logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

விருப்பாச்சி நீல வரதராஜ பெருமாள் கோவிலில் உலக நன்மை வேண்டி நடைபெற்ற சிறப்பு யாகம் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள தலையூத்து அருவி அருகே அமைந்துள்ள அருள்மிகு நீல வரதராஜ பெருமாள் திருக்கோவிலில் இன்று ரெட்டியபட்டி மக்கள் உலக நன்மை வேண்டியும், உலகில் போர் தணிந்து அமைதி நிலவும், உரிய காலத்தில் மழை பெய்து விவசாயம் செழிக்கவும் திருக்கோவிலில் யாகம் நடத்தி பொங்கள் வைத்து வழிபாடு செய்தனர்

2 hrs ago
user_RAJA news
RAJA news
பத்திரிகையாளர் ஒட்டன்சத்திரம், திண்டுக்கல், தமிழ்நாடு•
2 hrs ago

விருப்பாச்சி நீல வரதராஜ பெருமாள் கோவிலில் உலக நன்மை வேண்டி நடைபெற்ற சிறப்பு யாகம் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள தலையூத்து அருவி அருகே அமைந்துள்ள அருள்மிகு நீல வரதராஜ பெருமாள் திருக்கோவிலில் இன்று ரெட்டியபட்டி மக்கள் உலக நன்மை வேண்டியும், உலகில் போர் தணிந்து அமைதி நிலவும், உரிய காலத்தில் மழை பெய்து விவசாயம் செழிக்கவும் திருக்கோவிலில் யாகம் நடத்தி பொங்கள் வைத்து வழிபாடு செய்தனர்

More news from தமிழ்நாடு and nearby areas
  • திண்டுக்கல்லில் தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டுக் கழக மாநில பொதுக்குழு கூட்டம் மாநில தலைவர் மணி தலைமையில் மாநில பொது செயலாளர் ராமகிருஷ்ணன் முன்னிலையில் நடைபெற்றது. இந்த மாநில பொதுக்குழு கூட்டத்தில் மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய நகர நிர்வாகிகள், இளைஞரணி நிர்வாகிகள் என 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்த பொதுக்குழு கூட்டத்தில் தொட்டிய நாயக்கர் சமூகத்திற்கு வருகின்ற 2026-ம் சட்டமன்றத் தேர்தலில் வேட்பாளராக போட்டியிடும் வாய்ப்பை அரசியல் கட்சிகளின் சார்பில் வழங்க வேண்டும், தமிழ்நாடு அரசு ராஜகம்பள தொட்டிய நாயக்கர் சீரமைப்பு நலவாரியம் ஏற்படுத்தி தர வேண்டும் உள்ளிட்ட 10- தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன
    1
    திண்டுக்கல்லில் தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டுக் கழக மாநில பொதுக்குழு கூட்டம் மாநில தலைவர் மணி தலைமையில் மாநில பொது செயலாளர் ராமகிருஷ்ணன் முன்னிலையில் நடைபெற்றது.
இந்த மாநில பொதுக்குழு கூட்டத்தில் மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய நகர நிர்வாகிகள், இளைஞரணி நிர்வாகிகள் என 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த பொதுக்குழு கூட்டத்தில் தொட்டிய நாயக்கர் சமூகத்திற்கு வருகின்ற 2026-ம் சட்டமன்றத் தேர்தலில் வேட்பாளராக போட்டியிடும் வாய்ப்பை அரசியல் கட்சிகளின் சார்பில் வழங்க வேண்டும், 
தமிழ்நாடு அரசு ராஜகம்பள தொட்டிய நாயக்கர் சீரமைப்பு நலவாரியம் ஏற்படுத்தி தர வேண்டும் உள்ளிட்ட 10- தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன
    user_CHANDRA SEKAR AYYANAR
    CHANDRA SEKAR AYYANAR
    திண்டுக்கல் மேற்கு, திண்டுக்கல், தமிழ்நாடு•
    22 hrs ago
