logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

விருதுநகர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில், உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு மாபெரும் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் சுகபுத்ரா இப்பேரணியைக் கொடியசைத்துத் துவக்கி வைத்தார். இப்பேரணியில் 100-க்கும் மேற்பட்ட அரசு செவிலியர் பள்ளி மாணவிகள் ஆர்வமுடன் கலந்துகொண்டனர். அவர்கள் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திச் சென்றனர். அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் மகப்பேறு பிரிவிலிருந்து தொடங்கிய இந்த விழிப்புணர்வு பேரணியானது, நகரின் முக்கிய வீதிகளின் வழியாக வலம் வந்து பொதுமக்களிடையே மக்கள் தொகை கட்டுப்பாட்டின் அவசியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியது. முன்னதாக, மாவட்ட ஆட்சியருடன் இணைந்து மருத்துவர்கள் மற்றும் செவிலியர் பள்ளி மாணவிகள் விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். அதனைத் தொடர்ந்து, உலக மக்கள் தொகையை முன்னிட்டு நடத்தப்பட்ட பேச்சுப்போட்டியில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியர் சான்றிதழ்களை வழங்கினார். இந்நிகழ்வில் மருத்துவமனை உயர் அதிகாரிகள், மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.

3 hrs ago
user_க.பாலசுப்பிரமணியன்
க.பாலசுப்பிரமணியன்
Photographer சாத்தூர், விருதுநகர், தமிழ்நாடு•
3 hrs ago

விருதுநகர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில், உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு மாபெரும் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் சுகபுத்ரா இப்பேரணியைக் கொடியசைத்துத் துவக்கி வைத்தார். இப்பேரணியில் 100-க்கும் மேற்பட்ட அரசு செவிலியர் பள்ளி மாணவிகள் ஆர்வமுடன் கலந்துகொண்டனர். அவர்கள் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திச் சென்றனர். அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் மகப்பேறு பிரிவிலிருந்து தொடங்கிய இந்த விழிப்புணர்வு பேரணியானது, நகரின் முக்கிய வீதிகளின் வழியாக வலம் வந்து பொதுமக்களிடையே மக்கள் தொகை கட்டுப்பாட்டின் அவசியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியது. முன்னதாக, மாவட்ட ஆட்சியருடன் இணைந்து மருத்துவர்கள் மற்றும் செவிலியர் பள்ளி மாணவிகள் விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். அதனைத் தொடர்ந்து, உலக மக்கள் தொகையை முன்னிட்டு நடத்தப்பட்ட பேச்சுப்போட்டியில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியர் சான்றிதழ்களை வழங்கினார். இந்நிகழ்வில் மருத்துவமனை உயர் அதிகாரிகள், மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.

