அரவக்குறிச்சி அருகே SBI வங்கியில் கொள்ளை முயற்சி! - ஜன்னலை உடைத்து புகுந்த மர்ம நபர்கள் தப்பியோட்டம்* கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அடுத்த கோவிலூரில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி கிளையில் இன்று அதிகாலை கொள்ளை முயற்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. ஜன்னல் கம்பிகளை உடைத்துக் கொண்டு உள்ளே புகுந்த மர்ம நபர்கள், வங்கிக்குள் கொள்ளையடிக்க முயன்றுள்ளனர். அப்போது வங்கியில் பொருத்தப்பட்டிருந்த அலாரம் சத்தம் அலறியதால், அதிர்ச்சியடைந்த கொள்ளையர்கள் எதையும் எடுக்காமல் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த அரவக்குறிச்சி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் வங்கியில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்து, தப்பியோடிய கொள்ளையர்களை தேடி வருகின்றனர். அதிகாலையில் நடந்த இந்த கொள்ளை முயற்சியால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. > கரூர் அரவக்குறிச்சி அருகே பாரத ஸ்டேட் வங்கியில் கொள்ளை முயற்சி! ஜன்னலை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள், அலாரம் அடித்ததும் தப்பியோட்டம். போலீசார் சிசிடிவி ஆய்வு! செய்து வருகின்றனர்
அரவக்குறிச்சி அருகே SBI வங்கியில் கொள்ளை முயற்சி! - ஜன்னலை உடைத்து புகுந்த மர்ம நபர்கள் தப்பியோட்டம்* கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அடுத்த கோவிலூரில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி கிளையில் இன்று அதிகாலை கொள்ளை முயற்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. ஜன்னல் கம்பிகளை உடைத்துக் கொண்டு உள்ளே புகுந்த மர்ம நபர்கள், வங்கிக்குள் கொள்ளையடிக்க முயன்றுள்ளனர். அப்போது வங்கியில் பொருத்தப்பட்டிருந்த அலாரம் சத்தம் அலறியதால், அதிர்ச்சியடைந்த கொள்ளையர்கள் எதையும் எடுக்காமல் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த அரவக்குறிச்சி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் வங்கியில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்து, தப்பியோடிய கொள்ளையர்களை தேடி வருகின்றனர். அதிகாலையில் நடந்த இந்த கொள்ளை முயற்சியால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. > கரூர் அரவக்குறிச்சி அருகே பாரத ஸ்டேட் வங்கியில் கொள்ளை முயற்சி! ஜன்னலை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள், அலாரம் அடித்ததும் தப்பியோட்டம். போலீசார் சிசிடிவி ஆய்வு! செய்து வருகின்றனர்
- முசிறி நீதிமன்றங்கள் சார்பில் சமரச விழிப்புணர்வு பேரணி முசிறி நீதிமன்றங்கள் சார்பில் சமரச விழிப்புணர்வு பேரணி திருச்சி மாவட்டம் முசிறி நீதிமன்றங்கள் சார்பில் நீண்டகாலமாக உள்ள நாள்பட்ட வழக்குகள் நடைமுறையில் உள்ள வழக்குகள் உள்ளிட்டவைகளை இரு தரப்பினர் தரப்பினர்களை வரவழைத்து, சமரசமான முறையில் நடுவர் முன்னிலையில் அமர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி, சுமுகமான முறையில் தீர்வு காணுவது பற்றி பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேரணி நடத்தினர். இந்த பேரணிக்கு முசிறி சார்பு நீதிமன்ற நீதிபதி முருகானந்தம் தலைமை வகித்தார், முசிறி குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்ற நீதிபதி சுரேஷ்குமார், தொட்டியம் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் கே.அஜிஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர், இந்த பேரணியில் சமரச தீர்வாளர்கள் வழக்குரைஞர்கள் கதிரேசன், தங்கத்துரை, ராஜன், வழக்குரைஞர்கள் சங்க செயலாளர் தமிழ்ச்செல்வன் (முசிறி), கார்த்திக் (தொட்டியம்) மற்றும் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப் பணித்திட்ட மாணவிகள் மற்றும் பங்கேற்றிருந்தனர், இந்த பேரணியானது முசிறி கைகாட்டில் தொடங்கி திருச்சி சேலம் சாலையில் முசிறி டிஎஸ்பி அலுவலகம் வழியாக வட்டாட்சியர் அலுவலகம் அருகிலுள்ள சார்பு நீதிமன்றம் வரை பொதுமக்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி சென்றனர். முன்னதாக வழக்குரைஞர்கள் சங்க தலைவர் மருந்தையா வரவேற்றார், நிறைவாக வழக்குரைஞர் பொன்குமார் நன்றி தெரிவித்தார்.1
- கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் முற்றுகை போராட்டம் கரூர் மாவட்டம், புகழூர் நகராட்சிக்கு உட்பட்ட செம்படாபாளையம் பகுதியில் 1000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் புகழூர் நகராட்சிக்கு சொந்தமான கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கு இடம் தேர்வு செய்யப்பட்டு கையகப்படுத்தும் பணி நடைபெற உள்ள நிலையில் அதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவாய்த்துறையினர் கொண்டு வந்த ஜேசிபி, டிராக்டர் இயந்திரங்களை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஏற்கனவே புகழூர் சர்க்கரை ஆலையிலிருந்து வெளிவரும் பக்காஸ் மற்றும் கரித்தூள் பிரச்சனை ஏற்படுகிறது. இதனால் இங்கு குடியிருக்கும் பொதுமக்களுக்கு சுகாதாரக் கேடு ஏற்படுகிறது. தற்போது இந்த சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டால் இந்த ஊரில் வாழ முடியாத சூழல் ஏற்படும் என்று பொதுமக்கள் குற்றம் சாட்டி எதிர்ப்பு தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த புகலூர் வட்டாட்சியர் மற்றும் வேலாயுதம்பாளையம் காவல் ஆய்வாளர் ஆகியோர் பொதுமக்கள் இடையே பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையில் பீஸ் கமிட்டி அமைத்து சுத்திகரிப்பு நிலையம் அமைப்பது தொடர்பாக பேசி முடிவு செய்து கொள்ளலாம் எனக் கூறியதை ஏற்று பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.1
- மணப்பாறை தியாகேசர் ஆலை மேல்நிலைப்பள்ளியில் காலை உணவு திட்டம் துவக்கம் தமிழகத்தில் இன்று முதல் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் தமிழக முதல்வர் விஜய் ஆணைக்கிணங்க விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இதில் 8-ம் வகுப்பு வரை பயிலும் குழந்தைகள் உற்சாகத்துடன் பள்ளிக்கு சென்று கல்வி கற்க ஏதுவாக சுவையான காலை உணவு வழங்கப்பட்டன. இந்நிலையில் திருச்சி மாவட்டம் மணப்பாறையில் செயல்பட்டு வரும் தியாகேசர் ஆலை மேல்நிலைப்பள்ளியில் இன்று காலை தலைமை ஆசிரியர் என்.கே. லதா அவர்கள் இப்பள்ளியில் 6 முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவிகளுக்கு காலை உணவை வழங்கி துவங்கி வைத்தார்.4
- ராசிபுரம் அருகே, உரிய மருத்துவப் படிப்பு இன்றி பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்ததாகக் கூறப்படும் பெண் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் நடத்தி வந்த மருந்தகத்திற்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் சீல்வைத்தனர். நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் அடுத்த ஆர்.புதுப்பட்டி பகுதியில் இஸ்லாமி மெடிக்கல் என்ற மருந்தகத்தை,கேரள மாநிலத்தைச் சேர்ந்த உஷா என்பவர் கடந்த 7 ஆண்டுகளாக நடத்தி வந்ததாக கூறப்படுகிறது. இவர் உரிய மருத்துவப் படிப்பு படிக்காமல், மருத்துவரின் பரிந்துரைச்சீட்டு இன்றி பொது மக்களுக்கு மருந்துகள் வழங்கியதுடன்நோயாளிகளுக்கு ஊசி செலுத்தி வந்ததாகவும், வீடுகளுக்குச் சென்று குளுக்கோஸ் செலுத்தியதாகவும் புகார்கள் எழுந்தன. இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியருக்கு தொடர்ந்து புகார்கள் சென்றதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், வடுகம் ஊராட்சியில் டெங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் மதுபாலன் கள ஆய்வு மேற்கொண்டபோது, புதுப்பட்டி பகுதியில் காய்ச்சலுக்கு மருந்து மற்றும் ஊசி செலுத்திக் கொள்வதாக சிலர் தெரிவித்துள்ளனர். இதையடுத்து மாவட்ட ஆட்சியர் சம்பந்தப்பட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளார். தொடர்ந்து, சுகாதார அலுவலர் பூங்கொடி தலைமையிலான அதிகாரிகள், ஆர்.புதுப்பட்டியில் உள்ள இஸ்லாமி மெடிக்கல் மருந்தகத்தில் ஆய்வு மேற்கொண்டு அந்த மருந்தகத்திற்கு சீல் வைத்தனர். மேலும், உரிய மருத்துவத் தகுதி இன்றி சிகிச்சை அளித்ததாகக் கூறப்படும் உஷா மீது நாமகிரிப்பேட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.1
