logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

முசிறி நீதிமன்றங்கள் சார்பில் சமரச விழிப்புணர்வு பேரணி முசிறி நீதிமன்றங்கள் சார்பில் சமரச விழிப்புணர்வு பேரணி திருச்சி மாவட்டம் முசிறி நீதிமன்றங்கள் சார்பில் நீண்டகாலமாக உள்ள நாள்பட்ட வழக்குகள் நடைமுறையில் உள்ள வழக்குகள் உள்ளிட்டவைகளை இரு தரப்பினர் தரப்பினர்களை வரவழைத்து, சமரசமான முறையில் நடுவர் முன்னிலையில் அமர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி, சுமுகமான முறையில் தீர்வு காணுவது பற்றி பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேரணி நடத்தினர். இந்த பேரணிக்கு முசிறி சார்பு நீதிமன்ற நீதிபதி முருகானந்தம் தலைமை வகித்தார், முசிறி குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்ற நீதிபதி சுரேஷ்குமார், தொட்டியம் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் கே.அஜிஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர், இந்த பேரணியில் சமரச தீர்வாளர்கள் வழக்குரைஞர்கள் கதிரேசன், தங்கத்துரை, ராஜன், வழக்குரைஞர்கள் சங்க செயலாளர் தமிழ்ச்செல்வன் (முசிறி), கார்த்திக் (தொட்டியம்) மற்றும் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப் பணித்திட்ட மாணவிகள் மற்றும் பங்கேற்றிருந்தனர், இந்த பேரணியானது முசிறி கைகாட்டில் தொடங்கி திருச்சி சேலம் சாலையில் முசிறி டிஎஸ்பி அலுவலகம் வழியாக வட்டாட்சியர் அலுவலகம் அருகிலுள்ள சார்பு நீதிமன்றம் வரை பொதுமக்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி சென்றனர். முன்னதாக வழக்குரைஞர்கள் சங்க தலைவர் மருந்தையா வரவேற்றார், நிறைவாக வழக்குரைஞர் பொன்குமார் நன்றி தெரிவித்தார்.

19 hrs ago
user_நா. முருகன்
நா. முருகன்
முசிறி, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
19 hrs ago

முசிறி நீதிமன்றங்கள் சார்பில் சமரச விழிப்புணர்வு பேரணி முசிறி நீதிமன்றங்கள் சார்பில் சமரச விழிப்புணர்வு பேரணி திருச்சி மாவட்டம் முசிறி நீதிமன்றங்கள் சார்பில் நீண்டகாலமாக உள்ள நாள்பட்ட வழக்குகள் நடைமுறையில் உள்ள வழக்குகள் உள்ளிட்டவைகளை இரு தரப்பினர் தரப்பினர்களை வரவழைத்து, சமரசமான முறையில் நடுவர் முன்னிலையில் அமர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி, சுமுகமான முறையில் தீர்வு காணுவது பற்றி பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேரணி நடத்தினர். இந்த பேரணிக்கு முசிறி சார்பு நீதிமன்ற நீதிபதி முருகானந்தம் தலைமை வகித்தார், முசிறி குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்ற நீதிபதி சுரேஷ்குமார், தொட்டியம் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் கே.அஜிஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர், இந்த பேரணியில் சமரச தீர்வாளர்கள் வழக்குரைஞர்கள் கதிரேசன், தங்கத்துரை, ராஜன், வழக்குரைஞர்கள் சங்க செயலாளர் தமிழ்ச்செல்வன் (முசிறி), கார்த்திக் (தொட்டியம்) மற்றும் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப் பணித்திட்ட மாணவிகள் மற்றும் பங்கேற்றிருந்தனர், இந்த பேரணியானது முசிறி கைகாட்டில் தொடங்கி திருச்சி சேலம் சாலையில் முசிறி டிஎஸ்பி அலுவலகம் வழியாக வட்டாட்சியர் அலுவலகம் அருகிலுள்ள சார்பு நீதிமன்றம் வரை பொதுமக்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி சென்றனர். முன்னதாக வழக்குரைஞர்கள் சங்க தலைவர் மருந்தையா வரவேற்றார், நிறைவாக வழக்குரைஞர் பொன்குமார் நன்றி தெரிவித்தார்.

