Shuru
Apke Nagar Ki App…
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் எல்இ ஜோதிமணி அவர்களை ஆதரித்து பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் மாநில துணைத்தலைவர் கே.ஐ மணிரத்தினம் அவர்கள் நேற்று தலைவர் எல் இளையபெருமாள் அவருடைய திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின்பு கட்சியை சேர்ந்த முக்கிய நிர்வாகிகளுடன் கூட்டணி கட்சியுடன் இணைந்து முக்கிய கடைவீதிகளில் நூற்றுக்கணக்கானோர் பேரணியாக சென்று பானை சின்னத்திற்கு சேகரித்தனர்
Dhamodharan R
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் எல்இ ஜோதிமணி அவர்களை ஆதரித்து பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் மாநில துணைத்தலைவர் கே.ஐ மணிரத்தினம் அவர்கள் நேற்று தலைவர் எல் இளையபெருமாள் அவருடைய திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின்பு கட்சியை சேர்ந்த முக்கிய நிர்வாகிகளுடன் கூட்டணி கட்சியுடன் இணைந்து முக்கிய கடைவீதிகளில் நூற்றுக்கணக்கானோர் பேரணியாக சென்று பானை சின்னத்திற்கு சேகரித்தனர்
More news from தமிழ்நாடு and nearby areas
- கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் தாலுக்கா குமராட்சி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட நெய்வாசல் அங்கன்வாடி ஊழியர்கள் சார்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அனைவரும் 100% வாக்களிப்போம் என்று உறுதி எடுக்க வேண்டும் என விளம்பர பலகையுடன் முக்கிய கடைவீதிகளில் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்1
- நடிப்பை ரசிக்கலாம்; ஆனால் நாட்டை ஒப்படைக்கக் கூடாது” என்ற கருத்தை குறிப்பிட்டு, அரசியலில் ஈடுபடுபவர்களுக்கு தெளிவான கொள்கைகள் அவசியம் என நாகை அருகே மேலப்பிடாகையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் சிபிஎம் மாநிலச் செயலாளர் சண்முகம் பேச்சு. நாகை மாவட்டம் கீழ்வேளூர் சட்டமன்றத் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் தீவிரமடைந்துள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் லதாவுக்கு ஆதரவாக, கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் மேலப்பிடாகை பகுதியில் திறந்தவெளி பிரச்சார வாகனத்தில் நின்றபடி பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார். பிரச்சாரத்தின் போது பொதுமக்களுடன் நேரடியாக கலந்துரையாடிய அவர், கூட்டணி கட்சிகளின் சாதனைகள் மற்றும் எதிர்கால திட்டங்களை விளக்கினார். தொடர்ந்து அவர் பேசியதாவது, நடிகர் விஜயின் அரசியல் வருகை குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன. அவர் அரசியலுக்கு வந்திருப்பது வாக்குகளைப் பிரிப்பதற்காகவா அல்லது மறைமுகமாக அதிமுக, பாஜகவுக்கு ஆதரவாக அமையுமா என்ற கேள்வி பொதுமக்களிடையே உள்ளது. இளைஞர்கள் எதிர்கொள்ளும் வேலைவாய்ப்பு மற்றும் வருமான பிரச்சனைகள் குறித்து இதுவரை விஜய் எந்தவிதமான தெளிவான திட்டங்களையும் முன்வைக்கவில்லை என்றும், சினிமா வசனங்கள் மட்டும் மக்கள் பிரச்சனைகளுக்கு தீர்வாக இருக்க முடியாது என்றும் அவர் விமர்சித்தார். மேலும், பழனியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்த “நடிப்பை ரசிக்கலாம்; ஆனால் நாட்டை ஒப்படைக்கக் கூடாது” என்ற கருத்தை குறிப்பிட்டு, அரசியலில் ஈடுபடுபவர்களுக்கு தெளிவான கொள்கைகள் அவசியம் என வலியுறுத்தினார். இதற்கிடையில், தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி மாநில உரிமைகளை பாதுகாப்பதிலும், மக்களின் நலனில் செயல்படுவதிலும் முன்னிலையில் உள்ளது என அவர் பாராட்டினார். கீழ்வேளூர் தொகுதியில் போட்டியிடும் லதாவை பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்யுமாறு பொதுமக்களிடம் அவர் கேட்டுக்கொண்டார். கடந்த முறை 17 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் கிடைத்த வெற்றியை விட, இம்முறை அதிக வாக்குகளுடன் வெற்றி பெற வேண்டும் எனவும் வலியுறுத்தினார். தி.மு.க மற்றும் கூட்டணி கட்சிகளின் ஒருங்கிணைந்த பணியே இந்த தேர்தலில் பெரிய வெற்றியைத் தரும் என்றும், தமிழகம் முழுவதும் கூட்டணிக்கு ஆதரவான அலை வீசுகிறது என்றும் நம்பிக்கை தெரிவித்த சிபிஎம் மாநில செயலாளர் சண்முகம் அரிவாள் சுத்தியல் நட்சத்திர சின்னத்திற்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டார். உடன் திமுக மாவட்ட செயலாளர் கௌதமன், விசிக கீழ்வேளூர் தொகுதி மாவட்ட செயலாளர் நாக அருட்செல்வன், திமுக கீழையூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் தாமஸ் ஆல்வாஎடிசன், சிபிஎம் மாவட்ட செயலாளர் மாரிமுத்து, கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் வி.பி.நாகை.மாலி, கட்சி மாநில குழு உறுப்பினர் வாலண்டினா, கீழையூர் மேற்கு ஒன்றிய செயலாளர் டி.வெங்கட்ராமன், மாநில மீனவர் அணி துணை செயலாளர் மனோகரன், நாகை தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் வடவூர் ராஜேந்திரன், சிபிஐ முன்னாள் மாநில குழு உறுப்பினர் டி.செல்வம் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் மற்றும் பொறுப்பாளர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தார்.1
- கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் சட்டமன்ற தொகுதியில் அரசியல் சூடு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில்,உரிய சூரியன் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் தா.உதயசூரியன் அவர்கள் இன்று வெள்ளிமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அவர் வருகையை முன்னிட்டு வெள்ளிமலை பகுதி மக்கள் உற்சாகக் கடலாக திரண்டனர். மேளதாளங்கள் முழங்க, மலர் தூவி,ஆர்ப்பாட்டக் குரல்களுடன் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.மேலும், கட்சி நிர்வாகிகள், பெண்கள் மற்றும் இளைஞர்கள் இணைந்து நடனமாடி,ஆர்வமுடன் அவரை வரவேற்றனர். இந்த நிகழ்வு அப்பகுதியில் தேர்தல் உற்சாகத்தை மேலும் உயர்த்தியது. வாக்கு சேகரிப்பின் போது, தா.உதயசூரியன் அவர்கள் பொதுமக்களை நேரில் சந்தித்து,தங்களது தேர்தல் அறிக்கைகள் மற்றும் நலத்திட்டங்களை விளக்கினார்.மக்களின் குறைகளை கேட்டறிந்து, தீர்வு காண உறுதியளித்தார். இந்த நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள், உள்ளூர் தலைவர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டு,தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தினர். வெள்ளிமலை பகுதியில் நடைபெற்ற இந்த வரவேற்பு நிகழ்வு,அந்த தொகுதியில் வேட்பாளருக்கு கிடைக்கும் ஆதரவை வெளிப்படுத்தும் வகையில் அமைந்தது.1
- புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் சட்டமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக லட்சுமி சீனிவாசன் போட்டியிடுகிறார். இதனைத் தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் பிரச்சாரப் பணியை மேற்கொண்டு வரும் அவர் இன்று (19.4.2026) திருமயம் பேருந்து நிலையம் அருகே தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். உடன் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் உறுப்பினர்கள் உள்ளனர்.1
- மணப்பாறை சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பன்னாங்கொம்பு பகுதியில் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி திமுக கூட்டணி கட்சி மமக வேட்பாளர் ப.அப்துல் சமது உதயசூரியன் சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரிப்பு.2
- இராசிபுரம் புரட்சிகர தொழிலாளர்கள் சங்கம் சார்பாக ராசிபுரம் சட்டமன்ற பொதுத் தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் பிரேம்குமார் அவர்களை ஆதரித்து தீவிரவாக்கு சேகரிப்பு பணியில் கட்டிட தொழிலாளர்கள் சங்கம் சார்பாக ராசிபுரம் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் இடத்தில் வெற்றி பெற வாய்ப்பு கேட்டு வருகின்றனர்1
- தேர்தல் நெருங்கும் நிலையில் அரூர் பகுதியில் பிடிக்கப்பட்ட ரூபாய் 22 லட்சத்து 3000 ரொக்கம் பறிமுதல் - கேட்பாரற்று கிடந்த ஸ்கூட்டி டிக்கியில் சோதனை. தர்மபுரி மாவட்டம் அரூர் அம்பேத்கர் நகர் அருகே இருக்கக்கூடிய பெட்ரோல் பங்க் முன்பு சுமார் 20க்கும் மேற்பட்ட அடையாளம் தெரியாத நபர்கள் நின்று கொண்டிருந்ததாகவும், அப்போது அவ்வழியாக சென்ற தேர்தல் பறக்கும் படையினரை பார்த்ததும் அவர்கள் ஓட்டம் பிடித்ததாக கூறப்படுகிறது. பின்பு அங்கே கேட்பாராற்று இருந்த இருசக்கர வாகனத்தை, சந்தேகம் அடைந்த தேர்தல் பறக்கும் படை குழுவினர் சோதனை செய்ததில் ஸ்கூட்டி டிக்கியில் கட்டுக்கட்டாக பணம் இருந்ததாகவும், அதில் 22 லட்சத்து 3 ஆயிரம் ரூபாயை கைப்பற்றிய தேர்தல் பறக்கும் படை குழுவினர் அரூர் வருவாய் கோட்டாட்சியர் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலருமான செம்மலையிடம் ஒப்படைத்தனர். மேலும் கேட்பாரற்று கிடந்த இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்து ஆர்டிஓ அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து தேர்தல் பறக்கும் படையினர் சந்தேகத்திற்கு இடமான பகுதியில் பணம் ஏதேனும் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா என அருகே இருந்த நபர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.1
- கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் சார்பில் காட்டுமன்னார்கோயில் பூவிருந்தநல்லூர் பகுதியில் சேர்ந்த விவசாயியான ஆள வந்தார் அவர்கள் கேமிரா சின்னத்திற்கு வாக்கு கேட்டு முக்கிய கடைவீதிகளில் தனது ஆதரவாளருடன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்1