அருந்ததியர் சமூகத்துக்கு வழங்கப்பட்ட நிலங்களை மீட்டு பட்டா வழங்கக் கோரி ஆர்ப்பாட்டம் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே, அருந்ததியர் சமூகத்துக்கு வழங்கப்பட்ட நிலங்களை மீட்டு உரிய பயனாளிகளுக்கு பட்டா வழங்க வலியுறுத்தி ஆதி தமிழர் பேரவை சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆதி தமிழர் பேரவை நிறுவனத் தலைவர் அதியமான் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், தருமபுரி மாவட்டத்தில் ஆட்டுகாரம்பட்டி, கோவிலூரான் கொட்டாய், சேக்கண்டஅள்ளி, சேசம்பட்டி மற்றும் பையர் நாயக்கம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் அருந்ததியர் சமூகத்துக்கு ஒதுக்கப்பட்ட நிலங்களை மீட்டு, உரிய பயனாளிகளுக்கு பட்டா வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. மேலும், தாதனூர் பகுதியில் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் சிலையை திறந்து வைக்க உடனடியாக அனுமதி வழங்க வேண்டும், நத்தமேடு சுடுகாட்டுக்குச் செல்லும் பாதையை மீட்டெடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளையும் வலியுறுத்தி கண்டன முழக்கங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் ராஜ்குமார், முருகன் உள்ளிட்ட ஒன்றிய மற்றும் நகர நிர்வாகிகள், கட்சித் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
அருந்ததியர் சமூகத்துக்கு வழங்கப்பட்ட நிலங்களை மீட்டு பட்டா வழங்கக் கோரி ஆர்ப்பாட்டம் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே, அருந்ததியர் சமூகத்துக்கு வழங்கப்பட்ட நிலங்களை மீட்டு உரிய பயனாளிகளுக்கு பட்டா வழங்க வலியுறுத்தி ஆதி தமிழர் பேரவை சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆதி தமிழர் பேரவை நிறுவனத் தலைவர் அதியமான் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், தருமபுரி மாவட்டத்தில் ஆட்டுகாரம்பட்டி, கோவிலூரான் கொட்டாய், சேக்கண்டஅள்ளி, சேசம்பட்டி மற்றும் பையர் நாயக்கம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் அருந்ததியர் சமூகத்துக்கு ஒதுக்கப்பட்ட நிலங்களை மீட்டு, உரிய பயனாளிகளுக்கு பட்டா வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. மேலும், தாதனூர் பகுதியில் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் சிலையை திறந்து வைக்க உடனடியாக அனுமதி வழங்க வேண்டும், நத்தமேடு சுடுகாட்டுக்குச் செல்லும் பாதையை மீட்டெடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளையும் வலியுறுத்தி கண்டன முழக்கங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் ராஜ்குமார், முருகன் உள்ளிட்ட ஒன்றிய மற்றும் நகர நிர்வாகிகள், கட்சித் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
- அருந்ததியர் சமூகத்துக்கு வழங்கப்பட்ட நிலங்களை மீட்டு பட்டா வழங்கக் கோரி ஆர்ப்பாட்டம் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே, அருந்ததியர் சமூகத்துக்கு வழங்கப்பட்ட நிலங்களை மீட்டு உரிய பயனாளிகளுக்கு பட்டா வழங்க வலியுறுத்தி ஆதி தமிழர் பேரவை சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆதி தமிழர் பேரவை நிறுவனத் தலைவர் அதியமான் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், தருமபுரி மாவட்டத்தில் ஆட்டுகாரம்பட்டி, கோவிலூரான் கொட்டாய், சேக்கண்டஅள்ளி, சேசம்பட்டி