logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி நகரில் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான சாலை ஓரங்கள் முழுவதும் ஆக்கிரமிப்புகளால் மக்கள் மற்றும் வாகனப் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த ஆக்கிரமிப்புகளால் 60 அடி அகல சாலைகள் 20 அடியாக சுருங்கி, அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு உயிரிழப்புகளும், பலர் காயமடைவதும் தொடர்கிறது. பலமுறை கோரிக்கை மனுக்கள் அளித்தும் நெடுஞ்சாலைத் துறை நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியம் காட்டி வருவதாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர் குற்றம்சாட்டினர். ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றக் கோரியும், அலட்சியம் காட்டி வரும் அதிகாரிகளைக் கண்டித்தும், அக்கட்சியினர் கோவில்பட்டி நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தில் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்டத் தலைவர் ராஜகோபால் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் திரளான கட்சி நிர்வாகிகள் பங்கேற்று, பொறியாளர் ரத்தின பாபுவிடம் தேங்காய், பூ, பழங்களுடன் தங்கள் கோரிக்கை மனுவை வழங்கினர்.

2 hrs ago
user_கோ.ரெங்கசாமி
கோ.ரெங்கசாமி
கோவில்பட்டி, தூத்துக்குடி, தமிழ்நாடு•
2 hrs ago

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி நகரில் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான சாலை ஓரங்கள் முழுவதும் ஆக்கிரமிப்புகளால் மக்கள் மற்றும் வாகனப் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த ஆக்கிரமிப்புகளால் 60 அடி அகல சாலைகள் 20 அடியாக சுருங்கி, அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு உயிரிழப்புகளும், பலர் காயமடைவதும் தொடர்கிறது. பலமுறை கோரிக்கை மனுக்கள் அளித்தும் நெடுஞ்சாலைத் துறை நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியம் காட்டி வருவதாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர் குற்றம்சாட்டினர். ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றக் கோரியும், அலட்சியம் காட்டி வரும் அதிகாரிகளைக் கண்டித்தும், அக்கட்சியினர் கோவில்பட்டி நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தில் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்டத் தலைவர் ராஜகோபால் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் திரளான கட்சி நிர்வாகிகள் பங்கேற்று, பொறியாளர் ரத்தின பாபுவிடம் தேங்காய், பூ, பழங்களுடன் தங்கள் கோரிக்கை மனுவை வழங்கினர்.

More news from தமிழ்நாடு and nearby areas
  • தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு, தூத்துக்குடி புறநகர் மாவட்டம், புதிய பேருந்து நிலைய வளாகத்தில் திங்கட்கிழமை (22-6-2026) அன்னதானம் வழங்கப்பட்டது. மாநகர வடக்கு பகுதி செயலாளர் M. கணேஷ் தலைமையில், மாவட்ட மாணவர் அணி இணை அமைப்பாளர் சதீஷ் முன்னிலையில் இந்த நிகழ்வு நடைபெற்றது. அன்னதானத்தில் சிக்கன் பிரியாணி, அவித்த முட்டை மற்றும் தண்ணீர் பாட்டில்கள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்வில் பகுதி இணை செயலாளர் S. வேல் முருகன், பகுதி துணை செயலாளர் ராஜா, பகுதி துணை செயலாளர் மாரி, 14வது வார்டு செயலாளர் வாசன், பகுதி செயற்குழு உறுப்பினர்கள் S. அன்னபூரணி, E. அருணா தேவி, V. அன்னலட்சுமி மற்றும் மல்லிகா ஆகியோர் கலந்துகொண்டனர்.
    1
    தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு, தூத்துக்குடி புறநகர் மாவட்டம், புதிய பேருந்து நிலைய வளாகத்தில் திங்கட்கிழமை (22-6-2026) அன்னதானம் வழங்கப்பட்டது. மாநகர வடக்கு பகுதி செயலாளர் M. கணேஷ் தலைமையில், மாவட்ட மாணவர் அணி இணை அமைப்பாளர் சதீஷ் முன்னிலையில் இந்த நிகழ்வு நடைபெற்றது. அன்னதானத்தில் சிக்கன் பிரியாணி, அவித்த முட்டை மற்றும் தண்ணீர் பாட்டில்கள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்வில் பகுதி இணை செயலாளர் S. வேல் முருகன், பகுதி துணை செயலாளர் ராஜா, பகுதி துணை செயலாளர் மாரி, 14வது வார்டு செயலாளர் வாசன், பகுதி செயற்குழு உறுப்பினர்கள் S. அன்னபூரணி, E. அருணா தேவி, V. அன்னலட்சுமி மற்றும் மல்லிகா ஆகியோர் கலந்துகொண்டனர்.
