logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள தேவதானப்பட்டியில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளதா என்ற கேள்வியை எழுப்பும் வகையில் அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. தேவதானப்பட்டி பேரூராட்சிக்குட்பட்ட அரிசி கடை பேருந்து நிறுத்தப் பகுதிக்கு இரவு நேரத்தில் தேவாரத்தில் இருந்து கோயம்புத்தூர் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து வந்துள்ளது. அப்போது, மது மற்றும் கஞ்சா போதையில் மிதந்த அப்பகுதியைச் சேர்ந்த இருவர், நடுரோட்டில் பேருந்தை வழிமறித்து கற்களால் தாக்கியதில் பேருந்தின் முன்பக்கக் கண்ணாடி உடைந்து நொறுங்கியது. மேலும், பேருந்தில் இருந்த பயணிகளை நோக்கி ஆபாச வார்த்தைகளால் பேசி, அச்சுறுத்தும் வகையில் ரகலையில் ஈடுபட்டுள்ளனர். இந்தத் திடீர் தாக்குதலால் பேருந்தில் இருந்த பெண்கள், குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் அலறியடித்துக்கொண்டு பேருந்திலிருந்து இறங்கி ஓடினர். இதுகுறித்து தேவதானப்பட்டி காவல்துறையினருக்கு உடனடியாகத் தகவல் தெரிவிக்கப்பட்டும், அவர்கள் வழக்கம்போல் காலதாமதமாகவே சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர். பின்னர், ரகலையில் ஈடுபட்ட இருவரையும் பிடித்து விசாரணை நடத்தியதில், அவர்கள் தேவதானப்பட்டி தெற்கு தெருவைச் சேர்ந்த வசந்த் (என்ற செல்லப்பாண்டி) மற்றும் காமராஜ் என்பது தெரியவந்தது. அரசுப் பேருந்தின் கண்ணாடியை உடைத்த குற்றத்திற்காக அவர்கள் மீது தற்போது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தேவதானப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கஞ்சா மற்றும் சட்டவிரோத மது விற்பனை 24 மணி நேரமும் தங்கு தடையின்றி கள்ளச்சந்தையில் அமோகமாக நடைபெறுவதே இத்தகைய சம்பவங்களுக்குக் காரணம் என்று கூறப்படுகிறது. இரவு நேரங்களில் காவல்துறையினர் முறையான ரோந்துப் பணியில் ஈடுபடுவதில்லை என்றும், சமூக விரோதிகள் குறித்துப் புகார் அளித்தால் போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் மெத்தனப் போக்கோடு அலட்சியமாகச் செயல்படுவதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். காவல்துறையின் இந்தத் தொடர் அலட்சியத்தால், போதை ஆசாமிகளின் அராஜகம் அதிகரித்து, பொதுமக்களின் உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதாக மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். இனியாவது மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் விழித்துக்கொண்டு, தேவதானப்பட்டி பகுதியில் கஞ்சா மற்றும் மது விற்பனையை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்பதே ஒட்டுமொத்த மக்களின் கோரிக்கையாக உள்ளது.

5 hrs ago
user_VIGNESH
VIGNESH
Photographer ஆண்டிபட்டி, தேனி, தமிழ்நாடு•
5 hrs ago