More news from தமிழ்நாடு and nearby areas
  • விருதுநகர் ஒய்.எம்.சி.ஏ ஹாலில் தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் மாவட்டப் பொதுக்குழு கூட்டம் மாவட்டத் தலைவர் கண்ணன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராகப் கலந்துகொண்ட மாநிலத் தலைவர் அமிர்தக்குமார், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் 10 அம்ச வாழ்வாதாரக் கோரிக்கைகளை வலியுறுத்தி நிர்வாகிகளிடையே உரையாற்றினார். தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், கடந்த 22 ஆண்டுகளாக அரசு ஊழியர்களை வாட்டி வதைக்கும் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார். கடந்த ஆட்சியில் அறிவிக்கப்பட்ட 'உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தில்' 10% பங்களிப்புத் தொகை பிடித்தம் உள்ளிட்ட பல்வேறு குறைபாடுகள் இருந்ததாகவும், தேர்தல் காரணமாக அதுவும் முழுமையாக அமல்படுத்தப்படவில்லை என்றும் சாடினார். மேலும், கடந்த 01.04.2003-க்கு முன்பு நடைமுறையில் இருந்த 'பழைய ஓய்வூதிய திட்டத்தை' எந்தவொரு மாற்றுத் திட்டமும் இன்றி முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்பதே தங்களின் இறுதி இலக்கு எனக் குறிப்பிட்ட அவர், கொரோனா காலத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட அகவிலைப்படி (DA) உயர்வை உடனே வழங்க வேண்டும், மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை அரசே நேரடியாக ஏற்று நடத்த வேண்டும் மற்றும் தினக்கூலி, தொகுப்பூதிய ஊழியர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் போன்ற கோரிக்கைகளையும் முன்வைத்தார். தவெக தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டபடி, புதிய அரசு பதவியேற்று இரண்டு மாதங்களே ஆவதால், முதலமைச்சர் விஜய் அவர்கள் தங்களின் முதன்மையான கோரிக்கையான பழைய ஓய்வூதிய திட்டத்தை நிச்சயம் அமல்படுத்துவார் என்று முழுமையாக நம்புவதாக அமிர்தக்குமார் தெரிவித்தார். இதற்காக முதலமைச்சரை இருமுறை நேரில் சந்தித்துக் கோரிக்கை விடுத்துள்ளதாகவும், அதிகாரிகளுடன் பரிசீலிப்பதாக அவர் உறுதியளித்துள்ளதாகவும் கூறினார். பேச்சுவார்த்தை மூலம் வாழ்வாதாரப் பிரச்சினைகள் தீராத பட்சத்தில், சங்கத்தின் மத்திய செயற்குழு கூட்டத்தைக் கூட்டி அடுத்தகட்டப் போராட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவு செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
    1
    விருதுநகர் ஒய்.எம்.சி.ஏ ஹாலில் தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் மாவட்டப் பொதுக்குழு கூட்டம் மாவட்டத் தலைவர் கண்ணன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராகப் கலந்துகொண்ட மாநிலத் தலைவர் அமிர்தக்குமார், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் 10 அம்ச வாழ்வாதாரக் கோரிக்கைகளை வலியுறுத்தி நிர்வாகிகளிடையே உரையாற்றினார்.

தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், கடந்த 22 ஆண்டுகளாக அரசு ஊழியர்களை வாட்டி வதைக்கும் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார். கடந்த ஆட்சியில் அறிவிக்கப்பட்ட 'உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தில்' 10% பங்களிப்புத் தொகை பிடித்தம் உள்ளிட்ட பல்வேறு குறைபாடுகள் இருந்ததாகவும், தேர்தல் காரணமாக அதுவும் முழுமையாக அமல்படுத்தப்படவில்லை என்றும் சாடினார். மேலும், கடந்த 01.04.2003-க்கு முன்பு நடைமுறையில் இருந்த 'பழைய ஓய்வூதிய திட்டத்தை' எந்தவொரு மாற்றுத் திட்டமும் இன்றி முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்பதே தங்களின் இறுதி இலக்கு எனக் குறிப்பிட்ட அவர், கொரோனா காலத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட அகவிலைப்படி (DA) உயர்வை உடனே வழங்க வேண்டும், மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை அரசே நேரடியாக ஏற்று நடத்த வேண்டும் மற்றும் தினக்கூலி, தொகுப்பூதிய ஊழியர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் போன்ற கோரிக்கைகளையும் முன்வைத்தார்.

