logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

முசிறி அருகே குணசேகர் பிரசன்ன வெங்கடாஜலபதி திருக்கோவில் தேரோட்டம் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் கே குமார் செய்தியாளர் முசிறி முசிறி அருகே தென்திருப்பதி என்றழைக்கப்படும் குணசீலம் பிரசன்ன வேங்கடாசலபதி திருக்கோவில் திருத்தேரோட்டம் - பல்லாயிரக்கணக்காண பக்தர்கள் பங்கேற்பு..நூற்றுக்கணக்கான பக்தர்கள் தேரின்பின்னே அங்கப்பிரதட்சனம் செய்து நேர்த்திக்கடன் செலுத்தி நூதன வழிபாடு.... தென்திருப்பதி என்றழைக்கப்படுவதும், குணசீலமஹரிஷியின் தவத்தினையடுத்து பிரசன்னவேங்கடேசனாக காட்சியளித்த ஸ்தலமான திருச்சியை அடுத்த குணசீலம் பிரஸன்ன வேங்கடாசலபதிபெருமாள் திருக்கோவில் மிகவும் பிரசித்திபெற்றதாகும். பிரசித்திபெற்ற மஹரிசிக்கு காட்சியளித்த தினமான புரட்டாசி மாதம் திருவோணம் நட்சத்திரத்தை கொண்டு இத்திருக்கோவிலில் பிரம்மோற்சவம் 11- தினங்கள் கொண்டாடப்படும் .அதன்படி 14-ம்தேதி பிரம்மோற்சவமானது கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து அனுமந்தவாகனம், சேஷவாகனம், யானைவாகனம், அன்னவாகனம், குதிரைவாகனம், வெள்ளிக்கருடவாகனத்தில் உபயநாச்சியார்களுடன் பெருமாள் எழுந்தருளி திருவீதி உலாவந்தார்.விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேர் வடம்பிடிக்கும் நிகழ்ச்சி இன்று வெகுவிமரிசையாக நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட பிரம்மாண்டமான திருத்தேரில் பூதேவி, ஸ்ரீதேவி தாயாருடன் ஸ்ரீனிவாசபெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்க, ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என பக்திகோஷமிட்டவாறு தேரை வடம்பிடித்து இழுத்துச் சென்றனர். வேறு எந்தக்கோவிலிலும் இல்லாதவாறு திருத்தேரின் பின்புறமாக பலநூற்றுக்கணக்கான பக்தர்கள் தங்களது வேண்டுதல்கள் நிறைவேறவும், தாங்கள் செய்தபாவங்கள் விலகவும், கைகளில் தேங்காயினை வைத்துக்கொண்டு அங்கப்பிரதட்சனம் செய்து நேர்த்திக்கடனை செலுத்தினர். மேலும் ஸ்ரீனிவாச பெருமாளை வழிபாடு செய்து பிறவிப்பலன் பெறுவர் ஐதீகம் என்பதால் திருச்சி மட்டுமன்றி பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு செய்தனர்.

