logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

கன்னியாகுமரி மாவட்டத்தின் கோட்டாறு பைத்துல்மால் நகர் எதிர்புறம், மாலிக்தினார் பள்ளிக்கூடம் அமைந்துள்ள பறக்கை சாலையில், சாலை புதுப்பிப்பு பணிகளின்போது அகற்றப்பட்ட இரண்டு வேகத்தடைகள் பல மாதங்களாகியும் மீண்டும் அமைக்கப்படாததால் அப்பகுதி மக்களிடையே பெரும் கவலை நிலவுகிறது. இந்த விவகாரம் குறித்து கடந்த மாதமே தினத்தந்தியின் “புகார் பெட்டி” பகுதியில் பொதுமக்கள் சார்பில் செய்தி வெளியிடப்பட்ட போதிலும், இதுவரை அந்த இடத்தில் வேகத்தடைகள் மீண்டும் அமைக்கப்படவில்லை. தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், தினந்தோறும் நூற்றுக்கணக்கான மாணவ-மாணவிகள் இந்த சாலையைப் கடந்து பள்ளிக்குச் சென்று வருகின்றனர். இவர்களுடன் முதியவர்கள், பெண்கள் மற்றும் பொதுமக்களும் இச்சாலையை தினசரி பயன்படுத்தி வருகின்றனர். வேகத்தடைகள் இல்லாததால் வாகனங்கள் அதிக வேகத்தில் செல்வதாகவும், இதனால் விபத்து அபாயம் தொடர்ந்து நிலவுவதாகவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். ஏற்கனவே இப்பகுதியில் விபத்துகள் நிகழ்ந்துள்ள நிலையில், பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பு குறித்து அப்பகுதி மக்களிடையே அச்சமும் கவலையும் அதிகரித்துள்ளது. எனவே, பள்ளி மாணவர்களின் பாதுகாப்பையும் பொதுமக்களின் நலனையும் கருத்தில் கொண்டு, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து, அந்த இடத்தில் தேவையான இரண்டு வேகத்தடைகளையும் அமைத்து, விபத்துகளைத் தடுக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இது தனிப்பட்ட கோரிக்கை அல்ல என்றும், அப்பகுதி மக்கள், பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பிற்கான நியாயமான பொதுநல வேண்டுகோள் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. நல்ல தீர்வு விரைவில் கிடைக்கும் என்று மாவட்ட நிர்வாகத்தை நம்புவதாகவும், இல்லையெனில் அப்பகுதி மக்கள் சாலை மறியலுக்குத் தயாராகி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

18 hrs ago
user_KS. RAFEEQ
KS. RAFEEQ
அகஸ்தீஸ்வரம், கன்னியாகுமரி, தமிழ்நாடு•
18 hrs ago
f01f99df-6c9d-4f12-ba30-060f58f57f56

கன்னியாகுமரி மாவட்டத்தின் கோட்டாறு பைத்துல்மால் நகர் எதிர்புறம், மாலிக்தினார் பள்ளிக்கூடம் அமைந்துள்ள பறக்கை சாலையில், சாலை புதுப்பிப்பு பணிகளின்போது அகற்றப்பட்ட இரண்டு வேகத்தடைகள் பல மாதங்களாகியும் மீண்டும் அமைக்கப்படாததால் அப்பகுதி மக்களிடையே பெரும் கவலை நிலவுகிறது. இந்த விவகாரம் குறித்து கடந்த மாதமே தினத்தந்தியின் “புகார் பெட்டி” பகுதியில் பொதுமக்கள் சார்பில் செய்தி வெளியிடப்பட்ட போதிலும், இதுவரை அந்த இடத்தில் வேகத்தடைகள் மீண்டும் அமைக்கப்படவில்லை. தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், தினந்தோறும் நூற்றுக்கணக்கான மாணவ-மாணவிகள் இந்த சாலையைப் கடந்து பள்ளிக்குச் சென்று வருகின்றனர். இவர்களுடன் முதியவர்கள், பெண்கள் மற்றும் பொதுமக்களும் இச்சாலையை தினசரி பயன்படுத்தி வருகின்றனர். வேகத்தடைகள் இல்லாததால் வாகனங்கள் அதிக