  • தொடர்ந்து சரிந்து வரும் வைகைஅணையின் நீர்மட்டம் 36.65 அடியாக உள்ளது . தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே அமைந்துள்ள மொத்தம் 71 அடி உயரம் கொண்ட வைகை அணை. தேனி மதுரை திண்டுக்கல் சிவகங்கை ராமநாதபுரம் ஆகிய ஐந்து தென் மாவட்டங்களின் குடிநீருக்கும் விவசாயத்திற்கும் முக்கிய ஆதாரமாக விளங்கி வருகிறது. இந்நிலையில் வைகை அணையின் நீர்பிடிப்பு பகுதிகளான வீரபாண்டி, கொட்டக்குடி, மூல வைகை உள்ளிட்ட ஆறுகளில் போதிய மழை இன்றி வறண்டு காணப்படுவதால் வைகை அணைக்கான நீர்வரத்து முற்றிலும் இல்லாமல் போனது. கடந்த மூன்று ஆண்டுகளாக இல்லாத வகையில் இந்த ஆண்டு அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வரும் நிலையில் அணைக்கு நீர்வரத்தும் முற்றிலும் இல்லாமல் போனதால் ஐந்து மாவட்ட வைகை பாசன விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். தற்போதைய நிலவரப்படி வைகை அணையின் நீர்மட்டம் 36.65 அடியாகவும், அணையில் நீர் இருப்பு 707 மில்லியன் கன அடியாகவும் உள்ளது. அணையில் இருந்து மதுரை தேனி மாவட்ட குடிநீருக்காக மட்டும் வினாடிக்கு 72 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
    1
    தொடர்ந்து சரிந்து வரும் வைகைஅணையின் நீர்மட்டம் 36.65 அடியாக உள்ளது .
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே அமைந்துள்ள மொத்தம் 71 அடி உயரம் கொண்ட வைகை அணை. தேனி மதுரை திண்டுக்கல் சிவகங்கை ராமநாதபுரம் ஆகிய ஐந்து தென் மாவட்டங்களின் குடிநீருக்கும் விவசாயத்திற்கும் முக்கிய ஆதாரமாக விளங்கி வருகிறது.
இந்நிலையில் வைகை அணையின் நீர்பிடிப்பு பகுதிகளான வீரபாண்டி,  கொட்டக்குடி, மூல வைகை உள்ளிட்ட ஆறுகளில் போதிய மழை இன்றி வறண்டு காணப்படுவதால் வைகை அணைக்கான நீர்வரத்து முற்றிலும் இல்லாமல் போனது.
கடந்த மூன்று ஆண்டுகளாக இல்லாத வகையில் இந்த ஆண்டு அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வரும் நிலையில் அணைக்கு நீர்வரத்தும் முற்றிலும் இல்லாமல் போனதால் 
ஐந்து மாவட்ட வைகை பாசன விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
தற்போதைய நிலவரப்படி வைகை அணையின் நீர்மட்டம் 36.65 அடியாகவும், அணையில் நீர் இருப்பு 707 மில்லியன் கன அடியாகவும் உள்ளது. அணையில் இருந்து மதுரை தேனி மாவட்ட குடிநீருக்காக மட்டும் வினாடிக்கு 72 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
    user_Shakthi
    Shakthi
    பத்திரிகையாளர் பெரியகுளம், தேனி, தமிழ்நாடு•
    6 hrs ago
  • தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதால் தெற்கு வாசல் பகுதியில் மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் தமிழக காவல் துறையினர் இணைந்து நடத்திய போலீஸ் கொடி அணிவகுப்பு இன்று (மார்ச் .14) காலை தெற்கு வாசல் பகுதியில் உள்ள முக்கிய சாலைகளில் நடைபெற்றது. இந்த பேரணி உதவி காவல் ஆணையர் சந்திரலேகா தலைமையில் காவல் ஆய்வாளர்கள், உதவி காவல் ஆய்வாளர்கள், மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.
    1
    தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதால் தெற்கு வாசல் பகுதியில் மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் தமிழக காவல் துறையினர் இணைந்து நடத்திய போலீஸ் கொடி அணிவகுப்பு இன்று (மார்ச் .14) காலை தெற்கு வாசல் பகுதியில் உள்ள முக்கிய சாலைகளில் நடைபெற்றது. இந்த பேரணி உதவி காவல் ஆணையர் சந்திரலேகா தலைமையில் காவல் ஆய்வாளர்கள், உதவி காவல் ஆய்வாளர்கள், மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.