தவெக தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டபடி, புதிய அரசு பதவியேற்று இரண்டு மாதங்களே ஆவதால், முதலமைச்சர் விஜய் அவர்கள் தங்களின் முதன்மையான கோரிக்கையான பழைய ஓய்வூதிய திட்டத்தை நிச்சயம் அமல்படுத்துவார் என்று முழுமையாக நம்புவதாக அமிர்தக்குமார் தெரிவித்தார். இதற்காக முதலமைச்சரை இருமுறை நேரில் சந்தித்துக் கோரிக்கை விடுத்துள்ளதாகவும், அதிகாரிகளுடன் பரிசீலிப்பதாக அவர் உறுதியளித்துள்ளதாகவும் கூறினார். பேச்சுவார்த்தை மூலம் வாழ்வாதாரப் பிரச்சினைகள் தீராத பட்சத்தில், சங்கத்தின் மத்திய செயற்குழு கூட்டத்தைக் கூட்டி அடுத்தகட்டப் போராட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவு செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
    user_க.பாலசுப்பிரமணியன்
    க.பாலசுப்பிரமணியன்
    Photographer சாத்தூர், விருதுநகர், தமிழ்நாடு•
    3 hrs ago
  • விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ள குறுஞ்சங்குளம் கம்மாய்க்குச் செல்லும் நீர் வரத்து கால்வாய் அடைக்கப்பட்டதை கண்டித்து, அப்பகுதி பொதுமக்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த கால்வாய் அடைக்கப்பட்டதால் கம்மாய்க்கு தண்ணீர் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்றும், இதனால் விவசாயம் மற்றும் நிலத்தடி நீர்மட்டம் கடுமையாக பாதிக்கப்படும் என்றும் பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். மாவட்ட நிர்வாகமும் சம்பந்தப்பட்ட துறையினரும் உடனடியாக கால்வாயைத் திறந்து, தடையின்றி நீர் செல்ல உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர். இந்தப் போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர், பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.
    1
    விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ள குறுஞ்சங்குளம் கம்மாய்க்குச் செல்லும் நீர் வரத்து கால்வாய் அடைக்கப்பட்டதை கண்டித்து, அப்பகுதி பொதுமக்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த கால்வாய் அடைக்கப்பட்டதால் கம்மாய்க்கு தண்ணீர் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்றும், இதனால் விவசாயம் மற்றும் நிலத்தடி நீர்மட்டம் கடுமையாக பாதிக்கப்படும் என்றும் பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

மாவட்ட நிர்வாகமும் சம்பந்தப்பட்ட துறையினரும் உடனடியாக கால்வாயைத் திறந்து, தடையின்றி நீர் செல்ல உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர். இந்தப் போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர், பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.
    user_குமார்
    குமார்
    Kariapatti, Virudhunagar•
    7 hrs ago
  • தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கட்டாலங்குளத்தில், சுதந்திரப் போராட்ட வீரர் அழகுமுத்துக்கோனின் 316-வது பிறந்தநாள் அரசு விழா பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அரசு விழா என்று அறிவிக்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் ஒரு முறையும், இரண்டு அமைச்சர்கள் தனித்தனியாக இரு முறையும் என மொத்தம் மூன்று முறை மாலை அணிவித்து மரியாதை செலுத்தியது விழாவிற்கு வந்திருந்தவர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மணிமண்டபத்தில் உள்ள அழகுமுத்துக்கோனின் திருவுருவச் சிலைக்கு காலை 10:30 மணிக்கு அமைச்சர்கள் ஸ்ரீநாத், மதன் ராஜா மற்றும் மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் ஆகியோர் அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அமைச்சர்கள் வரத் தாமதமானதால் முதற்கட்டமாக மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் அரசு சார்பில் தனியாக மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன் பின்னர் சிறிது நேரம் கழித்து, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் மதன்ராஜா ஆட்சியருடன் வந்து மாலை அணிவித்தார். இதனைத் தொடர்ந்து மேலும் சிறிது நேரம் கழித்து, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் ஆட்சியருடன் தனியாக வந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். ஒரே நிகழ்ச்சியில் மூன்று முறை தனித்தனியாக நடந்த இந்த நிகழ்வு, அரசு விழா என்பதைத் தாண்டி த. வெ. க கோஷ்டி பூசல் விழாவாக மாறியது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. வழக்கமாக மாவட்ட ஆட்சியர் மற்றும் அமைச்சர்கள் ஒருங்கிணைந்து மாலை அணிவித்து மரியாதை செய்து, அழகுமுத்துக்கோனின் வாரிசுகளை கௌரவப்படுத்தி, நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகள் நடைபெறும். ஆனால், இந்த முறை அதுபோன்ற எந்த விழாவும் நடைபெறவில்லை. மேலும், அமைச்சர்கள் வரத் தாமதமானதால் மற்றவர்களைச் சென்று மரியாதை செய்யச் சொல்வதில் காவல்துறையினருக்கும் தயக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
    1
    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கட்டாலங்குளத்தில், சுதந்திரப் போராட்ட வீரர் அழகுமுத்துக்கோனின் 316-வது பிறந்தநாள் அரசு விழா பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அரசு விழா என்று அறிவிக்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் ஒரு முறையும், இரண்டு அமைச்சர்கள் தனித்தனியாக இரு முறையும் என மொத்தம் மூன்று முறை மாலை அணிவித்து மரியாதை செலுத்தியது விழாவிற்கு வந்திருந்தவர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மணிமண்டபத்தில் உள்ள அழகுமுத்துக்கோனின் திருவுருவச் சிலைக்கு காலை 10:30 மணிக்கு அமைச்சர்கள் ஸ்ரீநாத், மதன் ராஜா மற்றும் மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் ஆகியோர் அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அமைச்சர்கள் வரத் தாமதமானதால் முதற்கட்டமாக மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் அரசு சார்பில் தனியாக மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன் பின்னர் சிறிது நேரம் கழித்து, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் மதன்ராஜா ஆட்சியருடன் வந்து மாலை அணிவித்தார். இதனைத் தொடர்ந்து மேலும் சிறிது நேரம் கழித்து, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் ஆட்சியருடன் தனியாக வந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

