⚡ செய்தி இடி SEITHI IDI ⚡ ✍️ செய்தித் தொகுப்பு கே பாலச்சந்திரன் 🔴 சென்னையைக் கண்காணிக்க அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தலைமையில் 7 அமைச்சர்கள் குழு நியமனம்! 🔵 அரசு நடவடிக்கை: சென்னை மாநகராட்சியில் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ளவும், மழை மற்றும் பேரிடர் காலங்களில் நிவாரணப் பணிகளைத் துரிதப்படுத்தவும் பொதுப்பணித் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தலைமையில் 7 அமைச்சர்கள் கொண்ட சிறப்புக்குழுவை அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 🔵 மண்டலங்கள் பங்கீடு: திருவொற்றியூர், மணலி - எஸ்.ரமேஷ் மாதவரம், தண்டையார்பேட்டை - த.லோகேஷ் தமிழ்ச்செல்வன் ராயபுரம், திரு.வி.க. நகர் - கே.ஜி.அருண்ராஜ் அம்பத்தூர், அண்ணா நகர், தேனாம்பேட்டை - விஜய் பாலாஜி கோடம்பாக்கம், வளசரவாக்கம் - டி.கே.பிரபு ஆலந்தூர், அடையாறு - விஜய் தமிழன் பார்த்திபன் பெருங்குடி, சோழிங்கநல்லூர் - க.விக்னேஷ் 🔵 துரிதப் பணிகள்: ஒதுக்கப்பட்டுள்ள மண்டலங்களில் உள்கட்டமைப்பு மற்றும் வளர்ச்சித் திட்டப் பணிகளை மேற்பார்வையிட்டுத் துரிதப்படுத்தும் பொறுப்பு இந்த அமைச்சர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
⚡ செய்தி இடி SEITHI IDI ⚡ ✍️ செய்தித் தொகுப்பு கே பாலச்சந்திரன் 🔴 சென்னையைக் கண்காணிக்க அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தலைமையில் 7 அமைச்சர்கள் குழு நியமனம்! 🔵 அரசு நடவடிக்கை: சென்னை மாநகராட்சியில் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ளவும், மழை மற்றும் பேரிடர் காலங்களில் நிவாரணப் பணிகளைத் துரிதப்படுத்தவும் பொதுப்பணித் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தலைமையில் 7 அமைச்சர்கள் கொண்ட சிறப்புக்குழுவை அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 🔵 மண்டலங்கள் பங்கீடு: திருவொற்றியூர், மணலி - எஸ்.ரமேஷ் மாதவரம், தண்டையார்பேட்டை - த.லோகேஷ் தமிழ்ச்செல்வன் ராயபுரம், திரு.வி.க. நகர் - கே.ஜி.அருண்ராஜ் அம்பத்தூர், அண்ணா நகர், தேனாம்பேட்டை - விஜய் பாலாஜி கோடம்பாக்கம், வளசரவாக்கம் - டி.கே.பிரபு ஆலந்தூர், அடையாறு - விஜய் தமிழன் பார்த்திபன் பெருங்குடி, சோழிங்கநல்லூர் - க.விக்னேஷ் 🔵 துரிதப் பணிகள்: ஒதுக்கப்பட்டுள்ள மண்டலங்களில் உள்கட்டமைப்பு மற்றும் வளர்ச்சித் திட்டப் பணிகளை மேற்பார்வையிட்டுத் துரிதப்படுத்தும் பொறுப்பு இந்த அமைச்சர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
- நேபாளில் வெள்ளம் கோரத்தாண்டவம்..... சோகம் நிறைந்த மக்கள்....1
- திருவொற்றியூர் பட்டினத்தார் கோவிலில் பா.ஜ.க. மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் திடீர் தரிசனம்! சென்னை, ஆக.27:- திருவொற்றியூர் திருத்தலங்களில் ஒன்றான பட்டினத்தார் திருக்கோவிலில் பா.ஜ.க. மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் திடீர் தரிசனம் மேற்கொண்டார். திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி திருக்கோவிலுக்கு அவர் அவ்வப்போது வருகை தந்து தரிசனம் செய்வது வழக்கம். இந்நிலையில் பட்டினத்தார் திருக்கோவிலுக்கு வருகை தந்து சாமி தரிசனம் செய்தது ஆன்மீக பக்தர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அவருக்கு கோவில் நிர்வாகத்தின் சார்பில் சிறப்பு மரியாதை அளிக்கப்பட்டது.1
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக ராணிப்பேட்டை தொகுதி பாமக சமூக ஊடக பேரவை பொருப்பாளர் சி விநாயகம் அவர்கள்1
- கடலூர் மாவட்டத்தில் இன்று எந்தெந்த இடங்களில் எவ்வளவு மிமீ மழை பதிவு கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக நேற்று மழை பெய்தது. அந்த வகையில் இன்று (ஆகஸ்ட் 27) காலை 8.30 மணி நிலவரப்படி பண்ருட்டியில் 4 மில்லி மீட்டர், வானமாதேவி 3 மில்லி மீட்டர், கடலூர் ஆட்சியர் அலுவலகம் 0.40 மில்லி மீட்டர், கடலூர் 0.20 மில்லி மீட்டர் என மாவட்டம் முழுவதும் 7.60 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.1
- திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் தாலுகா மாதனூர் ஒன்றியம் தேவலாபுரம் ஊராட்சியில் தனியார் கம்பனி கேட்டில் நாய் சிக்கியது தீ அணைப்பு வீரர்கள் நாயை மீட்டனர் *திருப்பத்தூர் மாவட்டம்* *தேவலாபுரத்தில் தொழிற்சாலை கேட்டில் சிக்கிய நாய் - தீயணைப்பு வீரர்கள் உயிருடன் மீட்டனர்* திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் தாலுகா, மாதனூர் ஒன்றியம், தேவலாபுரம் ஊராட்சியில் இன்று (ஆகஸ்ட் 26) தனியார் தொழிற்சாலை ஒன்றின் இரும்பு கேட்டில் நாய் ஒன்று சிக்கிக்கொண்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆம்பூர் தீயணைப்பு வீரர்கள், பணியாளர்கள் உதவியுடன் கட்டர் மூலம் கேட் கம்பியை அறுத்து நாயை பத்திரமாக உயிருடன் மீட்டனர். தீயணைப்பு வீரர்களின் மனித நேயமிக்க செயலை அப்பகுதி மக்கள் பாராட்டினர்.1
- காணாமல் போன மலைகள் குறித்து அமைச்சர் பேச்சு. திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் என குறிப்பிட்டது மக்களிடையே அதிர்ச்சி காணாமல் போன மலைகள்” ,மலை வளங்கள் அழிக்கப்பட்டு வருவது குறித்து அமைச்சர் புகைப்படங்களுடன் கூடிய ஆதாரங்களை சுட்டிக்காட்டி விளக்கமாகப் பேசினார். அப்போது, மலைகள் மற்றும் இயற்கை வளங்கள் தொடர்பான புகைப்படங்களை சட்டசபையில் காண்பித்து, அவற்றின் தற்போதைய நிலை குறித்தும் அமைச்சர் எடுத்துரைத்தது சமூக வலைத்தளங்களில் பரவியது . இதில், #திருப்பத்தூர் மாவட்டம் – #ஆம்பூர் எனக் குறிப்பிட்டு அமைச்சர் பேசியது திருப்பத்தூர் மாவட்ட மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆம்பூர் பகுதியில் மலை வளங்கள் மற்றும் இயற்கைச் சூழல் தொடர்பாக அமைச்சர் குறிப்பிட்டுள்ள தகவல்கள் குறித்து பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் தற்போது கவனம் ஏற்பட்டுள்ளது. அமைச்சர் குறிப்பிட்ட புகைப்படங்கள் மற்றும் அதன் பின்னணி குறித்து உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் மக்கள் எதிர்பார்க்கின்றனர்.1
- லட்சுமிபுரம் பகுதியில் வசிக்கும் குடும்பங்களுக்கு பட்டா வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் வேண்டுகோள் திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் மாவட்டத்திற்கு வருகை தந்திருந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் வீரபாண்டியன் செய்தியாளர் சந்திப்பில் கூறியது திருப்பத்தூர் மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் தமிழக அரசால் கிடப்பில் வைத்துள்ள தென்பெண்ணை பாலாறு இணைப்பு திட்டம் நிறைவேற்ற வேண்டும். வெலக்கல்நாத்தம் ஊராட்சி லட்சுமிபுரம் பகுதியைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட குடும்பம் வசித்து வருகிறது அவர்களுக்கு நிரந்தர பட்டா வழங்கிட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் அவர்களை அப்புறப்படுத்த கூடாது எனவும் அவர் தெரிவித்துள்ளார். திருப்பத்தூர் மாவட்டத்திற்கு அரசு மருத்துவக் கல்லூரி வேண்டும் அதற்கு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும் பரந்தூர் விமான நிலையத்தை கைவிடப்பட்டதற்கு அரசை வரவேற்கிறேன் என கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தெரிவித்துள்ளார். ஆசிரியர் தேர்வில் நிரந்தர விலக்கு அளிக்க வேண்டும். நமது மாநிலத்தின் கடை கோடி பணியாளரான தூய்மை பணியாளர்களின் கோரிக்கைகளை படிப்படியாக நிறைவேற்ற வேண்டும் தற்காலிக பணியாளர்களை நிரந்தர பணியாளராக பணியமர்த்த வேண்டும். வேளாண் பயிர் கடன்களை 100% தள்ளுபடி செய்ய முதலமைச்சர் அரசாணை வெளியிட வேண்டும் தமிழக வெற்றி கழக ஆட்சியில் அறிவிக்கப்பட்ட தேர்தல் வாக்குறுதிகளை படிப்படியாக நிறைவேற்ற வேண்டும். தமிழக வெற்றி கழக அரசு ஆட்சி அமைப்பதை வெளியில் இருந்து ஆதரிக்கிறோம். ஆனால் கூட்டணி வைக்க மாட்டோம். மேலும் விலைவாசி உயர்வு, போக்குவரத்து கட்டணம் உயர்வு பால் விலை உயர்வு போன்றவற்றிற்கு எதிர்ப்பு குரலாய் நிற்போம் என அவர் செய்தியாளர்கள் மூலம் தெரிவித்துள்ளார் இந்நிகழ்வில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் நந்தி மாவட்ட பொருளாளர் வேணுகோபால் மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் முல்லை மாநில நிர்வாக குழு உறுப்பினர் லெனின் ஆகியோர் உடன் இருந்தனர்1
- Cinema cinema cinema cinema cinema cinema cinema cinema1