மற்றும் பையர் நாயக்கம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் அருந்ததியர் சமூகத்துக்கு ஒதுக்கப்பட்ட நிலங்களை மீட்டு, உரிய பயனாளிகளுக்கு பட்டா வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. மேலும், தாதனூர் பகுதியில் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் சிலையை திறந்து வைக்க உடனடியாக அனுமதி வழங்க வேண்டும், நத்தமேடு சுடுகாட்டுக்குச் செல்லும் பாதையை மீட்டெடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளையும் வலியுறுத்தி கண்டன முழக்கங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் ராஜ்குமார், முருகன் உள்ளிட்ட ஒன்றிய மற்றும் நகர நிர்வாகிகள், கட்சித் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.1
- தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு பேருந்து நிலையம் முன்பு முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் அவர்களின் 11-ம் ஆண்டு நினைவு அஞ்சலி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி டாக்டர் கலாம் பசுமை நல அறக்கட்டளை சார்பில் தலைவர் முருகன் தலைமையில் நடைபெற்றது. முன்னாள் ராணுவ வீரர் சங்க தலைவர் கிருஷ்ணன் பொன்னுசாமி, அரிமா சங்க நிர்வாகிகள் தர்மன் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியின் போது, பேருந்து நிலையம் முன்பு அமைக்கப்பட்டுள்ள டாக்டர் அப்துல் கலாமின் உருவ படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டு, மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் டாக்டர் கலாம் பசுமை நல அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.1
- கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பழையப்பேட்டையில் காந்தி சிலை அருகே, மத்திய அரசு நீட் தேர்வினை ரத்து செய்ய வழியுறுத்தியும், டெல்லியில் போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய வழியுறுத்தியும் கோரி, கைகளில் மெழுகு வர்த்தி ஏந்தி அமைதிப் பேரணி நடைபெற்றது. இப்பேரணிக்கு நகர காங்கிரஸ் தலைவர் லலித் ஆண்டனி மற்றும் சேலம் ரயில்வேகோட்டு உறுப்பினர் ரகமத்துல்லா ஆகியோர் தலைமை வகித்தனர். இப்பேரணியில் ஏராளமான காங்கிரஸ் கட்சியினர் கலந்து கொண்டனர். இது கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் நடத்தப்பட்ட நிகழ்வு ஆகும்.1
- தருமபுரி மாவட்ட பேரூராட்சிகளின் சார்பில், தூய்மை பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் வாழ்வாதாரம் மற்றும் சமூகப் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில் அரசு சேவைகள் மற்றும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் சிறப்பு முகாம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த முகாமில் தூய்மை பணியாளர்கள், கழிவுநீர் மற்றும் செப்டிக் டேங்க் பராமரிப்பு பணியாளர்கள், வீடு தோறும் கழிவு சேகரிக்கும் தொழிலாளர்கள் உள்ளிட்ட பலர் தங்களது குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர். முகாமில் அரசு சார்ந்த பல்வேறு துறைகள் சார்பில் தனித்தனி அரங்குகள் அமைக்கப்பட்டு, பொதுமக்கள் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு நேரடியாக சேவைகள் வழங்கப்பட்டன. ஒவ்வொரு துறையினரும் தங்களது துறை சார்ந்த அரசுத் திட்டங்கள், நலத்திட்ட உதவிகள், விண்ணப்பிக்கும் நடைமுறைகள் மற்றும் பயன்கள் குறித்து விரிவாக விளக்கமளித்ததுடன், தகுதியான