பனை விதைகளை சேகரித்த சிறுவர்கள். மண்ணையும் எதிர்கால சந்ததியினரையும் பாதுகாக்க களமிறங்கிய சிறுவர்கள். திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே பாடாலூரில் உள்ள விவசாய நிலங்களில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் பனை மரத்தின் பயனை கேட்டதும் பண விதைகளை சேகரித்தனர். விடுமுறை நாட்களில் பள்ளிக்குச் செல்லும் சிறுவர்கள் அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் விளையாடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். அப்போது அங்குள்ள விவசாயி ஒருவர் பனை மரத்தின் நன்மைகள் குறித்து சிறுவர்களிடம் கூறி உள்ளார். உடனே இந்த பகுதியில் பனைமரம் அதிக அளவில் வளர நாம் என்ன செய்ய வேண்டும் என்று விவசாயிடம் கேட்ட சிறுவர்கள் உடனடியாக பனை விதைகளை சேகரிக்க தொடங்கினர். மண்ணையும் நமது எதிர்கால சந்ததியினரை பாதுகாக்கவும் இந்தப் பனை விதைகளை பாடலூர் மெயின் ரோடு பகுதியில் உள்ள ஏரிக்கரையில் விதைக்க திட்டமிட்டுள்ளதாக விவசாயி கூறினார்.
பனை விதைகளை சேகரித்த சிறுவர்கள். மண்ணையும் எதிர்கால சந்ததியினரையும் பாதுகாக்க களமிறங்கிய சிறுவர்கள். திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே பாடாலூரில் உள்ள விவசாய நிலங்களில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் பனை மரத்தின் பயனை கேட்டதும் பண விதைகளை சேகரித்தனர். விடுமுறை நாட்களில் பள்ளிக்குச் செல்லும் சிறுவர்கள் அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் விளையாடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். அப்போது அங்குள்ள விவசாயி ஒருவர் பனை மரத்தின் நன்மைகள் குறித்து சிறுவர்களிடம் கூறி உள்ளார். உடனே இந்த பகுதியில் பனைமரம் அதிக அளவில் வளர நாம் என்ன செய்ய வேண்டும் என்று விவசாயிடம் கேட்ட சிறுவர்கள் உடனடியாக பனை விதைகளை சேகரிக்க தொடங்கினர். மண்ணையும் நமது எதிர்கால சந்ததியினரை பாதுகாக்கவும் இந்தப் பனை விதைகளை பாடலூர் மெயின் ரோடு பகுதியில் உள்ள ஏரிக்கரையில் விதைக்க திட்டமிட்டுள்ளதாக விவசாயி கூறினார்.
- பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்த எம்எல்ஏவின் உதவியாளர். திருச்சி மாவட்டம் லால்குடி சட்டமன்ற தொகுதியில் எம்எல்ஏ வின் உதவியாளர் பொதுமக்களை நேரில் சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பாக அனைத்து கிராமங்களில் இருக்கும் அடிப்படை தேவைகள் குறித்து எம்எல்ஏ உதவியாளர் பயாசிடம் தகவல் தெரிவித்தனர்.இதனைத் தொடர்ந்து கிராமங்களுக்கு சென்ற எம்எல்ஏவின் உதவியாளர் பொதுமக்களை நேரில் சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்.அப்போது உங்கள் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்ய சம்பந்தப்பட்ட துறை அதிகாரியிடம் கூறி விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுமக்களிடம் தெரிவித்துள்ளார்.1
- காட்டுப்புத்தூர் பேருந்து நிலையத்தில் சிங்கப்பின் சிறப்பு அதிரடிப்படை பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர் திருச்சி மாவட்டம் தொட்டியம் வட்டம் காட்டுப்புத்தூர் பேருந்து நிலையம் முன்பு சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை பெண்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர் பெண்கள் நடந்து கொள்ளும் விதம் குறித்தும் பெண்கள் எப்படி இருக்க வேண்டும் என்பது உள்ளிட்ட ஆலோசனைகளை சிங்கப்பெண் அதிரடி படை படையினர் பேருந்து நிலையம் பகுதியில் இருக்கும் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்1
- நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் சோதனை கணக்கில் வராத பணம் பறிமுதல் அரியலூர் - நகராட்சி அலுவலகத்தில் மூன்று மணி நேர லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதணையில் கணக்கில் வராத ரொக்க பணம் பறிமுதல்* போன்பே, ஜீபே பரிவர்த்தனை குறித்து பதில் அளிக்க நகராட்சி அலுவலர்களுக்கு லஞ்ச ஒழிப்பு போலீசார் உத்தரவு அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சியில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர் அலுவலகத்தில் அனைத்து கதவுகளும் மூடப்பட்டு அலுவலகத்தில் இருந்த பொதுமக்கள் மற்றும் அலுவலக ஊழியர்களிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். சுமார் 3 மணி நேரம் நடைபெற்ற விசாரணையில் அலுவலக ஊழியர்களிடமிருந்து கணக்கில் வராத எட்டாயிரம் ரூபாய் ரொக்க பணத்தை பறிமுதல் செய்த லஞ்ச ஒழிப்பு போலீசார் நகராட்சி அலுவலகத்தில் இருந்த அலுவலர்களின் போன்பே, ஜிபே மூலம் செய்யப்பட்டுள்ள பரிவர்த்தனை குறித்து பதில் அளிக்க அலுவலர்களுக்கு லஞ்ச ஒழிப்பு போலீசார் உத்தரவிட்டுள்ளனர். நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸாரின் திடீர் சோதனையால் அப்பகுதியில் பரப்பரப்பான சூழல் ஏற்பட்டது1
- புதுக்கோட்டை அண்ணா சிலையில் ஒன்றிய மோடி அரசு மற்றும் தமிழ்நாடு த.வெ.க அரசை வலியுறுத்தி பெரும் திறன் ஆர்ப்பாட்டம் புதுக்கோட்டையில் இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் ஒன்றிய மோடி அரசு மற்றும் தமிழ்நாடு சிலை அருகில் நடைபெற்றது தோழர் ஏ ரங்கராஜ் மாவட்ட செயலாளர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் தா செங்குடன் உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் ரித்தோசா மாவட்ட தலைவர் தோழர் ஏனாதி இராசு தோழர் சுந்தர்ராஜன் தோழர் பாண்டியராஜன் தோழர் நாடிமுத்து தோழர் மளிகை பாலு ஆகியோர் கலந்து கொண்டனர் நிறைவாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திருத்துறைப்பூண்டி தொகுதி சட்டசபை உறுப்பினர் தோழர் மாரிமுத்து நிறைவுறையாற்றினார்.4
- முசிறியில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் காமராஜரின் காலை உணவு விரிவாக்க திட்டம் 6 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கும் விரிவுபடுத்தப்பட்ட பெருந்தலைவர் காமராசர் காலை உணவு திட்டம் மாணவர்களுடன் அமர்ந்து உணவு அருந்திய முசிறி எம்எல்ஏ விக்னேஷ், தமிழகத்தில் கடந்த 2022-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 1 முதல் 5 ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்காக தொடங்கப்பட்ட காலை உணவுத் திட்டம், தொடர்ந்து அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டது. தற்போது இத்திட்டம் பெருந்தலைவர் காமாசர் காலை உணவுத் திட்டம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டு, 6 முதல் 8 ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து திருச்சி மாவட்டம் முசிறி தொகுதியில் செவ்வாய்கிழமை முதல் 6 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கும் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதன் தொடக்கமாக முசிறிநகராட்சியில் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையர் பிரபு, நகர் மன்ற தலைவர் கலைச்செல்வி சிவக்குமார் ஆகியோர் திட்டத்தை தொடங்கி வைத்து, மாணவிகளுடன் அமர்ந்து காலை உணவு அருந்தினர். இந்நிகழ்வில் நகராட்சி பொறியாளர் சம்பத்குமார், சுகாதார ஆய்வாளர் பன்னீர்செல்வம், மேலாளர் மாரிமுத்து நகர் மன்ற உறுப்பினர்கள் பாலகுமார், இளையராஜா, சுந்தர்ராஜ்,,பள்ளி தலைமை ஆசிரியை கீதா, ஆசிரியர் புஷ்பராஜ் மற்றும் நகராட்சி அலுவலர்கள் பணியாளர்கள் பள்ளி மாணவிகள் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.1
