logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் போதிய மழை இன்றி நீர்பிடிப்பு பகுதிகள் வறண்டு வருவதன் காரணமாக - வைகை அணைக்கான நீர்வரத்து முற்றிலுமாக இல்லாமல் போனதால் ஐந்து மாவட்ட வைகை பாசன விவசாயிகள் கவலை தொடர்ந்து சரிந்து வரும் வைகைஅணையின் நீர்மட்டம் 36.65 அடியாக உள்ளது . தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே அமைந்துள்ள மொத்தம் 71 அடி உயரம் கொண்ட வைகை அணை. தேனி மதுரை திண்டுக்கல் சிவகங்கை ராமநாதபுரம் ஆகிய ஐந்து தென் மாவட்டங்களின் குடிநீருக்கும் விவசாயத்திற்கும் முக்கிய ஆதாரமாக விளங்கி வருகிறது. இந்நிலையில் வைகை அணையின் நீர்பிடிப்பு பகுதிகளான வீரபாண்டி, கொட்டக்குடி, மூல வைகை உள்ளிட்ட ஆறுகளில் போதிய மழை இன்றி வறண்டு காணப்படுவதால் வைகை அணைக்கான நீர்வரத்து முற்றிலும் இல்லாமல் போனது. கடந்த மூன்று ஆண்டுகளாக இல்லாத வகையில் இந்த ஆண்டு அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வரும் நிலையில் அணைக்கு நீர்வரத்தும் முற்றிலும் இல்லாமல் போனதால் ஐந்து மாவட்ட வைகை பாசன விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். தற்போதைய நிலவரப்படி வைகை அணையின் நீர்மட்டம் 36.65 அடியாகவும், அணையில் நீர் இருப்பு 707 மில்லியன் கன அடியாகவும் உள்ளது. அணையில் இருந்து மதுரை தேனி மாவட்ட குடிநீருக்காக மட்டும் வினாடிக்கு 72 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

5 hrs ago
user_Shakthi
Shakthi
பத்திரிகையாளர் பெரியகுளம், தேனி, தமிழ்நாடு•
5 hrs ago

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் போதிய மழை இன்றி நீர்பிடிப்பு பகுதிகள் வறண்டு வருவதன் காரணமாக - வைகை அணைக்கான நீர்வரத்து முற்றிலுமாக இல்லாமல் போனதால் ஐந்து மாவட்ட வைகை பாசன விவசாயிகள் கவலை தொடர்ந்து சரிந்து வரும் வைகைஅணையின் நீர்மட்டம் 36.65 அடியாக உள்ளது . தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே அமைந்துள்ள மொத்தம் 71 அடி உயரம் கொண்ட வைகை அணை. தேனி மதுரை திண்டுக்கல் சிவகங்கை ராமநாதபுரம் ஆகிய ஐந்து தென் மாவட்டங்களின் குடிநீருக்கும் விவசாயத்திற்கும் முக்கிய ஆதாரமாக விளங்கி வருகிறது. இந்நிலையில் வைகை அணையின் நீர்பிடிப்பு பகுதிகளான வீரபாண்டி, கொட்டக்குடி, மூல வைகை உள்ளிட்ட ஆறுகளில் போதிய மழை இன்றி வறண்டு காணப்படுவதால் வைகை அணைக்கான நீர்வரத்து முற்றிலும் இல்லாமல் போனது. கடந்த மூன்று ஆண்டுகளாக இல்லாத வகையில் இந்த ஆண்டு அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வரும் நிலையில் அணைக்கு நீர்வரத்தும் முற்றிலும் இல்லாமல் போனதால் ஐந்து மாவட்ட வைகை பாசன விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். தற்போதைய நிலவரப்படி வைகை அணையின் நீர்மட்டம் 36.65 அடியாகவும், அணையில் நீர் இருப்பு 707 மில்லியன் கன அடியாகவும் உள்ளது. அணையில் இருந்து மதுரை தேனி மாவட்ட குடிநீருக்காக மட்டும் வினாடிக்கு 72 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

More news from தமிழ்நாடு and nearby areas
  • திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் -தாராபுரம் சாலையில் இன்று வரும் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர்களுக்கு பரிசு பொருட்கள் மற்றும் பணங்கள் வாகனங்களில் எடுத்துச் செல்லப்படுகிறதா? என துணை ராணுவ படையினர் மற்றும் காவல்துறையினர் இணைந்து தீவிர வாகன பரிசோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
    1
    திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் -தாராபுரம் சாலையில் இன்று வரும் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர்களுக்கு பரிசு பொருட்கள் மற்றும் பணங்கள் வாகனங்களில் எடுத்துச் செல்லப்படுகிறதா? என துணை ராணுவ படையினர் மற்றும் காவல்துறையினர் இணைந்து தீவிர வாகன பரிசோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
    user_RAJA news
    RAJA news
    பத்திரிகையாளர் ஒட்டன்சத்திரம், திண்டுக்கல், தமிழ்நாடு•
    2 hrs ago
  • திண்டுக்கல்லில் தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டுக் கழக மாநில பொதுக்குழு கூட்டம் மாநில தலைவர் மணி தலைமையில் மாநில பொது செயலாளர் ராமகிருஷ்ணன் முன்னிலையில் நடைபெற்றது. இந்த மாநில பொதுக்குழு கூட்டத்தில் மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய நகர நிர்வாகிகள், இளைஞரணி நிர்வாகிகள் என 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்த பொதுக்குழு கூட்டத்தில் தொட்டிய நாயக்கர் சமூகத்திற்கு வருகின்ற 2026-ம் சட்டமன்றத் தேர்தலில் வேட்பாளராக போட்டியிடும் வாய்ப்பை அரசியல் கட்சிகளின் சார்பில் வழங்க வேண்டும், தமிழ்நாடு அரசு ராஜகம்பள தொட்டிய நாயக்கர் சீரமைப்பு நலவாரியம் ஏற்படுத்தி தர வேண்டும் உள்ளிட்ட 10- தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன
    1
    திண்டுக்கல்லில் தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டுக் கழக மாநில பொதுக்குழு கூட்டம் மாநில தலைவர் மணி தலைமையில் மாநில பொது செயலாளர் ராமகிருஷ்ணன் முன்னிலையில் நடைபெற்றது.
இந்த மாநில பொதுக்குழு கூட்டத்தில் மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய நகர நிர்வாகிகள், இளைஞரணி நிர்வாகிகள் என 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த பொதுக்குழு கூட்டத்தில் தொட்டிய நாயக்கர் சமூகத்திற்கு வருகின்ற 2026-ம் சட்டமன்றத் தேர்தலில் வேட்பாளராக போட்டியிடும் வாய்ப்பை அரசியல் கட்சிகளின் சார்பில் வழங்க வேண்டும், 
தமிழ்நாடு அரசு ராஜகம்பள தொட்டிய நாயக்கர் சீரமைப்பு நலவாரியம் ஏற்படுத்தி தர வேண்டும் உள்ளிட்ட 10- தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன
    user_CHANDRA SEKAR AYYANAR
    CHANDRA SEKAR AYYANAR
    திண்டுக்கல் மேற்கு, திண்டுக்கல், தமிழ்நாடு•
    21 hrs ago
  • தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே வேடநத்தம் கிராமத்தைச் சேர்ந்த 12ஆம் வகுப்பு மாணவி மர்ம நபர்களால் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட நிலையில் மாணவியின் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறவும் தேவையான உதவிகளை செய்யவும் தமிழக வெற்றி கழகத்தின் மாநில பொறுப்பாளர் ஆதவ் அர்ஜுனா இன்று (மார்ச் .13) மாலை சென்னையிலிருந்து விமான மூலம் மதுரை வந்தடைந்த பின்னர் தூத்துக்குடிக்கு காரில் புறப்பட்டு சென்றார்.
