Shuru
Apke Nagar Ki App…
நெல்லை மாவட்டம் விகேபுரம் பகுதியில் நள்ளிரவில் சுற்றித் திரியும் கரடிகளால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளார்கள். விகேபுரம் சுற்றுவட்டாரப் பகுதி மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியாகும் இப்பகுதிகளில் அடிக்கடி இரவு நேரங்களில் கரடிகள் உலா வருவதால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளார்கள் கரடியை கூண்டு வந்து பிடிக்க கோரிக்கை விடுத்துள்ளார்கள்
S.Maria selvam
நெல்லை மாவட்டம் விகேபுரம் பகுதியில் நள்ளிரவில் சுற்றித் திரியும் கரடிகளால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளார்கள். விகேபுரம் சுற்றுவட்டாரப் பகுதி மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியாகும் இப்பகுதிகளில் அடிக்கடி இரவு நேரங்களில் கரடிகள் உலா வருவதால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளார்கள் கரடியை கூண்டு வந்து பிடிக்க கோரிக்கை விடுத்துள்ளார்கள்
More news from தமிழ்நாடு and nearby areas
- மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக நெல்லை சந்திப்பு பகுதியில் பாதயாத்திரை செல்லும் முருக பக்தர்களுக்கு கிறிஸ்தவ தேவாலயத்தின் மூலமாக குடிநீர் மற்றும் பிஸ்கட் வழங்கப்பட்டது1
- இலஞ்சியில் உள்ள டிடிடிஏ டிஎஸ் டேனியல் ராஜம்மாள் பிஎட் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா இன்று நடந்தது. விழாவிற்கு கல்லூரி தாளாளர் ராஜகுமார் தலைமை வகித்து துவக்கி வைத்தார். முதல்வர் கலா வின்சிலா முன்னிலை வகித்தார் கல்லூரி மாணவ ஆசிரியர்கள் பொங்கல் வைத்து கொண்டாடினர் தொடர்ந்து பொங்கல் கலை நிகழ்ச்சிகள் நடந்தன இதில் பேராசிரியர்கள் ஷீலா நவரோஸ், ஜெனிபர், வீதியாள் சொர்ண ஜெயா, ஐரீன் குளோரியா, ஜெபா எபனேசர், ஜெசி டார்லிங், ராஜேஸ்வரி, நூலகர் ஏஞ்சலின், அலுவலக பணியாளர்கள் பிரெட்ரிக், ஷேரோன், பேதுரு, லட்சுமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்1
- தேசிய இளைஞர் தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி காமராஜர் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள விவேகானந்தர் சிலைக்கு தூத்துக்குடி மாவட்ட இந்து மக்கள் கட்சியின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.1
- தமிழ்நாடு காங்கிரஸ் தொழிலாளர் யூனியனின் தேனி மாவட்ட பொதுக்குழு கூட்டம் மற்றும் பொங்கல் விழா மாவட்டத்தலைவர் P. அருள்பாண்டி தலைமையில், மேல கூடலூர் கன்னிகாளி மண்டபத்தில் நேற்று 12.01.26 அன்று மாலை நடைபெற்றது. கூட்டத்தில் மாநில துணை தலைவர் சைமன் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட தலைவர் A. எஸ்தர் எமிமாள், தூத்துக்குடி மாவட்ட தலைவர் S. தேவராஜ் ஜஸ்டின் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். தேனி மாவட்ட உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர். உறுப்பினர்களுக்கு பொங்கலை முன்னிட்டு பொங்கல் பொருட்கள் வழங்கப்பட்டது.4
- போடி கிழக்கு ஒன்றியம் கூழையனூரில் பகுதியில் தைத்திருளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தேனி மாவட்ட பாஜக தொழில் பிரிவு சார்பாக பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டனர் இதில் தேனி மாவட்ட பாரதிய ஜனதா கட்சி மாவட்ட தலைவர் ராஜபாண்டி தலைமையில் பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் ஒன்றிணைந்து சமத்துவ பொங்கல் வைத்து பொங்கல் பண்டிகை உற்சாகமாக கொண்டாடினர்1
- 0திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே உள்ள அரசு மதுபான கடையில் குடிபோதையில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்ளும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.1
- திண்டுக்கல்லில் களை கட்டிய பொங்கல் விழா திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் மாவட்ட ஆட்சியர் சரவணன் குதிரை வண்டியில் வந்து வாழ்த்துக்கள் தெரிவித்தார். திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கலை கட்டிய பொங்கல் விழா அனைவரும் ஆட்டம் பாட்டத்துடன் சிறப்பாக கொண்டாடினர்1
- *தேனி கலெக்டர் அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா - பாரம்பரிய முறைப்படி வந்த அரசு அலுவலர்கள்* *பொங்கல் விழாவை முன்னிட்டு நடைபெற்ற போட்டியில் முதல் முறை பானை உடைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்திய மாவட்ட கலெக்டர்* தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா இன்று சிறப்பாக நடைபெற்றது அனைத்து துறை அரசு அலுவலர்கள் பாரம்பரிய முறைப்படி ஆடை அணிந்து வந்து பொங்கல் விழாவை கொண்டாடினர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு பொங்கல் பானையில் பொங்கல் வைக்கும் நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் ரஞ்சித் சிங் துவக்கி வைத்தார் தொடர்ந்து பானை உடைத்தல், உறி அடித்தல், குண்டு எறிதல், சுருள்வால் சுற்றுதல் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டது இதில் அரசு அலுவலர்கள் ஆர்வத்துடன் போட்டிகளில் கலந்து கொண்டனர் தொடர்ந்து பாரம்பரிய முறைப்படி வேஷ்டி சட்டையில் வந்த மாவட்ட கலெக்டர் ரஞ்சித் சிங் பானை அடித்தல், கயிறு இழுத்தல் உள்ளிட்ட போட்டிகளில் கலந்து கொண்டு பொங்கலை கொண்டாடி மகிழ்ந்தார் பல்வேறு பொங்கல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போதிலும் முதல் முறையாக பானை உடைத்தல் போட்டியில் கலந்து கொண்டு பானை உடைத்தது மகிழ்ச்சியாக இருந்தது என மாவட்ட ஆட்சியர் ரஞ்சித் சிங் தனது மகிழ்ச்சி வெளிப்படுத்தினார்1