More news from தமிழ்நாடு and nearby areas
  • முசிறி நீதிமன்றங்கள் சார்பில் சமரச விழிப்புணர்வு பேரணி முசிறி நீதிமன்றங்கள் சார்பில் சமரச விழிப்புணர்வு பேரணி திருச்சி மாவட்டம் முசிறி நீதிமன்றங்கள் சார்பில் நீண்டகாலமாக உள்ள நாள்பட்ட வழக்குகள் நடைமுறையில் உள்ள வழக்குகள் உள்ளிட்டவைகளை இரு தரப்பினர் தரப்பினர்களை வரவழைத்து, சமரசமான முறையில் நடுவர் முன்னிலையில் அமர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி, சுமுகமான முறையில் தீர்வு காணுவது பற்றி பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேரணி நடத்தினர். இந்த பேரணிக்கு முசிறி சார்பு நீதிமன்ற நீதிபதி முருகானந்தம் தலைமை வகித்தார், முசிறி குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்ற நீதிபதி சுரேஷ்குமார், தொட்டியம் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் கே.அஜிஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர், இந்த பேரணியில் சமரச தீர்வாளர்கள் வழக்குரைஞர்கள் கதிரேசன், தங்கத்துரை, ராஜன், வழக்குரைஞர்கள் சங்க செயலாளர் தமிழ்ச்செல்வன் (முசிறி), கார்த்திக் (தொட்டியம்) மற்றும் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப் பணித்திட்ட மாணவிகள் மற்றும் பங்கேற்றிருந்தனர், இந்த பேரணியானது முசிறி கைகாட்டில் தொடங்கி திருச்சி சேலம் சாலையில் முசிறி டிஎஸ்பி அலுவலகம் வழியாக வட்டாட்சியர் அலுவலகம் அருகிலுள்ள சார்பு நீதிமன்றம் வரை பொதுமக்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி சென்றனர். முன்னதாக வழக்குரைஞர்கள் சங்க தலைவர் மருந்தையா வரவேற்றார், நிறைவாக வழக்குரைஞர் பொன்குமார் நன்றி தெரிவித்தார்.
    1
    முசிறி நீதிமன்றங்கள் சார்பில் சமரச விழிப்புணர்வு பேரணி 
முசிறி நீதிமன்றங்கள் சார்பில் சமரச விழிப்புணர்வு பேரணி
திருச்சி மாவட்டம் முசிறி நீதிமன்றங்கள் சார்பில் நீண்டகாலமாக உள்ள  நாள்பட்ட வழக்குகள் நடைமுறையில் உள்ள வழக்குகள் உள்ளிட்டவைகளை இரு தரப்பினர் தரப்பினர்களை வரவழைத்து, சமரசமான முறையில் நடுவர் முன்னிலையில் அமர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி, சுமுகமான முறையில் தீர்வு காணுவது  பற்றி பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேரணி நடத்தினர்.
இந்த பேரணிக்கு முசிறி சார்பு நீதிமன்ற நீதிபதி முருகானந்தம் தலைமை வகித்தார், முசிறி குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்ற நீதிபதி சுரேஷ்குமார், தொட்டியம் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் கே.அஜிஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர், இந்த பேரணியில் சமரச தீர்வாளர்கள்  வழக்குரைஞர்கள் கதிரேசன், தங்கத்துரை, ராஜன், வழக்குரைஞர்கள் சங்க செயலாளர் தமிழ்ச்செல்வன் (முசிறி), கார்த்திக் (தொட்டியம்) மற்றும் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப் பணித்திட்ட மாணவிகள் மற்றும் பங்கேற்றிருந்தனர், இந்த பேரணியானது முசிறி கைகாட்டில் தொடங்கி திருச்சி சேலம் சாலையில் முசிறி டிஎஸ்பி அலுவலகம் வழியாக  வட்டாட்சியர் அலுவலகம் அருகிலுள்ள சார்பு நீதிமன்றம் வரை பொதுமக்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி சென்றனர்.
முன்னதாக வழக்குரைஞர்கள் சங்க தலைவர் மருந்தையா வரவேற்றார், நிறைவாக வழக்குரைஞர் பொன்குமார் நன்றி தெரிவித்தார்.
    user_நா. முருகன்
    நா. முருகன்
    முசிறி, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
    19 hrs ago
  • மணப்பாறை தியாகேசர் ஆலை மேல்நிலைப்பள்ளியில் காலை உணவு திட்டம் துவக்கம் தமிழகத்தில் இன்று முதல் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் தமிழக முதல்வர் விஜய் ஆணைக்கிணங்க விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இதில் 8-ம் வகுப்பு வரை பயிலும் குழந்தைகள் உற்சாகத்துடன் பள்ளிக்கு சென்று கல்வி கற்க ஏதுவாக சுவையான காலை உணவு வழங்கப்பட்டன. இந்நிலையில் திருச்சி மாவட்டம் மணப்பாறையில் செயல்பட்டு வரும் தியாகேசர் ஆலை மேல்நிலைப்பள்ளியில் இன்று காலை தலைமை ஆசிரியர் என்.கே. லதா அவர்கள் இப்பள்ளியில் 6 முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவிகளுக்கு காலை உணவை வழங்கி துவங்கி வைத்தார்.