15 hrs ago
user_Kumar reports musiri
Kumar reports musiri
Photographer முசிறி, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
15 hrs ago

முசிறி அருகே குணசேகர் பிரசன்ன வெங்கடாஜலபதி திருக்கோவில் தேரோட்டம் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் கே குமார் செய்தியாளர் முசிறி முசிறி அருகே தென்திருப்பதி என்றழைக்கப்படும் குணசீலம் பிரசன்ன வேங்கடாசலபதி திருக்கோவில் திருத்தேரோட்டம் - பல்லாயிரக்கணக்காண பக்தர்கள் பங்கேற்பு..நூற்றுக்கணக்கான பக்தர்கள் தேரின்பின்னே அங்கப்பிரதட்சனம் செய்து நேர்த்திக்கடன் செலுத்தி நூதன வழிபாடு.... தென்திருப்பதி என்றழைக்கப்படுவதும், குணசீலமஹரிஷியின் தவத்தினையடுத்து பிரசன்னவேங்கடேசனாக காட்சியளித்த ஸ்தலமான திருச்சியை அடுத்த குணசீலம் பிரஸன்ன வேங்கடாசலபதிபெருமாள் திருக்கோவில் மிகவும் பிரசித்திபெற்றதாகும். பிரசித்திபெற்ற மஹரிசிக்கு காட்சியளித்த தினமான புரட்டாசி மாதம் திருவோணம் நட்சத்திரத்தை கொண்டு இத்திருக்கோவிலில் பிரம்மோற்சவம் 11- தினங்கள் கொண்டாடப்படும் .அதன்படி 14-ம்தேதி பிரம்மோற்சவமானது கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து அனுமந்தவாகனம், சேஷவாகனம், யானைவாகனம், அன்னவாகனம், குதிரைவாகனம், வெள்ளிக்கருடவாகனத்தில் உபயநாச்சியார்களுடன் பெருமாள் எழுந்தருளி திருவீதி உலாவந்தார்.விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேர் வடம்பிடிக்கும் நிகழ்ச்சி இன்று வெகுவிமரிசையாக நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட பிரம்மாண்டமான திருத்தேரில் பூதேவி, ஸ்ரீதேவி தாயாருடன் ஸ்ரீனிவாசபெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்க, ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என பக்திகோஷமிட்டவாறு தேரை வடம்பிடித்து இழுத்துச் சென்றனர். வேறு எந்தக்கோவிலிலும் இல்லாதவாறு திருத்தேரின் பின்புறமாக பலநூற்றுக்கணக்கான பக்தர்கள் தங்களது வேண்டுதல்கள் நிறைவேறவும், தாங்கள் செய்தபாவங்கள் விலகவும், கைகளில் தேங்காயினை வைத்துக்கொண்டு அங்கப்பிரதட்சனம் செய்து நேர்த்திக்கடனை செலுத்தினர். மேலும் ஸ்ரீனிவாச பெருமாளை வழிபாடு செய்து பிறவிப்பலன் பெறுவர் ஐதீகம் என்பதால் திருச்சி மட்டுமன்றி பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு செய்தனர்.

More news from தமிழ்நாடு and nearby areas
  • காட்டுப்புத்தூர் பேருந்து நிலையத்தில் சிங்கப்பின் சிறப்பு அதிரடிப்படை பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர் திருச்சி மாவட்டம் தொட்டியம் வட்டம் காட்டுப்புத்தூர் பேருந்து நிலையம் முன்பு சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை பெண்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர் பெண்கள் நடந்து கொள்ளும் விதம் குறித்தும் பெண்கள் எப்படி இருக்க வேண்டும் என்பது உள்ளிட்ட ஆலோசனைகளை சிங்கப்பெண் அதிரடி படை படையினர் பேருந்து நிலையம் பகுதியில் இருக்கும் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்
    1
    காட்டுப்புத்தூர் பேருந்து நிலையத்தில் சிங்கப்பின் சிறப்பு அதிரடிப்படை பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்
திருச்சி மாவட்டம் தொட்டியம் வட்டம் காட்டுப்புத்தூர் பேருந்து நிலையம் முன்பு 
சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை
பெண்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர் பெண்கள் நடந்து கொள்ளும் விதம் குறித்தும் பெண்கள் எப்படி இருக்க வேண்டும் என்பது உள்ளிட்ட ஆலோசனைகளை சிங்கப்பெண் அதிரடி படை படையினர் பேருந்து நிலையம் பகுதியில் இருக்கும் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்
    user_Kumar reports musiri
    Kumar reports musiri
    Photographer முசிறி, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
    12 hrs ago
  • முசிறியில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் காமராஜரின் காலை உணவு விரிவாக்க திட்டம் 6 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கும் விரிவுபடுத்தப்பட்ட பெருந்தலைவர் காமராசர் காலை உணவு திட்டம் மாணவர்களுடன் அமர்ந்து உணவு அருந்திய முசிறி எம்எல்ஏ விக்னேஷ், தமிழகத்தில் கடந்த 2022-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 1 முதல் 5 ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்காக தொடங்கப்பட்ட காலை உணவுத் திட்டம், தொடர்ந்து அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டது. தற்போது இத்திட்டம் பெருந்தலைவர் காமாசர் காலை உணவுத் திட்டம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டு, 6 முதல் 8 ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து திருச்சி மாவட்டம் முசிறி தொகுதியில் செவ்வாய்கிழமை முதல் 6 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கும் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதன் தொடக்கமாக முசிறிநகராட்சியில் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையர் பிரபு, நகர் மன்ற தலைவர் கலைச்செல்வி சிவக்குமார் ஆகியோர் திட்டத்தை தொடங்கி வைத்து, மாணவிகளுடன் அமர்ந்து காலை உணவு அருந்தினர். இந்நிகழ்வில் நகராட்சி பொறியாளர் சம்பத்குமார், சுகாதார ஆய்வாளர் பன்னீர்செல்வம், மேலாளர் மாரிமுத்து நகர் மன்ற உறுப்பினர்கள் பாலகுமார், இளையராஜா, சுந்தர்ராஜ்,,பள்ளி தலைமை ஆசிரியை கீதா, ஆசிரியர் புஷ்பராஜ் மற்றும் நகராட்சி அலுவலர்கள் பணியாளர்கள் பள்ளி மாணவிகள் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.