வேகத்தில் செல்வதாகவும், இதனால் விபத்து அபாயம் தொடர்ந்து நிலவுவதாகவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். ஏற்கனவே இப்பகுதியில் விபத்துகள் நிகழ்ந்துள்ள நிலையில், பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பு குறித்து அப்பகுதி மக்களிடையே அச்சமும் கவலையும் அதிகரித்துள்ளது. எனவே, பள்ளி மாணவர்களின் பாதுகாப்பையும் பொதுமக்களின் நலனையும் கருத்தில் கொண்டு, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து, அந்த இடத்தில் தேவையான இரண்டு வேகத்தடைகளையும் அமைத்து, விபத்துகளைத் தடுக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இது தனிப்பட்ட கோரிக்கை அல்ல என்றும், அப்பகுதி மக்கள், பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பிற்கான நியாயமான பொதுநல வேண்டுகோள் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. நல்ல தீர்வு விரைவில் கிடைக்கும் என்று மாவட்ட நிர்வாகத்தை நம்புவதாகவும், இல்லையெனில் அப்பகுதி மக்கள் சாலை மறியலுக்குத் தயாராகி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More news from தமிழ்நாடு and nearby areas
  • தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அடுத்தடுத்து இரண்டு வீடுகளில் பூட்டை உடைத்து திருட்டு சம்பவங்கள் நடந்துள்ளன. வடக்கு திட்டங்குளத்தைச் சேர்ந்த கோமதிநாயகம் தனது குடும்பத்துடன் திருச்சி ஸ்ரீரங்கம் சென்றுவிட்டு இரவு வீடு திரும்பியபோது, வீட்டின் கதவுகள் திறந்திருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். அவர் உடனடியாக கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் நடத்திய விசாரணையில், வீட்டின் கதவை உடைத்து அங்கிருந்த ₹1 லட்சம் பணம் திருட்டு போனது தெரியவந்தது. இதேபோன்று, கோவில்பட்டி கணேஷ் நகர் நான்காவது தெருவைச் சேர்ந்த ஜான்கோராணியின் வீட்டிலும் திருட்டு நடந்துள்ளது. ஜான்கோராணி சென்னையில் திருமண நிகழ்ச்சிக்கு சென்றிருந்த நிலையில், அவரது வீட்டுப் பணிப்பெண் ராஜேஸ்வரி செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற வந்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். ராஜேஸ்வரி உடனடியாக வீட்டு உரிமையாளர் மற்றும் காவல் துறைக்கு தகவல் கொடுத்தார். கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தியதில், வீட்டிலிருந்த 41 இன்ச் டிவி திருடு போனது தெரியவந்தது. இந்த இரண்டு சம்பவங்கள் குறித்தும் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.
    1
    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அடுத்தடுத்து இரண்டு வீடுகளில் பூட்டை உடைத்து திருட்டு சம்பவங்கள் நடந்துள்ளன. வடக்கு திட்டங்குளத்தைச் சேர்ந்த கோமதிநாயகம் தனது குடும்பத்துடன் திருச்சி ஸ்ரீரங்கம் சென்றுவிட்டு இரவு வீடு திரும்பியபோது, வீட்டின் கதவுகள் திறந்திருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். அவர் உடனடியாக கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் நடத்திய விசாரணையில், வீட்டின் கதவை உடைத்து அங்கிருந்த ₹1 லட்சம் பணம் திருட்டு போனது தெரியவந்தது.