    4
    மணப்பாறை தியாகேசர் ஆலை மேல்நிலைப்பள்ளியில் காலை உணவு திட்டம் துவக்கம் 
தமிழகத்தில் இன்று முதல் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் தமிழக முதல்வர் விஜய் ஆணைக்கிணங்க விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இதில் 8-ம் வகுப்பு வரை பயிலும் குழந்தைகள் உற்சாகத்துடன் பள்ளிக்கு சென்று கல்வி கற்க ஏதுவாக சுவையான காலை உணவு வழங்கப்பட்டன. இந்நிலையில் திருச்சி மாவட்டம் மணப்பாறையில் செயல்பட்டு வரும் தியாகேசர் ஆலை மேல்நிலைப்பள்ளியில் இன்று காலை தலைமை ஆசிரியர் என்.கே. லதா அவர்கள் இப்பள்ளியில் 6 முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவிகளுக்கு காலை உணவை வழங்கி துவங்கி வைத்தார்.
    user_Usha arun News
    Usha arun News
    Teacher மணப்பாறை, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
    16 hrs ago
  • கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் முற்றுகை போராட்டம் கரூர் மாவட்டம், புகழூர் நகராட்சிக்கு உட்பட்ட செம்படாபாளையம் பகுதியில் 1000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் புகழூர் நகராட்சிக்கு சொந்தமான கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கு இடம் தேர்வு செய்யப்பட்டு கையகப்படுத்தும் பணி நடைபெற உள்ள நிலையில் அதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவாய்த்துறையினர் கொண்டு வந்த ஜேசிபி, டிராக்டர் இயந்திரங்களை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஏற்கனவே புகழூர் சர்க்கரை ஆலையிலிருந்து வெளிவரும் பக்காஸ் மற்றும் கரித்தூள் பிரச்சனை ஏற்படுகிறது. இதனால் இங்கு குடியிருக்கும் பொதுமக்களுக்கு சுகாதாரக் கேடு ஏற்படுகிறது. தற்போது இந்த சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டால் இந்த ஊரில் வாழ முடியாத சூழல் ஏற்படும் என்று பொதுமக்கள் குற்றம் சாட்டி எதிர்ப்பு தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த புகலூர் வட்டாட்சியர் மற்றும் வேலாயுதம்பாளையம் காவல் ஆய்வாளர் ஆகியோர் பொதுமக்கள் இடையே பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையில் பீஸ் கமிட்டி அமைத்து சுத்திகரிப்பு நிலையம் அமைப்பது தொடர்பாக பேசி முடிவு செய்து கொள்ளலாம் எனக் கூறியதை ஏற்று பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
    1
    கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் முற்றுகை போராட்டம்
கரூர் மாவட்டம், புகழூர் நகராட்சிக்கு உட்பட்ட  செம்படாபாளையம்  பகுதியில் 1000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இப்பகுதியில் புகழூர் நகராட்சிக்கு சொந்தமான கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கு இடம் தேர்வு செய்யப்பட்டு கையகப்படுத்தும் பணி நடைபெற உள்ள நிலையில் அதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவாய்த்துறையினர்  கொண்டு வந்த ஜேசிபி, டிராக்டர் இயந்திரங்களை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஏற்கனவே புகழூர் சர்க்கரை ஆலையிலிருந்து வெளிவரும் பக்காஸ் மற்றும் கரித்தூள் பிரச்சனை ஏற்படுகிறது. இதனால் இங்கு குடியிருக்கும் பொதுமக்களுக்கு சுகாதாரக் கேடு ஏற்படுகிறது.
தற்போது இந்த சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டால் இந்த ஊரில் வாழ முடியாத சூழல் ஏற்படும் என்று  பொதுமக்கள் குற்றம் சாட்டி எதிர்ப்பு தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த புகலூர் வட்டாட்சியர் மற்றும் வேலாயுதம்பாளையம் காவல் ஆய்வாளர் ஆகியோர் பொதுமக்கள் இடையே பேச்சுவார்த்தை நடத்தினார்.
பேச்சுவார்த்தையில் பீஸ் கமிட்டி அமைத்து சுத்திகரிப்பு நிலையம் அமைப்பது தொடர்பாக பேசி முடிவு செய்து கொள்ளலாம் எனக் கூறியதை ஏற்று பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
    user_Karur clicks
    Karur clicks
    Photographer கரூர், கரூர், தமிழ்நாடு•
    16 hrs ago
  • பனை விதைகளை சேகரித்த சிறுவர்கள். மண்ணையும் எதிர்கால சந்ததியினரையும் பாதுகாக்க களமிறங்கிய சிறுவர்கள். திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே பாடாலூரில் உள்ள விவசாய நிலங்களில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் பனை மரத்தின் பயனை கேட்டதும் பண விதைகளை சேகரித்தனர். விடுமுறை நாட்களில் பள்ளிக்குச் செல்லும் சிறுவர்கள் அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் விளையாடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். அப்போது அங்குள்ள விவசாயி ஒருவர் பனை மரத்தின் நன்மைகள் குறித்து சிறுவர்களிடம் கூறி உள்ளார். உடனே இந்த பகுதியில் பனைமரம் அதிக அளவில் வளர நாம் என்ன செய்ய வேண்டும் என்று விவசாயிடம் கேட்ட சிறுவர்கள் உடனடியாக பனை விதைகளை சேகரிக்க தொடங்கினர். மண்ணையும் நமது எதிர்கால சந்ததியினரை பாதுகாக்கவும் இந்தப் பனை விதைகளை பாடலூர் மெயின் ரோடு பகுதியில் உள்ள ஏரிக்கரையில் விதைக்க திட்டமிட்டுள்ளதாக விவசாயி கூறினார்.