    1
    முசிறியில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் காமராஜரின் காலை உணவு விரிவாக்க திட்டம் 
6 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கும் விரிவுபடுத்தப்பட்ட பெருந்தலைவர் காமராசர் காலை உணவு திட்டம் மாணவர்களுடன் அமர்ந்து உணவு அருந்திய முசிறி எம்எல்ஏ விக்னேஷ்,
தமிழகத்தில் கடந்த 2022-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 1  முதல் 5 ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்காக தொடங்கப்பட்ட காலை உணவுத் திட்டம், தொடர்ந்து அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டது. 
தற்போது இத்திட்டம் பெருந்தலைவர் காமாசர் காலை உணவுத் திட்டம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டு, 6 முதல் 8 ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து திருச்சி மாவட்டம் முசிறி தொகுதியில் செவ்வாய்கிழமை முதல் 6 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கும் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டது.
இதன் தொடக்கமாக 
முசிறிநகராட்சியில் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையர் பிரபு, நகர் மன்ற தலைவர் கலைச்செல்வி சிவக்குமார் ஆகியோர் திட்டத்தை தொடங்கி வைத்து, மாணவிகளுடன் அமர்ந்து காலை உணவு அருந்தினர். இந்நிகழ்வில் நகராட்சி பொறியாளர் சம்பத்குமார், சுகாதார ஆய்வாளர் பன்னீர்செல்வம், மேலாளர் மாரிமுத்து  நகர் மன்ற உறுப்பினர்கள் பாலகுமார், இளையராஜா, சுந்தர்ராஜ்,,பள்ளி தலைமை ஆசிரியை கீதா, ஆசிரியர் புஷ்பராஜ் மற்றும் நகராட்சி அலுவலர்கள் பணியாளர்கள் பள்ளி மாணவிகள் ஆகியோர்  பங்கேற்றிருந்தனர்.
    user_நா. முருகன்
    நா. முருகன்
    முசிறி, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
    18 hrs ago
  • அரவக்குறிச்சி அருகே SBI வங்கியில் கொள்ளை முயற்சி! - ஜன்னலை உடைத்து புகுந்த மர்ம நபர்கள் தப்பியோட்டம்* கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அடுத்த கோவிலூரில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி கிளையில் இன்று அதிகாலை கொள்ளை முயற்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. ஜன்னல் கம்பிகளை உடைத்துக் கொண்டு உள்ளே புகுந்த மர்ம நபர்கள், வங்கிக்குள் கொள்ளையடிக்க முயன்றுள்ளனர். அப்போது வங்கியில் பொருத்தப்பட்டிருந்த அலாரம் சத்தம் அலறியதால், அதிர்ச்சியடைந்த கொள்ளையர்கள் எதையும் எடுக்காமல் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த அரவக்குறிச்சி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் வங்கியில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்து, தப்பியோடிய கொள்ளையர்களை தேடி வருகின்றனர். அதிகாலையில் நடந்த இந்த கொள்ளை முயற்சியால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. > கரூர் அரவக்குறிச்சி அருகே பாரத ஸ்டேட் வங்கியில் கொள்ளை முயற்சி! ஜன்னலை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள், அலாரம் அடித்ததும் தப்பியோட்டம். போலீசார் சிசிடிவி ஆய்வு! செய்து வருகின்றனர்
    1
    அரவக்குறிச்சி அருகே SBI வங்கியில் கொள்ளை முயற்சி! - ஜன்னலை உடைத்து புகுந்த மர்ம நபர்கள் தப்பியோட்டம்*


கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அடுத்த கோவிலூரில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி கிளையில் இன்று அதிகாலை கொள்ளை முயற்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.