- அரியலூர் தொழிற்சங்கம் முன்னேற சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் அகில இந்திய தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் அறிவிப்பின்படி, மக்கள், தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளுக்கு எதிரான கொள்கைகளை கண்டித்து அரியலூர் மாவட்ட தொழிற்சங்க முன்னேற்ற சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அரியலூர் அண்ணா சிலை அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், மத்திய பாஜக அரசு மற்றும் தமிழக அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.1
- மணப்பாறை துணை மின் நிலையத்தில் நாளை பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை அறிவிப்பு திருச்சி மாவட்டம் மணப்பாறை துணை மின் நிலையத்தில் நாளை புதன்கிழமை நாள் 23.09.26 காலை 09.00 மணியிலிருந்து மாலை 04.00 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் இங்கிருந்து மின்சாரம் பெறும் மணப்பாறை நகரம், செவலூர், பொடங்குபட்டி, பொய்கைபட்டி, வீரப்பூர், கொட்டப்பட்டி, தீராம்பட்டி, பொத்த மேட்டுப்பட்டி, மஞ்சம்பட்டி, கலிங்கப்பட்டி, ராயம்பட்டி, பூசாரிபட்டி, ஆண்டவர் கோவில், கள்ளிபட்டி, முத்தபு டையான்பட்டி, காட்டுப்பட்டி, புதியகாலணி, பழைய காலணி, மணப்பாறைபட்டி, கல்பாளையத்தான்பட்டி, கீழபொய்கைபட்டி, கஸ்தூரிபட்டி, வடுகபட்டி, இராயம் பட்டி, வலையபட்டி, எஃப்.கீழையூர், சின்னமனப்பட்டி, கே.பெரியப்பட்டி, வடக்குசேர்பட்டி, இடையப்பட்டி, மரவனூர், சமுத்திரம், தாதநாயக்கன்பட்டி, கத்திக்கா ரன்பட்டி, சித்தகுடிப்பட்டி, களத்துப்பட்டி, ஆளிபட்டி, தொப்பம்பட்டி, குதிரைகுத்திபட்டி, படுகளம், பூசாரி பட்டி, கரும்புலிபட்டி, அமையபுரம், குளத்தூரம்பட்டி, கூடத்திப்பட்டி, ஆணையூர், பண்ணாங்கொம்பு குடிநீர், பண்ணாங்கொம்பு, கருப்பகோவில்பட்டி, பெருமாம் பட்டி, ஈச்சம்பட்டி, அமையபுரம், பண்ணப்பட்டி, தாதம லைப்பட்டி, ஆமணக்கம்பட்டி, கன்னிவடுகப்பட்டி, வீரா கோவில்பட்டி, பாலகருதம்பட்டி, ரெங்கவுண்டம்பட்டி, வடுகப்பட்டி வீட்டு வசதிவாரிய குடியிருப்பு, வேங்கை குறிச்சி, பொன்னகோன்பட்டி, மலையடிப்பட்டி வாட்டர் போர்டு, வெள்ளை பூலாம்பட்டி, கரட்டுப்பட்டி, பிச்சை மணியாரம்பட்டி, ஆவாரம்பட்டி, புங்கம்பட்டி, ஆலத் தூர், பாம்பாட்டிப்பட்டி, செட்டியப்பட்டி, ம.துலுக்கம் பட்டி, காட்டுப்பட்டி, முள்ளிப்பாடி, கருமகவுண்டம்பட்டி, என்.பூலாம்பட்டி, இனாம் கோவில்பட்டி, தோப்புப்பட்டி, நாகம்பட்டி, வளர்ந்த நகரம், சுண்டகாம்பட்டி மற்றும் சுற்றியுள்ள பல பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளனர்.1
- பனை விதைகளை சேகரித்த சிறுவர்கள். மண்ணையும் எதிர்கால சந்ததியினரையும் பாதுகாக்க களமிறங்கிய சிறுவர்கள். திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே பாடாலூரில் உள்ள விவசாய நிலங்களில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் பனை மரத்தின் பயனை கேட்டதும் பண விதைகளை சேகரித்தனர். விடுமுறை நாட்களில் பள்ளிக்குச் செல்லும் சிறுவர்கள் அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் விளையாடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். அப்போது அங்குள்ள விவசாயி ஒருவர் பனை மரத்தின் நன்மைகள் குறித்து சிறுவர்களிடம் கூறி உள்ளார். உடனே இந்த பகுதியில் பனைமரம் அதிக அளவில் வளர நாம் என்ன செய்ய வேண்டும் என்று விவசாயிடம் கேட்ட சிறுவர்கள் உடனடியாக பனை விதைகளை சேகரிக்க தொடங்கினர். மண்ணையும் நமது எதிர்கால சந்ததியினரை பாதுகாக்கவும் இந்தப் பனை விதைகளை பாடலூர் மெயின் ரோடு பகுதியில் உள்ள ஏரிக்கரையில் விதைக்க திட்டமிட்டுள்ளதாக விவசாயி கூறினார்.1