    user_மா.சுடலைமணி
    மா.சுடலைமணி
    Local News Reporter தூத்துக்குடி, தூத்துக்குடி, தமிழ்நாடு•
    17 hrs ago
  • ஆண்டிபட்டி பேரூராட்சிக்குட்பட்ட குடியிருப்புப் பகுதிகளில் குப்பைகளைச் சேகரிக்கப் பயன்படுத்தப்படும் மின்சார வாகனங்களில் சில பழுதடைந்து சேதமடைந்துள்ளன. இந்தச் சேதமடைந்த வாகனங்களை பேரூராட்சி நிர்வாகத்தினர் சீரமைக்காமல், பேரூராட்சி வளாகத்திலேயே அப்படியே வைத்துள்ளனர். இதன் விளைவாக, வாகனங்கள் மேலும் சேதமடைந்து, உபயோகப்படுத்த முடியாத நிலைக்குத் தள்ளப்படுகின்றன. இதேபோல, பல்வேறு வாகனங்களும் மற்றும் கைகளில் தள்ளும் வண்டிகளும் கூடச் சேதமடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. எனவே, சேதமடைந்த இந்த வாகனங்களை உடனடியாகச் சீரமைத்து மீண்டும் பயன்பாட்டிற்குக் கொண்டுவர வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    1
    ஆண்டிபட்டி பேரூராட்சிக்குட்பட்ட குடியிருப்புப் பகுதிகளில் குப்பைகளைச் சேகரிக்கப் பயன்படுத்தப்படும் மின்சார வாகனங்களில் சில பழுதடைந்து சேதமடைந்துள்ளன. இந்தச் சேதமடைந்த வாகனங்களை பேரூராட்சி நிர்வாகத்தினர் சீரமைக்காமல், பேரூராட்சி வளாகத்திலேயே அப்படியே வைத்துள்ளனர். இதன் விளைவாக, வாகனங்கள் மேலும் சேதமடைந்து, உபயோகப்படுத்த முடியாத நிலைக்குத் தள்ளப்படுகின்றன. இதேபோல, பல்வேறு வாகனங்களும் மற்றும் கைகளில் தள்ளும் வண்டிகளும் கூடச் சேதமடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. எனவே, சேதமடைந்த இந்த வாகனங்களை உடனடியாகச் சீரமைத்து மீண்டும் பயன்பாட்டிற்குக் கொண்டுவர வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    user_Ramesh
    Ramesh
    Photographer ஆண்டிபட்டி, தேனி, தமிழ்நாடு•
    13 min ago
  • தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள தேவதானப்பட்டியில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளதா என்ற கேள்வியை எழுப்பும் வகையில் அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. தேவதானப்பட்டி பேரூராட்சிக்குட்பட்ட அரிசி கடை பேருந்து நிறுத்தப் பகுதிக்கு இரவு நேரத்தில் தேவாரத்தில் இருந்து கோயம்புத்தூர் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து வந்துள்ளது. அப்போது, மது மற்றும் கஞ்சா போதையில் மிதந்த அப்பகுதியைச் சேர்ந்த இருவர், நடுரோட்டில் பேருந்தை வழிமறித்து கற்களால் தாக்கியதில் பேருந்தின் முன்பக்கக் கண்ணாடி உடைந்து நொறுங்கியது. மேலும், பேருந்தில் இருந்த பயணிகளை நோக்கி ஆபாச வார்த்தைகளால் பேசி, அச்சுறுத்தும் வகையில் ரகலையில் ஈடுபட்டுள்ளனர். இந்தத் திடீர் தாக்குதலால் பேருந்தில் இருந்த பெண்கள், குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் அலறியடித்துக்கொண்டு பேருந்திலிருந்து இறங்கி ஓடினர். இதுகுறித்து தேவதானப்பட்டி காவல்துறையினருக்கு உடனடியாகத் தகவல் தெரிவிக்கப்பட்டும், அவர்கள் வழக்கம்போல் காலதாமதமாகவே சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர். பின்னர், ரகலையில் ஈடுபட்ட இருவரையும் பிடித்து விசாரணை நடத்தியதில், அவர்கள் தேவதானப்பட்டி தெற்கு தெருவைச் சேர்ந்த வசந்த் (என்ற செல்லப்பாண்டி) மற்றும் காமராஜ் என்பது தெரியவந்தது. அரசுப் பேருந்தின் கண்ணாடியை உடைத்த குற்றத்திற்காக அவர்கள் மீது தற்போது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தேவதானப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கஞ்சா மற்றும் சட்டவிரோத மது விற்பனை 24 மணி நேரமும் தங்கு தடையின்றி கள்ளச்சந்தையில் அமோகமாக நடைபெறுவதே இத்தகைய சம்பவங்களுக்குக் காரணம் என்று கூறப்படுகிறது. இரவு