ஜன்னல் கம்பிகளை உடைத்துக் கொண்டு உள்ளே புகுந்த மர்ம நபர்கள், வங்கிக்குள் கொள்ளையடிக்க முயன்றுள்ளனர். அப்போது வங்கியில் பொருத்தப்பட்டிருந்த அலாரம் சத்தம் அலறியதால், அதிர்ச்சியடைந்த கொள்ளையர்கள் எதையும் எடுக்காமல் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த அரவக்குறிச்சி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் வங்கியில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்து, தப்பியோடிய கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
அதிகாலையில் நடந்த இந்த கொள்ளை முயற்சியால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
> கரூர் அரவக்குறிச்சி அருகே பாரத ஸ்டேட் வங்கியில் கொள்ளை முயற்சி! ஜன்னலை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள், அலாரம் அடித்ததும் தப்பியோட்டம். போலீசார் சிசிடிவி ஆய்வு! செய்து வருகின்றனர்
    user_சதிஷ் குமார்
    சதிஷ் குமார்
    கிருஷ்ணராயபுரம், கரூர், தமிழ்நாடு•
    19 hrs ago
  • மணப்பாறை துணை மின் நிலையத்தில் நாளை பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை அறிவிப்பு திருச்சி மாவட்டம் மணப்பாறை துணை மின் நிலையத்தில் நாளை புதன்கிழமை நாள்  23.09.26 காலை 09.00 மணியிலிருந்து மாலை 04.00 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் இங்கிருந்து மின்சாரம் பெறும் மணப்பாறை நகரம், செவலூர், பொடங்குபட்டி, பொய்கைபட்டி, வீரப்பூர், கொட்டப்பட்டி, தீராம்பட்டி, பொத்த மேட்டுப்பட்டி, மஞ்சம்பட்டி, கலிங்கப்பட்டி, ராயம்பட்டி, பூசாரிபட்டி, ஆண்டவர் கோவில், கள்ளிபட்டி, முத்தபு டையான்பட்டி, காட்டுப்பட்டி, புதியகாலணி, பழைய காலணி, மணப்பாறைபட்டி, கல்பாளையத்தான்பட்டி, கீழபொய்கைபட்டி, கஸ்தூரிபட்டி, வடுகபட்டி, இராயம் பட்டி, வலையபட்டி, எஃப்.கீழையூர், சின்னமனப்பட்டி, கே.பெரியப்பட்டி, வடக்குசேர்பட்டி, இடையப்பட்டி, மரவனூர், சமுத்திரம், தாதநாயக்கன்பட்டி, கத்திக்கா ரன்பட்டி, சித்தகுடிப்பட்டி, களத்துப்பட்டி, ஆளிபட்டி, தொப்பம்பட்டி, குதிரைகுத்திபட்டி, படுகளம், பூசாரி பட்டி, கரும்புலிபட்டி, அமையபுரம், குளத்தூரம்பட்டி, கூடத்திப்பட்டி, ஆணையூர், பண்ணாங்கொம்பு குடிநீர், பண்ணாங்கொம்பு, கருப்பகோவில்பட்டி, பெருமாம் பட்டி, ஈச்சம்பட்டி, அமையபுரம், பண்ணப்பட்டி, தாதம லைப்பட்டி, ஆமணக்கம்பட்டி, கன்னிவடுகப்பட்டி, வீரா கோவில்பட்டி, பாலகருதம்பட்டி, ரெங்கவுண்டம்பட்டி, வடுகப்பட்டி வீட்டு வசதிவாரிய குடியிருப்பு, வேங்கை குறிச்சி, பொன்னகோன்பட்டி, மலையடிப்பட்டி வாட்டர் போர்டு, வெள்ளை பூலாம்பட்டி, கரட்டுப்பட்டி, பிச்சை மணியாரம்பட்டி, ஆவாரம்பட்டி, புங்கம்பட்டி, ஆலத் தூர், பாம்பாட்டிப்பட்டி, செட்டியப்பட்டி, ம.துலுக்கம் பட்டி, காட்டுப்பட்டி, முள்ளிப்பாடி, கருமகவுண்டம்பட்டி, என்.பூலாம்பட்டி, இனாம் கோவில்பட்டி, தோப்புப்பட்டி, நாகம்பட்டி, வளர்ந்த நகரம், சுண்டகாம்பட்டி மற்றும் சுற்றியுள்ள பல பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளனர்.