    1
    பனை விதைகளை சேகரித்த சிறுவர்கள். மண்ணையும் எதிர்கால சந்ததியினரையும் பாதுகாக்க களமிறங்கிய சிறுவர்கள்.
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே பாடாலூரில் உள்ள விவசாய நிலங்களில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் பனை மரத்தின் பயனை கேட்டதும் பண விதைகளை சேகரித்தனர்.
விடுமுறை நாட்களில் பள்ளிக்குச் செல்லும் சிறுவர்கள் அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் விளையாடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். அப்போது அங்குள்ள விவசாயி ஒருவர்  பனை மரத்தின் நன்மைகள் குறித்து சிறுவர்களிடம் கூறி உள்ளார். உடனே இந்த பகுதியில் பனைமரம் அதிக அளவில் வளர நாம் என்ன செய்ய வேண்டும் என்று விவசாயிடம் கேட்ட சிறுவர்கள் உடனடியாக பனை விதைகளை சேகரிக்க தொடங்கினர்.
மண்ணையும் நமது எதிர்கால சந்ததியினரை பாதுகாக்கவும் இந்தப் பனை விதைகளை பாடலூர் மெயின் ரோடு பகுதியில் உள்ள ஏரிக்கரையில் விதைக்க திட்டமிட்டுள்ளதாக விவசாயி கூறினார்.
    user_Rakesh sharma
    Rakesh sharma
    லால்குடி, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
    16 hrs ago
  • காமராஜர் காலை உணவு விரிவாக்க திட்டத்தி ல் 21,273-மாணாக்கர்கள் பயனடைவர். பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு விரிவாக்க திட்டத்தி ல் 21,273-மாணாக்கர்கள் பயனடைவர். தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் இன்று பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு விரிவாக்க திட்டத்தினை தொடங்கி வைத்ததை தொடர்ந்து, கரூர் மாவட்டம், தான்தோன்றி ஊராட்சி ஒன்றியம், மணவாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட ஆட்சியர் முத்துக்குமரன் மாணவ-மாணவியர்களுடன் அமர்ந்து உணவருந்தினார். இந்த திட்டத்தின் மூலம் அரசுப் பள்ளியில் 6 ம் வகுப்பு முதல் 8 ம் வகுப்பு வரை பயிலும் மாணவ/மாணவியர்களுக்கு காலை உணவு வழங்கப்படுகிறது. கரூர் மாவட்டத்தில் காலை உணவுத் திட்டத்தின் மூலம் 1 ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை 768 பள்ளிகளில் பயிலும் 30,669 மாணவ-மாணவியர்கள் பயன்பெறும் நிலையில் இந்த விரிவாக்கத் திட்டத்தின் மூலம் 6 ம் வகுப்பு முதல் 8 ம் வகுப்பு வரை 310 அரசுப் பள்ளிகளில் பயிலும் 21,273 மாணாக்கர்களுக்கு இன்று முதல் காலை உணவு வழங்கப்படுகிறது. மேலும் இந்த திட்டத்தில் மாணவ-மாணவியர்களுக்கு திங்கட்கிழமை - வெண் பொங்கல், காய்கறி சாம்பார், செவ்வாய் கிழமை - சேமியா கிச்சடி, காய்கறி சாம்பார் புதன்கிழமை - வெண் பொங்கல், காய்கறி சாம்பார், வியாழக்கிழமை - ரவா உப்புமா, காய்கறி சாம்பார் மற்றும் வெள்ளிக்கிழமை- கோதுமை ரவா கிச்சடி, காய்கறி சாம்பார் என ஐந்து நாட்களும்,பள்ளி வேலை நாட்களில் உணவு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில், கிருஷ்ணராயபுரம் எம் எல் ஏ.சத்யா, மாநகராட்சி ஆணையர் பிரித்திவிராஜ் ,திட்ட இயக்குநர், மாவட்ட ஊரக வளர்ச்சிமுகமை தனசேகரன், திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) பொன்னாம்பலம், முதன்மை கல்வி அலுவலர் ராஜு, மாவட்ட ஆட்சியரின் கூடுதல் நேர்முக உதவியாளர் (நிலம்) அக்பர் அலி, மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
    1
    காமராஜர் காலை உணவு விரிவாக்க திட்டத்தி ல் 21,273-மாணாக்கர்கள் பயனடைவர்.
பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு விரிவாக்க திட்டத்தி ல் 21,273-மாணாக்கர்கள் பயனடைவர்.
தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் இன்று  பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு விரிவாக்க திட்டத்தினை தொடங்கி வைத்ததை தொடர்ந்து, கரூர்  மாவட்டம், தான்தோன்றி ஊராட்சி ஒன்றியம், மணவாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட ஆட்சியர் முத்துக்குமரன்  மாணவ-மாணவியர்களுடன் அமர்ந்து உணவருந்தினார்.
இந்த திட்டத்தின் மூலம் அரசுப் பள்ளியில் 6 ம் வகுப்பு முதல் 8 ம் வகுப்பு வரை பயிலும் மாணவ/மாணவியர்களுக்கு காலை உணவு வழங்கப்படுகிறது.
கரூர் மாவட்டத்தில் காலை உணவுத் திட்டத்தின் மூலம் 1 ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை 768 பள்ளிகளில் பயிலும் 30,669 மாணவ-மாணவியர்கள் பயன்பெறும் நிலையில்	இந்த விரிவாக்கத் திட்டத்தின் மூலம் 6 ம் வகுப்பு முதல் 8 ம் வகுப்பு வரை 310 அரசுப் பள்ளிகளில் பயிலும் 21,273 மாணாக்கர்களுக்கு இன்று முதல் காலை உணவு வழங்கப்படுகிறது.
மேலும் இந்த திட்டத்தில் மாணவ-மாணவியர்களுக்கு திங்கட்கிழமை - வெண் பொங்கல், காய்கறி சாம்பார், செவ்வாய் கிழமை - சேமியா கிச்சடி, காய்கறி சாம்பார் புதன்கிழமை - வெண் பொங்கல், காய்கறி சாம்பார், வியாழக்கிழமை - ரவா உப்புமா, காய்கறி சாம்பார் மற்றும் வெள்ளிக்கிழமை- கோதுமை ரவா கிச்சடி, காய்கறி சாம்பார் என ஐந்து நாட்களும்,பள்ளி வேலை நாட்களில் உணவு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில், கிருஷ்ணராயபுரம் எம் எல் ஏ.சத்யா,  மாநகராட்சி ஆணையர் பிரித்திவிராஜ் ,திட்ட இயக்குநர், மாவட்ட ஊரக வளர்ச்சிமுகமை தனசேகரன், திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) பொன்னாம்பலம், முதன்மை கல்வி அலுவலர்  ராஜு, மாவட்ட ஆட்சியரின் கூடுதல் நேர்முக உதவியாளர் (நிலம்) அக்பர் அலி,  மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
    user_SampathKumar.R
    SampathKumar.R
    கரூர், கரூர், தமிழ்நாடு•
    17 hrs ago
  • புதுக்கோட்டை அண்ணா சிலையில் ஒன்றிய மோடி அரசு மற்றும் தமிழ்நாடு த.வெ.க அரசை வலியுறுத்தி பெரும் திறன் ஆர்ப்பாட்டம் புதுக்கோட்டையில் இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் ஒன்றிய மோடி அரசு மற்றும் தமிழ்நாடு சிலை அருகில் நடைபெற்றது தோழர் ஏ ரங்கராஜ் மாவட்ட செயலாளர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் தா செங்குடன் உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் ரித்தோசா மாவட்ட தலைவர் தோழர் ஏனாதி இராசு தோழர் சுந்தர்ராஜன் தோழர் பாண்டியராஜன் தோழர் நாடிமுத்து தோழர் மளிகை பாலு ஆகியோர் கலந்து கொண்டனர் நிறைவாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திருத்துறைப்பூண்டி தொகுதி சட்டசபை உறுப்பினர் தோழர் மாரிமுத்து நிறைவுறையாற்றினார்.
    4
    புதுக்கோட்டை அண்ணா சிலையில் ஒன்றிய மோடி அரசு மற்றும் தமிழ்நாடு த.வெ.க அரசை வலியுறுத்தி பெரும் திறன் ஆர்ப்பாட்டம் 
புதுக்கோட்டையில் இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் ஒன்றிய மோடி அரசு மற்றும் தமிழ்நாடு சிலை அருகில் நடைபெற்றது தோழர் ஏ ரங்கராஜ் மாவட்ட செயலாளர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் தா செங்குடன் உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் ரித்தோசா மாவட்ட தலைவர் தோழர் ஏனாதி இராசு தோழர் சுந்தர்ராஜன் தோழர் பாண்டியராஜன் தோழர் நாடிமுத்து தோழர் மளிகை பாலு ஆகியோர் கலந்து கொண்டனர் நிறைவாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திருத்துறைப்பூண்டி தொகுதி சட்டசபை உறுப்பினர் தோழர் மாரிமுத்து நிறைவுறையாற்றினார்.