    1
    தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே வேடநத்தம் கிராமத்தைச் சேர்ந்த 12ஆம் வகுப்பு மாணவி மர்ம நபர்களால் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட நிலையில் மாணவியின் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறவும் தேவையான உதவிகளை செய்யவும் தமிழக வெற்றி கழகத்தின் மாநில பொறுப்பாளர் ஆதவ் அர்ஜுனா இன்று (மார்ச் .13) மாலை சென்னையிலிருந்து விமான மூலம் மதுரை  வந்தடைந்த பின்னர் தூத்துக்குடிக்கு காரில் புறப்பட்டு சென்றார்.
    user_சு.இரத்தினவேல்
    சு.இரத்தினவேல்
    Madurai South, Tamil Nadu•
    18 hrs ago
  • அமெரிக்கா, இஸ்ரேல் ஈரான் போரால் வர்த்தக சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தேவகோட்டை வாகன எரிவாயு நிரப்பும் |பங்க்கு உள்து அவற்றில் இன்று LPG கார்கள், ஆட்டோக்கள் நீண்ட வரிசையில் நின்று எரிவாயு நிரப்பி வந்தன. இந்நிலையில், எரிவாயு வரத்து இல்லாததால் பங்க்குகளும் தற்போது மூடப்பட்டுள்ளன.இதனால் எரிவாயுவை நிரப்ப முடியாமல் வாகனஓட்டுநர்கள் சிரமப்படுகின்றனர். அவர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் பெரும்பா லான ஆட்டோக்கள் எரிவாயு மூலமே இயக்கப்படுகின்றன. அது பெட்ரோல், டீசல் விலையைவிட குறைவு என்பதால் ஆட்டோ ஓட்டுநர்கள் எரிவாயுவைத்தான் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் எரிவாயு கிடைக்காததால் செய்வதறியாது தவித்து வருகின்றனர்.
    1
    அமெரிக்கா, இஸ்ரேல் ஈரான் போரால் வர்த்தக சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தேவகோட்டை வாகன எரிவாயு நிரப்பும் |பங்க்கு உள்து அவற்றில் இன்று LPG கார்கள், ஆட்டோக்கள் நீண்ட வரிசையில் நின்று எரிவாயு நிரப்பி வந்தன.
இந்நிலையில், எரிவாயு வரத்து இல்லாததால் பங்க்குகளும் தற்போது மூடப்பட்டுள்ளன.இதனால் எரிவாயுவை நிரப்ப முடியாமல் வாகனஓட்டுநர்கள் சிரமப்படுகின்றனர். அவர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
இப்பகுதியில் பெரும்பா லான ஆட்டோக்கள் எரிவாயு மூலமே இயக்கப்படுகின்றன. அது பெட்ரோல், டீசல்
விலையைவிட குறைவு என்பதால் ஆட்டோ ஓட்டுநர்கள் எரிவாயுவைத்தான் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் எரிவாயு கிடைக்காததால் செய்வதறியாது தவித்து வருகின்றனர்.