இதேபோன்று, கோவில்பட்டி கணேஷ் நகர் நான்காவது தெருவைச் சேர்ந்த ஜான்கோராணியின் வீட்டிலும் திருட்டு நடந்துள்ளது. ஜான்கோராணி சென்னையில் திருமண நிகழ்ச்சிக்கு சென்றிருந்த நிலையில், அவரது வீட்டுப் பணிப்பெண் ராஜேஸ்வரி செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற வந்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். ராஜேஸ்வரி உடனடியாக வீட்டு உரிமையாளர் மற்றும் காவல் துறைக்கு தகவல் கொடுத்தார். கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தியதில், வீட்டிலிருந்த 41 இன்ச் டிவி திருடு போனது தெரியவந்தது. இந்த இரண்டு சம்பவங்கள் குறித்தும் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.
    user_கோ.ரெங்கசாமி
    கோ.ரெங்கசாமி
    கோவில்பட்டி, தூத்துக்குடி, தமிழ்நாடு•
    20 hrs ago
  • தூத்துக்குடி மாவட்டம் எட்டையாபுரம் அருகேயுள்ள ராசா பட்டி கிராமத்தில் செயல்பட்டு வந்த பாலாஜி பட்டாசு ஆலையில் இன்று மாலை வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சுமார் 15க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்ததாகவும், ஒருவர் உயிரிழந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. படுகாயம் அடைந்தவர்கள் பட்டாசு ஆலைக்குச் சொந்தமான வாகனங்கள் மற்றும் ஆம்புலன்ஸ்கள் மூலம் விருதுநகர் மாவட்டத்திலுள்ள சாத்தூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டுவரப்பட்டனர். சாத்தூர் அரசு மருத்துவமனையின் விபத்து மற்றும் தீவிர சிகிச்சை பிரிவுகளில் அனுமதிக்கப்பட்ட சுமார் 15க்கும் மேற்பட்டோருக்கு முதலுதவி மற்றும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. காயமடைந்தவர்களில் பெரும்பாலானோர் நத்தத்துப்பட்டி, மாசார்பட்டி, எம். நாகலாபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர்; இவர்களில் அதிகமான பெண்கள் அடங்குவர். இந்த நிலையில், உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
    1
    தூத்துக்குடி மாவட்டம் எட்டையாபுரம் அருகேயுள்ள ராசா பட்டி கிராமத்தில் செயல்பட்டு வந்த பாலாஜி பட்டாசு ஆலையில் இன்று மாலை வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சுமார் 15க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்ததாகவும், ஒருவர் உயிரிழந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

படுகாயம் அடைந்தவர்கள் பட்டாசு ஆலைக்குச் சொந்தமான வாகனங்கள் மற்றும் ஆம்புலன்ஸ்கள் மூலம் விருதுநகர் மாவட்டத்திலுள்ள சாத்தூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டுவரப்பட்டனர். சாத்தூர் அரசு மருத்துவமனையின் விபத்து மற்றும் தீவிர சிகிச்சை பிரிவுகளில் அனுமதிக்கப்பட்ட சுமார் 15க்கும் மேற்பட்டோருக்கு முதலுதவி மற்றும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. காயமடைந்தவர்களில் பெரும்பாலானோர் நத்தத்துப்பட்டி, மாசார்பட்டி, எம். நாகலாபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர்; இவர்களில் அதிகமான பெண்கள் அடங்குவர்.

இந்த நிலையில், உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
    user_K. Arun pandian
    K. Arun pandian
    Photographer Sattur, Virudhunagar•
    10 hrs ago
  • தமிழக முதல்வர் விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, நேற்று (ஜூன் 19) இரவு மதுரை திருப்பரங்குன்றத்தில் உள்ள அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் சிறப்பு தங்கத்தேர் வழிபாடு நடைபெற்றது. தவெக நிர்வாகிகள் சசி முருகன் மற்றும் ரேஷன் கடை கார்த்திக் ஆகியோரின் ஏற்பாட்டில் நடந்த இந்த வழிபாட்டில், ஏராளமான ரசிகர்கள் கலந்து கொண்டு தங்கத் தேரினை இழுத்து முருகப்பெருமானுக்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர்.