    user_மு.மீராமொய்தீன்
    மு.மீராமொய்தீன்
    Salesperson இலுப்பூர், புதுக்கோட்டை, தமிழ்நாடு•
    18 hrs ago
  • முசிறி அருகே குணசேகர் பிரசன்ன வெங்கடாஜலபதி திருக்கோவில் தேரோட்டம் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் கே குமார் செய்தியாளர் முசிறி முசிறி அருகே தென்திருப்பதி என்றழைக்கப்படும் குணசீலம் பிரசன்ன வேங்கடாசலபதி திருக்கோவில் திருத்தேரோட்டம் - பல்லாயிரக்கணக்காண பக்தர்கள் பங்கேற்பு..நூற்றுக்கணக்கான பக்தர்கள் தேரின்பின்னே அங்கப்பிரதட்சனம் செய்து நேர்த்திக்கடன் செலுத்தி நூதன வழிபாடு.... தென்திருப்பதி என்றழைக்கப்படுவதும், குணசீலமஹரிஷியின் தவத்தினையடுத்து பிரசன்னவேங்கடேசனாக காட்சியளித்த ஸ்தலமான திருச்சியை அடுத்த குணசீலம் பிரஸன்ன வேங்கடாசலபதிபெருமாள் திருக்கோவில் மிகவும் பிரசித்திபெற்றதாகும். பிரசித்திபெற்ற மஹரிசிக்கு காட்சியளித்த தினமான புரட்டாசி மாதம் திருவோணம் நட்சத்திரத்தை கொண்டு இத்திருக்கோவிலில் பிரம்மோற்சவம் 11- தினங்கள் கொண்டாடப்படும் .அதன்படி 14-ம்தேதி பிரம்மோற்சவமானது கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து அனுமந்தவாகனம், சேஷவாகனம், யானைவாகனம், அன்னவாகனம், குதிரைவாகனம், வெள்ளிக்கருடவாகனத்தில் உபயநாச்சியார்களுடன் பெருமாள் எழுந்தருளி திருவீதி உலாவந்தார்.விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேர் வடம்பிடிக்கும் நிகழ்ச்சி இன்று வெகுவிமரிசையாக நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட பிரம்மாண்டமான திருத்தேரில் பூதேவி, ஸ்ரீதேவி தாயாருடன் ஸ்ரீனிவாசபெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்க, ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என பக்திகோஷமிட்டவாறு தேரை வடம்பிடித்து இழுத்துச் சென்றனர். வேறு எந்தக்கோவிலிலும் இல்லாதவாறு திருத்தேரின் பின்புறமாக பலநூற்றுக்கணக்கான பக்தர்கள் தங்களது வேண்டுதல்கள் நிறைவேறவும், தாங்கள் செய்தபாவங்கள் விலகவும், கைகளில் தேங்காயினை வைத்துக்கொண்டு அங்கப்பிரதட்சனம் செய்து நேர்த்திக்கடனை செலுத்தினர். மேலும் ஸ்ரீனிவாச பெருமாளை வழிபாடு செய்து பிறவிப்பலன் பெறுவர் ஐதீகம் என்பதால் திருச்சி மட்டுமன்றி பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு செய்தனர்.
    1
    முசிறி அருகே குணசேகர் பிரசன்ன வெங்கடாஜலபதி திருக்கோவில் தேரோட்டம் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்
கே குமார் செய்தியாளர் முசிறி
முசிறி அருகே தென்திருப்பதி
என்றழைக்கப்படும் குணசீலம் பிரசன்ன வேங்கடாசலபதி திருக்கோவில் திருத்தேரோட்டம் - பல்லாயிரக்கணக்காண பக்தர்கள் பங்கேற்பு..நூற்றுக்கணக்கான பக்தர்கள் தேரின்பின்னே அங்கப்பிரதட்சனம் செய்து நேர்த்திக்கடன் செலுத்தி  நூதன வழிபாடு....
தென்திருப்பதி என்றழைக்கப்படுவதும், குணசீலமஹரிஷியின் தவத்தினையடுத்து பிரசன்னவேங்கடேசனாக காட்சியளித்த ஸ்தலமான திருச்சியை அடுத்த குணசீலம் பிரஸன்ன வேங்கடாசலபதிபெருமாள் திருக்கோவில் மிகவும் பிரசித்திபெற்றதாகும். பிரசித்திபெற்ற மஹரிசிக்கு காட்சியளித்த தினமான புரட்டாசி மாதம் திருவோணம் நட்சத்திரத்தை கொண்டு இத்திருக்கோவிலில் பிரம்மோற்சவம் 11- தினங்கள் கொண்டாடப்படும்
.அதன்படி  14-ம்தேதி பிரம்மோற்சவமானது கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து அனுமந்தவாகனம், சேஷவாகனம், யானைவாகனம், அன்னவாகனம், குதிரைவாகனம், வெள்ளிக்கருடவாகனத்தில் உபயநாச்சியார்களுடன் பெருமாள் எழுந்தருளி திருவீதி உலாவந்தார்.விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேர் வடம்பிடிக்கும் நிகழ்ச்சி இன்று வெகுவிமரிசையாக நடைபெற்றது.