நேரங்களில் காவல்துறையினர் முறையான ரோந்துப் பணியில் ஈடுபடுவதில்லை என்றும், சமூக விரோதிகள் குறித்துப் புகார் அளித்தால் போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் மெத்தனப் போக்கோடு அலட்சியமாகச் செயல்படுவதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். காவல்துறையின் இந்தத் தொடர் அலட்சியத்தால், போதை ஆசாமிகளின் அராஜகம் அதிகரித்து, பொதுமக்களின் உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதாக மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். இனியாவது மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் விழித்துக்கொண்டு, தேவதானப்பட்டி பகுதியில் கஞ்சா மற்றும் மது விற்பனையை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்பதே ஒட்டுமொத்த மக்களின் கோரிக்கையாக உள்ளது.
    1
    தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள தேவதானப்பட்டியில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளதா என்ற கேள்வியை எழுப்பும் வகையில் அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. தேவதானப்பட்டி பேரூராட்சிக்குட்பட்ட அரிசி கடை பேருந்து நிறுத்தப் பகுதிக்கு இரவு நேரத்தில் தேவாரத்தில் இருந்து கோயம்புத்தூர் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து வந்துள்ளது. அப்போது, மது மற்றும் கஞ்சா போதையில் மிதந்த அப்பகுதியைச் சேர்ந்த இருவர், நடுரோட்டில் பேருந்தை வழிமறித்து கற்களால் தாக்கியதில் பேருந்தின் முன்பக்கக் கண்ணாடி உடைந்து நொறுங்கியது. மேலும், பேருந்தில் இருந்த பயணிகளை நோக்கி ஆபாச வார்த்தைகளால் பேசி, அச்சுறுத்தும் வகையில் ரகலையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்தத் திடீர் தாக்குதலால் பேருந்தில் இருந்த பெண்கள், குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் அலறியடித்துக்கொண்டு பேருந்திலிருந்து இறங்கி ஓடினர். இதுகுறித்து தேவதானப்பட்டி காவல்துறையினருக்கு உடனடியாகத் தகவல் தெரிவிக்கப்பட்டும், அவர்கள் வழக்கம்போல் காலதாமதமாகவே சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர். பின்னர், ரகலையில் ஈடுபட்ட இருவரையும் பிடித்து விசாரணை நடத்தியதில், அவர்கள் தேவதானப்பட்டி தெற்கு தெருவைச் சேர்ந்த வசந்த் (என்ற செல்லப்பாண்டி) மற்றும் காமராஜ் என்பது தெரியவந்தது. அரசுப் பேருந்தின் கண்ணாடியை உடைத்த குற்றத்திற்காக அவர்கள் மீது தற்போது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தேவதானப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கஞ்சா மற்றும் சட்டவிரோத மது விற்பனை 24 மணி நேரமும் தங்கு தடையின்றி கள்ளச்சந்தையில் அமோகமாக நடைபெறுவதே இத்தகைய சம்பவங்களுக்குக் காரணம் என்று கூறப்படுகிறது. இரவு நேரங்களில் காவல்துறையினர் முறையான ரோந்துப் பணியில் ஈடுபடுவதில்லை என்றும், சமூக விரோதிகள் குறித்துப் புகார் அளித்தால் போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் மெத்தனப் போக்கோடு அலட்சியமாகச் செயல்படுவதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். காவல்துறையின் இந்தத் தொடர் அலட்சியத்தால், போதை ஆசாமிகளின் அராஜகம் அதிகரித்து, பொதுமக்களின் உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதாக மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். இனியாவது மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் விழித்துக்கொண்டு, தேவதானப்பட்டி பகுதியில் கஞ்சா மற்றும் மது விற்பனையை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்பதே ஒட்டுமொத்த மக்களின் கோரிக்கையாக உள்ளது.