    user_Devakottaigani news
    Devakottaigani news
    சிவகங்கை, சிவகங்கை, தமிழ்நாடு•
    10 hrs ago
  • திருச்சியை சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் கோவி லில் உள்ள உண்டியல்களில் செலுத்தும் காணிக்கைகள், கோவில் நிர்வாகம் சார்பில் மாதமிருமுறை எண்ணப்படுவது வழக்கம். அதன் படி, இந்த மாதம் முதல்முறையாக நேற்று கோவில் அறங்காவலர் குழுத்தலைவர் வி.எஸ்.பி.இளங்கோவன், கோவில் இணை ஆணையர் சூரியநாராயணன், உதவி ஆணையர் லட்சுமணன், அறங்காவலர்கள் சுகந்தி ராஜசேகரன், பிச்சைமணி, லட்சுமணன், மண்ணச்சநல்லூர் சரக அறநிலையத்துறை ஆய்வாளர் சீனிவாசன் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் முன்னிலையில் உண்டியல்கள் திறக்கப்பட்டு, காணிக்கைகள் எண்ணப்பட்டன. இதில் ரூ.1கோடியே 25 லட்சத்து 58 ஆயிரத்து 563 ரொக்கமும், ஒரு கிலோ 6 கிராம் தங்கமும், 2 கிலோ 217 கிராம் வெள்ளியும், வெளிநாட்டு ரூபாய் நோட்டுகள் 131 மற்றும் வெளிநாட்டு நாணயங்கள் 862-ம் கிடைத்துள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
    1
    திருச்சியை சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் கோவி லில் உள்ள உண்டியல்களில் செலுத்தும் காணிக்கைகள், கோவில் நிர்வாகம் சார்பில் மாதமிருமுறை எண்ணப்படுவது வழக்கம். அதன் படி, இந்த மாதம் முதல்முறையாக நேற்று கோவில் அறங்காவலர் குழுத்தலைவர் வி.எஸ்.பி.இளங்கோவன், கோவில் இணை ஆணையர் சூரியநாராயணன், உதவி ஆணையர் லட்சுமணன், அறங்காவலர்கள் சுகந்தி ராஜசேகரன், பிச்சைமணி, லட்சுமணன், மண்ணச்சநல்லூர் சரக அறநிலையத்துறை ஆய்வாளர் சீனிவாசன் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் முன்னிலையில் உண்டியல்கள் திறக்கப்பட்டு, காணிக்கைகள் எண்ணப்பட்டன. இதில் ரூ.1கோடியே 25 லட்சத்து 58 ஆயிரத்து 563 ரொக்கமும், ஒரு கிலோ 6 கிராம் தங்கமும், 2 கிலோ 217 கிராம் வெள்ளியும், வெளிநாட்டு ரூபாய் நோட்டுகள் 131 மற்றும் வெளிநாட்டு நாணயங்கள் 862-ம் கிடைத்துள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
    user_Usha arun News
    Usha arun News
    Teacher மணப்பாறை, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
    1 day ago
  • சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நகராட்சிக்குட்பட்ட கிருஷ்ணராயபுரம் பகுதியைச் சேர்ந்த ஆகாஷ் டெலிசன் (28) கடந்த 8.3.2026 அன்று உயிரிழந்தார். இதையடுத்து தமிழக அரசு சார்பில் ரூ.7.50 லட்சம் நிவாரண நிதிக்கான காசோலையை கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் நேரில் வழங்கி, குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். மாவட்ட ஆட்சியர் கா.பொற்கொடி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழங்கப்படும் தீருதவித்தொகையின் முதல் கட்டமாக ரூ.6 லட்சத்திற்கான ஆணை ஏற்கனவே ஆகாஷின் தந்தை ராஜேஸ்கண்ணனிடம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. மேலும், வழக்கு உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், குற்றவாளிகள் மீது நீதிமன்ற வழிகாட்டுதல்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், குடும்பத்தின் வாழ்வாதார மேம்பாட்டிற்குத் தேவையான உதவிகள் வழங்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். இந்நிகழ்வில் வருவாய் கோட்டாட்சியர் தே.ஜெஃபி கிரேசியா, மானாமதுரை நகர்மன்ற தலைவர் மாரியப்பன் கென்னடி, வட்டாட்சியர் கிருஷ்ணகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
    1
    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நகராட்சிக்குட்பட்ட கிருஷ்ணராயபுரம் பகுதியைச் சேர்ந்த ஆகாஷ் டெலிசன் (28) கடந்த 8.3.2026 அன்று உயிரிழந்தார். இதையடுத்து தமிழக அரசு சார்பில் ரூ.7.50 லட்சம் நிவாரண நிதிக்கான காசோலையை கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் நேரில் வழங்கி, குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.
