மதுரை விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக அறிவிக்கும் நிகழ்வு: வெங்கடேசன் எம்பி வாழ்த்து மதுரை: மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக அறிவிக்கும் விழா இன்று நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர் ராம்மோகன், மதுரை எம்.பி. வெங்கடேசன் மற்றும் விருதுநகர் எம்.பி. மாணிக்கம் தாகூர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிகழ்வில் பேசிய வெங்கடேசன், "மிக நீண்ட போராட்டம் மற்றும் பயணத்தின் விளைவாக மதுரைக்கு மகுடம் சூட்டும் வரலாற்றுச் சிறப்புமிக்க நாள் இது" என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். இதற்காக உழைத்த முன்னாள் எம்.பி.க்கள் ஏ.ஜி.எஸ். ராம்பாபு, பி. மோகன், என்.எஸ்.வி. சித்தன் ஆகியோருக்கு நன்றி தெரிவித்தார். மேலும் தொழில் வர்த்தக சங்கம், மடிசியா மற்றும் சி.ஐ.ஐ நிர்வாகிகளுக்கும் அவர் தனது நன்றியைப் பகிர்ந்து கொண்டார். தென் தமிழகத்தின் வளர்ச்சிக்கு இது முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.
மதுரை விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக அறிவிக்கும் நிகழ்வு: வெங்கடேசன் எம்பி வாழ்த்து மதுரை: மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக அறிவிக்கும் விழா இன்று நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர் ராம்மோகன், மதுரை எம்.பி. வெங்கடேசன் மற்றும் விருதுநகர் எம்.பி. மாணிக்கம் தாகூர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிகழ்வில் பேசிய வெங்கடேசன், "மிக நீண்ட போராட்டம் மற்றும் பயணத்தின் விளைவாக மதுரைக்கு மகுடம் சூட்டும் வரலாற்றுச் சிறப்புமிக்க நாள் இது" என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். இதற்காக உழைத்த முன்னாள் எம்.பி.க்கள் ஏ.ஜி.எஸ். ராம்பாபு, பி. மோகன், என்.எஸ்.வி. சித்தன் ஆகியோருக்கு நன்றி தெரிவித்தார். மேலும் தொழில் வர்த்தக சங்கம், மடிசியா மற்றும் சி.ஐ.ஐ நிர்வாகிகளுக்கும் அவர் தனது நன்றியைப் பகிர்ந்து கொண்டார். தென் தமிழகத்தின் வளர்ச்சிக்கு இது முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.
- சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் காவல்துறையினரால் தாக்கப்பட்டு உயிரிழந்ததாக கூறப்படும் ஆகாஷின் வீட்டிற்கு தமிழ்நாடு கூட்டுறவு துறை அமைச்சர் பெரியகருப்பன் நேரில் சென்று அவரது பெற்றோர்களை நேற்று சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். தமிழ்நாடு அரசு சார்பில் ஆறு லட்ச ரூபாய்க்கான காசோலையை பெற்றோர்களிடம் வழங்கினார் இந்த சந்திப்பின் போது சிவகங்கை மாவட்ட ஆட்சியர் பொற்கொடி, மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி ரவிக்குமார், நகர்மன்ற தலைவர் மாரியப்பன் கென்னடி, திமுக நகர செயலாளர் பொன்னுச்சாமி உடனிருந்தனர்1
- சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருணகிரிபட்டிணத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் உலக நண்மைக்காக திருவிளக்கு பூஜை வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் அப்பகுதியை சேர்ந்த திரளான பெண்கள் கலந்து கொண்டு ஸ்ரீ முத்துமாரியம்மனை வணங்கி சென்றனா். அருணகிரிபட்டிணத்தில் அமைந்துள்ள அருள்மிகு முத்துமாரியம்மன் ஆலயத்தில், அப்பகுதி பெண்கள் பங்கேற்ற திருவிளக்கு பூஜை வெகுசிறப்பாக நடைபெற்றது. முன்னதாக மூலவர் முத்துமாரியம்மனுக்கு லெட்சுமி அலங்காரம் நடைபெற்று சிறப்பு பூஜைகளும், தீப ஆராதனைகளும் நடைபெற்றன. பின்னர் கோயில் வளாகத்தில் ஏராளமாக பெண்கள் ஒன்று கூடி சிவச்சாரியார்கள் தலைமையில் 1001 திருவிளக்குகளை ஏற்றி பூஜை செய்து வழிபட்டனா். கணபதி பூஜையுடன் துவங்கிய விளக்கு பூஜையில் 1008 திருவிளக்கு போற்றி, மஹா லெட்சும் மந்திரங்கள் ஜெபித்து, குங்கும் மற்றும் பூ வினால் அர்ச்சனை செய்து உலக நண்மைக்காகவும், அனைவரும் நோய் நொடியில்லாமல் நீண்டநாள் மகிழ்வுடன் வாழ கூட்டு வழிபாடு நடத்தினார்கள். பின்னா் சுவாமிக்கு தீப ஆராதனை காட்டப்பட்டது. இதில் திராளன பெண்கள் கலந்து கொண்டு முத்துமாரியம்மனை வழிபட்டு சென்றனா்.1
