*கோடம்பாக்கம் பகுதியில் பெண்ணிடம் செல்போன் திருடிய நபர் கைது*. சென்னை, கோடம்பாக்கம், அஜிஸ்நகர், மெயின் ரோடு பகுதியில் ஶ்ரீபிரியா, பெ.வ/26, க/பெ.முருகன் என்பவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் நேற்று (08.02.2026) மதியம் கோடம்பாக்கம், ரயில்வே பார்டர் ரோட்டில் உள்ள சிக்கன் கடைக்கு கணவருடன் சிக்கன் வாங்க சென்று, இருசக்கர வாகனத்தில் செல்போனை வைத்துவிட்டு நின்று கொண்டிருந்தபோது, அங்கு வந்த அடையாளம் தெரியாத நபர் ஶ்ரீபிரியாவின் செல்போனை திருடிக்கொண்டு தப்பி ஓடியுள்ளார். இச்சம்பவம் குறித்து ஶ்ரீபிரியா R-2 கோடம்பாக்கம் காவல் நிலைய குற்றப்பிரிவில் புகார் கொடுத்ததின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். R-2 கோடம்பாக்கம் காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் சம்பவ இடத்தில் தீவிர விசாரணை செய்து மேற்படி செல்போன் திருட்டு வழக்கில் தொடர்புடைய எதிரி கார்த்திக், வ/29, ஆம்பூர், வேலூர் மாவட்டம் என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து புகார்தாரரின் செல்போன் மீட்கப்பட்டது. கைது செய்யப்பட்ட எதிரி கார்த்திக் விசாரணைக்குப் பின்னர், நேற்று (08.02.2026) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.
*கோடம்பாக்கம் பகுதியில் பெண்ணிடம் செல்போன் திருடிய நபர் கைது*. சென்னை, கோடம்பாக்கம், அஜிஸ்நகர், மெயின் ரோடு பகுதியில் ஶ்ரீபிரியா, பெ.வ/26, க/பெ.முருகன் என்பவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் நேற்று (08.02.2026) மதியம் கோடம்பாக்கம், ரயில்வே பார்டர் ரோட்டில் உள்ள சிக்கன் கடைக்கு கணவருடன் சிக்கன் வாங்க சென்று, இருசக்கர வாகனத்தில் செல்போனை வைத்துவிட்டு நின்று கொண்டிருந்தபோது, அங்கு வந்த அடையாளம் தெரியாத நபர் ஶ்ரீபிரியாவின் செல்போனை திருடிக்கொண்டு தப்பி ஓடியுள்ளார். இச்சம்பவம் குறித்து ஶ்ரீபிரியா R-2 கோடம்பாக்கம் காவல் நிலைய குற்றப்பிரிவில் புகார் கொடுத்ததின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். R-2 கோடம்பாக்கம் காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் சம்பவ இடத்தில் தீவிர விசாரணை செய்து மேற்படி செல்போன் திருட்டு வழக்கில் தொடர்புடைய எதிரி கார்த்திக், வ/29, ஆம்பூர், வேலூர் மாவட்டம் என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து புகார்தாரரின் செல்போன் மீட்கப்பட்டது. கைது செய்யப்பட்ட எதிரி கார்த்திக் விசாரணைக்குப் பின்னர், நேற்று (08.02.2026) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.
