logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

வெளிநாட்டு வேலைக்காக பணம் கொடுத்தவர்கள் புகார் அளிக்கலாம் *பணம் கொடுத்து ஏமாந்த பாதிக்கப்பட்டோர் புகார் அளிக்கலாம்...* * வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக 130 நபர்களிடம் சுமார் ஒரு கோடியே ஐம்பது லட்சம் ரூபாய் ஏமாற்றிய நபர் கைது. * மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் R. ஸ்டாலின் IPS அவர்கள் உத்தரவில் புகார் அளித்த 24 மணி நேரத்தில் குற்றவாளியை கைது செய்து மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை... * வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக பணத்தை பெற்றுக்கொண்டு வேலை வாங்கி தராமலும் பணத்தை திருப்பி தராமல் ஏமாற்றியதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் R.ஸ்டாலின் IPS அவர்களிடம் பாதிக்கப்பட்டவர்கள் சிலர் புகார் மனு ஒன்றை அளித்தனர். * அந்த புகார் மனு மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவிட்டார்கள். * உத்தரவின்படி காவல்துணை கண்காணிப்பாளர் தலைமையில் குற்றப்பிரிவு போலீசார் விசாரணையை தொடங்கினர். * இது சம்பந்தமாக Cr.No 04/2026 U/s 61(2), 318(4) BNS வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டது. * விசாரணையில் மாதவபுரம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த ராம்குமார் என்பவரது மகன் சந்தோஷ் (31) என்பவர் மகாதானபுரத்தில் Sanade man power consultancy என்ற பெயரில் நிறுவனத்தை தொடங்கி... * துபாய் ரஃஸ் அல்-கைமா ல் உள்ள Skanda International Fz LLE, Namasya International Fz LLE, Cosmic Energy Fz LLE போன்ற பெயர் கொண்ட தனது நிறுவனங்களில் வேலை வாங்கி தருவதாக... * சுமார் 130 நபர்களிடம் இரண்டு லட்சம் முதல் மூன்று லட்சம் வரை பணம் பெற்றுக்கொண்டு வேலைக்கு அனுப்பாமலும் சிலரை விசிட்டிங் விசாவில் வெளிநாட்டிற்கு அனுப்பி வேலைவாங்கி தராமல் திருப்பி அனுப்பியதும் விசாரணையில் தெரியவந்தது. * இவ்வாறு 130 பேரிடம் பணம் பெற்றுக்கொண்டு சுமார் ஒரு கோடியே ஐம்பது லட்சம் ரூபாய் ஏமாற்றியது தெரியவந்தது. * மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் மேற்படி குற்றவாளி சந்தோஷ் என்பவரை மதுரையில் வைத்து கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். * புகார் அளித்த 24 மணி நேரத்திற்குள் குற்றவாளி கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. * மேற்கண்ட நபரிடமோ அல்லது நிறுவனத்திடமோ யாரேனும் பணம் கொடுத்து ஏமாந்திருந்தால் மாவட்ட குற்றப்பிரிவில் நேரடியாகவோ அல்லது 9498196976 என்ற எண்ணிற்க்கோ தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். * மாவட்டத்தில் உள்ள இளைஞர்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்பின் உண்மை தன்மை மற்றும் ஏஜென்ட்டுகள் குறித்து ஏதேனும் சந்தேகம் இருந்தால் கன்னியாகுமரி மாவட்ட காவல்துறையின் 7010363173 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். * இது போன்ற மோசடிகளில் சிக்கி கொண்டால் கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாள்ர் அவர்களின் வாட்சப் எண்ணிலோ (8122223319) அல்லது நேரடியாகவோ புகார் அளிக்கலாம். * வேலை வாங்கி தருவதாக பணம் பெற்று ஏமாற்றுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தொடர்ச்சியாக இச்செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.R .ஸ்டாலின் IPS அவர்கள் எச்சரித்துள்ளார்கள்

1 hr ago
user_NAMADHU ARASU(Krishna M Com)
NAMADHU ARASU(Krishna M Com)
எழும்பூர், சென்னை, தமிழ்நாடு•

More news from தமிழ்நாடு and nearby areas
  • Post by NAMADHU ARASU(Krishna M Com)
    1
    Post by NAMADHU ARASU(Krishna M Com)
    user_NAMADHU ARASU(Krishna M Com)
    NAMADHU ARASU(Krishna M Com)
    எழும்பூர், சென்னை, தமிழ்நாடு•
    10 hrs ago
  • சென்னை ஆர்.கே நகர் தொகுதி 40வது வார்டுக்குட்பட்ட இளையா தெருவில் நீண்ட நாட்களாக சாலையோரம் கார்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனை தீர்வுக்கு கொண்டு வரும் விதமாக கார்களில் மாநகராட்சி நோட்டீஸ் ஒட்டி அபராதம் விதித்தது. ஆனால் கார் உரிமையாளர்கள் மதிக்காமல் நீண்ட காலமாக நிறுத்தி வைத்துள்ளனர். இதற்கு போக்குவரத்து போலீசார் நிரந்தர தீர்வு காண வேண்டுமென சமூக ஆர்வலர்கள் இன்று கோரிக்கை விடுத்தனர்.