அலங்கரிக்கப்பட்ட பிரம்மாண்டமான திருத்தேரில் பூதேவி, ஸ்ரீதேவி தாயாருடன் ஸ்ரீனிவாசபெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்க, ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என பக்திகோஷமிட்டவாறு தேரை வடம்பிடித்து இழுத்துச் சென்றனர். 
வேறு எந்தக்கோவிலிலும் இல்லாதவாறு திருத்தேரின் பின்புறமாக பலநூற்றுக்கணக்கான பக்தர்கள் தங்களது வேண்டுதல்கள் நிறைவேறவும், தாங்கள் செய்தபாவங்கள் விலகவும், கைகளில் தேங்காயினை வைத்துக்கொண்டு அங்கப்பிரதட்சனம் செய்து நேர்த்திக்கடனை செலுத்தினர்.
மேலும் ஸ்ரீனிவாச பெருமாளை வழிபாடு செய்து பிறவிப்பலன் பெறுவர் ஐதீகம் என்பதால் திருச்சி மட்டுமன்றி பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு செய்தனர்.
    user_Kumar reports musiri
    Kumar reports musiri
    Photographer முசிறி, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
    15 hrs ago
  • துவரங்குறிச்சி பூதநாயகி அம்மன் கோவிலில் பூச்சொரிதல் திருவிழா திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த மருங்காபுரி அருகே துவரங்குறிச்சியில் பிரசித்தி பெற்ற பூத நாயகி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று பூ திருவிழா தொடங்கியது. அரசு அதிகாரிகள் முதல் பூவை செலுத்தினர். இதைத்தொடர்ந்து துவரங்குறிச்சி மற்றும் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் இருந்து ஏராளமான கிராம மக்கள் தாரை தப்பட்டைகள் வாண வேடிக்கைகள் முழங்க பூத்தட்டு ஏந்தி வந்து அம்மனுக்கு செலுத்தினர். பல பகுதிகளில் இருந்து ரத ஊர்வலம் இளைஞர்களின் ஆட்டம் பாட்டத்துடன் துவரங்குறிச்சியின் முக்கிய வீதிகள் வழி யாக கோவிலை வந்தடைத்தன. அதனைத் தொடர்ந்து இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு காப்பு கட்டுதல் நிகழ்வு நடைபெறும். அதனைத் தொடர்ந்து வருகிற 29-ந்தேதி முதல் மண்டகபடி நடைபெறும். அம்மன் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் துவரங்குறிச்சியின் முக்கிய விதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்து சென்று மீண்டும் கோவிலை வந்தடைவார். அக்டோபர் 6-ந் தேதி துவரங்குறிச்சியில் பொன்னூஞ்சல் வெகு விமரிசையாக நடைபெற உள்ளது. இதில் திருவிழா 7-ந் தேதி காலை பொங்கல் விழா மற்றும் கிடா வெட்டுதல் நிகழ்வு நடைபெறும் தொடர்ந்து விடையாற்றி மண்டகபடியுடன் நிறைவு பெறுகிறது.
    2
    துவரங்குறிச்சி பூதநாயகி அம்மன் கோவிலில் பூச்சொரிதல் திருவிழா
திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த மருங்காபுரி அருகே துவரங்குறிச்சியில் பிரசித்தி பெற்ற பூத நாயகி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று பூ திருவிழா தொடங்கியது. அரசு அதிகாரிகள் முதல் பூவை செலுத்தினர். இதைத்தொடர்ந்து துவரங்குறிச்சி மற்றும் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் இருந்து ஏராளமான கிராம மக்கள் தாரை தப்பட்டைகள் வாண வேடிக்கைகள் முழங்க பூத்தட்டு ஏந்தி வந்து அம்மனுக்கு செலுத்தினர். பல பகுதிகளில் இருந்து ரத ஊர்வலம் இளைஞர்களின் ஆட்டம் பாட்டத்துடன் துவரங்குறிச்சியின் முக்கிய வீதிகள் வழி யாக கோவிலை வந்தடைத்தன. அதனைத் தொடர்ந்து இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு காப்பு கட்டுதல் நிகழ்வு நடைபெறும். அதனைத் தொடர்ந்து வருகிற 29-ந்தேதி முதல் மண்டகபடி நடைபெறும். அம்மன் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் துவரங்குறிச்சியின் முக்கிய விதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்து சென்று மீண்டும் கோவிலை வந்தடைவார். அக்டோபர் 6-ந் தேதி துவரங்குறிச்சியில் பொன்னூஞ்சல் வெகு விமரிசையாக நடைபெற உள்ளது. இதில் திருவிழா 7-ந் தேதி காலை பொங்கல் விழா மற்றும் கிடா வெட்டுதல் நிகழ்வு நடைபெறும் தொடர்ந்து விடையாற்றி மண்டகபடியுடன்  நிறைவு பெறுகிறது.