- ராசிபுரம் நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை... ராசிபுரம் ராசிபுரம் நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை... நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். நகராட்சி அலுவலகத்தின் முன்புற வாயில் கதவை பூட்டிய நிலையில், அலுவலகத்தில் இருந்த ஆணையாளர், பொறியாளர், நகர அமைப்பு அலுவலர் உள்ளிட்ட ஊழியர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நாமக்கல் விஜிலென்ஸ் டி.எஸ்.பி. சுபாஷினி தலைமையில், ஆய்வாளர் பிரபு உள்ளிட்ட 8 பேர் கொண்ட குழுவினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ராசிபுரம் நகராட்சியில் அளவுக்கு அதிகமாக பணம் கைமாறுவதாகவும், பல்வேறு பணிகளுக்கு லஞ்சம் கேட்பதாகவும் புகார்கள் வந்ததாக கூறப்படுகிறது. குறிப்பாக பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள் பெறவும், நகராட்சி வரி உள்ளிட்ட பணிகளுக்கும் லஞ்சம் கேட்பதாக வந்த புகாரின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.1
- பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்த எம்எல்ஏவின் உதவியாளர். திருச்சி மாவட்டம் லால்குடி சட்டமன்ற தொகுதியில் எம்எல்ஏ வின் உதவியாளர் பொதுமக்களை நேரில் சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பாக அனைத்து கிராமங்களில் இருக்கும் அடிப்படை தேவைகள் குறித்து எம்எல்ஏ உதவியாளர் பயாசிடம் தகவல் தெரிவித்தனர்.இதனைத் தொடர்ந்து கிராமங்களுக்கு சென்ற எம்எல்ஏவின் உதவியாளர் பொதுமக்களை நேரில் சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்.அப்போது உங்கள் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்ய சம்பந்தப்பட்ட துறை அதிகாரியிடம் கூறி விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுமக்களிடம் தெரிவித்துள்ளார்.1
- முசிறி அருகே குணசேகர் பிரசன்ன வெங்கடாஜலபதி திருக்கோவில் தேரோட்டம் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் கே குமார் செய்தியாளர் முசிறி முசிறி அருகே தென்திருப்பதி என்றழைக்கப்படும் குணசீலம் பிரசன்ன வேங்கடாசலபதி திருக்கோவில் திருத்தேரோட்டம் - பல்லாயிரக்கணக்காண பக்தர்கள் பங்கேற்பு..நூற்றுக்கணக்கான பக்தர்கள் தேரின்பின்னே அங்கப்பிரதட்சனம் செய்து நேர்த்திக்கடன் செலுத்தி நூதன வழிபாடு.... தென்திருப்பதி என்றழைக்கப்படுவதும், குணசீலமஹரிஷியின் தவத்தினையடுத்து பிரசன்னவேங்கடேசனாக காட்சியளித்த ஸ்தலமான திருச்சியை அடுத்த குணசீலம் பிரஸன்ன வேங்கடாசலபதிபெருமாள் திருக்கோவில் மிகவும் பிரசித்திபெற்றதாகும். பிரசித்திபெற்ற மஹரிசிக்கு காட்சியளித்த தினமான புரட்டாசி மாதம் திருவோணம் நட்சத்திரத்தை கொண்டு இத்திருக்கோவிலில் பிரம்மோற்சவம் 11- தினங்கள் கொண்டாடப்படும் .அதன்படி 14-ம்தேதி பிரம்மோற்சவமானது கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து அனுமந்தவாகனம், சேஷவாகனம், யானைவாகனம், அன்னவாகனம், குதிரைவாகனம், வெள்ளிக்கருடவாகனத்தில் உபயநாச்சியார்களுடன் பெருமாள் எழுந்தருளி திருவீதி உலாவந்தார்.விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேர் வடம்பிடிக்கும் நிகழ்ச்சி இன்று வெகுவிமரிசையாக நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட பிரம்மாண்டமான திருத்தேரில் பூதேவி, ஸ்ரீதேவி தாயாருடன் ஸ்ரீனிவாசபெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்க, ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என பக்திகோஷமிட்டவாறு தேரை வடம்பிடித்து இழுத்துச் சென்றனர். வேறு எந்தக்கோவிலிலும் இல்லாதவாறு திருத்தேரின் பின்புறமாக பலநூற்றுக்கணக்கான பக்தர்கள் தங்களது வேண்டுதல்கள் நிறைவேறவும், தாங்கள் செய்தபாவங்கள் விலகவும், கைகளில் தேங்காயினை வைத்துக்கொண்டு அங்கப்பிரதட்சனம் செய்து நேர்த்திக்கடனை செலுத்தினர். மேலும் ஸ்ரீனிவாச பெருமாளை வழிபாடு செய்து பிறவிப்பலன் பெறுவர் ஐதீகம் என்பதால் திருச்சி மட்டுமன்றி பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு செய்தனர்.1
