logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

கரூரில் நிம்மதியைத் தேடும் ரங்கா கார்டன், ஜே.ஜே. நகர் மக்கள் – கண்ணீருடன் மனு கரூர், ஆகஸ்ட் 26: தாந்தோணிமலை ஸ்ரீ கல்யாண வெங்கடரமண சுவாமி திருக்கோவில் அருகே உள்ள ரங்கா கார்டன் மற்றும் ஜே.ஜே. நகர் பகுதிகளில் வசிக்கும் சுமார் 200 குடும்பங்கள், தங்களது குடியிருப்புகள் தொடர்பான வழக்கால் அச்சத்தில் உள்ளதாக தெரிவித்துள்ளனர். பல ஆண்டுகளாக பத்திரப் பதிவு செய்யப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் வீடுகள் கட்டி வசித்து வருவதாக கூறும் பொதுமக்கள், கோவில் நிர்வாகம் தொடர்ந்துள்ள வழக்கால் வாழ்வாதாரமும், குழந்தைகளின் எதிர்காலமும் பாதிக்கப்படும் அச்சம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு, கோவில் நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு, நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை வாபஸ் பெற்று சுமுகமான சட்டப்பூர்வ தீர்வு வழங்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழக வெற்றிக் கழக ஆட்சி அமைந்த 100 நாட்களில் பலமுறை மாவட்ட ஆட்சியரிடமும், தமிழக முதலமைச்சரிடமும் மனு அளித்துள்ளதாக கூறியுள்ள மக்கள், தங்களது கண்ணீர் கோரிக்கைக்கு விரைவில் தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் காத்திருக்கின்றனர்.

6 hrs ago
user_Karur Wood's Tv
Karur Wood's Tv
Photographer கரூர், கரூர், தமிழ்நாடு•
6 hrs ago
9734fffd-50bf-4c7a-927a-6bc24849b129

கரூரில் நிம்மதியைத் தேடும் ரங்கா கார்டன், ஜே.ஜே. நகர் மக்கள் – கண்ணீருடன் மனு கரூர், ஆகஸ்ட் 26: தாந்தோணிமலை ஸ்ரீ கல்யாண வெங்கடரமண சுவாமி திருக்கோவில் அருகே உள்ள ரங்கா கார்டன் மற்றும் ஜே.ஜே. நகர் பகுதிகளில் வசிக்கும் சுமார் 200 குடும்பங்கள், தங்களது குடியிருப்புகள் தொடர்பான வழக்கால் அச்சத்தில் உள்ளதாக தெரிவித்துள்ளனர். பல ஆண்டுகளாக பத்திரப் பதிவு செய்யப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் வீடுகள் கட்டி வசித்து வருவதாக கூறும் பொதுமக்கள், கோவில் நிர்வாகம் தொடர்ந்துள்ள வழக்கால் வாழ்வாதாரமும், குழந்தைகளின் எதிர்காலமும் பாதிக்கப்படும் அச்சம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு, கோவில் நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு, நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை வாபஸ் பெற்று சுமுகமான சட்டப்பூர்வ தீர்வு வழங்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழக வெற்றிக் கழக ஆட்சி அமைந்த 100 நாட்களில் பலமுறை மாவட்ட ஆட்சியரிடமும், தமிழக முதலமைச்சரிடமும் மனு அளித்துள்ளதாக கூறியுள்ள மக்கள், தங்களது கண்ணீர் கோரிக்கைக்கு விரைவில் தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் காத்திருக்கின்றனர்.

