அருணகிரிபட்டிணம் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் உலக நண்மைக்காக 1001 திருவிளக்கு பூஜை சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருணகிரிபட்டிணத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் உலக நண்மைக்காக திருவிளக்கு பூஜை வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் அப்பகுதியை சேர்ந்த திரளான பெண்கள் கலந்து கொண்டு ஸ்ரீ முத்துமாரியம்மனை வணங்கி சென்றனா். அருணகிரிபட்டிணத்தில் அமைந்துள்ள அருள்மிகு முத்துமாரியம்மன் ஆலயத்தில், அப்பகுதி பெண்கள் பங்கேற்ற திருவிளக்கு பூஜை வெகுசிறப்பாக நடைபெற்றது. முன்னதாக மூலவர் முத்துமாரியம்மனுக்கு லெட்சுமி அலங்காரம் நடைபெற்று சிறப்பு பூஜைகளும், தீப ஆராதனைகளும் நடைபெற்றன. பின்னர் கோயில் வளாகத்தில் ஏராளமாக பெண்கள் ஒன்று கூடி சிவச்சாரியார்கள் தலைமையில் 1001 திருவிளக்குகளை ஏற்றி பூஜை செய்து வழிபட்டனா். கணபதி பூஜையுடன் துவங்கிய விளக்கு பூஜையில் 1008 திருவிளக்கு போற்றி, மஹா லெட்சும் மந்திரங்கள் ஜெபித்து, குங்கும் மற்றும் பூ வினால் அர்ச்சனை செய்து உலக நண்மைக்காகவும், அனைவரும் நோய் நொடியில்லாமல் நீண்டநாள் மகிழ்வுடன் வாழ கூட்டு வழிபாடு நடத்தினார்கள். பின்னா் சுவாமிக்கு தீப ஆராதனை காட்டப்பட்டது. இதில் திராளன பெண்கள் கலந்து கொண்டு முத்துமாரியம்மனை வழிபட்டு சென்றனா்.
அருணகிரிபட்டிணம் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் உலக நண்மைக்காக 1001 திருவிளக்கு பூஜை சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருணகிரிபட்டிணத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் உலக நண்மைக்காக திருவிளக்கு பூஜை வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் அப்பகுதியை சேர்ந்த திரளான பெண்கள் கலந்து கொண்டு ஸ்ரீ முத்துமாரியம்மனை வணங்கி சென்றனா். அருணகிரிபட்டிணத்தில் அமைந்துள்ள அருள்மிகு முத்துமாரியம்மன் ஆலயத்தில், அப்பகுதி பெண்கள் பங்கேற்ற திருவிளக்கு பூஜை வெகுசிறப்பாக நடைபெற்றது. முன்னதாக மூலவர் முத்துமாரியம்மனுக்கு லெட்சுமி அலங்காரம் நடைபெற்று சிறப்பு பூஜைகளும், தீப ஆராதனைகளும் நடைபெற்றன. பின்னர் கோயில் வளாகத்தில் ஏராளமாக பெண்கள் ஒன்று கூடி சிவச்சாரியார்கள் தலைமையில் 1001 திருவிளக்குகளை ஏற்றி பூஜை செய்து வழிபட்டனா். கணபதி பூஜையுடன் துவங்கிய விளக்கு பூஜையில் 1008 திருவிளக்கு போற்றி, மஹா லெட்சும் மந்திரங்கள் ஜெபித்து, குங்கும் மற்றும் பூ வினால் அர்ச்சனை செய்து உலக நண்மைக்காகவும், அனைவரும் நோய் நொடியில்லாமல் நீண்டநாள் மகிழ்வுடன் வாழ கூட்டு வழிபாடு நடத்தினார்கள். பின்னா் சுவாமிக்கு தீப ஆராதனை காட்டப்பட்டது. இதில் திராளன பெண்கள் கலந்து கொண்டு முத்துமாரியம்மனை வழிபட்டு சென்றனா்.