- வேற லெவல் பிரியாணி #Riyaz #biryani #Perambur1
- Post by NAMADHU ARASU(Krishna M Com)1
- Perumal Kovil garden 6 lines sowcarpet Chennai1
- 139 வட்டத்தில் உள்ள ஜாபர்கான்பேட்டை சென்னை ஆறு லட்சத்து அந்த விலாசத்தில் ஆசிக்ஸ் போலீஸ் கேப் என்னும் அரசாங்க அலுவலக கட்டிடம் ஒன்று உள்ளது அந்த கட்டிடத்தை ஆக்கிரமித்து பெயிண்ட் டப்பாக்களும் பேனர்களும் வைத்து வியாபாரம் செய்து கொண்டிருக்கிறார் இதை உடனடியாக மீட்டு தருமாறு கேட்டுக்கொள்கிறோம்2
- 44வது வட்டம் என்.வி.நடராஜன் தெருவின் கடைசி பகுதியில் நாகாத்தம்மன் கோவிலின் பின்புறத்தில் உள்ள கதவு எண் 51/818 இல் உள்ள வீட்டில் முறையாக வீட்டு வரி மற்றும் கழிவு நீர் வரி மெட்ரோ வரி செலுத்தி வரும் இந்த வீட்டிற்கு கழிவுநீர் வெளியேற முடியாமல் கடந்த இரண்டு வருடங்களாக அவர்களுடைய வீட்டில் செப்டிக் டேங்க் அமைத்து அதில் கழிவு நீர் நிறைந்தால் அவர்களே அள்ளி ஊற்றும் நிலைமை மிகவும் கொடுமையாக உள்ளது பலமுறை எம்எல்ஏ அவர்களிடமும் 44வது வட்ட கவுன்சிலர் அவர்களிடமும் கழிவுநீர் மற்றும் குடிநீர் வாரிய நிர்வாக அதிகாரிகளிடமும் புகார் தெரிவித்தும் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தும் இவர்கள் அனைவரும் நேரில் வந்து பார்த்தும் இதுவரையில் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை ஏனென்றால் இதே தெருவிலும் பக்கத்து தெரு பன்னீர்செல்வம் தெருவில் இருக்கும் இருக்கும் அண்ணன் தம்பிகள் அண்ணன் மகன்கள் தம்பி மகன்கள் ஆகிய ஒரே குடும்பத்தைச் சார்ந்த நபர்கள் ஆளும் கட்சியிலும் எதிர்க்கட்சியிலும் இருந்து கொண்டு இவர்களுடைய வீட்டிலிருந்து வெளியே முறையாக கழிவு நீர் செல்ல விடாமல் தொடர்ந்து தடுத்து வருகிறார்கள் மேலும் இந்த வீட்டின் பொது வழியை குடிசை மாற்று வாரியத்திற்கு சொந்தமான இடத்தை இந்தக் குடும்பத்தினர்கள் 10கிரவுண்ட் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்தும் அதை விற்பனையும் செய்து மீதமுள்ள 5 கிரவுண்ட் நிலத்தை இவர்களுடைய கட்டுப்பாட்டில் வைத்துள்ளார்கள் இது தொடர்பாக இவர்கள் மீது காவல் நிலையத்திலும் குடிசை மாற்று வாரிய அதிகாரிகளிடமும் எம் எல் ஏ அவர்களிடமும் 44 வது வட்ட கவுன்சிலர் அவர்களிடமும் புகார் தெரிவித்தும் எந்த ஒரு பிரயோஜனமும் இல்லை ஏனென்றால் இவர்களுடைய குடும்பத்தினர்கள் ஆளும் கட்சியிலும் எதிர்க்கட்சியிலும் இருந்து கொண்டு பல விதங்களில் பொதுமக்களுக்கு பல வழிகளில் இடஞ்சல்கள் செய்து வருகிறார்கள் மேலும் பெரம்பூர் தொகுதி எம்எல்ஏ அவர்களும் 44வது வட்ட கவுன்சிலர் அவர்களும் குடிநீர் மற்றும் கழிவு நீர் வாரிய நிர்வாக அதிகாரிகளுக்கு எந்த ஒரு அழுத்தமும் கொடுக்காமலும் கழிவு நீர் மட்டும் குடிநீர் வாரிய நிர்வாக அதிகாரிகளும் அலட்சியமாக இந்த வீட்டிற்கு அனைத்து வரிகளும் முறையாக செலுத்தி வரும் பொழுதும் இந்த வீட்டிற்கு கழிவு நீர் இணைப்பு தராதது மிகவும் கண்டனத்திற்குரிய செயலாகும் மேலும் இவர்கள் இருக்கும் பக்கத்து தெருக்களில் எந்த ஒரு வரியும் செலுத்தாமல் இருக்கும் நபர்களுக்கு நபர்களுடைய வீட்டிற்கு கழிவு நீர் இணைப்பு எப்படி கொடுக்கப்பட்டது அதற்கு யார் காரணம்?? ஆகையால் உடனே சட்டப்படி நடவடிக்கை எடுத்து முறையாக கழிவு நீர் மற்றும் குடிநீர் மற்றும் வீட்டு வரி செலுத்தி வரும் இந்த வீட்டின் நபர்களுக்கு முறையாக கழிவு நீர் இணைப்பு கொடுக்குமாறும் அதை தடுக்க முயற்சி செய்யும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சியை சார்ந்த குடும்பத்தினர்கள் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்குமாறும் மேலும் இந்த குடும்பத்தினர்களால் யாருக்கும் எந்த ஒரு பாதிப்போ இடைஞ்சல்களோ இனிமேல் ஏற்படாமல் கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு தங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன் Vikatan EMagazine #tnelection2026 #highlights2026 #highlight #Narendra_Modi #Amit_Shah K.Annamalai Nainar Nagenthran R.C. Paul Kanagaraj Rcpaulkanagaraj RC paul kanagaraj brothers BJP Tamilnadu BJP4TamilNadu BJYM Tamilnadu #M_K_Stalin Udhayanidhi Stalin DMK - Dravida Munnetra Kazhagam All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK) Edappadi K. Palaniswami R.d. Sekar Rajesh Admk Rajesh Sarbajayadas Narendran Greater Chennai Corporation CMWSS Board CMWSS Board Sewage Treatment Plant Tamil Nadu Police #44thWard1