    user_VIGNESH
    VIGNESH
    Photographer ஆண்டிபட்டி, தேனி, தமிழ்நாடு•
    4 hrs ago
  • தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள தேவதானப்பட்டியில், போதை ஆசாமிகளின் தொடர் ரகளையால் அரசுப் பேருந்தின் கண்ணாடி உடைக்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம் சட்டம்-ஒழுங்கு முற்றிலுமாக சீர்குலைந்துள்ளதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. காவல்துறையின் மெத்தனப்போக்கால் பொதுமக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம், தேவதானப்பட்டி பேரூராட்சிக்குட்பட்ட அரிசிக்கடை பேருந்து நிறுத்தப் பகுதிக்கு, இரவு நேரத்தில் தேவாரத்தில் இருந்து கோயம்புத்தூர் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து வந்தபோது அரங்கேறியுள்ளது. அப்போது, மது மற்றும் கஞ்சா போதையில் மிதந்த அப்பகுதியைச் சேர்ந்த இருவர், நடுரோட்டில் பேருந்தை வழிமறித்துக் கற்களால் தாக்கியுள்ளனர். இதில் பேருந்தின் முன்பக்கக் கண்ணாடி உடைந்து நொறுங்கியது. மேலும், பேருந்தில் இருந்த பயணிகளை நோக்கி ஆபாச வார்த்தைகளால் பேசி, அச்சுறுத்தும் வகையில் பயங்கர ரகளையில் ஈடுபட்டுள்ளனர். இந்தத் திடீர் தாக்குதலால் பேருந்தில் இருந்த பெண்கள், குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் அலறியடித்துக்கொண்டு பேருந்திலிருந்து இறங்கி ஓடியுள்ளனர். இதுகுறித்து தேவதானப்பட்டி காவல்துறையினருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டும், அவர்கள் வழக்கம்போல் காலதாமதமாகவே சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர். பின்னர், ரகளையில் ஈடுபட்ட இருவரையும் பிடித்து விசாரணை நடத்தியதில், அவர்கள் தேவதானப்பட்டி தெற்குத் தெருவைச் சேர்ந்த வசந்த் (என்ற செல்லப்பாண்டி) மற்றும் காமராஜ் என்பது தெரியவந்துள்ளது. அரசுப் பேருந்துக் கண்ணாடியை உடைத்த குற்றத்திற்காக அவர்கள் மீது தற்போது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தேவதானப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கஞ்சா மற்றும் சட்டவிரோத மது விற்பனை 24 மணி நேரமும் தங்குதடையின்றி, கள்ளச்சந்தையில் அமோகமாக நடைபெற்று வருவதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இரவு நேரங்களில் காவல்துறையினர் முறையான ரோந்துப் பணியில் ஈடுபடுவதில்லை என்றும், சமூக விரோதிகள் குறித்துப் புகார் அளித்தால் போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் மெத்தனப்போக்கோடு அலட்சியமாகச் செயல்படுவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர். காவல்துறையின் இந்தத் தொடர் தூக்கத்தால், போதை ஆசாமிகளின் கொட்டம் அதிகரித்து, பொதுமக்களின் உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதாகவும் மக்கள் குறிப்பிட்டுள்ளனர். எனவே, மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் இனியாவது தூக்கம் கலைந்து, தேவதானப்பட்டி பகுதியில் கஞ்சா மற்றும் மது விற்பனையை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்பதே ஒட்டுமொத்த மக்களின் கோரிக்கையாக உள்ளது.