- அமெரிக்கா, இஸ்ரேல் ஈரான் போரால் வர்த்தக சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தேவகோட்டை வாகன எரிவாயு நிரப்பும் |பங்க்கு உள்து அவற்றில் இன்று LPG கார்கள், ஆட்டோக்கள் நீண்ட வரிசையில் நின்று எரிவாயு நிரப்பி வந்தன. இந்நிலையில், எரிவாயு வரத்து இல்லாததால் பங்க்குகளும் தற்போது மூடப்பட்டுள்ளன.இதனால் எரிவாயுவை நிரப்ப முடியாமல் வாகனஓட்டுநர்கள் சிரமப்படுகின்றனர். அவர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் பெரும்பா லான ஆட்டோக்கள் எரிவாயு மூலமே இயக்கப்படுகின்றன. அது பெட்ரோல், டீசல் விலையைவிட குறைவு என்பதால் ஆட்டோ ஓட்டுநர்கள் எரிவாயுவைத்தான் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் எரிவாயு கிடைக்காததால் செய்வதறியாது தவித்து வருகின்றனர்.1
- சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நகராட்சிக்குட்பட்ட கிருஷ்ணராயபுரம் பகுதியைச் சேர்ந்த ஆகாஷ் டெலிசன் (28) கடந்த 8.3.2026 அன்று உயிரிழந்தார். இதையடுத்து தமிழக அரசு சார்பில் ரூ.7.50 லட்சம் நிவாரண நிதிக்கான காசோலையை கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் நேரில் வழங்கி, குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். மாவட்ட ஆட்சியர் கா.பொற்கொடி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழங்கப்படும் தீருதவித்தொகையின் முதல் கட்டமாக ரூ.6 லட்சத்திற்கான ஆணை ஏற்கனவே ஆகாஷின் தந்தை ராஜேஸ்கண்ணனிடம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. மேலும், வழக்கு உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், குற்றவாளிகள் மீது நீதிமன்ற வழிகாட்டுதல்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், குடும்பத்தின் வாழ்வாதார மேம்பாட்டிற்குத் தேவையான உதவிகள் வழங்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். இந்நிகழ்வில் வருவாய் கோட்டாட்சியர் தே.ஜெஃபி கிரேசியா, மானாமதுரை நகர்மன்ற தலைவர் மாரியப்பன் கென்னடி, வட்டாட்சியர் கிருஷ்ணகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.1
- மதுரை: மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக அறிவிக்கும் விழா இன்று நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர் ராம்மோகன், மதுரை எம்.பி. வெங்கடேசன் மற்றும் விருதுநகர் எம்.பி. மாணிக்கம் தாகூர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிகழ்வில் பேசிய வெங்கடேசன், "மிக நீண்ட போராட்டம் மற்றும் பயணத்தின் விளைவாக மதுரைக்கு மகுடம் சூட்டும் வரலாற்றுச் சிறப்புமிக்க நாள் இது" என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். இதற்காக உழைத்த முன்னாள் எம்.பி.க்கள் ஏ.ஜி.எஸ். ராம்பாபு, பி. மோகன், என்.எஸ்.வி. சித்தன் ஆகியோருக்கு நன்றி தெரிவித்தார். மேலும் தொழில் வர்த்தக சங்கம், மடிசியா மற்றும் சி.ஐ.ஐ நிர்வாகிகளுக்கும் அவர் தனது நன்றியைப் பகிர்ந்து கொண்டார். தென் தமிழகத்தின் வளர்ச்சிக்கு இது முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.1
- தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதால் தெற்கு வாசல் பகுதியில் மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் தமிழக காவல் துறையினர் இணைந்து நடத்திய போலீஸ் கொடி அணிவகுப்பு இன்று (மார்ச் .14) காலை தெற்கு வாசல் பகுதியில் உள்ள முக்கிய சாலைகளில் நடைபெற்றது. இந்த பேரணி உதவி காவல் ஆணையர் சந்திரலேகா தலைமையில் காவல் ஆய்வாளர்கள், உதவி காவல் ஆய்வாளர்கள், மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.1
- கூகுளின் அதிநவீன செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமான 'Gemini' (AI) இப்போது Google Maps உடன் முழுமையாக இணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், இனி நீங்கள் Maps-ல் குறிப்பிட்ட இடங்களைத் தேடும்போது, வெறும் வழியை மட்டும் காட்டாமல், அந்த இடம் தொடர்பான கூடுதல் தகவல்கள், மதிப்பாய்வுகள் மற்றும் Gemini AI-ன் பரிந்துரைகளையும் உடனுக்குடன் பெற முடியும். உதாரணமாக, "ஒரு நல்ல காபி கடை எங்கே இருக்கிறது?" என்று கேட்டால், அது உங்களுக்கு மிகச்சிறந்த கடையைப் பரிந்துரைப்பதோடு, ஏன் அந்த கடை சிறந்தது என்பதையும் விளக்கும். இந்த அப்டேட்டின் மற்றொரு சிறப்பம்சம், 'Immersive View' (3D வரைபடம்) தொழில்நுட்பம். இது, நீங்கள் செல்ல விரும்பும் இடத்தின் 3D காட்சியை மிகத் துல்லியமாகக் காட்டுகிறது. இதன் மூலம், குறிப்பிட்ட கட்டிடங்கள், தெருக்கள், மற்றும் அந்த இடத்தின் சூழல் எப்படி இருக்கும் என்பதை நேரில் பார்ப்பது போன்றே அனுபவிக்கலாம். மேலும், இந்த தொழில்நுட்பம் இப்போது வான்வழி காட்சிகளையும் (Aerial views) உள்ளடக்கியுள்ளதால், பயனர்கள் தாங்கள் விரும்பும் இடத்தின் ஒட்டுமொத்தப் பார்வையும் பெற முடியும். Google Maps-ன் இந்த Gemini AI மற்றும் 3D Immersive View அப்டேட், பயண அனுபவத்தை முற்றிலும் புதிய இடத்திற்கு எடுத்துச் சென்றுள்ளது. இனி தேடல் எளிமையாகவும், பரிந்துரைகள் துல்லியமாகவும், பயணம் மிகவும் நேர்த்தியாகவும் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இந்த புதிய அப்டேட் படிப்படியாக அனைத்து பயனர்களுக்கும் கிடைக்கத் தொடங்கும்.1
- திண்டுக்கல்லில் அமைச்சர் ஐ.பெரியசாமி செய்தியாளர் சந்திப்பின்போது ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்த பொழுது திமுக அவரை மிரட்டினார்கள் என்று ஆதவ் அர்ஜுனா கூறிய கருத்துக்கு அமைச்சர் ஐ.