    1
    மணப்பாறை துணை மின் நிலையத்தில் நாளை பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை அறிவிப்பு 
திருச்சி மாவட்டம் மணப்பாறை துணை மின் நிலையத்தில் நாளை புதன்கிழமை நாள்  23.09.26 காலை 09.00 மணியிலிருந்து மாலை 04.00 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் இங்கிருந்து மின்சாரம் பெறும்  மணப்பாறை நகரம், செவலூர், பொடங்குபட்டி, பொய்கைபட்டி, வீரப்பூர், கொட்டப்பட்டி, தீராம்பட்டி, பொத்த மேட்டுப்பட்டி, மஞ்சம்பட்டி, கலிங்கப்பட்டி, ராயம்பட்டி, பூசாரிபட்டி, ஆண்டவர் கோவில், கள்ளிபட்டி, முத்தபு டையான்பட்டி, காட்டுப்பட்டி, புதியகாலணி, பழைய காலணி, மணப்பாறைபட்டி, கல்பாளையத்தான்பட்டி, கீழபொய்கைபட்டி, கஸ்தூரிபட்டி, வடுகபட்டி, இராயம் பட்டி, வலையபட்டி, எஃப்.கீழையூர், சின்னமனப்பட்டி, கே.பெரியப்பட்டி, வடக்குசேர்பட்டி, இடையப்பட்டி, மரவனூர், சமுத்திரம், தாதநாயக்கன்பட்டி, கத்திக்கா ரன்பட்டி, சித்தகுடிப்பட்டி, களத்துப்பட்டி, ஆளிபட்டி, தொப்பம்பட்டி, குதிரைகுத்திபட்டி, படுகளம், பூசாரி பட்டி, கரும்புலிபட்டி, அமையபுரம், குளத்தூரம்பட்டி, கூடத்திப்பட்டி, ஆணையூர், பண்ணாங்கொம்பு குடிநீர், பண்ணாங்கொம்பு, கருப்பகோவில்பட்டி, பெருமாம் பட்டி, ஈச்சம்பட்டி, அமையபுரம், பண்ணப்பட்டி, தாதம லைப்பட்டி, ஆமணக்கம்பட்டி, கன்னிவடுகப்பட்டி, வீரா கோவில்பட்டி, பாலகருதம்பட்டி, ரெங்கவுண்டம்பட்டி, வடுகப்பட்டி வீட்டு வசதிவாரிய குடியிருப்பு, வேங்கை குறிச்சி, பொன்னகோன்பட்டி, மலையடிப்பட்டி வாட்டர் போர்டு, வெள்ளை பூலாம்பட்டி, கரட்டுப்பட்டி, பிச்சை மணியாரம்பட்டி, ஆவாரம்பட்டி, புங்கம்பட்டி, ஆலத் தூர், பாம்பாட்டிப்பட்டி, செட்டியப்பட்டி, ம.துலுக்கம் பட்டி, காட்டுப்பட்டி, முள்ளிப்பாடி, கருமகவுண்டம்பட்டி, என்.பூலாம்பட்டி, இனாம் கோவில்பட்டி, தோப்புப்பட்டி, நாகம்பட்டி, வளர்ந்த நகரம், சுண்டகாம்பட்டி மற்றும் சுற்றியுள்ள பல பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளனர்.