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள தேவதானப்பட்டியில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளதா என்ற கேள்வியை எழுப்பும் வகையில் அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. தேவதானப்பட்டி பேரூராட்சிக்குட்பட்ட அரிசி கடை பேருந்து நிறுத்தப் பகுதிக்கு இரவு நேரத்தில் தேவாரத்தில் இருந்து கோயம்புத்தூர் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து வந்துள்ளது. அப்போது, மது மற்றும் கஞ்சா போதையில் மிதந்த அப்பகுதியைச் சேர்ந்த இருவர், நடுரோட்டில் பேருந்தை வழிமறித்து கற்களால் தாக்கியதில் பேருந்தின் முன்பக்கக் கண்ணாடி உடைந்து நொறுங்கியது. மேலும், பேருந்தில் இருந்த பயணிகளை நோக்கி ஆபாச வார்த்தைகளால் பேசி, அச்சுறுத்தும் வகையில் ரகலையில் ஈடுபட்டுள்ளனர். இந்தத் திடீர் தாக்குதலால் பேருந்தில் இருந்த பெண்கள், குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் அலறியடித்துக்கொண்டு பேருந்திலிருந்து இறங்கி ஓடினர். இதுகுறித்து தேவதானப்பட்டி காவல்துறையினருக்கு உடனடியாகத் தகவல் தெரிவிக்கப்பட்டும், அவர்கள் வழக்கம்போல் காலதாமதமாகவே சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர். பின்னர், ரகலையில் ஈடுபட்ட இருவரையும் பிடித்து விசாரணை நடத்தியதில், அவர்கள் தேவதானப்பட்டி தெற்கு தெருவைச் சேர்ந்த வசந்த் (என்ற செல்லப்பாண்டி) மற்றும் காமராஜ் என்பது தெரியவந்தது. அரசுப் பேருந்தின் கண்ணாடியை உடைத்த குற்றத்திற்காக அவர்கள் மீது தற்போது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தேவதானப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கஞ்சா மற்றும் சட்டவிரோத மது விற்பனை 24 மணி நேரமும் தங்கு தடையின்றி கள்ளச்சந்தையில் அமோகமாக நடைபெறுவதே இத்தகைய சம்பவங்களுக்குக் காரணம் என்று கூறப்படுகிறது. இரவு நேரங்களில் காவல்துறையினர் முறையான ரோந்துப் பணியில் ஈடுபடுவதில்லை என்றும், சமூக விரோதிகள் குறித்துப் புகார் அளித்தால் போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் மெத்தனப் போக்கோடு அலட்சியமாகச் செயல்படுவதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். காவல்துறையின் இந்தத் தொடர் அலட்சியத்தால், போதை ஆசாமிகளின் அராஜகம் அதிகரித்து, பொதுமக்களின் உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதாக மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். இனியாவது மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் விழித்துக்கொண்டு, தேவதானப்பட்டி பகுதியில் கஞ்சா மற்றும் மது விற்பனையை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்பதே ஒட்டுமொத்த மக்களின் கோரிக்கையாக உள்ளது.

More news from தமிழ்நாடு and nearby areas
  • தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே அமைந்துள்ள சண்முகசுந்தரபுரம் கிராமத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களின் பிறந்தநாள் விழா இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ரத்தினம் தலைமையில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த நிலையில், தமிழக வெற்றிக்கழகத்தின் தெற்கு மாவட்ட செயலாளர் லெப்ட் பாண்டி இந்த விழாவில் கலந்துகொண்டார். அவர் கேக் வெட்டி முதலமைச்சரின் பிறந்தநாளை கொண்டாடினார். இந்த கொண்டாட்டத்திற்குப் பிறகு, கிராம மக்களுக்கு அன்னதான உணவுகள் வழங்கப்பட்டன. மாவட்ட செயலாளர் லெப்ட் பாண்டி, உணவுகளை வழங்கியதோடு மட்டுமல்லாமல், கிராம மக்களுடன் அமர்ந்து தானும் அன்னதான உணவை சாப்பிட்டார். இந்த நிகழ்வில் தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் பலரும் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.
    1
    தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே அமைந்துள்ள சண்முகசுந்தரபுரம் கிராமத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களின் பிறந்தநாள் விழா இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ரத்தினம் தலைமையில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த நிலையில், தமிழக வெற்றிக்கழகத்தின் தெற்கு மாவட்ட செயலாளர் லெப்ட் பாண்டி இந்த விழாவில் கலந்துகொண்டார். அவர் கேக் வெட்டி முதலமைச்சரின் பிறந்தநாளை கொண்டாடினார்.