- துவரங்குறிச்சி பூதநாயகி அம்மன் கோவிலில் பூச்சொரிதல் திருவிழா திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த மருங்காபுரி அருகே துவரங்குறிச்சியில் பிரசித்தி பெற்ற பூத நாயகி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று பூ திருவிழா தொடங்கியது. அரசு அதிகாரிகள் முதல் பூவை செலுத்தினர். இதைத்தொடர்ந்து துவரங்குறிச்சி மற்றும் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் இருந்து ஏராளமான கிராம மக்கள் தாரை தப்பட்டைகள் வாண வேடிக்கைகள் முழங்க பூத்தட்டு ஏந்தி வந்து அம்மனுக்கு செலுத்தினர். பல பகுதிகளில் இருந்து ரத ஊர்வலம் இளைஞர்களின் ஆட்டம் பாட்டத்துடன் துவரங்குறிச்சியின் முக்கிய வீதிகள் வழி யாக கோவிலை வந்தடைத்தன. அதனைத் தொடர்ந்து இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு காப்பு கட்டுதல் நிகழ்வு நடைபெறும். அதனைத் தொடர்ந்து வருகிற 29-ந்தேதி முதல் மண்டகபடி நடைபெறும். அம்மன் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் துவரங்குறிச்சியின் முக்கிய விதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்து சென்று மீண்டும் கோவிலை வந்தடைவார். அக்டோபர் 6-ந் தேதி துவரங்குறிச்சியில் பொன்னூஞ்சல் வெகு விமரிசையாக நடைபெற உள்ளது. இதில் திருவிழா 7-ந் தேதி காலை பொங்கல் விழா மற்றும் கிடா வெட்டுதல் நிகழ்வு நடைபெறும் தொடர்ந்து விடையாற்றி மண்டகபடியுடன் நிறைவு பெறுகிறது.2
- ராசிபுரத்தில் தொடங்கியது 6 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டம்... ராசிபுரம் ராசிபுரத்தில் தொடங்கியது 6 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டம்... பத்திரப் பதிவுத்துறை அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் தொடங்கி வைப்பு.... ராசிபுரம் அருகே சிங்களாந்தபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில், 6 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கான விரிவாக்கப்பட்ட காமராஜர் காலை உணவுத் திட்டத்தை அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் தொடங்கி வைத்தார். தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ-மாணவிகளின் ஊட்டச்சத்து நிலையை மேம்படுத்தவும், பசியின்றி வகுப்பறைக்கு வந்து கல்வியில் முழுமையாக கவனம் செலுத்துவதை உறுதி செய்யவும், பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதுவரை 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த இந்தத் திட்டம், தற்போது 6, 7 மற்றும் 8-ம் வகுப்பு பயிலும் நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. சென்னை திருவான்மியூர் காந்தி கிராமத்தில் உள்ள சென்னை நடுநிலைப்பள்ளியில் திட்டத்தின் விரிவாக்கத்தை முதலமைச்சர் விஜய் தொடங்கி வைத்தார். இதன் தொடர்ச்சியாக, நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த சிங்களாந்தபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பத்திரப்பதிவுத்துறை அமைச்சரும் ராசிபுரம் சட்டமன்ற உறுப்பினருமான லோகேஷ் தமிழ்ச்செல்வன் கலந்து கொண்டு, விரிவாக்கப்பட்ட காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைத்து மாணவர்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்டார். நிகழ்ச்சியில் நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் திலீப், மாவட்ட ஆட்சியர் மதுபாலன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.1