ராசிபுரம் அருகே, உரிய மருத்துவப் படிப்பு இன்றி பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்ததாகக் கூறப்படும் பெண் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் நடத்தி வந்த மருந்தகத்திற்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் சீல்வைத்தனர். நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் அடுத்த ஆர்.புதுப்பட்டி பகுதியில் இஸ்லாமி மெடிக்கல் என்ற மருந்தகத்தை,கேரள மாநிலத்தைச் சேர்ந்த உஷா என்பவர் கடந்த 7 ஆண்டுகளாக நடத்தி வந்ததாக கூறப்படுகிறது. இவர் உரிய மருத்துவப் படிப்பு படிக்காமல், மருத்துவரின் பரிந்துரைச்சீட்டு இன்றி பொது மக்களுக்கு மருந்துகள் வழங்கியதுடன்நோயாளிகளுக்கு ஊசி செலுத்தி வந்ததாகவும், வீடுகளுக்குச் சென்று குளுக்கோஸ் செலுத்தியதாகவும் புகார்கள் எழுந்தன. இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியருக்கு தொடர்ந்து புகார்கள் சென்றதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், வடுகம் ஊராட்சியில் டெங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் மதுபாலன் கள ஆய்வு மேற்கொண்டபோது, புதுப்பட்டி பகுதியில் காய்ச்சலுக்கு மருந்து மற்றும் ஊசி செலுத்திக் கொள்வதாக சிலர் தெரிவித்துள்ளனர். இதையடுத்து மாவட்ட ஆட்சியர் சம்பந்தப்பட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளார். தொடர்ந்து, சுகாதார அலுவலர் பூங்கொடி தலைமையிலான அதிகாரிகள், ஆர்.புதுப்பட்டியில் உள்ள இஸ்லாமி மெடிக்கல் மருந்தகத்தில் ஆய்வு மேற்கொண்டு அந்த மருந்தகத்திற்கு சீல் வைத்தனர். மேலும், உரிய மருத்துவத் தகுதி இன்றி சிகிச்சை அளித்ததாகக் கூறப்படும் உஷா மீது நாமகிரிப்பேட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
ராசிபுரம் அருகே, உரிய மருத்துவப் படிப்பு இன்றி பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்ததாகக் கூறப்படும் பெண் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் நடத்தி வந்த மருந்தகத்திற்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் சீல்வைத்தனர். நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் அடுத்த ஆர்.புதுப்பட்டி பகுதியில் இஸ்லாமி மெடிக்கல் என்ற மருந்தகத்தை,கேரள மாநிலத்தைச் சேர்ந்த உஷா என்பவர் கடந்த 7 ஆண்டுகளாக நடத்தி வந்ததாக கூறப்படுகிறது. இவர் உரிய மருத்துவப் படிப்பு படிக்காமல், மருத்துவரின் பரிந்துரைச்சீட்டு இன்றி பொது மக்களுக்கு மருந்துகள் வழங்கியதுடன்நோயாளிகளுக்கு ஊசி செலுத்தி வந்ததாகவும், வீடுகளுக்குச் சென்று குளுக்கோஸ் செலுத்தியதாகவும் புகார்கள் எழுந்தன. இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியருக்கு தொடர்ந்து புகார்கள் சென்றதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், வடுகம் ஊராட்சியில் டெங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் மதுபாலன் கள ஆய்வு மேற்கொண்டபோது, புதுப்பட்டி பகுதியில் காய்ச்சலுக்கு மருந்து மற்றும் ஊசி செலுத்திக் கொள்வதாக சிலர் தெரிவித்துள்ளனர். இதையடுத்து மாவட்ட ஆட்சியர் சம்பந்தப்பட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளார். தொடர்ந்து, சுகாதார அலுவலர் பூங்கொடி தலைமையிலான அதிகாரிகள், ஆர்.புதுப்பட்டியில் உள்ள இஸ்லாமி மெடிக்கல் மருந்தகத்தில் ஆய்வு மேற்கொண்டு அந்த மருந்தகத்திற்கு சீல் வைத்தனர். மேலும், உரிய மருத்துவத் தகுதி இன்றி சிகிச்சை அளித்ததாகக் கூறப்படும் உஷா மீது நாமகிரிப்பேட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