மாவட்ட ஆட்சியர் கா.பொற்கொடி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழங்கப்படும் தீருதவித்தொகையின் முதல் கட்டமாக ரூ.6 லட்சத்திற்கான ஆணை ஏற்கனவே ஆகாஷின் தந்தை ராஜேஸ்கண்ணனிடம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
மேலும், வழக்கு உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், குற்றவாளிகள் மீது நீதிமன்ற வழிகாட்டுதல்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், குடும்பத்தின் வாழ்வாதார மேம்பாட்டிற்குத் தேவையான உதவிகள் வழங்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் வருவாய் கோட்டாட்சியர் தே.ஜெஃபி கிரேசியா, மானாமதுரை நகர்மன்ற தலைவர் மாரியப்பன் கென்னடி, வட்டாட்சியர் கிருஷ்ணகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
    user_Santhosh Kumar V
    Santhosh Kumar V
    பத்திரிகையாளர் மானாமதுரை, சிவகங்கை, தமிழ்நாடு•
    3 hrs ago
  • அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்ற கழகம் என்ற கட்சியின் பெயரையும், தென்னந்தோப்பு சின்னத்தையும் சசிகலா அறிமுகப்படுத்திய உடன்  மகிழ்ச்சியடைந்த சின்னம்மாவின் விசுவாசிகள், தேனி மாவட்டம் போடி உள்ள நிர்வாகிகள் அப்பகுதியில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து பின்னர் அப்பகுதியில் உள்ள பொது மக்களுக்கு இனிப்புகளை வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் மேலும் கட்சி பெயர் மற்றும் சின்னங்கள் அறிவித்ததை தொடர்ந்து வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரங்களை செய்து வெற்றி பெற செய்வோம் என நிர்வாகிகள் தொண்டர்கள் தெரிவித்துள்ளனர்
    1
    அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்ற கழகம் என்ற கட்சியின் பெயரையும், தென்னந்தோப்பு சின்னத்தையும் சசிகலா அறிமுகப்படுத்திய உடன்  மகிழ்ச்சியடைந்த சின்னம்மாவின் விசுவாசிகள், தேனி மாவட்டம் போடி உள்ள நிர்வாகிகள் அப்பகுதியில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து பின்னர் அப்பகுதியில் உள்ள பொது மக்களுக்கு இனிப்புகளை வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்
மேலும் கட்சி பெயர் மற்றும் சின்னங்கள் அறிவித்ததை தொடர்ந்து வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரங்களை செய்து வெற்றி பெற செய்வோம் என நிர்வாகிகள் தொண்டர்கள் தெரிவித்துள்ளனர்
    user_Shakthi
    Shakthi
    பத்திரிகையாளர் பெரியகுளம், தேனி, தமிழ்நாடு•
    21 hrs ago
  • சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருணகிரிபட்டிணத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் உலக நண்மைக்காக திருவிளக்கு பூஜை வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் அப்பகுதியை சேர்ந்த திரளான பெண்கள் கலந்து கொண்டு ஸ்ரீ முத்துமாரியம்மனை வணங்கி சென்றனா். அருணகிரிபட்டிணத்தில் அமைந்துள்ள அருள்மிகு முத்துமாரியம்மன் ஆலயத்தில், அப்பகுதி பெண்கள் பங்கேற்ற திருவிளக்கு பூஜை வெகுசிறப்பாக நடைபெற்றது. முன்னதாக மூலவர் முத்துமாரியம்மனுக்கு லெட்சுமி அலங்காரம் நடைபெற்று சிறப்பு பூஜைகளும், தீப ஆராதனைகளும் நடைபெற்றன. பின்னர் கோயில் வளாகத்தில் ஏராளமாக பெண்கள் ஒன்று கூடி சிவச்சாரியார்கள் தலைமையில் 1001 திருவிளக்குகளை ஏற்றி பூஜை செய்து வழிபட்டனா். கணபதி பூஜையுடன் துவங்கிய விளக்கு பூஜையில் 1008 திருவிளக்கு போற்றி, மஹா லெட்சும் மந்திரங்கள் ஜெபித்து, குங்கும் மற்றும் பூ வினால் அர்ச்சனை செய்து உலக நண்மைக்காகவும், அனைவரும் நோய் நொடியில்லாமல் நீண்டநாள் மகிழ்வுடன் வாழ கூட்டு வழிபாடு நடத்தினார்கள். பின்னா் சுவாமிக்கு தீப ஆராதனை காட்டப்பட்டது. இதில் திராளன பெண்கள் கலந்து கொண்டு முத்துமாரியம்மனை வழிபட்டு சென்றனா்.
