Shuru
Apke Nagar Ki App…
மதுரை மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா இன்று (11.07.2026) திருமலை நாயக்கர் அரண்மனை வளாகத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது, அரண்மனை வளாகத்தில் புதிய மின்னொளியுடன் கூடிய சிற்பக்காட்சிக் கூடம் அமைக்கும் பணி, மழைநீர் வடிகால் வசதி மற்றும் நவீன கழிப்பறைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் பணிகள் குறித்து அவர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது, மதுரை மாவட்ட உதவி ஆட்சியர் (பயிற்சி) சித்தார்த் போகர்னா உடனிருந்தார்.
சு.இரத்தினவேல்
மதுரை மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா இன்று (11.07.2026) திருமலை நாயக்கர் அரண்மனை வளாகத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது, அரண்மனை வளாகத்தில் புதிய மின்னொளியுடன் கூடிய சிற்பக்காட்சிக் கூடம் அமைக்கும் பணி, மழைநீர் வடிகால் வசதி மற்றும் நவீன கழிப்பறைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் பணிகள் குறித்து அவர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது, மதுரை மாவட்ட உதவி ஆட்சியர் (பயிற்சி) சித்தார்த் போகர்னா உடனிருந்தார்.
More news from Virudhunagar and nearby areas
- விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ள குறுஞ்சங்குளம் கம்மாய்க்குச் செல்லும் நீர் வரத்து கால்வாய் அடைக்கப்பட்டதை கண்டித்து, அப்பகுதி பொதுமக்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த கால்வாய் அடைக்கப்பட்டதால் கம்மாய்க்கு தண்ணீர் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்றும், இதனால் விவசாயம் மற்றும் நிலத்தடி நீர்மட்டம் கடுமையாக பாதிக்கப்படும் என்றும் பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். மாவட்ட நிர்வாகமும் சம்பந்தப்பட்ட துறையினரும் உடனடியாக கால்வாயைத் திறந்து, தடையின்றி நீர் செல்ல உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர். இந்தப் போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர், பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.1
- விருதுநகர் ஒய்.எம்.சி.ஏ ஹாலில் தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் மாவட்டப் பொதுக்குழு கூட்டம் மாவட்டத் தலைவர் கண்ணன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராகப் கலந்துகொண்ட மாநிலத் தலைவர் அமிர்தக்குமார், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் 10 அம்ச வாழ்வாதாரக் கோரிக்கைகளை வலியுறுத்தி நிர்வாகிகளிடையே உரையாற்றினார். தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், கடந்த 22 ஆண்டுகளாக அரசு ஊழியர்களை வாட்டி வதைக்கும் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார். கடந்த ஆட்சியில் அறிவிக்கப்பட்ட 'உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தில்' 10% பங்களிப்புத் தொகை பிடித்தம் உள்ளிட்ட பல்வேறு குறைபாடுகள் இருந்ததாகவும், தேர்தல் காரணமாக அதுவும் முழுமையாக அமல்படுத்தப்படவில்லை என்றும் சாடினார். மேலும், கடந்த 01.04.2003-க்கு முன்பு நடைமுறையில் இருந்த 'பழைய ஓய்வூதிய திட்டத்தை' எந்தவொரு மாற்றுத் திட்டமும் இன்றி முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்பதே தங்களின் இறுதி இலக்கு எனக் குறிப்பிட்ட அவர், கொரோனா காலத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட அகவிலைப்படி (DA) உயர்வை உடனே வழங்க வேண்டும், மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை அரசே நேரடியாக ஏற்று நடத்த வேண்டும் மற்றும் தினக்கூலி, தொகுப்பூதிய ஊழியர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் போன்ற கோரிக்கைகளையும் முன்வைத்தார். தவெக தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டபடி, புதிய அரசு பதவியேற்று இரண்டு மாதங்களே ஆவதால், முதலமைச்சர் விஜய் அவர்கள் தங்களின் முதன்மையான கோரிக்கையான பழைய ஓய்வூதிய திட்டத்தை நிச்சயம் அமல்படுத்துவார் என்று முழுமையாக நம்புவதாக அமிர்தக்குமார் தெரிவித்தார். இதற்காக முதலமைச்சரை இருமுறை நேரில் சந்தித்துக் கோரிக்கை விடுத்துள்ளதாகவும், அதிகாரிகளுடன் பரிசீலிப்பதாக அவர் உறுதியளித்துள்ளதாகவும் கூறினார். பேச்சுவார்த்தை மூலம் வாழ்வாதாரப் பிரச்சினைகள் தீராத பட்சத்தில், சங்கத்தின் மத்திய செயற்குழு கூட்டத்தைக் கூட்டி அடுத்தகட்டப் போராட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவு செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.1
- சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை வட்டம், திருச்சி-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கோடிக்கோட்டை சுங்கச்சாவடி பகுதியில் தெரு மின்விளக்குகளுக்காகப் பதிக்கப்பட்ட மின்சாரக் கேபிள்களில் அடிக்கடி பழுது ஏற்பட்டு வருகிறது. இந்தப் பகுதியில் அமைந்துள்ள மின்விளக்குகளுக்கு நிலத்திற்கு அடியில் கொண்டு செல்லப்பட்ட மின்சாரக் கேபிள்கள், தொடர் பழுதுகளால் தரைக்கு மேல் மாற்றப்பட்டுள்ளன. தற்போது கேபிள்கள் தரையின் மேற்பகுதியில் இருப்பதால், அவ்வழியாகச் செல்லும் கனரக வாகனங்களால் மின் வயர்கள் சேதமடைந்து மின்கசிவு ஏற்பட்டுள்ளது. இதனால் சாலையில் மின் விபத்துக்கள் ஏற்படும் அபாயம் நிலவுவதாகப் பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். பெரும் விபத்துக்கள் நிகழும் முன்பாக, சம்பந்தப்பட்ட மின் கேபிள்களையும், தெரு மின்விளக்குகளையும் உடனடியாகச் சரிசெய்ய வேண்டும் எனத் தேசிய நெடுஞ்சாலைப் பயனாளிகளும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.1
- சிவகங்கை பிள்ளைவயல் காளியம்மன் கோயிலின் 72-வது பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு, இரட்டை மாட்டுவண்டிப் பந்தயம் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது. இந்த உற்சாகமான நிகழ்வில் மொத்தம் 52 ஜோடி மாட்டுவண்டிகள் கலந்துகொண்டு தங்களது வேகத்தை வெளிப்படுத்தின. இந்தப் போட்டி பெரிய மாடு, சின்ன மாடு மற்றும் பூஞ்சிட்டு என மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு நடத்தப்பட்டது. இதில் பெரிய மாடுகளுக்கான போட்டி 8 கி.மீ தூரத்திற்கும், சின்ன மாடுகளுக்கான போட்டி 6 கி.மீ தூரத்திற்கும், பூஞ்சிட்டு மாடுகளுக்கான போட்டி 4 கி.மீ தூரத்திற்கும் நடைபெற்றது. வெற்றி பெற்ற முதல் நான்கு இடங்களுக்கு ரூ. 30,000, ரூ. 25,000 மற்றும் ரூ. 20,000 உள்ளிட்ட ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த மாட்டுவண்டிப் பந்தயத்தை ஆயிரக்கணக்கான பொதுமக்கள் ஆர்வத்துடன் திரண்டு கண்டு ரசித்தனர்.1