பயனாளிகளிடமிருந்து விண்ணப்பங்களையும் பெற்றனர். மேலும், பணியாளர்களுக்கு மருத்துவக் காப்பீடு, தொழிலாளர் நல வாரிய நலன்கள், கல்வி உதவித்தொகை, விபத்து மற்றும் உயிர்காப்பீட்டு திட்டங்கள், ஓய்வூதியத் திட்டங்கள், குடும்ப நல உதவிகள் உள்ளிட்ட பல்வேறு அரசுத் திட்டங்கள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. அதேபோல், கழிவுநீர் மற்றும் செப்டிக் டேங்க் பணியாளர்கள் பாதுகாப்பு உபகரணங்களை கட்டாயமாக பயன்படுத்துவதன் அவசியம், மனித உயிருக்கு ஆபத்தான கைமுறை கழிவுநீர் சுத்திகரிப்பு பணிகளைத் தவிர்ப்பது, இயந்திரமயமான முறையில் பணிகளை மேற்கொள்வது தொடர்பான விழிப்புணர்வும் வழங்கப்பட்டது. தூய்மை பணியாளர்கள் மற்றும் கழிவு சேகரிப்பு தொழிலாளர்களுக்கு அரசு வழங்கி வரும் சமூகப் பாதுகாப்பு உரிமைகள், தொழிலாளர் நலத் திட்டங்களில் பதிவு செய்யும் நடைமுறைகள், அரசின் பல்வேறு உதவிகளை எளிதில் பெறும் வழிமுறைகள் குறித்து அதிகாரிகள் ஆலோசனைகள் வழங்கினர். தகுதியான பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை விரைந்து வழங்குவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன. இம்முகாமில் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள், பேரூராட்சி அலுவலர்கள், அரசு துறையினர் மற்றும் தூய்மை பணியாளர்கள், அவர்களது குடும்பத்தினர் என ஏராளமானோர் கலந்து கொண்டு அரசின் சேவைகள் மற்றும் நலத்திட்டங்கள் குறித்து நேரடியாக பயனடைந்தனர்.1
- தருமபுரி நகர் பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற குப்பாகவுண்டர் தெரு ஸ்ரீ மாரியம்மன் கோவில் ஆண்டு திருவிழா பக்தர்களின் பக்தி கோஷங்கள் முழங்க வெகு விமர்சையாக நடைபெற்றது. திருவிழாவை முன்னிட்டு ஸ்ரீ மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். மலர்கள், மின்விளக்குகளால் கோவில் வளாகம் வண்ணமயமாக அலங்கரிக்கப்பட்டிருந்தது. அர்சகர்கள் வேத மந்திரங்கள் முழங்க சிறப்பு ஹோமம், அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடத்தினர். பக்தர்கள் மஞ்சள் நீர், எலுமிச்சை மாலை ஆகியவற்றை அம்மனுக்கு சமர்பித்து வேண்டிக் கொண்டனர். திருவிழாவின் முக்கிய நிகழ்வாக இன்று பால் குடம் ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்தில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு குப்பாகவுண்டர் தெருவில் இருந்து கடைவீதி, பால் டிப்போ வழியாக மேளதாளங்களுடன் கோவிலை வந்தடைந்து அம்மனுக்கு பால் அபிஷேகம் நடைபெற்ற நிலையில் கோவில் வளாகம் முழுவதும் பக்தர்களால் நிரம்பி வழிந்தது. திருவிழாவின் ஒரு பகுதியாக கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏராளமானோர் வரிசையில் நின்று பிரசாதம் பெற்று சென்றனர். குப்பாகவுண்டர் தெரு பகுதி மட்டுமல்லாமல் தருமபுரி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் குடும்பத்துடன் வந்து அம்மனை தரிசனம் செய்து சென்றனர். கோவில் நிர்வாகிகள் அனைத்து பக்தர்களுக்கும் நன்றி தெரிவித்தனர்.1
- சேலம் மாநகராட்சி குடிநீர் விநியோகப் பணியைப் பன்னாட்டு நிறுவனமான சூயஸ் நிறுவனத்திற்கு வழங்கும் முடிவைக் கைவிட வேண்டும் என வலியுறுத்தி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் சேலத்தில் போராட்டம் நடைபெற்றது. மாநகராட்சி நிர்வாகமே குடிநீர் விநியோகத்தை முறையாகச் செய்ய வேண்டும் என்று கோரி ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேரணியாகச் சென்று மனு அளிக்க முயன்றவர்களைக் காவல்துறையினர் கைது செய்தனர். சேலத்தில் மார்க்சிஸ்ட் வாலிபர் சங்கம் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.1