பெரியசாமி - : நாங்கள் யாரையும் மிரட்டவில்லை திமுக இயக்கத்தை பொருத்தவரையில் ஜனநாயகம் என்பது திமுகவில் தான் பார்க்க முடியும், யாரையும் மிரட்டுகின்ற தன்மையில் நாங்கள் அரசியல் செய்ததே இல்லை, மக்களை அன்பால் வளைத்து அரசியல் செய்கிறோம் தவிர யாரையும் மிரட்டினாங்கள் பேசுவதும் இல்லை அப்படி அரசியல் செய்ததும் இல்லை காங்கிரஸிடம் கெஞ்சி தான் கூட்டணியில் திமுக இருப்பதாக கூறுகிறார்கள் என்ற கேள்விக்கு நாங்கள் யாரையும் கெஞ்சவில்லை ஏற்கனவே ஒன்பது ஆண்டு காலமாக எந்த காலத்திலும் இல்லாத அளவிற்கு கூட்டணி நீடித்து வருகிறது 9 ஆண்டுகளாக கூட்டணி நீடிப்பது என்பது வரலாறு. தமிழ்நாட்டில் ஒவ்வொரு தேர்தலுக்கும் வரலாறு மாறும் ஆனால் தற்போது இந்த தேர்தலிலேயே கூட்டணி வந்துவிட்டது அடுத்த தேர்தலிலும் இந்தியா கூட்டணியுடன் தான் தேர்தலிலும் இந்தியா கூட்டணியில் தான் இருப்போம் 15 ஆண்டுகள் இந்தியா கூட்டணியில் எந்த பிரச்சனையும் இருக்கப் போவதில்லை, மேலும் இது சந்தர்ப்பவாத கூட்டணி அல்ல என்று தெரிவித்தார்1
- திருச்சியை சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் கோவி லில் உள்ள உண்டியல்களில் செலுத்தும் காணிக்கைகள், கோவில் நிர்வாகம் சார்பில் மாதமிருமுறை எண்ணப்படுவது வழக்கம். அதன் படி, இந்த மாதம் முதல்முறையாக நேற்று கோவில் அறங்காவலர் குழுத்தலைவர் வி.எஸ்.பி.இளங்கோவன், கோவில் இணை ஆணையர் சூரியநாராயணன், உதவி ஆணையர் லட்சுமணன், அறங்காவலர்கள் சுகந்தி ராஜசேகரன், பிச்சைமணி, லட்சுமணன், மண்ணச்சநல்லூர் சரக அறநிலையத்துறை ஆய்வாளர் சீனிவாசன் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் முன்னிலையில் உண்டியல்கள் திறக்கப்பட்டு, காணிக்கைகள் எண்ணப்பட்டன. இதில் ரூ.1கோடியே 25 லட்சத்து 58 ஆயிரத்து 563 ரொக்கமும், ஒரு கிலோ 6 கிராம் தங்கமும், 2 கிலோ 217 கிராம் வெள்ளியும், வெளிநாட்டு ரூபாய் நோட்டுகள் 131 மற்றும் வெளிநாட்டு நாணயங்கள் 862-ம் கிடைத்துள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.1
- சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருணகிரிபட்டிணத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் உலக நண்மைக்காக திருவிளக்கு பூஜை வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் அப்பகுதியை சேர்ந்த திரளான பெண்கள் கலந்து கொண்டு ஸ்ரீ முத்துமாரியம்மனை வணங்கி சென்றனா். அருணகிரிபட்டிணத்தில் அமைந்துள்ள அருள்மிகு முத்துமாரியம்மன் ஆலயத்தில், அப்பகுதி பெண்கள் பங்கேற்ற திருவிளக்கு பூஜை வெகுசிறப்பாக நடைபெற்றது. முன்னதாக மூலவர் முத்துமாரியம்மனுக்கு லெட்சுமி அலங்காரம் நடைபெற்று சிறப்பு பூஜைகளும், தீப ஆராதனைகளும் நடைபெற்றன. பின்னர் கோயில் வளாகத்தில் ஏராளமாக பெண்கள் ஒன்று கூடி சிவச்சாரியார்கள் தலைமையில் 1001 திருவிளக்குகளை ஏற்றி பூஜை செய்து வழிபட்டனா். கணபதி பூஜையுடன் துவங்கிய விளக்கு பூஜையில் 1008 திருவிளக்கு போற்றி, மஹா லெட்சும் மந்திரங்கள் ஜெபித்து, குங்கும் மற்றும் பூ வினால் அர்ச்சனை செய்து உலக நண்மைக்காகவும், அனைவரும் நோய் நொடியில்லாமல் நீண்டநாள் மகிழ்வுடன் வாழ கூட்டு வழிபாடு நடத்தினார்கள். பின்னா் சுவாமிக்கு தீப ஆராதனை காட்டப்பட்டது. இதில் திராளன பெண்கள் கலந்து கொண்டு முத்துமாரியம்மனை வழிபட்டு சென்றனா்.1