More news from Dindigul and nearby areas
  • திண்டுக்கல் பழனி சாலை வசந்த் அண்ட் கோ அருகே உள்ள திருமண மஹால்களில் ஒவ்வொரு முறையும் திருமணம் மற்றும் முக்கிய நிகழ்ச்சி நடக்கும்போது சாலை முழுவதும் பட்டாசு கொளுத்தி அவை தீயிட்டு எழுவதால் அங்கு விபத்து ஏற்படும் ஆபத்து ஏற்படுகிறது காவல்துறையினர் தொடர்ந்து கவனித்து அவைகளை அப்புறப்படுத்தி இந்த மாதிரி நிகழ்ச்சி நடக்காமல் இருந்தால் பொதுமக்கள் உயிர்களை காப்பாற்றலாம் என பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
    1
    திண்டுக்கல் பழனி சாலை வசந்த் அண்ட் கோ அருகே உள்ள திருமண மஹால்களில் ஒவ்வொரு முறையும் திருமணம் மற்றும் முக்கிய நிகழ்ச்சி நடக்கும்போது சாலை முழுவதும் பட்டாசு கொளுத்தி அவை தீயிட்டு எழுவதால் அங்கு விபத்து ஏற்படும் ஆபத்து ஏற்படுகிறது காவல்துறையினர் தொடர்ந்து கவனித்து அவைகளை அப்புறப்படுத்தி இந்த மாதிரி நிகழ்ச்சி நடக்காமல் இருந்தால் பொதுமக்கள் உயிர்களை காப்பாற்றலாம் என பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
    user_RAJA news
    RAJA news
    Oddanchatram, Dindigul•
    4 hrs ago
  • விஜயகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா தேமுதிக நிறுவனத் தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று திண்டுக்கல் மாநகர் மாவட்டம் சார்பில் பாரதி புரத்தில் அமைந்துள்ள முதியோர் இல்லத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
    1
    விஜயகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா 
தேமுதிக நிறுவனத் தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று திண்டுக்கல் மாநகர் மாவட்டம் சார்பில் பாரதி புரத்தில் அமைந்துள்ள முதியோர் இல்லத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
    user_DOMINIC SELVARAJ
    DOMINIC SELVARAJ
    திண்டுக்கல் மேற்கு, திண்டுக்கல், தமிழ்நாடு•
    23 hrs ago
  • பூமலூர் ஊராட்சி பள்ளிபாளையம் கிராமத்தில் கேப்டன் விஜயகாந்த் பிறந்தநாள் விழா கோலாகலம்... திருப்பூர் மாவட்டம், பல்லடம் வட்டம் பூமலூர் ஊராட்சி பள்ளிபாளையம் கிராமத்தில் கேப்டன் விஜயகாந்த் பிறந்தநாள் விழா மிக சிறப்பாக கொண்டாடபட்டது இந்த விழாவில் பொதுமக்களுக்கு இனிப்புகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கபட்டது மேலும் இந்த நிகழ்வில். ஏராளமான, பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
    1
    பூமலூர் ஊராட்சி  பள்ளிபாளையம் கிராமத்தில்  கேப்டன் விஜயகாந்த் பிறந்தநாள் விழா கோலாகலம்...
திருப்பூர் மாவட்டம், பல்லடம் வட்டம் பூமலூர் ஊராட்சி  பள்ளிபாளையம் கிராமத்தில்  கேப்டன் விஜயகாந்த் பிறந்தநாள் விழா மிக சிறப்பாக கொண்டாடபட்டது இந்த விழாவில் பொதுமக்களுக்கு இனிப்புகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கபட்டது
மேலும் இந்த நிகழ்வில். ஏராளமான, பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
    user_முனைவர"நமது பூமி" சந்திரகுமார்
    முனைவர"நமது பூமி" சந்திரகுமார்
    பல்லடம், திருப்பூர், தமிழ்நாடு•
    1 hr ago
  • ஆத்தூர் மகாலிங்கேஸ்வரருக்கு பிரதோஷ வழிபாடு செய்த பக்தர்கள். ஆத்தூர் வெள்ளப் பிள்ளையார் கோவிலில் உள்ள மகாலிங்கேஸ்வரர் சன்னதியில், பிரதோஷத்தை ஒட்டி இன்று சுவாமிக்கு சிறப்பு ஹோமம், பால், தயிர், சந்தனம் மற்றும் பன்னீர், மூலிகைகள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு பூஜைகள் விமர்சியாக நடைபெற்றது. தொடர்ந்து சுவாமிக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டு, பக்தர்களுக்கு அன்னதானப் பிரசாதம் வழங்கப்பட்டது. இதனால் கோவில் சன்னதியில் கூட்டம் அதிகரித்தது.