- ராசிபுரம் அருகே, உரிய மருத்துவப் படிப்பு இன்றி பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்ததாகக் கூறப்படும் பெண் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் நடத்தி வந்த மருந்தகத்திற்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் சீல்வைத்தனர். நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் அடுத்த ஆர்.புதுப்பட்டி பகுதியில் இஸ்லாமி மெடிக்கல் என்ற மருந்தகத்தை,கேரள மாநிலத்தைச் சேர்ந்த உஷா என்பவர் கடந்த 7 ஆண்டுகளாக நடத்தி வந்ததாக கூறப்படுகிறது. இவர் உரிய மருத்துவப் படிப்பு படிக்காமல், மருத்துவரின் பரிந்துரைச்சீட்டு இன்றி பொது மக்களுக்கு மருந்துகள் வழங்கியதுடன்நோயாளிகளுக்கு ஊசி செலுத்தி வந்ததாகவும், வீடுகளுக்குச் சென்று குளுக்கோஸ் செலுத்தியதாகவும் புகார்கள் எழுந்தன. இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியருக்கு தொடர்ந்து புகார்கள் சென்றதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், வடுகம் ஊராட்சியில் டெங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் மதுபாலன் கள ஆய்வு மேற்கொண்டபோது, புதுப்பட்டி பகுதியில் காய்ச்சலுக்கு மருந்து மற்றும் ஊசி செலுத்திக் கொள்வதாக சிலர் தெரிவித்துள்ளனர். இதையடுத்து மாவட்ட ஆட்சியர் சம்பந்தப்பட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளார். தொடர்ந்து, சுகாதார அலுவலர் பூங்கொடி தலைமையிலான அதிகாரிகள், ஆர்.புதுப்பட்டியில் உள்ள இஸ்லாமி மெடிக்கல் மருந்தகத்தில் ஆய்வு மேற்கொண்டு அந்த மருந்தகத்திற்கு சீல் வைத்தனர். மேலும், உரிய மருத்துவத் தகுதி இன்றி சிகிச்சை அளித்ததாகக் கூறப்படும் உஷா மீது நாமகிரிப்பேட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.1
- ராசிபுரம் நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை... ராசிபுரம் ராசிபுரம் நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை... நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். நகராட்சி அலுவலகத்தின் முன்புற வாயில் கதவை பூட்டிய நிலையில், அலுவலகத்தில் இருந்த ஆணையாளர், பொறியாளர், நகர அமைப்பு அலுவலர் உள்ளிட்ட ஊழியர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நாமக்கல் விஜிலென்ஸ் டி.எஸ்.பி. சுபாஷினி தலைமையில், ஆய்வாளர் பிரபு உள்ளிட்ட 8 பேர் கொண்ட குழுவினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ராசிபுரம் நகராட்சியில் அளவுக்கு அதிகமாக பணம் கைமாறுவதாகவும், பல்வேறு பணிகளுக்கு லஞ்சம் கேட்பதாகவும் புகார்கள் வந்ததாக கூறப்படுகிறது. குறிப்பாக பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள் பெறவும், நகராட்சி வரி உள்ளிட்ட பணிகளுக்கும் லஞ்சம் கேட்பதாக வந்த புகாரின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.1