    user_Usha arun News
    Usha arun News
    Teacher மணப்பாறை, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
    13 hrs ago
  • கரூர் மாவட்ட ஆட்சியர் காலை உணவு திட்டத்தை தொடங்கினார். கரூர் மாவட்டத்துக்கு இன்று செப்டம்பர் : 22 காலை உணவு திட்டம் விரிவாக்கம் செய்யப்பட உள்ள நிலையில், 21,487 கரூர் மாவட்ட மாணவ, மாணவியர் பயன் பெறுவர். தமிழகத்தில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், 1 முதல் 6-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு காலை உணவு திட்டம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆட்சியில், 8-ம் வகுப்பு வரை விரிவாக்கம் செய்யப்பட்டு, காமராஜர் காலை உணவு திட்டம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை, முதல்வர் ஜோசப் விஜய் காணொளி காட்சியின் மூலமாக தொடங்கி வைத்தார் இதன்படி கரூர் மாநகராட்சியில், 30 பள்ளிகளில், 2,936 மாணவர்கள், குளித்தலை நகராட்சியில், 6 பள்ளிகளில், 805 பேர், பள்ளப்பட்டி நகராட்சியில், 9 பள்ளிகளில், 1,439 பேர், புகழூர் நகராட்சியில், 7 பள்ளிகளில், 407 பேர் உள்ளனர். கரூர் ஊராட்சி ஒன்றியத்தில், 19 பள்ளிகளில், 919 மாணவர், தான்தோன்றிமலையில், 26 பள்ளிகளில், 1,871 பேர், அரவக்குறிச்சியில், 16 பள்ளிகளில், 818 பேர், க.பரமத்தியில், 28 பள்ளிகளில், 915 பேர், குளித்தலையில், 28 பள்ளிகளில், 3,047 பேர், கிருஷ்ணராயபுரத்தில், 18 பள்ளிகளில், 1,853 பேர், கடவூரில், 34 பள்ளிகளில், 2,962 பேர் உள்பட மொத்தம், 310 பள்ளிகளில் பயிலும், 21,487 மாணவ, மாணவியர் பயன்பெறும் வகையில் இருந்தனர் இந்த நிகழ்ச்சியில் காலை உணவு திட்டத்தை மாணவ மாணவியருடன் அமர்ந்து உணவு சாப்பிட்டார்கள் கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் முத்துக்குமரன். கரூர் கிருஷ்ணாபுரம் சட்டமன்ற உறுப்பினர் சத்யா அரசுத்துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்
    1
    கரூர் மாவட்ட ஆட்சியர் காலை உணவு திட்டத்தை தொடங்கினார்.
கரூர் மாவட்டத்துக்கு  இன்று செப்டம்பர் : 22 காலை உணவு திட்டம் விரிவாக்கம் செய்யப்பட உள்ள நிலையில், 21,487 கரூர் மாவட்ட மாணவ, மாணவியர் பயன் பெறுவர்.
தமிழகத்தில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், 1 முதல் 6-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு காலை உணவு திட்டம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆட்சியில், 8-ம் வகுப்பு வரை விரிவாக்கம் செய்யப்பட்டு, காமராஜர் காலை உணவு திட்டம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை, முதல்வர் ஜோசப் விஜய் காணொளி காட்சியின் மூலமாக தொடங்கி வைத்தார்  
இதன்படி கரூர் மாநகராட்சியில், 30 பள்ளிகளில், 2,936 மாணவர்கள், குளித்தலை நகராட்சியில், 6 பள்ளிகளில், 805 பேர், பள்ளப்பட்டி நகராட்சியில், 9 பள்ளிகளில், 1,439 பேர், புகழூர் நகராட்சியில், 7 பள்ளிகளில், 407 பேர் உள்ளனர். கரூர் ஊராட்சி ஒன்றியத்தில், 19 பள்ளிகளில், 919 மாணவர், தான்தோன்றிமலையில், 26 பள்ளிகளில், 1,871 பேர், அரவக்குறிச்சியில், 16 பள்ளிகளில், 818 பேர், க.பரமத்தியில், 28 பள்ளிகளில், 915 பேர், குளித்தலையில், 28 பள்ளிகளில், 3,047 பேர், கிருஷ்ணராயபுரத்தில், 18 பள்ளிகளில், 1,853 பேர், கடவூரில், 34 பள்ளிகளில், 2,962 பேர் உள்பட மொத்தம், 310 பள்ளிகளில் பயிலும், 21,487 மாணவ, மாணவியர் பயன்பெறும் வகையில் இருந்தனர் இந்த நிகழ்ச்சியில் காலை உணவு திட்டத்தை மாணவ மாணவியருடன் அமர்ந்து உணவு சாப்பிட்டார்கள் கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் முத்துக்குமரன். கரூர் கிருஷ்ணாபுரம் சட்டமன்ற உறுப்பினர் சத்யா அரசுத்துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்