- திண்டுக்கல்லில் தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டுக் கழக மாநில பொதுக்குழு கூட்டம் மாநில தலைவர் மணி தலைமையில் மாநில பொது செயலாளர் ராமகிருஷ்ணன் முன்னிலையில் நடைபெற்றது. இந்த மாநில பொதுக்குழு கூட்டத்தில் மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய நகர நிர்வாகிகள், இளைஞரணி நிர்வாகிகள் என 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்த பொதுக்குழு கூட்டத்தில் தொட்டிய நாயக்கர் சமூகத்திற்கு வருகின்ற 2026-ம் சட்டமன்றத் தேர்தலில் வேட்பாளராக போட்டியிடும் வாய்ப்பை அரசியல் கட்சிகளின் சார்பில் வழங்க வேண்டும், தமிழ்நாடு அரசு ராஜகம்பள தொட்டிய நாயக்கர் சீரமைப்பு நலவாரியம் ஏற்படுத்தி தர வேண்டும் உள்ளிட்ட 10- தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன1
- தொடர்ந்து சரிந்து வரும் வைகைஅணையின் நீர்மட்டம் 36.65 அடியாக உள்ளது . தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே அமைந்துள்ள மொத்தம் 71 அடி உயரம் கொண்ட வைகை அணை. தேனி மதுரை திண்டுக்கல் சிவகங்கை ராமநாதபுரம் ஆகிய ஐந்து தென் மாவட்டங்களின் குடிநீருக்கும் விவசாயத்திற்கும் முக்கிய ஆதாரமாக விளங்கி வருகிறது. இந்நிலையில் வைகை அணையின் நீர்பிடிப்பு பகுதிகளான வீரபாண்டி, கொட்டக்குடி, மூல வைகை உள்ளிட்ட ஆறுகளில் போதிய மழை இன்றி வறண்டு காணப்படுவதால் வைகை அணைக்கான நீர்வரத்து முற்றிலும் இல்லாமல் போனது. கடந்த மூன்று ஆண்டுகளாக இல்லாத வகையில் இந்த ஆண்டு அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வரும் நிலையில் அணைக்கு நீர்வரத்தும் முற்றிலும் இல்லாமல் போனதால் ஐந்து மாவட்ட வைகை பாசன விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். தற்போதைய நிலவரப்படி வைகை அணையின் நீர்மட்டம் 36.65 அடியாகவும், அணையில் நீர் இருப்பு 707 மில்லியன் கன அடியாகவும் உள்ளது. அணையில் இருந்து மதுரை தேனி மாவட்ட குடிநீருக்காக மட்டும் வினாடிக்கு 72 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.1
- தமிழக வெற்றி கழகத்தின் மூன்றாம் ஆண்டு துவக்க விழாவினை முன்னிட்டு மாவட்ட தொண்டர் அணி தலைமை சார்பாக இன்று பெரியகுளம் நகர் பகுதியில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் அக்கட்சியின் வடக்கு மாவட்ட செயலாளர் பிரகாஷ் கலந்து கொண்டு 200க்கும் மேற்பட்டோருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.1
- திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள தலையூத்து அருவி அருகே அமைந்துள்ள அருள்மிகு நீல வரதராஜ பெருமாள் திருக்கோவிலில் இன்று ரெட்டியபட்டி மக்கள் உலக நன்மை வேண்டியும், உலகில் போர் தணிந்து அமைதி நிலவும், உரிய காலத்தில் மழை பெய்து விவசாயம் செழிக்கவும் திருக்கோவிலில் யாகம் நடத்தி பொங்கள் வைத்து வழிபாடு செய்தனர்2
- 2626ம் ஆண்டுக்கான தமிழக சட்டசபை தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. அதற்கான பணிகளில் மத்திய, மாநில தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் காரைக்குடி சட்டமன்ற தொகுதியில் பொதுமக்கள் பயமின்றி வாக்களிக்கவும், பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தேவகோட்டை உட்கோட்ட காவல் துறை மற்றும் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் போலீசார் இணைந்து கொடி அணிவகுப்பு நடத்தினர். தேவகோட்டை நகரில் முக்கிய வீதிகளில் வலம் வந்து நிறைவடைந்தது. இந்த கொடி அணிவகுப்பின் போது கையில் துப்பாக்கி ஏந்தியபடி எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் பேரணியாக வந்தனர்.1
- அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்ற கழகம் என்ற கட்சியின் பெயரையும், தென்னந்தோப்பு சின்னத்தையும் சசிகலா அறிமுகப்படுத்திய உடன் மகிழ்ச்சியடைந்த சின்னம்மாவின் விசுவாசிகள், தேனி மாவட்டம் போடி உள்ள நிர்வாகிகள் அப்பகுதியில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து பின்னர் அப்பகுதியில் உள்ள பொது மக்களுக்கு இனிப்புகளை வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் மேலும் கட்சி பெயர் மற்றும் சின்னங்கள் அறிவித்ததை தொடர்ந்து வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரங்களை செய்து வெற்றி பெற செய்வோம் என நிர்வாகிகள் தொண்டர்கள் தெரிவித்துள்ளனர்1
- திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் -தாராபுரம் சாலையில் இன்று வரும் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர்களுக்கு பரிசு பொருட்கள் மற்றும் பணங்கள் வாகனங்களில் எடுத்துச் செல்லப்படுகிறதா? என துணை ராணுவ படையினர் மற்றும் காவல்துறையினர் இணைந்து தீவிர வாகன பரிசோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.1