    user_சு.இரத்தினவேல்
    சு.இரத்தினவேல்
    Madurai South, Tamil Nadu•
    7 hrs ago
  • Post by Saravanan Vasanthi
    1
    Post by Saravanan Vasanthi
    user_Saravanan Vasanthi
    Saravanan Vasanthi
    Electrician Krishnarayapuram, Karur•
    19 hrs ago
  • திருப்பூர் பல்லடம் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் தேசிய மக்கள் நீதிமன்ற நிகழ்வு இன்று நடைபெற்றது. இதில் விபத்து வழக்கில் பாதிக்கப்பட்ட அவிநாசி கருவலூர் பகுதியை சேர்ந்த சஞ்சய் என்பவருக்கு 32 லட்சமும் , பெரியாயிபாளையம் பகுதியைச் சேர்ந்த சரவணன் என்பதற்கு 39 லட்ச ரூபாய்க்கான இழப்பீட்டுத் தொகை நீதிபதிகள் முன்பு வழங்கப்பட்டது.
    1
    திருப்பூர் பல்லடம் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் தேசிய மக்கள் நீதிமன்ற நிகழ்வு இன்று நடைபெற்றது. இதில் விபத்து வழக்கில் பாதிக்கப்பட்ட அவிநாசி கருவலூர் பகுதியை சேர்ந்த சஞ்சய் என்பவருக்கு 32 லட்சமும் , பெரியாயிபாளையம் பகுதியைச் சேர்ந்த சரவணன் என்பதற்கு 39 லட்ச ரூபாய்க்கான இழப்பீட்டுத் தொகை நீதிபதிகள் முன்பு வழங்கப்பட்டது.
    user_Vel
    Vel
    திருப்பூர் தெற்கு, திருப்பூர், தமிழ்நாடு•
    6 hrs ago
  • குளித்தலையில் சட்டமன்றத் தேர்தலை ஒட்டி மத்திய சிறப்பு படையினர் மற்றும் குளித்தலை காவல்துறையினரின் கொடி அணிவகுப்பு தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் மாதத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலை முன்னிட்டு பாதுகாப்பு பணிகளை வலுப்படுத்தவும், பொதுமக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தவும் மத்திய சிறப்பு படையினர் 50 பேர் கரூர் மாவட்டம் குளித்தலை வந்து உள்ளனர். இந்த நிலையில் மத்திய சிறப்பு படையினரின் கொடி அணிவகுப்பு குளித்தலை நகர பகுதிகளில் நடைபெற்றது. குளித்தலை பெரியபாலம் பகுதியில் குளித்தலை டிஎஸ்பி செந்தில்குமார் தலைமையில் கொடியசைத்து கொடி அணிவகுப்பை தொடங்கி வைத்தார். .அங்கிருந்து மாரியம்மன் கோவில் தெரு, பஜனைமடை தெரு, நகராட்சி அலுவலகம், சின்ன ஆண்டாங் கோவில் தெரு, பேராளம்மன் கோவில் தெரு, பேருந்து நிலையம், நீதிமன்றம் வழியாக சுங்ககேட் வரை சென்று முடிவடைந்தது. மத்திய சிறப்பு படையினர் துப்பாக்கி ஏந்தியபடி சென்றனர். அவர்களை பின்தொடர்ந்து குளித்தலை போலீசாரும் அணிவகுத்து உடன் சென்றனர். இதேபோல் தோகைமலை பேருந்து நிலையம் பகுதிகளிலும் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.
    1
    குளித்தலையில் சட்டமன்றத் தேர்தலை ஒட்டி மத்திய சிறப்பு படையினர் மற்றும் குளித்தலை காவல்துறையினரின் கொடி அணிவகுப்பு
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் மாதத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலை முன்னிட்டு பாதுகாப்பு பணிகளை வலுப்படுத்தவும், பொதுமக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தவும் மத்திய சிறப்பு படையினர் 50 பேர் கரூர் மாவட்டம் குளித்தலை வந்து உள்ளனர்.
இந்த நிலையில் மத்திய சிறப்பு படையினரின் கொடி அணிவகுப்பு குளித்தலை நகர பகுதிகளில் நடைபெற்றது. குளித்தலை பெரியபாலம் பகுதியில் குளித்தலை டிஎஸ்பி செந்தில்குமார் தலைமையில் கொடியசைத்து கொடி அணிவகுப்பை தொடங்கி வைத்தார். 