    user_Karthikeyan
    Karthikeyan
    கரூர், கரூர், தமிழ்நாடு•
    8 hrs ago
  • பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்த எம்எல்ஏவின் உதவியாளர். திருச்சி மாவட்டம் லால்குடி சட்டமன்ற தொகுதியில் எம்எல்ஏ வின் உதவியாளர் பொதுமக்களை நேரில் சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பாக அனைத்து கிராமங்களில் இருக்கும் அடிப்படை தேவைகள் குறித்து எம்எல்ஏ உதவியாளர் பயாசிடம் தகவல் தெரிவித்தனர்.இதனைத் தொடர்ந்து கிராமங்களுக்கு சென்ற எம்எல்ஏவின் உதவியாளர் பொதுமக்களை நேரில் சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்.அப்போது உங்கள் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்ய சம்பந்தப்பட்ட துறை அதிகாரியிடம் கூறி விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுமக்களிடம் தெரிவித்துள்ளார்.
    1
    பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்த எம்எல்ஏவின் உதவியாளர்.
திருச்சி மாவட்டம் லால்குடி சட்டமன்ற தொகுதியில் எம்எல்ஏ வின் உதவியாளர் பொதுமக்களை நேரில் சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்.
தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பாக அனைத்து கிராமங்களில் இருக்கும் அடிப்படை தேவைகள் குறித்து எம்எல்ஏ உதவியாளர் பயாசிடம் தகவல் தெரிவித்தனர்.இதனைத் தொடர்ந்து கிராமங்களுக்கு சென்ற எம்எல்ஏவின் உதவியாளர் பொதுமக்களை நேரில் சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்.அப்போது உங்கள் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்ய சம்பந்தப்பட்ட துறை அதிகாரியிடம் கூறி விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுமக்களிடம்  தெரிவித்துள்ளார்.
    user_Rakesh sharma
    Rakesh sharma
    லால்குடி, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
    16 hrs ago
  • காதலித்து கலப்பு திருமணம், விட்டுச்சென்ற காதலன், காதலன் மற்றும் அவர்களின் பெற்றோரை கைது செய்ய வலியுறுத்தி பெண் புகார். கரூர் மாவட்டம் குளித்தலை தாலுக்கா காக்கையம் பட்டியை சேர்ந்தவர் முத்துலட்சுமி இவர் காணப்பட்டியில் உள்ள அரசு பாலிடெக்னிக்ல் படித்து வந்தபோது அதே கல்லூரியில் படித்து வந்த கார்த்திக் என்பவர் உடன் காதல் ஏற்பட்டுள்ளது. இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் இருப்பினும் கார்த்திக் முத்துலட்சுமியை சென்னைக்கு சென்று திருமணம் செய்து ஒரு வருடம் இருவரும் வசித்து வந்துள்ளனர். மேலும் முத்துலட்சுமி கர்ப்பமாக இருந்துள்ள நிலையில் கார்த்திக்கின் பெற்றோர்கள் தொடர்பு கொண்டு முத்துலட்சுமியின் கருவை கலைத்துவிட்டு எங்களுடன் வந்துவிடு என கூறியுள்ளனர். கார்த்தி முத்துலட்சுமி கருவை கலைத்துவிட்டு தனியாக விட்டுவிட்டு பெற்றவுடன் சென்று விட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த முத்துலட்சுமி கார்த்திக்கை தொடர்பு கொண்ட போது கார்த்திக்கின் பெற்றோர் கொலை மிரட்டல் கொடுத்துள்ளனர். அவரின் தாய் தந்தையின் மீது குளித்தலை மகளிர் காவல் நிலையத்தில் முத்துலட்சுமி புகார் கொடுத்ததன் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் அவர்கள் மீது எஸ்சிஎஸ்டி வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மூவர் மீதும் FIR பதிவு செய்தும் இன்னும் கைது செய்யபடததால் மாவட்ட ஆட்சியரிடம் நேரில் புகார் மனு அளித்தார்.