    1
    சென்னை ஆர்.கே நகர் தொகுதி 40வது வார்டுக்குட்பட்ட இளையா தெருவில் நீண்ட நாட்களாக சாலையோரம் கார்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனை தீர்வுக்கு கொண்டு வரும் விதமாக கார்களில் மாநகராட்சி நோட்டீஸ் ஒட்டி அபராதம் விதித்தது. ஆனால் கார் உரிமையாளர்கள் மதிக்காமல் நீண்ட காலமாக நிறுத்தி வைத்துள்ளனர். இதற்கு போக்குவரத்து போலீசார் நிரந்தர தீர்வு காண வேண்டுமென  சமூக ஆர்வலர்கள் இன்று கோரிக்கை விடுத்தனர்.
    user_Reporter M.Krishna Kumar
    Reporter M.Krishna Kumar
    Local News Reporter திருவொற்றியூர், சென்னை, தமிழ்நாடு•
    16 hrs ago
  • நட்சத்திர தொகுதி காத்திருங்கள் வெற்றியை மட்டுமே சந்திக்கப் போகும் சோழிங்கநல்லூர் தொகுதி. ஒருமுறை தவறிவிட்டது இந்த முறை. எங்கள் தொகுதியின் மக்கள் முடிவு பண்ணி விட்டார்கள் வெற்றியை நோக்கி மக்கள் பணி என்றும் என் தலைவன்... #KPK #சென்னைபுறநகர்மாவட்டம் #சோழிங்கநல்லூர்
    1
    நட்சத்திர தொகுதி 
காத்திருங்கள் வெற்றியை மட்டுமே சந்திக்கப் போகும் சோழிங்கநல்லூர் தொகுதி. ஒருமுறை தவறிவிட்டது இந்த முறை. எங்கள் தொகுதியின் மக்கள் முடிவு பண்ணி விட்டார்கள் வெற்றியை நோக்கி மக்கள் பணி என்றும் என் தலைவன்...
#KPK
#சென்னைபுறநகர்மாவட்டம் 
#சோழிங்கநல்லூர்
    user_அரசு மலர் ஆசிரியர் V.பாலமுருகன்
    அரசு மலர் ஆசிரியர் V.பாலமுருகன்
    சோழிங்கநல்லூர், சென்னை, தமிழ்நாடு•
    17 hrs ago
  • தமிழ் நாடு அரசு சார்பில் மறைந்த தலைசிறந்த தமிழ் திரைப்படம் பாடகர்கள் மற்றும் இசை மேதைகள் பெயர் பலகை திறந்து வைத்து மரியாதை செய்த வீடியோ தொகுப்பு உங்கள் பார்வைக்காக இதோ பார்த்து மகிழ்வோம்.
    1
    தமிழ் நாடு அரசு சார்பில் மறைந்த தலைசிறந்த தமிழ் திரைப்படம் பாடகர்கள் மற்றும் இசை மேதைகள் பெயர் பலகை திறந்து வைத்து மரியாதை செய்த வீடியோ தொகுப்பு உங்கள் பார்வைக்காக இதோ பார்த்து மகிழ்வோம்.
