தருமபுரியில் பாஜக விவசாய அணியினர் ஆர்ப்பாட்டம் விவசாய கடனை தள்ளுபடி செய்ய வலியுறுத்தல்..! தருமபுரியில் பாஜக விவசாய அணியினர் ஆர்ப்பாட்டம் விவசாய கடனை தள்ளுபடி செய்ய வலியுறுத்தல்..! தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே, பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட விவசாய அணி சார்பில் தமிழக அரசைக் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழகத்தில் விவசாயிகள் பெற்ற பயிர்க் கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியே இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு பாஜக மாவட்ட விவசாய அணி தலைவர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். பாரதிய ஜனதா கட்சி மாவட்ட தலைவர் சரவணன் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தமிழக அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். "விவசாயிகளை வஞ்சிக்கும் தவெக அரசு கண்டிக்கிறோம்", "பயிர்க் கடனை உடனடியாக தள்ளுபடி செய்" போன்ற கோஷங்களை எழுப்பி தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பொது செயலாளர் கணேசன், விவசாய அணி மாவட்ட செயலாளர் ராஜ் குமார், நகர தலைவர் ஆறுமுகம், இளைஞர் அணி மாநில செயலாளர் பிரபாகரன், மாநில சமூக ஊடக பொறுப்பாளர் மோகன் ஹரிஷ் சிங் மற்றும் பாஜக மாவட்ட விவசாய அணி நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், என 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். விவசாயிகளின் கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்றாவிட்டால், தொடர்ந்து மாநிலம் தழுவிய போராட்டங்கள் நடத்தப்படும் என பாஜக விவசாய அணியினர் எச்சரிக்கை விடுத்தனர்.
தருமபுரியில் பாஜக விவசாய அணியினர் ஆர்ப்பாட்டம் விவசாய கடனை தள்ளுபடி செய்ய வலியுறுத்தல்..! தருமபுரியில் பாஜக விவசாய அணியினர் ஆர்ப்பாட்டம் விவசாய கடனை தள்ளுபடி செய்ய வலியுறுத்தல்..! தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே, பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட விவசாய அணி சார்பில் தமிழக அரசைக் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழகத்தில் விவசாயிகள் பெற்ற பயிர்க் கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியே இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு பாஜக மாவட்ட விவசாய அணி தலைவர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். பாரதிய ஜனதா கட்சி மாவட்ட தலைவர் சரவணன் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தமிழக அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். "விவசாயிகளை வஞ்சிக்கும் தவெக அரசு கண்டிக்கிறோம்", "பயிர்க் கடனை உடனடியாக தள்ளுபடி செய்" போன்ற கோஷங்களை எழுப்பி தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பொது செயலாளர் கணேசன், விவசாய அணி மாவட்ட செயலாளர் ராஜ் குமார், நகர தலைவர் ஆறுமுகம், இளைஞர் அணி மாநில செயலாளர் பிரபாகரன், மாநில சமூக ஊடக பொறுப்பாளர் மோகன் ஹரிஷ் சிங் மற்றும் பாஜக மாவட்ட விவசாய அணி நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், என 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். விவசாயிகளின் கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்றாவிட்டால், தொடர்ந்து மாநிலம் தழுவிய போராட்டங்கள் நடத்தப்படும் என பாஜக விவசாய அணியினர் எச்சரிக்கை விடுத்தனர்.
- நேபாளம் வெள்ளப்பெருக்கில் பாலத்தை அடித்து செல்லும் காட்சி நேபாளம் வெள்ளப்பெருக்கில் பாலத்தை அடித்து செல்லும் காட்சி1
- RDO அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்த பெண் உடலில் சாமி இறங்கிய சம்பவம் : கத்தி கூச்சலிட்டு பெண்ணால் பரபரப்பு நிலவியது. கடத்தூர் அருகே கோவில் வழிபாடு தொடர்பான இருகிராமங்களுக்கு இடையிலான அமைதி பேச்சுவார்த்தை ஒத்தி வைப்பு - RDO அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்த பெண் உடலில் சாமி இறங்கிய சம்பவம் : கத்தி கூச்சலிட்டு பெண்ணால் பரபரப்பு நிலவியத1