இந்த கொண்டாட்டத்திற்குப் பிறகு, கிராம மக்களுக்கு அன்னதான உணவுகள் வழங்கப்பட்டன. மாவட்ட செயலாளர் லெப்ட் பாண்டி, உணவுகளை வழங்கியதோடு மட்டுமல்லாமல், கிராம மக்களுடன் அமர்ந்து தானும் அன்னதான உணவை சாப்பிட்டார். இந்த நிகழ்வில் தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் பலரும் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.
    user_Ramesh
    Ramesh
    Photographer ஆண்டிபட்டி, தேனி, தமிழ்நாடு•
    23 hrs ago
  • தேனி பங்களாமேட்டில், தமிழக முதல்வர் அளித்த தேர்தல் வாக்குறுதியான கூட்டுறவு பயிர்க் கடன்களை முழுமையாக ரத்து செய்யக் கோரி, தேனி மாவட்ட தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் காலவரையற்ற உண்ணாவிரதம் மற்றும் தொடர் காத்திருப்புப் போராட்டம் நடைபெற்று வருகிறது. தேனி மாவட்டம் முழுவதிலும் இருந்து 50க்கும் மேற்பட்ட பல்வேறு விவசாயிகள் சங்கங்களின் நிர்வாகிகள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். இந்தப் போராட்டத்தில், இன்று தமிழக முதல்வர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு கேக் வெட்டி வாழ்த்து தெரிவித்து இனிப்புகளை வழங்கினர். தொடர்ந்து, தமிழக வெற்றிக் கழகத்தின் சின்னமான விசில்களை ஊதி முதல்வரின் கவனத்தை ஈர்த்த விவசாயிகள், பின்னர் அந்த விசில்களை சாலையில் தூக்கி எறிந்தனர். மேலும், தலையில் துண்டால் முக்காடு போட்டு மண் சட்டியில் யாசகம் கேட்டும், உடலில் சாட்டையால் அடித்தும் தங்கள் எதிர்ப்பை வித்தியாசமான முறையில் பதிவு செய்தனர். பயிர்க்கடனை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்றும், பயிர்க்கடனை ரத்து செய்யும் அரசின் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்றும் கோரிக்கை முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
    1
    தேனி பங்களாமேட்டில், தமிழக முதல்வர் அளித்த தேர்தல் வாக்குறுதியான கூட்டுறவு பயிர்க் கடன்களை முழுமையாக ரத்து செய்யக் கோரி, தேனி மாவட்ட தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் காலவரையற்ற உண்ணாவிரதம் மற்றும் தொடர் காத்திருப்புப் போராட்டம் நடைபெற்று வருகிறது. தேனி மாவட்டம் முழுவதிலும் இருந்து 50க்கும் மேற்பட்ட பல்வேறு விவசாயிகள் சங்கங்களின் நிர்வாகிகள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

இந்தப் போராட்டத்தில், இன்று தமிழக முதல்வர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு கேக் வெட்டி வாழ்த்து தெரிவித்து இனிப்புகளை வழங்கினர். தொடர்ந்து, தமிழக வெற்றிக் கழகத்தின் சின்னமான விசில்களை ஊதி முதல்வரின் கவனத்தை ஈர்த்த விவசாயிகள், பின்னர் அந்த விசில்களை சாலையில் தூக்கி எறிந்தனர். மேலும், தலையில் துண்டால் முக்காடு போட்டு மண் சட்டியில் யாசகம் கேட்டும், உடலில் சாட்டையால் அடித்தும் தங்கள் எதிர்ப்பை வித்தியாசமான முறையில் பதிவு செய்தனர்.

பயிர்க்கடனை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்றும், பயிர்க்கடனை ரத்து செய்யும் அரசின் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்றும் கோரிக்கை முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
    user_Shakthi
    Shakthi
    பத்திரிகையாளர் பெரியகுளம், தேனி, தமிழ்நாடு•
    23 hrs ago
  • ஓட்டுநர் பணி ஒரு தெய்வீகமான பணி என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அனைத்து பொதுமக்களும் ஓட்டுநர்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
    1
    ஓட்டுநர் பணி ஒரு தெய்வீகமான பணி என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அனைத்து பொதுமக்களும் ஓட்டுநர்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
    user_G.thangarasu
    G.thangarasu
    Bus company Palani, Dindigul•
    3 hrs ago
  • தமிழகத்தில் மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனைகள் தாக்கப்படுவதைக் கண்டித்து, வருகின்ற வெள்ளிக்கிழமை அன்று மருத்துவர்களின் ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம் நடைபெறும் என மகப்பேறு மாநில மருத்துவர் தலைவர் அமலா தேவி அவர்கள் இன்று திண்டுக்கல்லில் தெரிவித்தார்.
    1
    தமிழகத்தில் மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனைகள் தாக்கப்படுவதைக் கண்டித்து, வருகின்ற வெள்ளிக்கிழமை அன்று மருத்துவர்களின் ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம் நடைபெறும் என மகப்பேறு மாநில மருத்துவர் தலைவர் அமலா தேவி அவர்கள் இன்று திண்டுக்கல்லில் தெரிவித்தார்.
    user_RAJA news
    RAJA news
    Oddanchatram, Dindigul•
    23 hrs ago
  • தமிழ் மாநில விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்புச் சட்டத்தை மேலும் பலப்படுத்தி, அதில் பதிவு செய்துள்ள அனைத்து தொழிலாளர்களுக்கும் ஆண்டுக்கு 200 நாட்கள் வேலை வழங்க வேண்டும் என்பதே இவர்களின் முக்கியக் கோரிக்கையாகும். மத்திய அரசைக் கண்டித்தும், தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மற்றும் சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர். தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வேலை உறுதி திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.
    1
    தமிழ் மாநில விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்புச் சட்டத்தை மேலும் பலப்படுத்தி, அதில் பதிவு செய்துள்ள அனைத்து தொழிலாளர்களுக்கும் ஆண்டுக்கு 200 நாட்கள் வேலை வழங்க வேண்டும் என்பதே இவர்களின் முக்கியக் கோரிக்கையாகும்.