ஒரே நிகழ்ச்சியில் மூன்று முறை தனித்தனியாக நடந்த இந்த நிகழ்வு, அரசு விழா என்பதைத் தாண்டி த. வெ. க கோஷ்டி பூசல் விழாவாக மாறியது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. வழக்கமாக மாவட்ட ஆட்சியர் மற்றும் அமைச்சர்கள் ஒருங்கிணைந்து மாலை அணிவித்து மரியாதை செய்து, அழகுமுத்துக்கோனின் வாரிசுகளை கௌரவப்படுத்தி, நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகள் நடைபெறும். ஆனால், இந்த முறை அதுபோன்ற எந்த விழாவும் நடைபெறவில்லை. மேலும், அமைச்சர்கள் வரத் தாமதமானதால் மற்றவர்களைச் சென்று மரியாதை செய்யச் சொல்வதில் காவல்துறையினருக்கும் தயக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
    user_கோ.ரெங்கசாமி
    கோ.ரெங்கசாமி
    கோவில்பட்டி, தூத்துக்குடி, தமிழ்நாடு•
    4 hrs ago
  • தேனி மாவட்டத்தின் மிக முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் வைகை ஆறு, கடந்த ஆறு மாதங்களாக போதிய மழை இல்லாததால் முற்றிலும் வறண்டு மணல்மேடாக காட்சியளிக்கிறது. வருசநாடு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் உற்பத்தியாகும் இந்த ஆற்றை நம்பி வருசநாடு, மயிலாடும்பாறை, கடமலைக்குண்டு மற்றும் கண்டமனூர் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட மலைக் கிராமங்கள் உள்ளன. இந்த ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள உறை கிணறுகள் மூலமே இப்பகுதி மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்த நிலையில், தற்பொழுது நீர்மட்டம் கிடுகிடுவென சரிந்து பெரும்பாலான கிணறுகளில் நீர் சுரப்பது நின்றுபோகும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. நடப்பாண்டில் தென்மேற்கு பருவமழையும் முழுமையாகக் கைவிட்டதால் இப்பகுதியில் கடும் வறட்சி நிலவுகிறது. நிலத்தடி நீர்மட்டம் அதல பாதாளத்திற்குச் சென்றதால், குடிநீருக்காக அமைக்கப்பட்ட ஆழ்துளை கிணறுகளும் வறண்டு போகும் நிலையை எட்டியுள்ளன. இந்த கடுமையான குடிநீர் பற்றாக்குறையை எப்படி கையாள்வது என்று தெரியாமல் உள்ளூர் ஊராட்சி நிர்வாகங்கள் விழிபிதுங்கி தவித்து வருகின்றன. பொதுமக்களின் தாகத்தைத் தீர்க்க மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் தலையிட்டு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுவாக எழுந்துள்ளது.
    1
    தேனி மாவட்டத்தின் மிக முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் வைகை ஆறு, கடந்த ஆறு மாதங்களாக போதிய மழை இல்லாததால் முற்றிலும் வறண்டு மணல்மேடாக காட்சியளிக்கிறது. வருசநாடு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் உற்பத்தியாகும் இந்த ஆற்றை நம்பி வருசநாடு, மயிலாடும்பாறை, கடமலைக்குண்டு மற்றும் கண்டமனூர் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட மலைக் கிராமங்கள் உள்ளன. இந்த ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள உறை கிணறுகள் மூலமே இப்பகுதி மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்த நிலையில், தற்பொழுது நீர்மட்டம் கிடுகிடுவென சரிந்து பெரும்பாலான கிணறுகளில் நீர் சுரப்பது நின்றுபோகும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