- பாலக்கோடு அருகே, ஜக்கசமுத்திரம் கிராமத்திற்கு இணைப்பு சாலை மற்றும் பேருந்து நிறுத்தம் அமைக்கக் கோரி 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தர்ணா ஜக்கசமுத்திரத்தில் இணைப்பு சாலை கோரி பொதுமக்கள் தர்ணா - மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று விசாரணை தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே, ஜக்கசமுத்திரம் கிராமத்திற்கு இணைப்பு சாலை மற்றும் பேருந்து நிறுத்தம் அமைக்கக் கோரி 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஜக்கசமுத்திரம் ஊராட்சியில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். மேலும், சுற்றுவட்டாரத்தில் உள்ள 16 கிராமங்களுக்கு மையப்பகுதியாகவும் இக்கிராமம் உள்ளது. ஊராட்சி அலுவலகம், அரசு மருத்துவமனை, வங்கிகள், தபால் நிலையம் உள்ளிட்ட முக்கிய நிறுவனங்கள் இங்கு செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், தேசிய நெடுஞ்சாலை 844-ல் சேவைச் சாலைகள் அமைக்கப்பட்டுள்ள போதிலும், ஜக்கசமுத்திரம் பகுதிக்கு செல்லும் இணைப்பு சாலை மற்றும் பேருந்து நிறுத்தம் அமைக்கப்படவில்லை என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். இதனால் பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் மற்றும் அரசு மருத்துவமனைக்கு செல்லும் நோயாளிகள் சிரமத்திற்கு உள்ளாகி வருவதாக கூறப்படுகிறது. பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லாததால் பொதுமக்கள் போராட்டத்தில் இறங்கினர். மேலும், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, “ஜக்கசமுத்திரம் என்ற கிராமமே பதிவேட்டில் இல்லை” என தெரிவிப்பதாக பொதுமக்கள் அதிர்ச்சியுடன் தெரிவிக்கின்றனர். தொடர்ந்து, இணைப்பு சாலை மற்றும் பேருந்து நிறுத்தம் அமைக்க வலியுறுத்தி 100-க்கும் மேற்பட்டோர் சாலையோரம் நின்று தர்ணாவில் ஈடுபட்டனர். தகவலறிந்த மாவட்ட ஆட்சியர் சரவணன் சம்பவ இடத்திற்க்கு சென்று கோரிக்கைகளை கேட்டறிந்தவர் இது குறித்து பேச்சுவார்த்தை நடத்த மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்க்கு வருமாறு அழைப்பு விடுத்ததை தொடர்ந்து பொது மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். பேட்டி: சின்னசாமி ஊர் கவுண்டர் - ஜக்கசமுத்திரம்1
- பாலக்கோட்டில் முறைகேடாக செயல்படும் குடிநீர் சுத்திகரிப்பு நிலையமா? – நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதாக புகார். மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்ய கோரிக்கை தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அரசு போக்குவரத்து பணிமனை அருகே சமீபகாலமாக செயல்பட்டு வரும் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் தொடர்பாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. தண்ணீர் பற்றாக்குறை நிலவும் பகுதியில் ஆழ்துளை கிணறு மூலம் அதிகளவில் நிலத்தடி நீர் உறிஞ்சப்பட்டு விற்பனை செய்யப்படுவதாகவும், இதனால் சுற்றுவட்டார பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறி, மாவட்ட ஆட்சியர் உரிய ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர் கோரிக்கை விடுத்துள்ளார். தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான எர்ரனஅள்ளி, கரகதஅள்ளி, பேளாரஅள்ளி உள்ளிட்ட ஊராட்சிப் பகுதிகள் வறட்சியின் தாக்கத்தை எதிர்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. இப்பகுதிகளில் போதிய மழையின்மை மற்றும் நீராதாரங்கள் குறைந்து வருவதால், விவசாயம் மேற்கொள்வதில் விவசாயிகள் சிரமம் அடைந்து வருவதுடன், கால்நடைகளுக்கு தேவையான தண்ணீரை வழங்குவதிலும் சிக்கல் ஏற்பட்டு வருவதாகவும், சில பகுதிகளில் குடிநீருக்காக பொதுமக்கள் சிரமப்படுவதாகவும் சமூக ஆர்வலர் தெரிவித்துள்ளார். இந்த சூழ்நிலையில், பாலக்கோடு அரசு போக்குவரத்து பணிமனை அருகே புதிதாக அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் செயல்பட்டு வருவதாகவும், அங்கு ஆழ்துளை கிணறு மூலம் தினசரி பல ஆயிரம் லிட்டர் நிலத்தடி நீர் உறிஞ்சப்பட்டு, சுத்திகரிப்பு செய்யப்பட்ட பின்னர் விற்பனை செய்யப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து பாலக்கோடு அவுசிங் போர்டு பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சரவணன், மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளார். அந்த மனுவில், ஏற்கனவே தண்ணீர் பற்றாக்குறை நிலவி வரும் பாலக்கோடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நிலத்தடி நீரை வணிக நோக்கத்திற்காக அதிகளவில் உறிஞ்சினால், அதன் தாக்கம் பொதுமக்களின் குடிநீர் ஆதாரங்களிலும் ஏற்படும் என தெரிவித்துள்ளார். குறிப்பாக, வீடுகள் மற்றும் விவசாய பயன்பாட்டிற்காக பொதுமக்கள் அமைத்துள்ள ஆழ்துளை கிணறுகளில் நீர்மட்டம் குறைந்து வருவதாகவும், இதே நிலை தொடர்ந்தால் எதிர்காலத்தில் அந்த ஆழ்துளை கிணறுகளும் வறண்டு போகும் அபாயம் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், வணிக நோக்கில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் செயல்படுவதற்கு சம்பந்தப்பட்ட துறைகளின் உரிய அனுமதிகள் பெறப்பட்டுள்ளதா, நிலத்தடி