    user_AMUTHAM TV அமுதம் TV வாஞ்சியார
    AMUTHAM TV அமுதம் TV வாஞ்சியார
    Newspaper advertising department தாம்பரம், செங்கல்பட்டு, தமிழ்நாடு•
    17 hrs ago
  • மகளிர் உரிமைத்தொகை வாங்குகின்ற குடும்பங்களில் விதவை பென்ஷன் ,முதியோர் தொகை உள்ளிட்ட அனைத்தும் நிறுத்தப்பட்டதால் 70 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் அவதி. அப்பாவும் மகனும் மக்களை ஏமாற்றுகிறார்கள் -  முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி  ________ காஞ்சிபுரம் மாநகர தெற்கு பகுதி செயலாளர் கோல்ட் ரவி அவர்கள் தலைமையில்,  காஞ்சிபுரம் கீழ்கேட் ஆலடி பிள்ளையார் கோயில் தெரு  ஐயப்ப சுவாமி கோயில் அருகில், மக்கள் விரோத விடியா திமுக ஆட்சியின் அவலங்களை மக்கள் மன்றத்தில் முன்னெடுத்து வைக்கும் தெருமுனை பிரச்சார கூட்டம் நடைபெற்றது. மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான வி.சோமசுந்தரம் அவர்கள் முன்னிலையில் நடைபெற்ற இந்த தெருமுனை பிரச்சார கூட்டத்தில் கழக மகளிர் அணி செயலாளரும், கழக செய்தி தொடர்பாளரும், முன்னாள் அமைச்சருமான பா.வளர்மதி அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். பா.வளர்மதி அவர்கள் பேசும்போது, 2 லட்சம் ரேஷன் கார்டுகள் உள்ள இடத்தில் ஒரு கோடியே 31 லட்சம் பெண்களுக்கு மட்டுமே மக்கள் உரிமைத்தொகை வழங்கப்படுகின்றது . கிட்டத்தட்ட  70 லட்சம் மக்களுக்கு முதியோர் பென்ஷன், விதவை பென்ஷன் உள்ளிட்ட அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர்.  முதல்வர் அப்பா ஸ்டாலின் மகன் உதயநிதி சேர்ந்து கொண்டு பொதுமக்களை ஏமாற்றுகின்றர்கள். அவர்களை நம்ப வேண்டாம் என பொதுமக்களிடம் எடுத்துரைத்தார். முன்னதாக வி.சோமசுந்தரம் அவர்கள் பேசும்போது, கோடை காலம் என்பது பொதுவானது. ஒரு கோடியே 31 லட்சம்  பெண்களுக்கு மட்டுமா கோடை காலம்? அனைத்து பெண்களுக்கும் தானே கோடை காலம் அப்படி இருக்கும் போது அனைவருக்கும் தானே இரண்டாயிரம் ரூபாய் கொடுத்து இருக்க வேண்டும்! முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய கடமையை ஒழுங்காக செய்யவில்லை என பேசினார். கூட்டத்தில் கலந்து கொண்ட பெண்களுக்கு பட்டுசேலைகளும் பிரிஞ்சி சாதம்,  புளியோதரை சாதம் போன்ற அன்னதானம் வழங்கப்பட்டது. இந்தக் கூட்டத்தில் கழக அமைப்பு செயலாளர்கள் வாலாஜாபாத் பா கணேசன், மைதிலி திருநாவுக்கரசு,  அனைத்துலக எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் காஞ்சி பன்னீர்செல்வம் , மாவட்ட அவைத்தலைவர் குன்னவாக்கம் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட கழக பொருளாளர் அப்பு என்ற வள்ளிநாயகம், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் கே யு எஸ் சோமசுந்தரம் உள்ளிட்ட ஏராளமான கழகத்தினர் கலந்து கொண்டனர்.
    1
    மகளிர் உரிமைத்தொகை வாங்குகின்ற குடும்பங்களில் விதவை பென்ஷன் ,முதியோர் தொகை உள்ளிட்ட அனைத்தும் நிறுத்தப்பட்டதால் 70 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் அவதி. அப்பாவும் மகனும் மக்களை ஏமாற்றுகிறார்கள் -  முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி 
________
காஞ்சிபுரம் மாநகர தெற்கு பகுதி செயலாளர் கோல்ட் ரவி அவர்கள் தலைமையில்,  காஞ்சிபுரம் கீழ்கேட் ஆலடி பிள்ளையார் கோயில் தெரு  ஐயப்ப சுவாமி கோயில் அருகில், மக்கள் விரோத விடியா திமுக ஆட்சியின் அவலங்களை மக்கள் மன்றத்தில் முன்னெடுத்து வைக்கும்
தெருமுனை பிரச்சார கூட்டம் நடைபெற்றது.
மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான வி.சோமசுந்தரம் அவர்கள் முன்னிலையில் நடைபெற்ற இந்த தெருமுனை பிரச்சார கூட்டத்தில் கழக மகளிர் அணி செயலாளரும், கழக செய்தி தொடர்பாளரும், முன்னாள் அமைச்சருமான பா.வளர்மதி அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
பா.வளர்மதி அவர்கள் பேசும்போது, 2 லட்சம் ரேஷன் கார்டுகள் உள்ள இடத்தில் ஒரு கோடியே 31 லட்சம் பெண்களுக்கு மட்டுமே மக்கள் உரிமைத்தொகை வழங்கப்படுகின்றது . கிட்டத்தட்ட  70 லட்சம் மக்களுக்கு முதியோர் பென்ஷன், விதவை பென்ஷன் உள்ளிட்ட அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர்.  முதல்வர் அப்பா ஸ்டாலின் மகன் உதயநிதி சேர்ந்து கொண்டு பொதுமக்களை ஏமாற்றுகின்றர்கள். அவர்களை நம்ப வேண்டாம் என பொதுமக்களிடம் எடுத்துரைத்தார்.
முன்னதாக வி.சோமசுந்தரம் அவர்கள் பேசும்போது, கோடை காலம் என்பது பொதுவானது. ஒரு கோடியே 31 லட்சம்  பெண்களுக்கு மட்டுமா கோடை காலம்? அனைத்து பெண்களுக்கும் தானே கோடை காலம் அப்படி இருக்கும் போது அனைவருக்கும் தானே இரண்டாயிரம் ரூபாய் கொடுத்து இருக்க வேண்டும்! முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய கடமையை ஒழுங்காக செய்யவில்லை என பேசினார்.
கூட்டத்தில் கலந்து கொண்ட பெண்களுக்கு பட்டுசேலைகளும் பிரிஞ்சி சாதம்,  புளியோதரை சாதம் போன்ற அன்னதானம் வழங்கப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் கழக அமைப்பு செயலாளர்கள் வாலாஜாபாத் பா கணேசன், மைதிலி திருநாவுக்கரசு,  அனைத்துலக எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் காஞ்சி பன்னீர்செல்வம் , மாவட்ட அவைத்தலைவர் குன்னவாக்கம் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட கழக பொருளாளர் அப்பு என்ற வள்ளிநாயகம், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் கே யு எஸ் சோமசுந்தரம் உள்ளிட்ட ஏராளமான கழகத்தினர் கலந்து கொண்டனர்.
    user_E.LAKSHMI KANTHAN
    E.LAKSHMI KANTHAN
    பத்திரிகையாளர் காஞ்சிபுரம், காஞ்சிபுரம், தமிழ்நாடு•
    2 hrs ago
  • ஆதனூர் பகுதியில் மல்லிகை கடை ஒன்றில் பேரிச்சம் பழம் திருடிய இளைஞரின் சிசிடிவி காணொளி வெளியாகியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் மணிமங்கலம் அருகே ஆதனூர் பகுதியைச் சேர்ந்தவர் பலராமன். இவர் அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் இவரது கடைக்கு பொருட்களை வாங்குவது போல வந்த இளைஞர் ஒருவர், கடையில் இருந்தவரிடம் இரண்டு மேகி பாக்கெட்கள் கொடுக்கும்படி கேட்டுள்ளார். பின்னர், கடை உரிமையாளர் உள்ளே சென்று மேகி பாக்கெட்டுகளை எடுத்து வர சென்ற சமயத்தில், கடையின் மேஜை மீது அடுக்கி வைக்கப்பட்டிருந்த பேரிச்சம்பழம் பாக்ஸை திருடி எடுத்து, இடுப்பில் சொருகிக் கொண்டு வாங்கிய மேகி பாக்கெட்களுக்கு கூகுள் பேவில் பணத்தை செலுத்தி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இது குறித்து கடை உரிமையாளர் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், இளைஞர் கைவரிசை காட்டியது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக மணிமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்படாத நிலையில், கடையில் பேரிச்சம் பழம் திருடிய இளைஞரின் சிசிடிவி காணொளி சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளதோடு , வைரலாகி வருகிறது.
