தமிழக வெற்றிக் கழகம் சார்பில், பழனி மேற்கு ஒன்றியம் பெரியம்மாபட்டி ஊராட்சியில் புலிக்கோட்டையூர் பகுதியில் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் மற்றும் பெண்களுக்கான பொங்கல் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இதில் 500 பெண்களுக்கு புடவை மற்றும் 50 குழந்தைகளுக்கு பள்ளிக்கு எடுத்துச் செல்ல மதிய உணவுப் பை, தண்ணீர் பாட்டில், கல்வி உபகரணங்கள் கொடுக்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் ஊர் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். பொதுசெயலாளர் N. ஆனந்த் மற்றும் மாவட்டச் செயலாளர் S. கார்த்திக் ராஜன் அவர்களின் வழிகாட்டுதலின்படி, திண்டுக்கல் மேற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் பழனி N. பாலன் ஏற்பாடு செய்து நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்பித்தார். மாவட்ட இணைச் செயலாளர் விஜய் சிவா, பழனி நகரச் செயலாளர் மிதுன் மனோகரன் மற்றும் மேற்கு ஒன்றிய செயலாளர் ஆசாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவின் ஏற்பாடுகளை மாவட்ட மாணவரணி அமைப்பாளர் சதீஷ்குமார் மற்றும் இளைஞரணி அமைப்பாளர் பிரவீன்குமார், பெரியம்மாபட்டி தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் செய்திருந்தனர். தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூர், கிளை மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

- முன்னாள் முதலமைச்சர் திரு. எடப்பாடி கே. பழனிச்சாமியை சந்தித்தார் திருமதி லீமா ரோஸ் மார்டின்! இந்திய ஜனநாயக கட்சியின் இணைப் பொதுசெயலாளர் திருமதி லீமா ரோஸ் மார்டின் அவர்கள் கடந்த (09.01.2026) வெள்ளிக்கிழமை அன்று அதிமுக பொதுச்செயலாளரும், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மாண்புமிகு திரு. எடப்பாடி கே. பழனிச்சாமி அவர்களையும், முன்னாள் அமைச்சர் திரு. எஸ்.பி. வேலுமணி அவர்களையும் மரியாதை நிமித்தமாக சந்தித்து நலம் விசாரித்தார்.1
- திண்டுக்கல் செம்பட்டி அருகே உள்ள திண்டுக்கல் வத்தலகுண்டு சாலையில் செட்டியபட்டி பிரிவு அருகே அதிவேகமாக வந்த தனியார் பேருந்து முன்னால் சென்ற காரின் மீது பலமாக மோதியதில் கார் பலத்த சேதமடைந்தது. காரில் பயணித்த கர்ப்பிணிப் பெண் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். விபத்தின் காரணமாக அந்தப் பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது சம்பவம் குறித்து செம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.1
- திண்டுக்கல்லில் களை கட்டிய பொங்கல் விழா திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் மாவட்ட ஆட்சியர் சரவணன் குதிரை வண்டியில் வந்து வாழ்த்துக்கள் தெரிவித்தார். திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கலை கட்டிய பொங்கல் விழா அனைவரும் ஆட்டம் பாட்டத்துடன் சிறப்பாக கொண்டாடினர்1
- புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் பேருந்து நிலையம் அருகில் உள்ள சாலை மிகவும் மோசமான குண்டும் குழியுமாக உள்ளது இதனால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள் அவ்வப்போது விபத்தும் நடைபெற்று வருகிறது. சாலையை சீரமைக்க நெடுஞ்சாலை துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள், வாகன ஓட்டிகள் தெரிவித்தனர்.1
- வேடசந்தூர் பூதிபுரம் பஞ்சாயத்து அலுவலகம் மற்றும் அரசு ஆரம்ப பள்ளி கிராம நிர்வாக அலுவலகம் நியாய விலை கடை இதற்கு முன்பு சாலையில் பள்ளமாக இருப்பதால் தண்ணீர் நின்று கொண்டிருக்கிறது இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் அடைகின்றனர் எனது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து அந்த இடத்தில் தண்ணீர் நிற்காதவாறு சரி செய்து கொடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்1
- போடி கிழக்கு ஒன்றியம் கூழையனூரில் பகுதியில் தைத்திருளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தேனி மாவட்ட பாஜக தொழில் பிரிவு சார்பாக பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டனர் இதில் தேனி மாவட்ட பாரதிய ஜனதா கட்சி மாவட்ட தலைவர் ராஜபாண்டி தலைமையில் பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் ஒன்றிணைந்து சமத்துவ பொங்கல் வைத்து பொங்கல் பண்டிகை உற்சாகமாக கொண்டாடினர்1
- தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கு நாளை முதல் வருகின்ற ஞாயிற்றுக்கிழமை வரை பொங்கல் விடுமுறை விடப்பட்டுள்ளது. இதன் காரணமாக பள்ளிகளில் இன்று பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் மணப்பாறை அடுத்த உசிலம்பட்டி அருகே செயல்படும் அரசு உதவி பெறும் பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. இதனையடுத்து பள்ளியின் வளாகத்தில் உள்ள கல்வி விநாயகர் ஆலயத்தில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு பொங்கல் வழங்கப்பட்டது.1
- 0திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே உள்ள அரசு மதுபான கடையில் குடிபோதையில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்ளும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.1