    1
    தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள தேவதானப்பட்டியில், போதை ஆசாமிகளின் தொடர் ரகளையால் அரசுப் பேருந்தின் கண்ணாடி உடைக்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம் சட்டம்-ஒழுங்கு முற்றிலுமாக சீர்குலைந்துள்ளதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. காவல்துறையின் மெத்தனப்போக்கால் பொதுமக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம், தேவதானப்பட்டி பேரூராட்சிக்குட்பட்ட அரிசிக்கடை பேருந்து நிறுத்தப் பகுதிக்கு, இரவு நேரத்தில் தேவாரத்தில் இருந்து கோயம்புத்தூர் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து வந்தபோது அரங்கேறியுள்ளது. அப்போது, மது மற்றும் கஞ்சா போதையில் மிதந்த அப்பகுதியைச் சேர்ந்த இருவர், நடுரோட்டில் பேருந்தை வழிமறித்துக் கற்களால் தாக்கியுள்ளனர். இதில் பேருந்தின் முன்பக்கக் கண்ணாடி உடைந்து நொறுங்கியது. மேலும், பேருந்தில் இருந்த பயணிகளை நோக்கி ஆபாச வார்த்தைகளால் பேசி, அச்சுறுத்தும் வகையில் பயங்கர ரகளையில் ஈடுபட்டுள்ளனர். இந்தத் திடீர் தாக்குதலால் பேருந்தில் இருந்த பெண்கள், குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் அலறியடித்துக்கொண்டு பேருந்திலிருந்து இறங்கி ஓடியுள்ளனர்.

இதுகுறித்து தேவதானப்பட்டி காவல்துறையினருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டும், அவர்கள் வழக்கம்போல் காலதாமதமாகவே சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர். பின்னர், ரகளையில் ஈடுபட்ட இருவரையும் பிடித்து விசாரணை நடத்தியதில், அவர்கள் தேவதானப்பட்டி தெற்குத் தெருவைச் சேர்ந்த வசந்த் (என்ற செல்லப்பாண்டி) மற்றும் காமராஜ் என்பது தெரியவந்துள்ளது. அரசுப் பேருந்துக் கண்ணாடியை உடைத்த குற்றத்திற்காக அவர்கள் மீது தற்போது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தேவதானப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கஞ்சா மற்றும் சட்டவிரோத மது விற்பனை 24 மணி நேரமும் தங்குதடையின்றி, கள்ளச்சந்தையில் அமோகமாக நடைபெற்று வருவதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இரவு நேரங்களில் காவல்துறையினர் முறையான ரோந்துப் பணியில் ஈடுபடுவதில்லை என்றும், சமூக விரோதிகள் குறித்துப் புகார் அளித்தால் போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் மெத்தனப்போக்கோடு அலட்சியமாகச் செயல்படுவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர். காவல்துறையின் இந்தத் தொடர் தூக்கத்தால், போதை ஆசாமிகளின் கொட்டம் அதிகரித்து, பொதுமக்களின் உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதாகவும் மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.

எனவே, மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் இனியாவது தூக்கம் கலைந்து, தேவதானப்பட்டி பகுதியில் கஞ்சா மற்றும் மது விற்பனையை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்பதே ஒட்டுமொத்த மக்களின் கோரிக்கையாக உள்ளது.
    user_Shakthi
    Shakthi
    பத்திரிகையாளர் பெரியகுளம், தேனி, தமிழ்நாடு•
    6 hrs ago
  • தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பசுவந்தனை சாலையில் காரும் சாலையோர ஓடைக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் பயணித்த இருவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். கோவில்பட்டி பசுவந்தனை சாலையைச் சேர்ந்த மகாராஜன், மார்க்கெட்டில் கடை நடத்தி வருபவர். இவர் மதுரையில் டைல்ஸ் வாங்குவதற்காக புதுக் கிராமத்தைச் சேர்ந்த தனது நண்பர் ஒருவருடன் காரில் இலுப்பையூரணி ரெயில்வே சுரங்க பாலம் வழியாக மெயின் ரோட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து, அருகில் இருந்த சாலையோர ஓடைக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் மகாராஜனும் அவரது நண்பரும் எவ்வித காயங்களுமின்றி உயிர் தப்பியது குறிப்பிடத்தக்கது. இந்த விபத்து குறித்து கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    1
    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பசுவந்தனை சாலையில் காரும் சாலையோர ஓடைக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் பயணித்த இருவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

கோவில்பட்டி பசுவந்தனை சாலையைச் சேர்ந்த மகாராஜன், மார்க்கெட்டில் கடை நடத்தி வருபவர். இவர் மதுரையில் டைல்ஸ் வாங்குவதற்காக புதுக் கிராமத்தைச் சேர்ந்த தனது நண்பர் ஒருவருடன் காரில் இலுப்பையூரணி ரெயில்வே சுரங்க பாலம் வழியாக மெயின் ரோட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து, அருகில் இருந்த சாலையோர ஓடைக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் மகாராஜனும் அவரது நண்பரும் எவ்வித காயங்களுமின்றி உயிர் தப்பியது குறிப்பிடத்தக்கது.