    user_Usha arun News
    Usha arun News
    Teacher மணப்பாறை, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
    16 hrs ago
  • ராசிபுரம்  அருகே, உரிய  மருத்துவப்  படிப்பு இன்றி  பொதுமக்களுக்கு  சிகிச்சை  அளித்ததாகக் கூறப்படும் பெண் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் நடத்தி வந்த மருந்தகத்திற்கு  சுகாதாரத்துறை அதிகாரிகள் சீல்வைத்தனர். நாமக்கல் மாவட்டம் இராசிபுரம்  அடுத்த  ஆர்.புதுப்பட்டி பகுதியில் இஸ்லாமி மெடிக்கல் என்ற மருந்தகத்தை,கேரள  மாநிலத்தைச்  சேர்ந்த  உஷா என்பவர் கடந்த 7  ஆண்டுகளாக நடத்தி வந்ததாக கூறப்படுகிறது. இவர் உரிய மருத்துவப்  படிப்பு  படிக்காமல், மருத்துவரின் பரிந்துரைச்சீட்டு இன்றி  பொது மக்களுக்கு மருந்துகள்  வழங்கியதுடன்நோயாளிகளுக்கு  ஊசி செலுத்தி  வந்ததாகவும், வீடுகளுக்குச்  சென்று குளுக்கோஸ்  செலுத்தியதாகவும்  புகார்கள் எழுந்தன. இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியருக்கு தொடர்ந்து புகார்கள்  சென்றதாக  கூறப்படுகிறது. இந்த நிலையில், வடுகம்  ஊராட்சியில் டெங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் மதுபாலன் கள ஆய்வு மேற்கொண்டபோது, புதுப்பட்டி பகுதியில்  காய்ச்சலுக்கு மருந்து  மற்றும் ஊசி செலுத்திக் கொள்வதாக சிலர் தெரிவித்துள்ளனர். இதையடுத்து மாவட்ட ஆட்சியர்  சம்பந்தப்பட்ட  சுகாதாரத்துறை  அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளார். தொடர்ந்து, சுகாதார  அலுவலர் பூங்கொடி தலைமையிலான அதிகாரிகள், ஆர்.புதுப்பட்டியில்  உள்ள இஸ்லாமி  மெடிக்கல் மருந்தகத்தில் ஆய்வு மேற்கொண்டு அந்த மருந்தகத்திற்கு சீல் வைத்தனர். மேலும், உரிய மருத்துவத் தகுதி இன்றி சிகிச்சை  அளித்ததாகக் கூறப்படும் உஷா மீது நாமகிரிப்பேட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
    1
    ராசிபுரம்  அருகே, உரிய  மருத்துவப்  படிப்பு இன்றி  பொதுமக்களுக்கு  சிகிச்சை  அளித்ததாகக் கூறப்படும் பெண் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் நடத்தி வந்த மருந்தகத்திற்கு  சுகாதாரத்துறை அதிகாரிகள் சீல்வைத்தனர்.
நாமக்கல் மாவட்டம் இராசிபுரம்  அடுத்த  ஆர்.புதுப்பட்டி பகுதியில் இஸ்லாமி மெடிக்கல் என்ற மருந்தகத்தை,கேரள  மாநிலத்தைச்  சேர்ந்த  உஷா என்பவர் கடந்த 7  ஆண்டுகளாக நடத்தி வந்ததாக கூறப்படுகிறது.
இவர் உரிய மருத்துவப்  படிப்பு  படிக்காமல், மருத்துவரின் பரிந்துரைச்சீட்டு இன்றி  பொது மக்களுக்கு மருந்துகள்  வழங்கியதுடன்நோயாளிகளுக்கு  ஊசி செலுத்தி  வந்ததாகவும், வீடுகளுக்குச்  சென்று குளுக்கோஸ்  செலுத்தியதாகவும்  புகார்கள் எழுந்தன.
இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியருக்கு தொடர்ந்து புகார்கள்  சென்றதாக  கூறப்படுகிறது. இந்த நிலையில், வடுகம்  ஊராட்சியில் டெங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் மதுபாலன் கள ஆய்வு மேற்கொண்டபோது, புதுப்பட்டி பகுதியில்  காய்ச்சலுக்கு மருந்து  மற்றும் ஊசி செலுத்திக் கொள்வதாக சிலர் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து மாவட்ட ஆட்சியர்  சம்பந்தப்பட்ட  சுகாதாரத்துறை  அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளார். தொடர்ந்து, சுகாதார  அலுவலர் பூங்கொடி தலைமையிலான அதிகாரிகள், ஆர்.புதுப்பட்டியில்  உள்ள இஸ்லாமி  மெடிக்கல் மருந்தகத்தில் ஆய்வு மேற்கொண்டு அந்த மருந்தகத்திற்கு சீல் வைத்தனர்.
மேலும், உரிய மருத்துவத் தகுதி இன்றி சிகிச்சை  அளித்ததாகக் கூறப்படும் உஷா மீது நாமகிரிப்பேட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
    user_Aravinth
    Aravinth
    ராசிபுரம், நாமக்கல், தமிழ்நாடு•
    5 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.