    1
    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருணகிரிபட்டிணத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் உலக நண்மைக்காக திருவிளக்கு பூஜை வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் அப்பகுதியை சேர்ந்த திரளான பெண்கள் கலந்து கொண்டு ஸ்ரீ முத்துமாரியம்மனை வணங்கி சென்றனா்.
அருணகிரிபட்டிணத்தில் அமைந்துள்ள அருள்மிகு முத்துமாரியம்மன் ஆலயத்தில், அப்பகுதி பெண்கள் பங்கேற்ற திருவிளக்கு பூஜை வெகுசிறப்பாக நடைபெற்றது. முன்னதாக மூலவர் முத்துமாரியம்மனுக்கு லெட்சுமி அலங்காரம் நடைபெற்று சிறப்பு பூஜைகளும், தீப ஆராதனைகளும் நடைபெற்றன. பின்னர் கோயில் வளாகத்தில் ஏராளமாக பெண்கள் ஒன்று கூடி சிவச்சாரியார்கள் தலைமையில் 1001 திருவிளக்குகளை ஏற்றி பூஜை செய்து வழிபட்டனா். கணபதி பூஜையுடன் துவங்கிய விளக்கு பூஜையில் 1008 திருவிளக்கு போற்றி, மஹா லெட்சும் மந்திரங்கள் ஜெபித்து, குங்கும் மற்றும் பூ வினால் அர்ச்சனை செய்து உலக நண்மைக்காகவும், அனைவரும் நோய் நொடியில்லாமல் நீண்டநாள் மகிழ்வுடன் வாழ கூட்டு வழிபாடு நடத்தினார்கள். பின்னா் சுவாமிக்கு தீப ஆராதனை காட்டப்பட்டது. இதில் திராளன பெண்கள் கலந்து கொண்டு முத்துமாரியம்மனை வழிபட்டு சென்றனா்.
    user_Devakottaigani news
    Devakottaigani news
    சிவகங்கை, சிவகங்கை, தமிழ்நாடு•
    10 hrs ago
  • சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் காவல்துறையினரால் தாக்கப்பட்டு உயிரிழந்ததாக கூறப்படும் ஆகாஷின் வீட்டிற்கு தமிழ்நாடு கூட்டுறவு துறை அமைச்சர் பெரியகருப்பன் நேரில் சென்று அவரது பெற்றோர்களை நேற்று சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். தமிழ்நாடு அரசு சார்பில் ஆறு லட்ச ரூபாய்க்கான காசோலையை பெற்றோர்களிடம் வழங்கினார் இந்த சந்திப்பின் போது சிவகங்கை மாவட்ட ஆட்சியர் பொற்கொடி, மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி ரவிக்குமார், நகர்மன்ற தலைவர் மாரியப்பன் கென்னடி, திமுக நகர செயலாளர் பொன்னுச்சாமி உடனிருந்தனர்
    1
    சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் காவல்துறையினரால் தாக்கப்பட்டு உயிரிழந்ததாக கூறப்படும் ஆகாஷின் வீட்டிற்கு தமிழ்நாடு கூட்டுறவு துறை அமைச்சர் பெரியகருப்பன் நேரில் சென்று அவரது பெற்றோர்களை நேற்று சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். தமிழ்நாடு அரசு சார்பில் ஆறு லட்ச ரூபாய்க்கான காசோலையை பெற்றோர்களிடம்  வழங்கினார்
இந்த சந்திப்பின் போது சிவகங்கை மாவட்ட ஆட்சியர் பொற்கொடி, மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி ரவிக்குமார், நகர்மன்ற தலைவர் மாரியப்பன் கென்னடி, திமுக நகர செயலாளர் பொன்னுச்சாமி உடனிருந்தனர்
    user_Santhosh Kumar V
    Santhosh Kumar V
    பத்திரிகையாளர் மானாமதுரை, சிவகங்கை, தமிழ்நாடு•
    4 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.