- சேலம் வ உ சி பூ மார்க்கெட்டில் அமைச்சர் பார்த்திபன் ஆய்வு! வியாபாரிகளிடம் உறுதி... சேலம் வ உ சி பூ மார்க்கெட் பகுதியில் இட ஆக்கிரமிப்பு தொடர்பாக வியாபாரிகள் போக்குவரத்து துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபனை நேரில் சந்தித்து மனு அளித்ததை தொடர்ந்து, இன்று மாநகராட்சி ஆணையாளருடன் அப்பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தி வியாபாரிகளிடம் அவர்களுடைய கோரிக்கைகள் மற்றும் அப்பகுதியில் நிலவும் பிரச்சனைகள் குறித்து கேட்டறிந்து விரைவில் நடவடிக்கை எடுப்பதாக வியாபாரிகளிடம் தெரிவித்தார்.1
- ஈரோடு மசாஜ் சென்டர் ஆண்களுக்கு மட்டும் (Male to Male Massage) உடல் புத்துணர்ச்சி • மன அமைதி • முழுமையான ஓய்வு அன்றாட வேலைப்பளு, உடல் சோர்வு மற்றும் மன அழுத்தத்திலிருந்து விடுபட, அமைதியான மற்றும் சுத்தமான சூழலில் தரமான மசாஜ் சேவையை அனுபவியுங்கள். எங்கள் சேவைகள் - உடல் தளர்வு மசாஜ் - முழு உடல் ரிலாக்ஸ் மசாஜ் - மன அழுத்த நிவாரண மசாஜ் - புத்துணர்ச்சி தரும் தெரபி எங்கள் சிறப்பம்சங்கள் ✔ 100% ரகசியம் பாதுகாக்கப்படும் ✔ அனுபவமிக்க தெரபிஸ்ட் ✔ சுத்தமான மற்றும் சுகாதாரமான சூழல் ✔ தனியார் மற்றும் அமைதியான அறைகள் ✔ தரமான சேவை கட்டணம் 💰 ரூ. 1500 மட்டுமே தொடர்புக்கு 📞 63854 43602 முகவரி ஈரோடு பேருந்து நிலையம் அருகில், PSR சில்க்ஸ் பின்புறம், ஈரோடு ஆயில் மசாஜ். 🌿 மன அழுத்தமில்லாத வாழ்விற்கு ஒரு சிறிய இடைவேளை! 🌿 நாள் முழுவதும் வேலையினால் வரும் உடல் சோர்வா? கழுத்து வலி மற்றும் முதுகு வலியால் அவதிப்படுகிறீர்களா? எங்கள் ஈரோடு மசாஜ் சென்டர் -க்கு வாருங்கள்! அனுபவம் வாய்ந்த நிபுணர்களால் வழங்கப்படும் தரமான மசாஜ் மூலம் உங்கள் உடலையும் மனதையும் புத்துணர்ச்சியாக்குங்கள். எங்களிடம் உள்ள சிறப்பம்சங்கள்: ✅ அமைதியான மற்றும் சுத்தமான சூழல். ✅ அனுபவம் வாய்ந்த மசாஜ் நிபுணர்கள். ✅ மலிவான மற்றும் தரமான சேவை. ✅ தலை வலி, முதுகு வலி மற்றும் உடல் சோர்விற்கு உடனடி தீர்வு. 📍 முகவரி: ஈரோடு பேருந்து நிலையம் மிக அருகில்🚌🚎 PSR சில்க்ஸ் பின்புறம்🔙 📞 முன்பதிவிற்கு: 063854 436021
- கரூர் மாவட்ட ஆட்சியர் காலை உணவு திட்டத்தை தொடங்கினார். கரூர் மாவட்டத்துக்கு இன்று செப்டம்பர் : 22 காலை உணவு திட்டம் விரிவாக்கம் செய்யப்பட உள்ள நிலையில், 21,487 கரூர் மாவட்ட மாணவ, மாணவியர் பயன் பெறுவர். தமிழகத்தில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், 1 முதல் 6-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு காலை உணவு திட்டம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆட்சியில், 8-ம் வகுப்பு வரை விரிவாக்கம் செய்யப்பட்டு, காமராஜர் காலை உணவு திட்டம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை, முதல்வர் ஜோசப் விஜய் காணொளி காட்சியின் மூலமாக தொடங்கி வைத்தார் இதன்படி கரூர் மாநகராட்சியில், 30 பள்ளிகளில், 2,936 மாணவர்கள், குளித்தலை நகராட்சியில், 6 பள்ளிகளில், 805 பேர், பள்ளப்பட்டி நகராட்சியில், 9 பள்ளிகளில், 1,439 பேர், புகழூர் நகராட்சியில், 7 பள்ளிகளில், 407 பேர் உள்ளனர். கரூர் ஊராட்சி ஒன்றியத்தில், 19 பள்ளிகளில், 919 மாணவர், தான்தோன்றிமலையில், 26 பள்ளிகளில், 1,871 பேர், அரவக்குறிச்சியில், 16 பள்ளிகளில், 818 பேர், க.