மத்திய அரசைக் கண்டித்தும், தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மற்றும் சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர். தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வேலை உறுதி திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.
    user_Farmers joint Liability Group
    Farmers joint Liability Group
    Farmer குஜிலியம்பாறை, திண்டுக்கல், தமிழ்நாடு•
    37 min ago
  • தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி நகரில் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான சாலை ஓரங்கள் முழுவதும் ஆக்கிரமிப்புகளால் மக்கள் மற்றும் வாகனப் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த ஆக்கிரமிப்புகளால் 60 அடி அகல சாலைகள் 20 அடியாக சுருங்கி, அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு உயிரிழப்புகளும், பலர் காயமடைவதும் தொடர்கிறது. பலமுறை கோரிக்கை மனுக்கள் அளித்தும் நெடுஞ்சாலைத் துறை நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியம் காட்டி வருவதாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர் குற்றம்சாட்டினர். ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றக் கோரியும், அலட்சியம் காட்டி வரும் அதிகாரிகளைக் கண்டித்தும், அக்கட்சியினர் கோவில்பட்டி நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தில் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்டத் தலைவர் ராஜகோபால் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் திரளான கட்சி நிர்வாகிகள் பங்கேற்று, பொறியாளர் ரத்தின பாபுவிடம் தேங்காய், பூ, பழங்களுடன் தங்கள் கோரிக்கை மனுவை வழங்கினர்.
    1
    தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி நகரில் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான சாலை ஓரங்கள் முழுவதும் ஆக்கிரமிப்புகளால் மக்கள் மற்றும் வாகனப் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த ஆக்கிரமிப்புகளால் 60 அடி அகல சாலைகள் 20 அடியாக சுருங்கி, அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு உயிரிழப்புகளும், பலர் காயமடைவதும் தொடர்கிறது.

பலமுறை கோரிக்கை மனுக்கள் அளித்தும் நெடுஞ்சாலைத் துறை நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியம் காட்டி வருவதாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர் குற்றம்சாட்டினர். ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றக் கோரியும், அலட்சியம் காட்டி வரும் அதிகாரிகளைக் கண்டித்தும், அக்கட்சியினர் கோவில்பட்டி நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தில் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்டத் தலைவர் ராஜகோபால் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் திரளான கட்சி நிர்வாகிகள் பங்கேற்று, பொறியாளர் ரத்தின பாபுவிடம் தேங்காய், பூ, பழங்களுடன் தங்கள் கோரிக்கை மனுவை வழங்கினர்.
    user_கோ.ரெங்கசாமி
    கோ.ரெங்கசாமி
    கோவில்பட்டி, தூத்துக்குடி, தமிழ்நாடு•
    2 hrs ago
  • தேங்காய்க்கு உரிய விலை நிர்ணயம் செய்து தமிழக அரசே நேரடியாக கொள்முதல் செய்ய வலியுறுத்தி, தமிழ்நாடு தென்னை விவசாயிகள் சங்கம் சார்பில் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விவசாயிகள் தங்கள் எதிர்ப்பை தெரிவிக்கும் விதமாக சாலையில் தேங்காய்களை உடைத்தனர். விவசாயிகள் விளைவிக்கும் தேங்காய்க்கு உரிய விலை கிடைக்காததால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வருவதாக கூறி அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். உரித்த தேங்காய் ஒரு கிலோவுக்கு 60 ரூபாயும், உரிக்காத தேங்காய் ஒரு கிலோவுக்கு 30 ரூபாயும், கொப்பரை ஒரு கிலோவுக்கு 180 ரூபாயும் தமிழக அரசு நிரந்தர விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். மேலும், விளைவிக்கப்பட்ட தேங்காயை அரசே நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் 50க்கும் மேற்பட்ட தென்னை விவசாயிகள் கலந்துகொண்டு தங்களது கோரிக்கைகளை முன்வைத்து எதிர்ப்புகளை தெரிவித்தனர்.
    1
    தேங்காய்க்கு உரிய விலை நிர்ணயம் செய்து தமிழக அரசே நேரடியாக கொள்முதல் செய்ய வலியுறுத்தி, தமிழ்நாடு தென்னை விவசாயிகள் சங்கம் சார்பில் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விவசாயிகள் தங்கள் எதிர்ப்பை தெரிவிக்கும் விதமாக சாலையில் தேங்காய்களை உடைத்தனர்.

