந்ததாகக் கணக்கில் காட்டி, அவர்களின் ஊதியத்தை கமிஷனாகப் பெற்று முறைகேட்டில் ஈடுபட்டு வருவதாக அவர்கள் அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தனர். இந்த மோசடி குறித்து உரிய விசாரணை நடத்தி, முறைகேட்டில் ஈடுபடும் பணிதளப் பொறுப்பாளர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பணியாளர்கள் ஆட்சியரிடம் வலியுறுத்தினர்.
    1
    திருப்பத்தூர் ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (15) நடைபெற்ற குறைத்தீர்வு கூட்டத்தில், வாணியம்பாடி அடுத்த நெக்குந்தி ஊராட்சிக்குட்பட்ட மோதகுட்டை பகுதியைச் சேர்ந்த நூறுநாள் திட்டப் பணியாளர்கள் ஒரு முக்கிய புகார் மனுவை அளித்தனர். கடந்த பத்து ஆண்டுகளாக, தங்கள் பணிதளப் பொறுப்பாளர், வேலைக்கு வராத பல நபர்களை வேலைக்கு வந்ததாகக் கணக்கில் காட்டி, அவர்களின் ஊதியத்தை கமிஷனாகப் பெற்று முறைகேட்டில் ஈடுபட்டு வருவதாக அவர்கள் அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தனர். இந்த மோசடி குறித்து உரிய விசாரணை நடத்தி, முறைகேட்டில் ஈடுபடும் பணிதளப் பொறுப்பாளர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பணியாளர்கள் ஆட்சியரிடம் வலியுறுத்தினர்.
    user_ARVINDAN TV VNG
    ARVINDAN TV VNG
    Reporter Ambur, Tirupathur•
    5 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.