    1
    தமிழக முதல்வர் விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, நேற்று (ஜூன் 19) இரவு மதுரை திருப்பரங்குன்றத்தில் உள்ள அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் சிறப்பு தங்கத்தேர் வழிபாடு நடைபெற்றது. தவெக நிர்வாகிகள் சசி முருகன் மற்றும் ரேஷன் கடை கார்த்திக் ஆகியோரின் ஏற்பாட்டில் நடந்த இந்த வழிபாட்டில், ஏராளமான ரசிகர்கள் கலந்து கொண்டு தங்கத் தேரினை இழுத்து முருகப்பெருமானுக்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர்.
    user_சு.இரத்தினவேல்
    சு.இரத்தினவேல்
    Madurai South, Tamil Nadu•
    23 hrs ago
  • தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே சண்முகசுந்தரபுரம் கிராமத்தில், தேனி - மதுரை நெடுஞ்சாலை ஓரம் வளர்ந்துள்ள சீமை கருவேல மரங்களை அகற்றும் தூய்மைப் பணியை மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் (மதிமுக) மேற்கொண்டது. நிலத்தடி நீரையும், இயற்கையையும் பாதுகாக்கும் நோக்கத்துடன் நடைபெற்ற இந்த பணியில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நேரில் கலந்து கொண்டு பணிகளைத் தொடங்கி வைத்தார். அவர் நவீன இயந்திரத்தைக் கொண்டும், ஜேசிபி வாகனத்தையும் நேர்த்தியாக இயக்கி புதர் மண்டிப் போயிருந்த கருவேல மரங்களை வேரோடு அகற்றினார். வைகோவின் இந்த சுறுசுறுப்பான செயல்பாட்டைக் கண்டு அங்கிருந்த கட்சியினரும், பொதுமக்களும் உற்சாகமடைந்தனர். மதிமுக முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் தமிழக வெற்றிக் கழகம் (தவெக), கம்யூனிஸ்ட் உள்ளிட்ட தோழமைக் கட்சிகளின் நிர்வாகிகள், பொதுமக்கள் எனப் பலர் இந்தப் பணியில் திரளாகக் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த வைகோ, தமிழக சட்டசபையில் எந்தத் தீர்மானம் போட்டாலும், அதற்கு முட்டுக்கட்டை போட்டு தமிழகத்துக்குக் கேடு விளைவிப்பதே மத்திய அரசுதான் என்று குற்றம் சாட்டினார். தமிழ்நாட்டின் வாழ்வாதாரங்களைப் பாதுகாப்பதற்கு காவிரி மண்டலத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டம் வரக்கூடாது என்பதுடன், மேகதாது அணையை கட்ட முயலும் கர்நாடக அரசைக் கண்டித்து கடந்த 2012ஆம் ஆண்டிலேயே முதன்முதலில் போராட்டம் நடத்தியது மதிமுகதான் என்றும் அவர் குறிப்பிட்டார். தற்போது மேகதாது அணைக்கு எதிராக சட்டசபையில் ஒரு நல்ல தீர்மானத்தை அனைத்து கட்சிகளும் ஒருசேர இணைந்து, நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள் கொண்டு வந்திருப்பதாக வைகோ தெரிவித்தார். ஆனால், கர்நாடக அரசு மட்டும் தனித்து இதைச் செய்யவில்லை என்றும், இதற்கு முழுக்க முழுக்கப் பின்புலமாக இருந்து இயக்குவது நரேந்திர மோடி தலைமையிலான மத்திய சர்க்கார்தான் என்றும் அவர் எச்சரித்தார். மேலும், கடந்த 2014 டிசம்பர் 7, 8 ஆகிய தேதிகளில் டெல்லியில் நடந்த ஒரு ரகசியக் கூட்டத்தில், கர்நாடக மாநில அமைச்சர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள் கலந்து கொண்டதாகவும், அப்போது 'நீங்கள் மேகதாது அணையை கட்டுங்கள், நாங்கள் தடுக்க மாட்டோம், நீங்கள் கட்டிக்கொண்டே இருங்கள்' என்று மத்திய சர்க்கார் பச்சைக்கொடி காட்டியதாகவும் வைகோ கூறினார். இந்தச் சதித்திட்டத்தை 'தி இந்து' ஆங்கில நாளிதழ்தான் வெளி உலகத்திற்கு அம்பலப்படுத்தியது என்றும் அவர் அப்போது தெரிவித்தார்.