.அங்கிருந்து மாரியம்மன் கோவில் தெரு, பஜனைமடை தெரு, நகராட்சி அலுவலகம், சின்ன ஆண்டாங் கோவில் தெரு, பேராளம்மன் கோவில் தெரு, பேருந்து நிலையம், நீதிமன்றம் வழியாக சுங்ககேட் வரை சென்று முடிவடைந்தது. மத்திய சிறப்பு படையினர் துப்பாக்கி ஏந்தியபடி  சென்றனர். அவர்களை பின்தொடர்ந்து குளித்தலை  போலீசாரும் அணிவகுத்து உடன் சென்றனர்.
இதேபோல் தோகைமலை பேருந்து நிலையம் பகுதிகளிலும் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.
    user_கருணாநிதி
    கருணாநிதி
    Kulithalai, Karur•
    19 hrs ago
  • அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்ற கழகம் என்ற கட்சியின் பெயரையும், தென்னந்தோப்பு சின்னத்தையும் சசிகலா அறிமுகப்படுத்திய உடன்  மகிழ்ச்சியடைந்த சின்னம்மாவின் விசுவாசிகள், தேனி மாவட்டம் போடி உள்ள நிர்வாகிகள் அப்பகுதியில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து பின்னர் அப்பகுதியில் உள்ள பொது மக்களுக்கு இனிப்புகளை வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் மேலும் கட்சி பெயர் மற்றும் சின்னங்கள் அறிவித்ததை தொடர்ந்து வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரங்களை செய்து வெற்றி பெற செய்வோம் என நிர்வாகிகள் தொண்டர்கள் தெரிவித்துள்ளனர்
    1
    அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்ற கழகம் என்ற கட்சியின் பெயரையும், தென்னந்தோப்பு சின்னத்தையும் சசிகலா அறிமுகப்படுத்திய உடன்  மகிழ்ச்சியடைந்த சின்னம்மாவின் விசுவாசிகள், தேனி மாவட்டம் போடி உள்ள நிர்வாகிகள் அப்பகுதியில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து பின்னர் அப்பகுதியில் உள்ள பொது மக்களுக்கு இனிப்புகளை வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்
மேலும் கட்சி பெயர் மற்றும் சின்னங்கள் அறிவித்ததை தொடர்ந்து வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரங்களை செய்து வெற்றி பெற செய்வோம் என நிர்வாகிகள் தொண்டர்கள் தெரிவித்துள்ளனர்
    user_Shakthi
    Shakthi
    பத்திரிகையாளர் பெரியகுளம், தேனி, தமிழ்நாடு•
    22 hrs ago
  • தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே வேடநத்தம் கிராமத்தைச் சேர்ந்த 12ஆம் வகுப்பு மாணவி மர்ம நபர்களால் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட நிலையில் மாணவியின் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறவும் தேவையான உதவிகளை செய்யவும் தமிழக வெற்றி கழகத்தின் மாநில பொறுப்பாளர் ஆதவ் அர்ஜுனா இன்று (மார்ச் .13) மாலை சென்னையிலிருந்து விமான மூலம் மதுரை வந்தடைந்த பின்னர் தூத்துக்குடிக்கு காரில் புறப்பட்டு சென்றார்.
    1
    தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே வேடநத்தம் கிராமத்தைச் சேர்ந்த 12ஆம் வகுப்பு மாணவி மர்ம நபர்களால் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட நிலையில் மாணவியின் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறவும் தேவையான உதவிகளை செய்யவும் தமிழக வெற்றி கழகத்தின் மாநில பொறுப்பாளர் ஆதவ் அர்ஜுனா இன்று (மார்ச் .13) மாலை சென்னையிலிருந்து விமான மூலம் மதுரை  வந்தடைந்த பின்னர் தூத்துக்குடிக்கு காரில் புறப்பட்டு சென்றார்.
    user_சு.இரத்தினவேல்
    சு.இரத்தினவேல்
    Madurai South, Tamil Nadu•
    19 hrs ago
  • Post by Saravanan Vasanthi
    2
    Post by Saravanan Vasanthi
    user_Saravanan Vasanthi
    Saravanan Vasanthi
    Electrician Thottiyam, Tiruchirappalli•
    8 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.