நடப்பாண்டில் தென்மேற்கு பருவமழையும் முழுமையாகக் கைவிட்டதால் இப்பகுதியில் கடும் வறட்சி நிலவுகிறது. நிலத்தடி நீர்மட்டம் அதல பாதாளத்திற்குச் சென்றதால், குடிநீருக்காக அமைக்கப்பட்ட ஆழ்துளை கிணறுகளும் வறண்டு போகும் நிலையை எட்டியுள்ளன. இந்த கடுமையான குடிநீர் பற்றாக்குறையை எப்படி கையாள்வது என்று தெரியாமல் உள்ளூர் ஊராட்சி நிர்வாகங்கள் விழிபிதுங்கி தவித்து வருகின்றன. பொதுமக்களின் தாகத்தைத் தீர்க்க மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் தலையிட்டு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுவாக எழுந்துள்ளது.
    user_VIGNESH
    VIGNESH
    Photographer ஆண்டிபட்டி, தேனி, தமிழ்நாடு•
    15 hrs ago
  • சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை வட்டம், திருச்சி-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கோடிக்கோட்டை சுங்கச்சாவடி பகுதியில் தெரு மின்விளக்குகளுக்காகப் பதிக்கப்பட்ட மின்சாரக் கேபிள்களில் அடிக்கடி பழுது ஏற்பட்டு வருகிறது. இந்தப் பகுதியில் அமைந்துள்ள மின்விளக்குகளுக்கு நிலத்திற்கு அடியில் கொண்டு செல்லப்பட்ட மின்சாரக் கேபிள்கள், தொடர் பழுதுகளால் தரைக்கு மேல் மாற்றப்பட்டுள்ளன. தற்போது கேபிள்கள் தரையின் மேற்பகுதியில் இருப்பதால், அவ்வழியாகச் செல்லும் கனரக வாகனங்களால் மின் வயர்கள் சேதமடைந்து மின்கசிவு ஏற்பட்டுள்ளது. இதனால் சாலையில் மின் விபத்துக்கள் ஏற்படும் அபாயம் நிலவுவதாகப் பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். பெரும் விபத்துக்கள் நிகழும் முன்பாக, சம்பந்தப்பட்ட மின் கேபிள்களையும், தெரு மின்விளக்குகளையும் உடனடியாகச் சரிசெய்ய வேண்டும் எனத் தேசிய நெடுஞ்சாலைப் பயனாளிகளும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    1
    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை வட்டம், திருச்சி-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கோடிக்கோட்டை சுங்கச்சாவடி பகுதியில் தெரு மின்விளக்குகளுக்காகப் பதிக்கப்பட்ட மின்சாரக் கேபிள்களில் அடிக்கடி பழுது ஏற்பட்டு வருகிறது. இந்தப் பகுதியில் அமைந்துள்ள மின்விளக்குகளுக்கு நிலத்திற்கு அடியில் கொண்டு செல்லப்பட்ட மின்சாரக் கேபிள்கள், தொடர் பழுதுகளால் தரைக்கு மேல் மாற்றப்பட்டுள்ளன.