    2
    தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே சண்முகசுந்தரபுரம் கிராமத்தில், தேனி - மதுரை நெடுஞ்சாலை ஓரம் வளர்ந்துள்ள சீமை கருவேல மரங்களை அகற்றும் தூய்மைப் பணியை மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் (மதிமுக) மேற்கொண்டது. நிலத்தடி நீரையும், இயற்கையையும் பாதுகாக்கும் நோக்கத்துடன் நடைபெற்ற இந்த பணியில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நேரில் கலந்து கொண்டு பணிகளைத் தொடங்கி வைத்தார். அவர் நவீன இயந்திரத்தைக் கொண்டும், ஜேசிபி வாகனத்தையும் நேர்த்தியாக இயக்கி புதர் மண்டிப் போயிருந்த கருவேல மரங்களை வேரோடு அகற்றினார். வைகோவின் இந்த சுறுசுறுப்பான செயல்பாட்டைக் கண்டு அங்கிருந்த கட்சியினரும், பொதுமக்களும் உற்சாகமடைந்தனர். மதிமுக முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் தமிழக வெற்றிக் கழகம் (தவெக), கம்யூனிஸ்ட் உள்ளிட்ட தோழமைக் கட்சிகளின் நிர்வாகிகள், பொதுமக்கள் எனப் பலர் இந்தப் பணியில் திரளாகக் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த வைகோ, தமிழக சட்டசபையில் எந்தத் தீர்மானம் போட்டாலும், அதற்கு முட்டுக்கட்டை போட்டு தமிழகத்துக்குக் கேடு விளைவிப்பதே மத்திய அரசுதான் என்று குற்றம் சாட்டினார். தமிழ்நாட்டின் வாழ்வாதாரங்களைப் பாதுகாப்பதற்கு காவிரி மண்டலத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டம் வரக்கூடாது என்பதுடன், மேகதாது அணையை கட்ட முயலும் கர்நாடக அரசைக் கண்டித்து கடந்த 2012ஆம் ஆண்டிலேயே முதன்முதலில் போராட்டம் நடத்தியது மதிமுகதான் என்றும் அவர் குறிப்பிட்டார்.

தற்போது மேகதாது அணைக்கு எதிராக சட்டசபையில் ஒரு நல்ல தீர்மானத்தை அனைத்து கட்சிகளும் ஒருசேர இணைந்து, நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள் கொண்டு வந்திருப்பதாக வைகோ தெரிவித்தார். ஆனால், கர்நாடக அரசு மட்டும் தனித்து இதைச் செய்யவில்லை என்றும், இதற்கு முழுக்க முழுக்கப் பின்புலமாக இருந்து இயக்குவது நரேந்திர மோடி தலைமையிலான மத்திய சர்க்கார்தான் என்றும் அவர் எச்சரித்தார். மேலும், கடந்த 2014 டிசம்பர் 7, 8 ஆகிய தேதிகளில் டெல்லியில் நடந்த ஒரு ரகசியக் கூட்டத்தில், கர்நாடக மாநில அமைச்சர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள் கலந்து கொண்டதாகவும், அப்போது 'நீங்கள் மேகதாது அணையை கட்டுங்கள், நாங்கள் தடுக்க மாட்டோம், நீங்கள் கட்டிக்கொண்டே இருங்கள்' என்று மத்திய சர்க்கார் பச்சைக்கொடி காட்டியதாகவும் வைகோ கூறினார். இந்தச் சதித்திட்டத்தை 'தி இந்து' ஆங்கில நாளிதழ்தான் வெளி உலகத்திற்கு அம்பலப்படுத்தியது என்றும் அவர் அப்போது தெரிவித்தார்.