    1
    ஆத்தூர் மகாலிங்கேஸ்வரருக்கு பிரதோஷ வழிபாடு செய்த பக்தர்கள்.
ஆத்தூர் வெள்ளப் பிள்ளையார் கோவிலில் உள்ள மகாலிங்கேஸ்வரர் சன்னதியில், பிரதோஷத்தை ஒட்டி இன்று சுவாமிக்கு சிறப்பு ஹோமம், பால், தயிர், சந்தனம் மற்றும் பன்னீர், மூலிகைகள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு பூஜைகள் விமர்சியாக நடைபெற்றது. தொடர்ந்து சுவாமிக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டு, பக்தர்களுக்கு அன்னதானப் பிரசாதம் வழங்கப்பட்டது. இதனால் கோவில் சன்னதியில் கூட்டம் அதிகரித்தது.
    user_Kannapiran S
    Kannapiran S
    Local News Reporter ஆத்தூர், சேலம், தமிழ்நாடு•
    24 min ago
  • சிங்கம்புணரி அருகே பலத்த காற்றுடன் கொட்டித் தீர்த்த கனமழை சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள சுற்றுப்புற கிராமங்களில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பலத்த சூறைக்காற்று, இடிமின்னலுடன் கனமழை பெய்தது. மார்ச் முதல் ஆறு மாதங்களாக கடுமையான வெப்பத்தால் வாடிய மக்களுக்கு இன்று மாலை திடீர் மழை நிவாரணம் அளித்தது. கோழிக்குடிபட்டி, ஆறுகுடிபட்டி, சூரக்குடி, அய்யாபட்டி, கரடிபட்டி, வையாபுரிபட்டி உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகளும் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்தனர். தொடர் மழையால் நகர் முழுவதும் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவுகிறது.
    1
    சிங்கம்புணரி அருகே பலத்த காற்றுடன் கொட்டித் தீர்த்த கனமழை
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள சுற்றுப்புற கிராமங்களில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பலத்த சூறைக்காற்று, இடிமின்னலுடன் கனமழை பெய்தது. மார்ச் முதல் ஆறு மாதங்களாக கடுமையான வெப்பத்தால் வாடிய மக்களுக்கு இன்று மாலை திடீர் மழை நிவாரணம் அளித்தது. கோழிக்குடிபட்டி, ஆறுகுடிபட்டி, சூரக்குடி, அய்யாபட்டி, கரடிபட்டி, வையாபுரிபட்டி உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகளும் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்தனர். தொடர் மழையால் நகர் முழுவதும் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவுகிறது.