- சென்னை திருவொற்றியூர் காலடிப்பேட்டை மேற்கு மாட வீதியில் 12வது வார்டு கவுன்சிலர் கவி கணேசன் அவர்களின் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்ட பூங்கா மற்றும் திறந்தவெளி உடற்பயிற்சி கூடம் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டது. இந்த பூங்காவில் சிறுவர்கள் மற்றும் சிறுமிகள் விளையாடுவதற்கான நவீன விளையாட்டு உபகரணங்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன், பொதுமக்கள் உடல்நலத்தை மேம்படுத்தும் வகையில் திறந்தவெளி உடற்பயிற்சி கூடமும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் அந்தப் பகுதி மக்கள், இளைஞர்கள் மற்றும் குழந்தைகள் அனைவரும் உடற்பயிற்சி மேற்கொள்ளவும், ஓய்வாக நேரத்தை கழிக்கவும் வசதி கிடைத்துள்ளது. இந்த புதிய பூங்கா மற்றும் திறந்தவெளி உடற்பயிற்சி கூடத்தை 12வது வார்டு கவுன்சிலர் கவி கணேசன் அவர்கள் திறந்து வைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்தார். இந்நிகழ்வில் வட்டச் செயலாளர் சதீஷ், முன்னாள் கவுன்சிலர்கள் சைலேஷ், எம்.வி. குமார், தலைமை செயற்குழு உறுப்பினர் டி.ஏ. ராஜு, சென்னை பெருநகர மாநகராட்சி உதவி பொறியாளர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும் பொதுமக்கள், சிறுவர் சிறுமிகள் பலரும் கலந்து கொண்டு புதிய பூங்கா மற்றும் உடற்பயிற்சி கூடத்தை பார்வையிட்டு மகிழ்ந்தனர்.1
- படப்பையில் காங்கிரஸ் சார்பில் இஃப்தார் நிகழ்ச்சி பெண்களுக்கு நல உதவிகள் காஞ்சிபுரம் மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு சார்பில் படப்பையில் நடைபெற்ற இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களுக்கு இலவச சேலை மற்றும் உதவித்தொகை வழங்கப்பட்டது. மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் முருகன் சாந்தகுமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாநில சிறுபான்மை பிரிவு தலைவர் முகமது ஆரிப் கலந்து கொண்டு நல திட்ட உதவிகளை வழங்கினார். மாவட்ட காங்கிரஸ் தலைவர் எஸ்.ஏ. அருள்ராஜ், மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் கு. விவேகானந்தன் உள்ளிட்டோர் பலர் கொண்டனர்.1
- மணிமங்கலத்தில் சட்டசபை தேர்தலை முன்னிட்டு துணை ராணுவத்தினர் அணிவகுப்பு பேரணி. 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் சட்டசபை தேர்தல் நடக்கும் தேதியை இன்று மாலை தேர்தல் ஆணையம் அறிவிக்கவுள்ளது. இதனை முன்னிட்டு, தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் தேர்தல் பாதுகாப்பை பலப்படுத்தவும், வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிப்பதை உறுதி செய்யவும் துணை ராணுவ படையினர் மற்றும் காவல்துறையினர் இணைந்து கொடி அணிவகுப்பு, பேரணி நடத்தி வருகின்றனர். அந்த வகையில் காஞ்சிபுரம் மாவட்டம் மணிமங்கலம் பகுதியில் உள்ள வாக்குச்சாவடி பகுதிகளில் அமைதியான வாக்குப்பதிவை உறுதி செய்யும் விதமாக ராணுவ அசிஸ்டன்ட் கமாண்டர் சுஜித் தலைமையில் 60க்கும் மேற்பட்ட துணை ராணுவ வீரர்கள் துப்பாக்கியை கையில் ஏந்திய படியும், மணிமங்கலம் காவல் உதவி ஆணையர் சுந்தர் தலைமையில் 30க்கும் மேற்பட்ட காவலர்களும் ஆலடி அம்மன் கோயில் வளாகத்தில் இருந்து பேரணி சென்றனர். இந்த பேரணி மணிமங்கலம் பஜார், மார்க்கெட் சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகள் வழியாக 1 கிலோ மீட்டர் சென்று காவலர்கள் குடியிருப்பு பகுதியில் முடிவடைந்தது.1