    user_VIGNESH
    VIGNESH
    Photographer ஆண்டிபட்டி, தேனி, தமிழ்நாடு•
    12 hrs ago
  • தேனி மாவட்டத்தில் ஒரு புதிய தகவல் இணையதளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
    1
    தேனி மாவட்டத்தில் ஒரு புதிய தகவல் இணையதளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
    user_CPS
    CPS
    Court reporter ஆண்டிபட்டி, தேனி, தமிழ்நாடு•
    21 hrs ago
  • தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரை பேரூராட்சிக்கு உட்பட்ட பாரதி நகர் பகுதிக்கு குடிநீர் கொண்டு செல்லும் முக்கிய குழாயில் திடீர் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, பல ஆயிரம் லிட்டர் கணக்கில் குடிநீர் உந்துதலுடன் வெளியேறி, பாரதி நகரில் உள்ள தேனி-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் ஆறாக ஓடி வீணாகி வருகிறது. ஏற்கனவே, தென்கரை பேரூராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. பொதுமக்கள் அன்றாடத் தேவைகளுக்கே தண்ணீரின்றி சிரமப்படும் இச்சூழலில், குடிநீர் இவ்வாறு வீணாவது அப்பகுதி மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், சாலையில் தேங்கும் இந்த குடிநீரால் கொசுக்கள் உற்பத்தியாகி, அப்பகுதியில் தொற்றுநோய்கள் பரவும் அபாயமும் உருவாகியுள்ளது. எனவே, பேரூராட்சி நிர்வாக அதிகாரிகள் உடனடியாகப் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து, உடைப்பு ஏற்பட்ட குடிநீர் குழாயைச் சரிசெய்து, தடையின்றி குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் முதன்மையான கோரிக்கையாக உள்ளது.
    1
    தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரை பேரூராட்சிக்கு உட்பட்ட பாரதி நகர் பகுதிக்கு குடிநீர் கொண்டு செல்லும் முக்கிய குழாயில் திடீர் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, பல ஆயிரம் லிட்டர் கணக்கில் குடிநீர் உந்துதலுடன் வெளியேறி, பாரதி நகரில் உள்ள தேனி-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் ஆறாக ஓடி வீணாகி வருகிறது.

ஏற்கனவே, தென்கரை பேரூராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. பொதுமக்கள் அன்றாடத் தேவைகளுக்கே தண்ணீரின்றி சிரமப்படும் இச்சூழலில், குடிநீர் இவ்வாறு வீணாவது அப்பகுதி மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், சாலையில் தேங்கும் இந்த குடிநீரால் கொசுக்கள் உற்பத்தியாகி, அப்பகுதியில் தொற்றுநோய்கள் பரவும் அபாயமும் உருவாகியுள்ளது. எனவே, பேரூராட்சி நிர்வாக அதிகாரிகள் உடனடியாகப் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து, உடைப்பு ஏற்பட்ட குடிநீர் குழாயைச் சரிசெய்து, தடையின்றி குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் முதன்மையான கோரிக்கையாக உள்ளது.
    user_Shakthi
    Shakthi
    பத்திரிகையாளர் பெரியகுளம், தேனி, தமிழ்நாடு•
    15 hrs ago
  • தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஸ்ரீ செண்பகவல்லி அம்மன் கோவிலில் மாணிக்கவாசகரின் குருபூஜையையொட்டி சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். சைவ சமயக் குரவர்கள் நால்வருள் ஒருவரான மாணிக்கவாசகரின் குருபூஜை, ஆண்டுதோறும் ஆனி மாத மக நட்சத்திரத்தன்று அனைத்துச் சிவாலயங்களிலும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக, கோவில்பட்டியில் எழுந்தருளியுள்ள மாணிக்கவாசகருக்கு பால், தயிர், சந்தனம், தேன் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து பல்வேறு மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மாணிக்கவாசகருக்கு சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது. இந்த வழிபாடுகளில் பக்தர்கள் பலர் கலந்துகொண்டு மாணிக்கவாசகரை வழிபட்டனர்.