- தேனி மாவட்டத்தின் மிக முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் வைகை ஆறு, கடந்த ஆறு மாதங்களாக போதிய மழை இல்லாததால் முற்றிலும் வறண்டு மணல்மேடாக காட்சியளிக்கிறது. வருசநாடு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் உற்பத்தியாகும் இந்த ஆற்றை நம்பி வருசநாடு, மயிலாடும்பாறை, கடமலைக்குண்டு மற்றும் கண்டமனூர் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட மலைக் கிராமங்கள் உள்ளன. இந்த ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள உறை கிணறுகள் மூலமே இப்பகுதி மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்த நிலையில், தற்பொழுது நீர்மட்டம் கிடுகிடுவென சரிந்து பெரும்பாலான கிணறுகளில் நீர் சுரப்பது நின்றுபோகும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. நடப்பாண்டில் தென்மேற்கு பருவமழையும் முழுமையாகக் கைவிட்டதால் இப்பகுதியில் கடும் வறட்சி நிலவுகிறது. நிலத்தடி நீர்மட்டம் அதல பாதாளத்திற்குச் சென்றதால், குடிநீருக்காக அமைக்கப்பட்ட ஆழ்துளை கிணறுகளும் வறண்டு போகும் நிலையை எட்டியுள்ளன. இந்த கடுமையான குடிநீர் பற்றாக்குறையை எப்படி கையாள்வது என்று தெரியாமல் உள்ளூர் ஊராட்சி நிர்வாகங்கள் விழிபிதுங்கி தவித்து வருகின்றன. பொதுமக்களின் தாகத்தைத் தீர்க்க மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் தலையிட்டு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுவாக எழுந்துள்ளது.1
- தேனி மாவட்டம் போடி மூணாறு நெடுஞ்சாலையில் சிபிஏ கல்லூரி அருகே அமைந்துள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கிடங்கில் உணவு மற்றும் உணவு வழங்கல் துறை அமைச்சர் வெங்கடரமணன் நேரில் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது, கிடங்கில் சேகரிக்கப்படும் அரிசி, பருப்பு, சர்க்கரை மற்றும் பாமாயில் ஆகியவை முறையாகவும், பாதுகாப்பாகவும் வைக்கப்பட்டுள்ளதா என்று அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதனைத் தொடர்ந்து, இந்த மாவட்டத்தின் நீண்ட நாள் கோரிக்கையான மாம்பழக் கூழ் தொழிற்சாலை அமைப்பது குறித்து முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று, அது விரைவில் செயல்படுத்தப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார். மாம்பழக் கூழ் தொழிற்சாலை விரைவில் அமைக்கப்படும் என்றும் அவர் உறுதிபடக் கூறியுள்ளார்.1
- விருதுநகர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில், உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு மாபெரும் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் சுகபுத்ரா இப்பேரணியைக் கொடியசைத்துத் துவக்கி வைத்தார். இப்பேரணியில் 100-க்கும் மேற்பட்ட அரசு செவிலியர் பள்ளி மாணவிகள் ஆர்வமுடன் கலந்துகொண்டனர். அவர்கள் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திச் சென்றனர். அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் மகப்பேறு பிரிவிலிருந்து தொடங்கிய இந்த விழிப்புணர்வு பேரணியானது, நகரின் முக்கிய வீதிகளின் வழியாக வலம் வந்து பொதுமக்களிடையே மக்கள் தொகை கட்டுப்பாட்டின் அவசியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியது. முன்னதாக, மாவட்ட ஆட்சியருடன் இணைந்து மருத்துவர்கள் மற்றும் செவிலியர் பள்ளி மாணவிகள் விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். அதனைத் தொடர்ந்து, உலக மக்கள் தொகையை முன்னிட்டு நடத்தப்பட்ட பேச்சுப்போட்டியில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியர் சான்றிதழ்களை வழங்கினார். இந்நிகழ்வில் மருத்துவமனை உயர் அதிகாரிகள், மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.1
- திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் சத்திரப்பட்டி அருகே அரசு பேருந்து மற்றும் இருசக்கர வாகனம் ஆகியவை மோதிக்கொள்ளும் பரபரப்பான விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த விபத்து தொடர்பான பரபரப்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.1