இந்த விபத்து குறித்து கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    user_கோ.ரெங்கசாமி
    கோ.ரெங்கசாமி
    கோவில்பட்டி, தூத்துக்குடி, தமிழ்நாடு•
    19 hrs ago
  • லடாக் பயணம் பலரது கனவாகவும், அங்கு பைக் ரைடு செல்வது பலருக்கு விருப்பமான ஒன்றாகவும் இருக்கும் நிலையில், கொல்கத்தாவைச் சேர்ந்த அபி பௌமிக் என்பவர் சைக்கிளிலேயே லடாக்கிற்குப் பயணம் மேற்கொண்டு பெரும் சாதனை படைத்துள்ளார். கடுமையான வானிலை மற்றும் உயரமான மலைப் பகுதிகளைக் கடந்து, அவர் தொடர்ச்சியாக 119 நாட்கள் சைக்கிளில் பயணம் செய்து லடாக்கை அடைந்துள்ளார். இவரது இந்த அசாத்திய சாகசத்தைப் பல பைக் ரைடர்கள் பாராட்டி வரும் நிலையில், இதுகுறித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
    1
    லடாக் பயணம் பலரது கனவாகவும், அங்கு பைக் ரைடு செல்வது பலருக்கு விருப்பமான ஒன்றாகவும் இருக்கும் நிலையில், கொல்கத்தாவைச் சேர்ந்த அபி பௌமிக் என்பவர் சைக்கிளிலேயே லடாக்கிற்குப் பயணம் மேற்கொண்டு பெரும் சாதனை படைத்துள்ளார். கடுமையான வானிலை மற்றும் உயரமான மலைப் பகுதிகளைக் கடந்து, அவர் தொடர்ச்சியாக 119 நாட்கள் சைக்கிளில் பயணம் செய்து லடாக்கை அடைந்துள்ளார். இவரது இந்த அசாத்திய சாகசத்தைப் பல பைக் ரைடர்கள் பாராட்டி வரும் நிலையில், இதுகுறித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
    user_பொ.புஷ்பா
    பொ.புஷ்பா
    Tailor தூத்துக்குடி, தூத்துக்குடி, தமிழ்நாடு•
    7 hrs ago
  • தமிழக முதல்வர் மற்றும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவரான நடிகர் விஜயின் 52வது பிறந்தநாள் தமிழ்நாடு முழுவதும் தவெக கட்சியினரால் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் தவெக சார்பில் ஆண்டிபட்டி அறநிலையத்துறை ஆண்டிபட்டி பேரூராட்சி அலுவலகத்தில் ஒரு விழா ஏற்பாடு செய்யப்பட்டது. ஆண்டிபட்டி பேரூராட்சித் தலைவரின் கணவர் பொன்னுதுரை தலைமையில் கூடிய தவெகவினர், நடிகர் முதல்வர் ஜோசப் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவித்துக்கொண்டனர். ஆண்டிப்பட்டி பேரூராட்சிப் பகுதியில் பணிபுரியும் நூற்றுக்கும் மேற்பட்ட ஆண், பெண் துப்புரவுத் தொழிலாளர்களுக்கு இலவசமாக வேட்டி சேலைகள் வழங்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து, பேரூராட்சி அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலர்கள் மற்றும் துப்புரவுத் தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்துத் தொழிலாளர்களுக்கும், நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு அசைவ உணவு விருந்து வழங்கப்பட்டது. மேலும், தயிர்சாதம், லெமண் சாதம், தக்காளி சாதம் உள்ளிட்ட உணவுகளும் விருந்தில் பரிமாறப்பட்டன. முதல்வர் ஜோசப் விஜய்க்கு 52வது பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ஆண்டிபட்டி நகர, ஒன்றியப் பகுதி தவெக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
    1
    தமிழக முதல்வர் மற்றும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவரான நடிகர் விஜயின் 52வது பிறந்தநாள் தமிழ்நாடு முழுவதும் தவெக கட்சியினரால் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் தவெக சார்பில் ஆண்டிபட்டி அறநிலையத்துறை ஆண்டிபட்டி பேரூராட்சி அலுவலகத்தில் ஒரு விழா ஏற்பாடு செய்யப்பட்டது.