- இருசக்கர வாகனத்தை எடுக்க சென்ற போது தனி அறையில் அடைத்து வைத்து மகன்கள் மற்றும் தாய்யை சித்திரைவதை செய்த ரீட்டா குழுவினர் ஒருதலை பட்சமாக செயல்படும் திருப்பத்தூர் கிராமிய காவல்துறை திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி தாலுகா புதுப்பேட்டை அடுத்த அருணாச்சலாநகர் பகுதியை சேர்ந்த நந்தகுமார் இவர் நையாண்டி நிகழ்ச்சி தொழில் செய்து வருகிறார். இவரது தம்பி சந்தோஷ் என்பவர் திருப்பத்தூர் விட்டு வசதி வாரியா பகுதியில் தனது இருசக்கர வாகனத்தை எடுக்க சென்றபோது ரீட்டா என்பவரின் தூண்டுதலின் பெயரில் ஆனந்தன் சுதாகர், சேட்டு, மணி, ஆகியோரை வைத்து சந்தோஷ் என்பவரை அறையில் அடைத்து அடித்து துன்புறுத்தி உள்ளனர். மேலும் இது குறித்து தகவல் அறிந்த சந்தோஷின் அண்ணன் நந்தகுமார் அவரது தாயார் விஜயாவை கையை பிடித்து சேலைய இழுத்து இருவரையும் அறையில் உள்ளே தள்ளி அடித்து துன்புறுத்தபட்டனர். இதில் நந்தகுமார் என்பவரை ரீட்டா மற்றும் அவரது குழுவினர் பலமாக தாக்கியத்தில் மயக்க நிலையில் உள்ள நந்தகுமாரை சந்தோஷ் அவரது தாய் விஜயா ஆகியோர் மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். மேலும் நையாண்டி தொழில் செய்து வரும் நந்தகுமார் இவருக்கு போட்டியாக ஆனந்தன் மற்றும் அவரது குழுவினர்கள் நந்தகுமார் என்பவர் நீயாமான முறையில் நையாண்டி நிகழ்ச்சிகளை குறைந்த விலையில் பேசி வருவதை கண்ட ஆனந்தன் மற்றும் அவரது குழுவினர்கள் நந்தகுமார் என்பவரை மிரட்டும் வகையில் இனிமேல் நீ எங்கேயும் நிகழ்ச்சி பேச கூடாது இல்லனா உன்னை கொன்றுவிடுவேன் என கொலை மிரட்டல் விடுத்தும் அடித்தும் உள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து திருப்பத்தூர் கிராமிய காவல்நிலையத்தில் புகார் செய்ய நந்தகுமாரின் தாயார் விஜயா என்பவர் காவல்நிலையத்தில் புகார் செய்த போது காவல்துறைனார் நந்தகுமார் தாயார் விஜயவை தகாத வார்த்தையால் பேசி வெளிய போ என்று மிரட்டும் தோணியில் பேசியுள்ளனர். மேலும் காவல்துறை ஒருதலை பட்சமாக செயல்பட்டு வருவது குறித்து உடனடியாக உரிய நியாயம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாவட்ட காவல் கண்கணிப்பாளருக்கு நந்தகுமார் மற்றும் அவரது பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்1
- தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு பேருந்து நிலையத்தில் முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாமின் 11-ம் ஆண்டு நினைவு அஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி டாக்டர் கலாம் பசுமை நல அறக்கட்டளை சார்பில் தலைவர் முருகன் தலைமையில் நடைபெற்றது. முன்னாள் ராணுவ வீரர் சங்க தலைவர் கிருஷ்ணன் பொன்னுசாமி, அரிமா சங்க நிர்வாகிகள் தர்மன் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியின் போது, பேருந்து நிலையம் முன்பு அமைக்கப்பட்டுள்ள டாக்டர் அப்துல் கலாமின் உருவப்படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டு, மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் டாக்டர் கலாம் பசுமை நல அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பெருமளவில் கலந்து கொண்டனர்.1