    1
    காதலித்து கலப்பு திருமணம், விட்டுச்சென்ற காதலன், காதலன் மற்றும் அவர்களின் பெற்றோரை கைது செய்ய வலியுறுத்தி  பெண் புகார்.
கரூர் மாவட்டம் குளித்தலை தாலுக்கா காக்கையம் பட்டியை சேர்ந்தவர் முத்துலட்சுமி 
இவர் காணப்பட்டியில் உள்ள அரசு பாலிடெக்னிக்ல் படித்து வந்தபோது அதே கல்லூரியில் படித்து வந்த கார்த்திக் என்பவர் உடன் காதல் ஏற்பட்டுள்ளது. 
இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் இருப்பினும் கார்த்திக் முத்துலட்சுமியை சென்னைக்கு சென்று திருமணம் செய்து ஒரு வருடம் இருவரும் வசித்து வந்துள்ளனர். 
மேலும் முத்துலட்சுமி கர்ப்பமாக இருந்துள்ள நிலையில் கார்த்திக்கின் பெற்றோர்கள் தொடர்பு கொண்டு முத்துலட்சுமியின் கருவை கலைத்துவிட்டு எங்களுடன் வந்துவிடு என கூறியுள்ளனர். 
கார்த்தி முத்துலட்சுமி கருவை கலைத்துவிட்டு தனியாக விட்டுவிட்டு பெற்றவுடன் சென்று விட்டார். 
இதனால் அதிர்ச்சி அடைந்த முத்துலட்சுமி கார்த்திக்கை தொடர்பு கொண்ட போது கார்த்திக்கின் பெற்றோர் கொலை மிரட்டல் கொடுத்துள்ளனர். அவரின் தாய் தந்தையின் மீது குளித்தலை மகளிர் காவல் நிலையத்தில் முத்துலட்சுமி புகார் கொடுத்ததன் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் அவர்கள் மீது எஸ்சிஎஸ்டி வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மூவர் மீதும்  FIR பதிவு செய்தும் இன்னும் கைது செய்யபடததால்  மாவட்ட ஆட்சியரிடம் நேரில் புகார் மனு அளித்தார்.
    user_Karur clicks
    Karur clicks
    Photographer கரூர், கரூர், தமிழ்நாடு•
    16 hrs ago
  • குணசீலம் பிரசன்ன வெங்கடாசலபதி திருக்கோவிலில் 100 கற்கும் மேற்பட்டோர் அங்க பிரதோஷ னம் திருச்சி மாவட்டம் முசிறி அருகே குணசேகரத்தில் இன்று பிரசன்ன வெங்கடாஜலபதி திருக்கோவில் தேரோட்டம் நடைபெற்றது தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடமழுத்து தேரை இழுத்து வந்தனர் பிறகு நூற்றுக்கு மேற்பட்ட பக்தர்கள் கோவிலை சுற்றி அங்க பிரதோஷ னம் செய்து நேர்த்திக்கடன் செலுத்தினர் கோயில் வளாகம் முழுவதும் பல்லாயிரம் கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர்
    1
    குணசீலம் பிரசன்ன வெங்கடாசலபதி திருக்கோவிலில் 100 கற்கும் மேற்பட்டோர் அங்க பிரதோஷ னம்
திருச்சி மாவட்டம் முசிறி அருகே குணசேகரத்தில் இன்று பிரசன்ன வெங்கடாஜலபதி திருக்கோவில் தேரோட்டம் நடைபெற்றது தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடமழுத்து தேரை இழுத்து வந்தனர் பிறகு நூற்றுக்கு மேற்பட்ட பக்தர்கள் கோவிலை சுற்றி அங்க பிரதோஷ னம் செய்து நேர்த்திக்கடன் செலுத்தினர்   கோயில் வளாகம் முழுவதும் பல்லாயிரம் கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர்
    user_Kumar reports musiri
    Kumar reports musiri
    Photographer முசிறி, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
    15 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.