ஆண்டிபட்டி பேரூராட்சித் தலைவரின் கணவர் பொன்னுதுரை தலைமையில் கூடிய தவெகவினர், நடிகர் முதல்வர் ஜோசப் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவித்துக்கொண்டனர். ஆண்டிப்பட்டி பேரூராட்சிப் பகுதியில் பணிபுரியும் நூற்றுக்கும் மேற்பட்ட ஆண், பெண் துப்புரவுத் தொழிலாளர்களுக்கு இலவசமாக வேட்டி சேலைகள் வழங்கப்பட்டன.

இதனைத் தொடர்ந்து, பேரூராட்சி அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலர்கள் மற்றும் துப்புரவுத் தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்துத் தொழிலாளர்களுக்கும், நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு அசைவ உணவு விருந்து வழங்கப்பட்டது. மேலும், தயிர்சாதம், லெமண் சாதம், தக்காளி சாதம் உள்ளிட்ட உணவுகளும் விருந்தில் பரிமாறப்பட்டன. முதல்வர் ஜோசப் விஜய்க்கு 52வது பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ஆண்டிபட்டி நகர, ஒன்றியப் பகுதி தவெக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
    user_VIGNESH
    VIGNESH
    Photographer ஆண்டிபட்டி, தேனி, தமிழ்நாடு•
    10 hrs ago
  • மத்திய அமெரிக்காவில் உள்ள குவாத்தமாலாவில் ஃபுகேகோ எரிமலை திடீரென வெடித்துச் சிதறியது. இந்த எதிர்பாராத வெடிப்பால், எரிமலையிலிருந்து பாறைகள் துப்பாக்கிக் குண்டுகளைப் போல மக்களை நோக்கி சீறிப் பாய்ந்தன. அங்கு வந்திருந்த சுற்றுலாப் பயணிகள் அலறியடித்துக் கொண்டு உயிரைக் காப்பாற்ற ஓட்டம் பிடித்தனர். இந்தச் சம்பவத்தில் சிலரது உடைகள் எரிந்து ஓட்டை விழுந்த நிலையில், அவர்கள் பெரும் அச்சத்துடன் பதறியடித்து ஓடும் காட்சிகள் அடங்கிய வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. குறிப்பிடத்தக்க வகையில், இந்த ஃபுகேகோ எரிமலை இதற்கு முன்பு கடந்த 2018 ஆம் ஆண்டில் வெடித்தபோது, நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
    1
    மத்திய அமெரிக்காவில் உள்ள குவாத்தமாலாவில் ஃபுகேகோ எரிமலை திடீரென வெடித்துச் சிதறியது. இந்த எதிர்பாராத வெடிப்பால், எரிமலையிலிருந்து பாறைகள் துப்பாக்கிக் குண்டுகளைப் போல மக்களை நோக்கி சீறிப் பாய்ந்தன. அங்கு வந்திருந்த சுற்றுலாப் பயணிகள் அலறியடித்துக் கொண்டு உயிரைக் காப்பாற்ற ஓட்டம் பிடித்தனர். இந்தச் சம்பவத்தில் சிலரது உடைகள் எரிந்து ஓட்டை விழுந்த நிலையில், அவர்கள் பெரும் அச்சத்துடன் பதறியடித்து ஓடும் காட்சிகள் அடங்கிய வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

குறிப்பிடத்தக்க வகையில், இந்த ஃபுகேகோ எரிமலை இதற்கு முன்பு கடந்த 2018 ஆம் ஆண்டில் வெடித்தபோது, நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
    user_பொ.புஷ்பா
    பொ.புஷ்பா
    Tailor தூத்துக்குடி, தூத்துக்குடி, தமிழ்நாடு•
    6 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.