    1
    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஸ்ரீ செண்பகவல்லி அம்மன் கோவிலில் மாணிக்கவாசகரின் குருபூஜையையொட்டி சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

சைவ சமயக் குரவர்கள் நால்வருள் ஒருவரான மாணிக்கவாசகரின் குருபூஜை, ஆண்டுதோறும் ஆனி மாத மக நட்சத்திரத்தன்று அனைத்துச் சிவாலயங்களிலும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக, கோவில்பட்டியில் எழுந்தருளியுள்ள மாணிக்கவாசகருக்கு பால், தயிர், சந்தனம், தேன் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து பல்வேறு மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மாணிக்கவாசகருக்கு சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது.

இந்த வழிபாடுகளில் பக்தர்கள் பலர் கலந்துகொண்டு மாணிக்கவாசகரை வழிபட்டனர்.
    user_கோ.ரெங்கசாமி
    கோ.ரெங்கசாமி
    கோவில்பட்டி, தூத்துக்குடி, தமிழ்நாடு•
    20 hrs ago
  • தேனி மாவட்டம், தேனி தமிழக வெற்றி கழகம் சார்பாக, தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜயின் பிறந்த நாளை முன்னிட்டு, நகராட்சி அலுவலகம் எதிரே ஏழை எளிய பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த அன்னதான நிகழ்ச்சியை தேனி வடக்கு மாவட்ட செயலாளர் பிரகாஷ் கலந்துகொண்டு, பொதுமக்களுக்கு அன்னதானத்தை வழங்கி தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
    1
    தேனி மாவட்டம், தேனி தமிழக வெற்றி கழகம் சார்பாக, தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜயின் பிறந்த நாளை முன்னிட்டு, நகராட்சி அலுவலகம் எதிரே ஏழை எளிய பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த அன்னதான நிகழ்ச்சியை தேனி வடக்கு மாவட்ட செயலாளர் பிரகாஷ் கலந்துகொண்டு, பொதுமக்களுக்கு அன்னதானத்தை வழங்கி தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
    user_Shakthi
    Shakthi
    பத்திரிகையாளர் பெரியகுளம், தேனி, தமிழ்நாடு•
    15 hrs ago
  • திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ், சித்தையன் கோட்டை பேரூராட்சிக்குட்பட்ட நரசிங்கபுரத்தில் ரூபாய் 35 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். சச்சிதானந்தம் மற்றும் திமுக முன்னாள் அமைச்சரும் ஆத்தூர் சட்டமன்ற உறுப்பினருமாகிய ஐ. பெரியசாமி ஆகியோர் இந்த நீர்த்தேக்க தொட்டியை திறந்து வைத்தனர். இந்நிகழ்ச்சியில், பேரூராட்சி தலைவர் போதும் பொண்ணு முரளி, வார்டு உறுப்பினர்கள், பேரூராட்சி செயல் அலுவலர் ஜெயமாலு மற்றும் அலுவலக பணியாளர்கள், திமுக மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த மாவட்ட, ஒன்றிய, கிளை பொறுப்பாளர்கள் மற்றும் தொண்டர்கள், அரசு ஒப்பந்ததாரர் மற்றும் ஏராளமான பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
    1
    திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ், சித்தையன் கோட்டை பேரூராட்சிக்குட்பட்ட நரசிங்கபுரத்தில் ரூபாய் 35 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். சச்சிதானந்தம் மற்றும் திமுக முன்னாள் அமைச்சரும் ஆத்தூர் சட்டமன்ற உறுப்பினருமாகிய ஐ. பெரியசாமி ஆகியோர் இந்த நீர்த்தேக்க தொட்டியை திறந்து வைத்தனர்.

இந்நிகழ்ச்சியில், பேரூராட்சி தலைவர் போதும் பொண்ணு முரளி, வார்டு உறுப்பினர்கள், பேரூராட்சி செயல் அலுவலர் ஜெயமாலு மற்றும் அலுவலக பணியாளர்கள், திமுக மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த மாவட்ட, ஒன்றிய, கிளை பொறுப்பாளர்கள் மற்றும் தொண்டர்கள், அரசு ஒப்பந்ததாரர் மற்றும் ஏராளமான பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
    user_RAJA
    RAJA
    பத்திரிகையாளர் ஆத்தூர், திண்டுக்கல், தமிழ்நாடு•
    10 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.