    user_ABDUL SALAM
    ABDUL SALAM
    Photographer சிங்கம்புணரி, சிவகங்கை, தமிழ்நாடு•
    4 hrs ago
  • சுந்தரேஸ்வரர்சதுர்த்தசி முன்னிட்டு நடராஜர் பெருமானுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தேனி மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் ஆவணி மாத வளர்பிறை சதுர்த்தசி முன்னிட்டு நடராஜர் பெருமானுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார ஆராதனை* *ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு நடராஜர் பெருமானை தரிசித்துச் சென்றனர்* தேனி அருகே பங்களாமேடு பகுதியில் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் இன்று ஆவணி மாத வளர்பிறை சதுர்த்தசி தினத்தை முன்னிட்டு நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது முன்னதாக தனி சன்னதியில் அருள் பாலிக்கும் நடராஜருக்கு பால், தயிர், சந்தனம், தேன், மஞ்சள், இளநீர் விபூதி உள்ளிட்ட பல வித திரவியங்கள் கொண்டு சிறப்பாக அபிஷேகம் நடைபெற்றது அதனைத் தொடர்ந்து நடராஜர் பெருமானுக்கு வஸ்திரம் கட்டி வண்ணமலர் மாலைகளால் சிறப்பாக அலங்கரிக்கப்பட்ட தூபம் காட்டப்பட்டது அதனைத் தொடர்ந்து மகாதீபாராதனை, நட்சத்திர தீபாராதனை காட்டிய பின்பு ஷோடச உபசாரம் நடத்தி பஞ்ச கற்பூர ஆரத்தியுடன் தீபாராதனை காட்டப்பட்டது இதில் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்துகொண்டு நடராஜர் பெருமானுக்கு நடைபெற்ற சிறப்பு அபிஷேக வழிபாட்டை கண்டு தரிசித்துச் சென்றனர்
    1
    சுந்தரேஸ்வரர்சதுர்த்தசி முன்னிட்டு நடராஜர் பெருமானுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார 
தேனி மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் ஆவணி மாத வளர்பிறை சதுர்த்தசி முன்னிட்டு நடராஜர் பெருமானுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார ஆராதனை*
*ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு நடராஜர் பெருமானை தரிசித்துச் சென்றனர்*
தேனி அருகே பங்களாமேடு பகுதியில் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் இன்று ஆவணி மாத வளர்பிறை சதுர்த்தசி தினத்தை முன்னிட்டு நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது 
முன்னதாக தனி சன்னதியில் அருள் பாலிக்கும் நடராஜருக்கு பால், தயிர், சந்தனம், தேன், மஞ்சள், இளநீர் விபூதி உள்ளிட்ட பல வித திரவியங்கள் கொண்டு சிறப்பாக அபிஷேகம் நடைபெற்றது 
அதனைத் தொடர்ந்து நடராஜர் பெருமானுக்கு வஸ்திரம் கட்டி வண்ணமலர் மாலைகளால் சிறப்பாக அலங்கரிக்கப்பட்ட தூபம் காட்டப்பட்டது 
அதனைத் தொடர்ந்து மகாதீபாராதனை, நட்சத்திர தீபாராதனை காட்டிய பின்பு ஷோடச உபசாரம் நடத்தி பஞ்ச கற்பூர ஆரத்தியுடன் தீபாராதனை காட்டப்பட்டது இதில் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்துகொண்டு நடராஜர் பெருமானுக்கு நடைபெற்ற சிறப்பு அபிஷேக வழிபாட்டை கண்டு தரிசித்துச் சென்றனர்
    user_Shakthi
    Shakthi
    பத்திரிகையாளர் பெரியகுளம், தேனி, தமிழ்நாடு•
    2 hrs ago
  • குளித்தலையில் இரண்டு லாரிகள் நேருக்கு நேர் மோதியதில் சம்பவ இடத்திலேயே இருவர் பலி கரூர் மாவட்டம்,குளித்தலையில் சரக்கு லாரிகள் இரண்டும் நேருக்கு நேர் மோதி சம்பவ இடத்திலேயே இரண்டு லாரி ஓட்டுனரும் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கரூர் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் குமாரமங்கலம் அருகே காலை நான்கு முப்பது மணி அளவில் திருச்சியில் இருந்து கரூர் நோக்கி நெல் மூட்டை ஏற்றி வந்த வந்த டாரஸ் லாரி கரூரிலிருந்து திருச்சி நோக்கி எம் சாண்டை ஏற்றிக்கொண்டு வந்த டிப்பர் லாரியும் நேருக்கு நேர் மோதி கொண்டதில் டாரஸ் லாரியில் வந்த ஓட்டுனரும் மற்றும் எம் சாண்ட் டிப்பர் ஓட்டி வந்த ஓட்டுனரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் மற்றும் இரண்டு கார்களும் ஒன்றும் பின் ஒன்றாக மோதிக்கொண்டது