    1
    ஆதனூர் பகுதியில் மல்லிகை கடை ஒன்றில் பேரிச்சம் பழம் திருடிய இளைஞரின் சிசிடிவி காணொளி வெளியாகியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் மணிமங்கலம் அருகே ஆதனூர் பகுதியைச் சேர்ந்தவர் பலராமன். இவர் அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் இவரது கடைக்கு பொருட்களை வாங்குவது போல வந்த இளைஞர் ஒருவர், கடையில் இருந்தவரிடம் இரண்டு மேகி பாக்கெட்கள் கொடுக்கும்படி கேட்டுள்ளார். பின்னர், கடை உரிமையாளர் உள்ளே சென்று மேகி  பாக்கெட்டுகளை எடுத்து வர சென்ற சமயத்தில், கடையின் மேஜை மீது அடுக்கி வைக்கப்பட்டிருந்த பேரிச்சம்பழம் பாக்ஸை திருடி எடுத்து, இடுப்பில் சொருகிக் கொண்டு வாங்கிய மேகி பாக்கெட்களுக்கு கூகுள் பேவில் பணத்தை செலுத்தி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இது குறித்து கடை உரிமையாளர் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், இளைஞர் கைவரிசை காட்டியது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக மணிமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்படாத நிலையில், கடையில் பேரிச்சம் பழம் திருடிய இளைஞரின் சிசிடிவி காணொளி சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளதோடு , வைரலாகி வருகிறது.
    user_Venkat
    Venkat
    Local News Reporter காஞ்சிபுரம், காஞ்சிபுரம், தமிழ்நாடு•
    18 hrs ago
  • ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக
    1
    ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக
    user_Vinayagam Vinayagam
    Vinayagam Vinayagam
    Real Estate Agent ஆற்காடு, ராணிப்பேட்டை, தமிழ்நாடு•
    6 hrs ago
  • ஸ்ரீபெரும்புதூரில் புதிய டிரைலர் மற்றும் டிரக் பாடி உற்பத்தி ஆலை திறப்பு காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் புதிய உற்பத்தி ஆலையை தொடங்கியுள்ளது. சுமார் 15 ஏக்கரில் அமைந்துள்ள இந்த ஆலை, மாதத்திற்கு 800 யூனிட்டுகள் வரை உற்பத்தி செய்யும் திறன் கொண்டது. உயர் தொழில்நுட்ப உபகரணங்களுடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த வசதி, நிறுவனத்தின் உற்பத்தி திறனை அதிகரித்து, உள்கட்டமைப்பு மற்றும் போக்குவரத்து துறைகளின் தேவைகளை பூர்த்தி செய்ய உதவும் என நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த புதிய ஆலை மூலம் உள்ளூர் வேலைவாய்ப்புகளும் அதிகரிக்கும் என கூறப்படுகிறது. தரமான தயாரிப்புகள் மற்றும் வேகமான விநியோகம் வழங்கும் நோக்கில் இந்த விரிவாக்கம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தியாவில் டிரைலர் உற்பத்தியில் புதிய தரத்தை நிர்ணயிக்கும் முயற்சியாக இது பார்க்கப்படுகிறது. ஆலை திறப்பு விழாவில் தொழில் துறை பிரதிநிதிகள் பலரும் கலந்து கொண்டனர்.
    1
    ஸ்ரீபெரும்புதூரில் புதிய டிரைலர் மற்றும் டிரக் பாடி உற்பத்தி ஆலை திறப்பு
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் புதிய உற்பத்தி ஆலையை தொடங்கியுள்ளது.
சுமார் 15 ஏக்கரில் அமைந்துள்ள இந்த ஆலை, மாதத்திற்கு 800 யூனிட்டுகள் வரை உற்பத்தி செய்யும் திறன் கொண்டது. உயர் தொழில்நுட்ப உபகரணங்களுடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த வசதி, நிறுவனத்தின் உற்பத்தி திறனை அதிகரித்து, உள்கட்டமைப்பு மற்றும் போக்குவரத்து துறைகளின் தேவைகளை பூர்த்தி செய்ய உதவும் என நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்த புதிய ஆலை மூலம் உள்ளூர் வேலைவாய்ப்புகளும் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.
தரமான தயாரிப்புகள் மற்றும் வேகமான விநியோகம் வழங்கும் நோக்கில் இந்த விரிவாக்கம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்தியாவில் டிரைலர் உற்பத்தியில் புதிய தரத்தை நிர்ணயிக்கும் முயற்சியாக இது பார்க்கப்படுகிறது.
ஆலை திறப்பு விழாவில் தொழில் துறை பிரதிநிதிகள் பலரும் கலந்து கொண்டனர்.
    user_Venkat
    Venkat
    Local News Reporter காஞ்சிபுரம், காஞ்சிபுரம், தமிழ்நாடு•
    18 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.