தற்போது கேபிள்கள் தரையின் மேற்பகுதியில் இருப்பதால், அவ்வழியாகச் செல்லும் கனரக வாகனங்களால் மின் வயர்கள் சேதமடைந்து மின்கசிவு ஏற்பட்டுள்ளது. இதனால் சாலையில் மின் விபத்துக்கள் ஏற்படும் அபாயம் நிலவுவதாகப் பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். பெரும் விபத்துக்கள் நிகழும் முன்பாக, சம்பந்தப்பட்ட மின் கேபிள்களையும், தெரு மின்விளக்குகளையும் உடனடியாகச் சரிசெய்ய வேண்டும் எனத் தேசிய நெடுஞ்சாலைப் பயனாளிகளும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    user_Devakottaigani news
    Devakottaigani news
    சிவகங்கை, சிவகங்கை, தமிழ்நாடு•
    22 hrs ago
  • தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் தாலுகாவின் மிகப்பெரிய ஊரான புதியம்புத்தூருக்கு, சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் தங்களின் அடிப்படைத் தேவைகளுக்காக வந்து செல்வது வழக்கம். தற்போது புதியம்புத்தூரில் ஆனித் திருவிழா நடைபெற்று வருவதை ஒட்டி, வழக்கத்தை விட மிக அதிக அளவில் பொதுமக்கள் அங்கு வந்து செல்கின்றனர். இதனால், இன்று இரவு 7 மணியளவில் புதியம்புத்தூர் டூ தூத்துக்குடி சாலையில் மிகக் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்த போக்குவரத்து நெரிசலானது ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்ததால், அப்பகுதியைக் கடக்க முயன்ற பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் கடுமையான சிரமத்திற்கு உள்ளாகி, பெரும் அவதிக்கு ஆளாகினர்.
    1
    தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் தாலுகாவின் மிகப்பெரிய ஊரான புதியம்புத்தூருக்கு, சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் தங்களின் அடிப்படைத் தேவைகளுக்காக வந்து செல்வது வழக்கம். தற்போது புதியம்புத்தூரில் ஆனித் திருவிழா நடைபெற்று வருவதை ஒட்டி, வழக்கத்தை விட மிக அதிக அளவில் பொதுமக்கள் அங்கு வந்து செல்கின்றனர்.