நீரை எடுப்பதற்கான அனுமதி உள்ளதா, அனுமதி பெற்ற இடத்திலேயே சுத்திகரிப்பு நிலையம் செயல்படுகிறதா என்பது குறித்து அதிகாரிகள் முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். அனுமதி பெற்ற இடம் வேறு பகுதியாக இருந்து, பாலக்கோடு நகரப் பகுதியில் வேறு இடத்தில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் செயல்பட்டு வந்தால், அது தொடர்பாகவும் உரிய விசாரணை நடத்த வேண்டும் என புகாரில் குறிப்பிட்டுள்ளார். மேலும், குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தின் செயல்பாடு காரணமாக சுற்றுவட்டார பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என்றும், பொதுமக்களின் குடிநீர் தேவைக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதனால், மாவட்ட ஆட்சியர் சம்பந்தப்பட்ட வருவாய்த்துறை, உள்ளாட்சி அமைப்பு, குடிநீர் வழங்கல் மற்றும் நிலத்தடி நீர் தொடர்புடைய அதிகாரிகளை கொண்டு சம்பந்தப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் நேரில் ஆய்வு நடத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. ஆய்வின்போது, நிலையத்திற்கு தேவையான அனைத்து அரசு அனுமதிகளும் பெறப்பட்டுள்ளதா, நிலத்தடி நீர் எடுக்க அனுமதி உள்ளதா, எவ்வளவு அளவு தண்ணீர் உறிஞ்சப்படுகிறது, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் எவ்வாறு விற்பனை செய்யப்படுகிறது உள்ளிட்ட அனைத்து அம்சங்களையும் அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர் தெரிவித்துள்ளார். தண்ணீர் பற்றாக்குறை நிலவும் பகுதியில் வணிக நோக்கத்திற்காக நிலத்தடி நீர் அதிகளவில் உறிஞ்சப்படுவதாக எழுந்துள்ள புகார் குறித்து மாவட்ட நிர்வாகம் உடனடியாக விசாரணை நடத்தி, விதிமீறல்கள் இருந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.1
- கிருஷ்ணகிரி பாரிஸ் நகரில் சமுக நுகர்வோர் பாதுகாப்பு நலச்சங்கத்தின் நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் கிருஷ்ணகிரி அருகே பாரிஸ் நகரில் சமுக நுகர்வோர் பாதுகாப்பு நலச்சங்கத்தின் நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் மற்றும் புதிய நிர்வாகிகளின் அறிமுகக் கூட்டம் நடைப்பெற்றது நுகர்வோர் சங்கத்தின் முன்னாள் மாநில நிர்வாகி திருமதி குமுதா தலைமையில் நடைப்பெற்றது1
- சேலத்தில் அனைத்து வங்கி ஊழியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்! சேலம் ஒருங்கிணைந்த வங்கி ஊழியர்கள் சங்கம் சார்பில், தங்களது பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சேலம் கோட்டை கனரா வங்கி வளாகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் போராட்டத்தில் கலந்துகொண்டு, மத்திய அரசு வங்கி ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என போராட்டத்தில் கோஷங்களை எழுப்பினர்.1
- தொப்பூர் ஒரு வீட்டுல கேமராவில் இந்த பேய் பதிவாகி உள்ளது1
- தருமபுரியில் பாஜக விவசாய அணியினர் ஆர்ப்பாட்டம் விவசாய கடனை தள்ளுபடி செய்ய வலியுறுத்தல்..! தருமபுரியில் பாஜக விவசாய அணியினர் ஆர்ப்பாட்டம் விவசாய கடனை தள்ளுபடி செய்ய வலியுறுத்தல்..! தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே, பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட விவசாய அணி சார்பில் தமிழக அரசைக் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழகத்தில் விவசாயிகள் பெற்ற பயிர்க் கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியே இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு பாஜக மாவட்ட விவசாய அணி தலைவர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். பாரதிய ஜனதா கட்சி மாவட்ட தலைவர் சரவணன் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தமிழக அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். "விவசாயிகளை வஞ்சிக்கும் தவெக அரசு கண்டிக்கிறோம்", "பயிர்க் கடனை உடனடியாக தள்ளுபடி செய்" போன்ற கோஷங்களை எழுப்பி தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பொது செயலாளர் கணேசன், விவசாய அணி மாவட்ட செயலாளர் ராஜ் குமார், நகர தலைவர் ஆறுமுகம், இளைஞர் அணி மாநில செயலாளர் பிரபாகரன், மாநில சமூக ஊடக பொறுப்பாளர் மோகன் ஹரிஷ் சிங் மற்றும் பாஜக மாவட்ட விவசாய அணி நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், என 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். விவசாயிகளின் கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்றாவிட்டால், தொடர்ந்து மாநிலம் தழுவிய போராட்டங்கள் நடத்தப்படும் என பாஜக விவசாய அணியினர் எச்சரிக்கை விடுத்தனர்.1