விவசாயிகள் விளைவிக்கும் தேங்காய்க்கு உரிய விலை கிடைக்காததால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வருவதாக கூறி அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். உரித்த தேங்காய் ஒரு கிலோவுக்கு 60 ரூபாயும், உரிக்காத தேங்காய் ஒரு கிலோவுக்கு 30 ரூபாயும், கொப்பரை ஒரு கிலோவுக்கு 180 ரூபாயும் தமிழக அரசு நிரந்தர விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். மேலும், விளைவிக்கப்பட்ட தேங்காயை அரசே நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் 50க்கும் மேற்பட்ட தென்னை விவசாயிகள் கலந்துகொண்டு தங்களது கோரிக்கைகளை முன்வைத்து எதிர்ப்புகளை தெரிவித்தனர்.
    user_Shakthi
    Shakthi
    பத்திரிகையாளர் பெரியகுளம், தேனி, தமிழ்நாடு•
    23 hrs ago
  • திண்டுக்கல் முள்ளிப்பாடி பகுதியில், தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் மொத்தம் ஆயிரம் நபர்கள் உணவு பெற்று பயனடைந்தனர்.
    1
    திண்டுக்கல் முள்ளிப்பாடி பகுதியில், தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் மொத்தம் ஆயிரம் நபர்கள் உணவு பெற்று பயனடைந்தனர்.
    user_RAJA news
    RAJA news
    Oddanchatram, Dindigul•
    23 hrs ago
  • சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை–திருப்பத்தூர் சாலையில் உள்ள உடையார்சேர்வை அருகே, மிதமான மழையின் காரணமாக ஒரு பெரிய மரம் வேரோடு சாய்ந்து விழுந்தது. இந்த மரம் அருகிலேயே நிறுத்தப்பட்டிருந்த ஒரு சொகுசு கார் மீது விழுந்து சேதத்தை ஏற்படுத்தியது. இந்தக் கார் நாட்டரசன்கோட்டை பேரூராட்சி திமுக உறுப்பினரான மோகனுக்கு சொந்தமானது. இந்த எதிர்பாராத சம்பவத்தில் எந்தவித உயிர்ச்சேதமும் ஏற்படவில்லை என்பது ஆறுதல் அளிக்கிறது. மரம் சாய்ந்ததால் ஏற்பட்ட போக்குவரத்து இடையூறை சீரமைக்கும் வகையில், சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், சாய்ந்த மரத்தை அகற்றி போக்குவரத்தை மீண்டும் இயல்பு நிலைக்கு கொண்டு வந்தனர். இதன் காரணமாக அப்பகுதியில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    1
    சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை–திருப்பத்தூர் சாலையில் உள்ள உடையார்சேர்வை அருகே, மிதமான மழையின் காரணமாக ஒரு பெரிய மரம் வேரோடு சாய்ந்து விழுந்தது. இந்த மரம் அருகிலேயே நிறுத்தப்பட்டிருந்த ஒரு சொகுசு கார் மீது விழுந்து சேதத்தை ஏற்படுத்தியது. இந்தக் கார் நாட்டரசன்கோட்டை பேரூராட்சி திமுக உறுப்பினரான மோகனுக்கு சொந்தமானது.

இந்த எதிர்பாராத சம்பவத்தில் எந்தவித உயிர்ச்சேதமும் ஏற்படவில்லை என்பது ஆறுதல் அளிக்கிறது. மரம் சாய்ந்ததால் ஏற்பட்ட போக்குவரத்து இடையூறை சீரமைக்கும் வகையில், சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், சாய்ந்த மரத்தை அகற்றி போக்குவரத்தை மீண்டும் இயல்பு நிலைக்கு கொண்டு வந்தனர். இதன் காரணமாக அப்பகுதியில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    user_ABDUL SALAM
    ABDUL SALAM
    Photographer சிங்கம்புணரி, சிவகங்கை, தமிழ்நாடு•
    3 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.