பரமத்தியில், 28 பள்ளிகளில், 915 பேர், குளித்தலையில், 28 பள்ளிகளில், 3,047 பேர், கிருஷ்ணராயபுரத்தில், 18 பள்ளிகளில், 1,853 பேர், கடவூரில், 34 பள்ளிகளில், 2,962 பேர் உள்பட மொத்தம், 310 பள்ளிகளில் பயிலும், 21,487 மாணவ, மாணவியர் பயன்பெறும் வகையில் இருந்தனர் இந்த நிகழ்ச்சியில் காலை உணவு திட்டத்தை மாணவ மாணவியருடன் அமர்ந்து உணவு சாப்பிட்டார்கள் கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் முத்துக்குமரன். கரூர் கிருஷ்ணாபுரம் சட்டமன்ற உறுப்பினர் சத்யா அரசுத்துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்1
- காதலித்து கலப்பு திருமணம், விட்டுச்சென்ற காதலன், காதலன் மற்றும் அவர்களின் பெற்றோரை கைது செய்ய வலியுறுத்தி பெண் புகார். கரூர் மாவட்டம் குளித்தலை தாலுக்கா காக்கையம் பட்டியை சேர்ந்தவர் முத்துலட்சுமி இவர் காணப்பட்டியில் உள்ள அரசு பாலிடெக்னிக்ல் படித்து வந்தபோது அதே கல்லூரியில் படித்து வந்த கார்த்திக் என்பவர் உடன் காதல் ஏற்பட்டுள்ளது. இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் இருப்பினும் கார்த்திக் முத்துலட்சுமியை சென்னைக்கு சென்று திருமணம் செய்து ஒரு வருடம் இருவரும் வசித்து வந்துள்ளனர். மேலும் முத்துலட்சுமி கர்ப்பமாக இருந்துள்ள நிலையில் கார்த்திக்கின் பெற்றோர்கள் தொடர்பு கொண்டு முத்துலட்சுமியின் கருவை கலைத்துவிட்டு எங்களுடன் வந்துவிடு என கூறியுள்ளனர். கார்த்தி முத்துலட்சுமி கருவை கலைத்துவிட்டு தனியாக விட்டுவிட்டு பெற்றவுடன் சென்று விட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த முத்துலட்சுமி கார்த்திக்கை தொடர்பு கொண்ட போது கார்த்திக்கின் பெற்றோர் கொலை மிரட்டல் கொடுத்துள்ளனர். அவரின் தாய் தந்தையின் மீது குளித்தலை மகளிர் காவல் நிலையத்தில் முத்துலட்சுமி புகார் கொடுத்ததன் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் அவர்கள் மீது எஸ்சிஎஸ்டி வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மூவர் மீதும் FIR பதிவு செய்தும் இன்னும் கைது செய்யபடததால் மாவட்ட ஆட்சியரிடம் நேரில் புகார் மனு அளித்தார்.1
- காமராஜர் காலை உணவு விரிவாக்க திட்டத்தி ல் 21,273-மாணாக்கர்கள் பயனடைவர். பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு விரிவாக்க திட்டத்தி ல் 21,273-மாணாக்கர்கள் பயனடைவர். தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் இன்று பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு விரிவாக்க திட்டத்தினை தொடங்கி வைத்ததை தொடர்ந்து, கரூர் மாவட்டம், தான்தோன்றி ஊராட்சி ஒன்றியம், மணவாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட ஆட்சியர் முத்துக்குமரன் மாணவ-மாணவியர்களுடன் அமர்ந்து உணவருந்தினார். இந்த திட்டத்தின் மூலம் அரசுப் பள்ளியில் 6 ம் வகுப்பு முதல் 8 ம் வகுப்பு வரை பயிலும் மாணவ/மாணவியர்களுக்கு காலை உணவு வழங்கப்படுகிறது. கரூர் மாவட்டத்தில் காலை உணவுத் திட்டத்தின் மூலம் 1 ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை 768 பள்ளிகளில் பயிலும் 30,669 மாணவ-மாணவியர்கள் பயன்பெறும் நிலையில் இந்த விரிவாக்கத் திட்டத்தின் மூலம் 6 ம் வகுப்பு முதல் 8 ம் வகுப்பு வரை 310 அரசுப் பள்ளிகளில் பயிலும் 21,273 மாணாக்கர்களுக்கு இன்று முதல் காலை உணவு வழங்கப்படுகிறது. மேலும் இந்த திட்டத்தில் மாணவ-மாணவியர்களுக்கு திங்கட்கிழமை - வெண் பொங்கல், காய்கறி சாம்பார், செவ்வாய் கிழமை - சேமியா கிச்சடி, காய்கறி சாம்பார் புதன்கிழமை - வெண் பொங்கல், காய்கறி சாம்பார், வியாழக்கிழமை - ரவா உப்புமா, காய்கறி சாம்பார் மற்றும் வெள்ளிக்கிழமை- கோதுமை ரவா கிச்சடி, காய்கறி சாம்பார் என ஐந்து நாட்களும்,பள்ளி வேலை நாட்களில் உணவு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில், கிருஷ்ணராயபுரம் எம் எல் ஏ.சத்யா, மாநகராட்சி ஆணையர் பிரித்திவிராஜ் ,திட்ட இயக்குநர், மாவட்ட ஊரக வளர்ச்சிமுகமை தனசேகரன், திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) பொன்னாம்பலம், முதன்மை கல்வி அலுவலர் ராஜு, மாவட்ட ஆட்சியரின் கூடுதல் நேர்முக உதவியாளர் (நிலம்) அக்பர் அலி, மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.1
- ராசிபுரத்தில் தொடங்கியது 6 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டம்... ராசிபுரம் ராசிபுரத்தில் தொடங்கியது 6 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டம்... பத்திரப் பதிவுத்துறை அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் தொடங்கி வைப்பு.... ராசிபுரம் அருகே சிங்களாந்தபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில், 6 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கான விரிவாக்கப்பட்ட காமராஜர் காலை உணவுத் திட்டத்தை அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் தொடங்கி வைத்தார். தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ-மாணவிகளின் ஊட்டச்சத்து நிலையை மேம்படுத்தவும், பசியின்றி வகுப்பறைக்கு வந்து கல்வியில் முழுமையாக கவனம் செலுத்துவதை உறுதி செய்யவும், பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதுவரை 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த இந்தத் திட்டம், தற்போது 6, 7 மற்றும் 8-ம் வகுப்பு பயிலும் நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. சென்னை திருவான்மியூர் காந்தி கிராமத்தில் உள்ள சென்னை நடுநிலைப்பள்ளியில் திட்டத்தின் விரிவாக்கத்தை முதலமைச்சர் விஜய் தொடங்கி வைத்தார். இதன் தொடர்ச்சியாக, நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த சிங்களாந்தபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பத்திரப்பதிவுத்துறை அமைச்சரும் ராசிபுரம் சட்டமன்ற உறுப்பினருமான லோகேஷ் தமிழ்ச்செல்வன் கலந்து கொண்டு, விரிவாக்கப்பட்ட காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைத்து மாணவர்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்டார். நிகழ்ச்சியில் நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் திலீப், மாவட்ட ஆட்சியர் மதுபாலன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.1