காரில் வந்தவர்களுக்கு எந்த காயமும் இல்லை சம்பவம் அறிந்து குளித்தலை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்தவர்களின் உடல்களை மீட்டு குளித்தலை மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர் பிறகு போலீசார் விசாரணையில் நெல் மூட்டை ஏற்றி வந்த லாரியின் ஓட்டுனர் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடிய சேர்ந்த மேகநாதன் என்று தெரியவந்தது மேலும் எம் சாண்ட் லாரியை ஓட்டி வந்த மயிலாடுதுறை அருகே சேந்தங்குடியை சேர்ந்தவர் கோபி கிருஷ்ணன் என்பவர் என்று தெரியவந்தது விபத்து ஏற்பட்ட லாரிகளை கிரேன் இயந்திரம் மூலம் போலீசார் அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர் விபத்து குறித்து குளித்தலை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    1
    குளித்தலையில் இரண்டு லாரிகள் நேருக்கு நேர் மோதியதில் சம்பவ இடத்திலேயே இருவர் பலி
கரூர் மாவட்டம்,குளித்தலையில் சரக்கு லாரிகள் இரண்டும் நேருக்கு நேர் மோதி சம்பவ இடத்திலேயே இரண்டு லாரி ஓட்டுனரும் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது 
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கரூர் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் குமாரமங்கலம் அருகே காலை நான்கு முப்பது மணி அளவில் திருச்சியில் இருந்து கரூர் நோக்கி நெல் மூட்டை ஏற்றி வந்த வந்த டாரஸ் லாரி கரூரிலிருந்து திருச்சி நோக்கி எம் சாண்டை ஏற்றிக்கொண்டு வந்த டிப்பர் லாரியும் நேருக்கு நேர் மோதி கொண்டதில் டாரஸ் லாரியில் வந்த ஓட்டுனரும் மற்றும் எம் சாண்ட் டிப்பர் ஓட்டி வந்த ஓட்டுனரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் மற்றும் இரண்டு கார்களும் ஒன்றும் பின் ஒன்றாக மோதிக்கொண்டது காரில் வந்தவர்களுக்கு எந்த காயமும் இல்லை சம்பவம் அறிந்து குளித்தலை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்தவர்களின் உடல்களை மீட்டு குளித்தலை மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர் 
பிறகு போலீசார் விசாரணையில் நெல் மூட்டை ஏற்றி வந்த லாரியின் ஓட்டுனர் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடிய சேர்ந்த மேகநாதன் என்று தெரியவந்தது மேலும் எம் சாண்ட் லாரியை ஓட்டி வந்த மயிலாடுதுறை அருகே சேந்தங்குடியை சேர்ந்தவர் கோபி கிருஷ்ணன் என்பவர் என்று தெரியவந்தது விபத்து ஏற்பட்ட லாரிகளை கிரேன் இயந்திரம் மூலம் போலீசார் அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர் விபத்து குறித்து  குளித்தலை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    user_Dr A. SUBETHAR
    Dr A. SUBETHAR
    கரூர், கரூர், தமிழ்நாடு•
    11 hrs ago
  • சாலையை கடக்க முயன்ற முதியவர் மீது கார் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். திண்டுக்கல் மாவட்டம் நத்தம் எரமநாயக்கன்பட்டி அருகே இரு சக்கர வாகனத்தில் சாலையை கடக்க முயன்ற முதியவர் மீது கார் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேற்படி சம்பவம் குறித்து நத்தம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் இது குறித்த சிசிடிவி காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
    1
    சாலையை கடக்க முயன்ற முதியவர் மீது கார் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் எரமநாயக்கன்பட்டி அருகே இரு சக்கர வாகனத்தில் சாலையை கடக்க முயன்ற முதியவர் மீது கார் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மேற்படி சம்பவம் குறித்து நத்தம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
இது குறித்த சிசிடிவி காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
    user_DOMINIC SELVARAJ
    DOMINIC SELVARAJ
    திண்டுக்கல் மேற்கு, திண்டுக்கல், தமிழ்நாடு•
    23 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.