இதனால், இன்று இரவு 7 மணியளவில் புதியம்புத்தூர் டூ தூத்துக்குடி சாலையில் மிகக் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்த போக்குவரத்து நெரிசலானது ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்ததால், அப்பகுதியைக் கடக்க முயன்ற பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் கடுமையான சிரமத்திற்கு உள்ளாகி, பெரும் அவதிக்கு ஆளாகினர்.
    user_Pooraja V
    Pooraja V
    ஒட்டப்பிடாரம், தூத்துக்குடி, தமிழ்நாடு•
    1 hr ago
  • தேனி மாவட்டம் போடி மூணாறு நெடுஞ்சாலையில் சிபிஏ கல்லூரி அருகே அமைந்துள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கிடங்கில் உணவு மற்றும் உணவு வழங்கல் துறை அமைச்சர் வெங்கடரமணன் நேரில் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது, கிடங்கில் சேகரிக்கப்படும் அரிசி, பருப்பு, சர்க்கரை மற்றும் பாமாயில் ஆகியவை முறையாகவும், பாதுகாப்பாகவும் வைக்கப்பட்டுள்ளதா என்று அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதனைத் தொடர்ந்து, இந்த மாவட்டத்தின் நீண்ட நாள் கோரிக்கையான மாம்பழக் கூழ் தொழிற்சாலை அமைப்பது குறித்து முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று, அது விரைவில் செயல்படுத்தப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார். மாம்பழக் கூழ் தொழிற்சாலை விரைவில் அமைக்கப்படும் என்றும் அவர் உறுதிபடக் கூறியுள்ளார்.
    1
    தேனி மாவட்டம் போடி மூணாறு நெடுஞ்சாலையில் சிபிஏ கல்லூரி அருகே அமைந்துள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கிடங்கில் உணவு மற்றும் உணவு வழங்கல் துறை அமைச்சர் வெங்கடரமணன் நேரில் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது, கிடங்கில் சேகரிக்கப்படும் அரிசி, பருப்பு, சர்க்கரை மற்றும் பாமாயில் ஆகியவை முறையாகவும், பாதுகாப்பாகவும் வைக்கப்பட்டுள்ளதா என்று அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதனைத் தொடர்ந்து, இந்த மாவட்டத்தின் நீண்ட நாள் கோரிக்கையான மாம்பழக் கூழ் தொழிற்சாலை அமைப்பது குறித்து முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று, அது விரைவில் செயல்படுத்தப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார். மாம்பழக் கூழ் தொழிற்சாலை விரைவில் அமைக்கப்படும் என்றும் அவர் உறுதிபடக் கூறியுள்ளார்.
    user_Shakthi
    Shakthi
    பத்திரிகையாளர் பெரியகுளம், தேனி, தமிழ்நாடு•
    4 hrs ago
  • விருதுநகர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில், உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு மாபெரும் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் சுகபுத்ரா இப்பேரணியைக் கொடியசைத்துத் துவக்கி வைத்தார். இப்பேரணியில் 100-க்கும் மேற்பட்ட அரசு செவிலியர் பள்ளி மாணவிகள் ஆர்வமுடன் கலந்துகொண்டனர். அவர்கள் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திச் சென்றனர். அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் மகப்பேறு பிரிவிலிருந்து தொடங்கிய இந்த விழிப்புணர்வு பேரணியானது, நகரின் முக்கிய வீதிகளின் வழியாக வலம் வந்து பொதுமக்களிடையே மக்கள் தொகை கட்டுப்பாட்டின் அவசியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியது. முன்னதாக, மாவட்ட ஆட்சியருடன் இணைந்து மருத்துவர்கள் மற்றும் செவிலியர் பள்ளி மாணவிகள் விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். அதனைத் தொடர்ந்து, உலக மக்கள் தொகையை முன்னிட்டு நடத்தப்பட்ட பேச்சுப்போட்டியில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியர் சான்றிதழ்களை வழங்கினார். இந்நிகழ்வில் மருத்துவமனை உயர் அதிகாரிகள், மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.
    1
    விருதுநகர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில், உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு மாபெரும் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் சுகபுத்ரா இப்பேரணியைக் கொடியசைத்துத் துவக்கி வைத்தார். 

இப்பேரணியில் 100-க்கும் மேற்பட்ட அரசு செவிலியர் பள்ளி மாணவிகள் ஆர்வமுடன் கலந்துகொண்டனர். அவர்கள் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திச் சென்றனர். அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் மகப்பேறு பிரிவிலிருந்து தொடங்கிய இந்த விழிப்புணர்வு பேரணியானது, நகரின் முக்கிய வீதிகளின் வழியாக வலம் வந்து பொதுமக்களிடையே மக்கள் தொகை கட்டுப்பாட்டின் அவசியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியது.

முன்னதாக, மாவட்ட ஆட்சியருடன் இணைந்து மருத்துவர்கள் மற்றும் செவிலியர் பள்ளி மாணவிகள் விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். அதனைத் தொடர்ந்து, உலக மக்கள் தொகையை முன்னிட்டு நடத்தப்பட்ட பேச்சுப்போட்டியில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியர் சான்றிதழ்களை வழங்கினார். இந்நிகழ்வில் மருத்துவமனை உயர் அதிகாரிகள், மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.
    user_க.பாலசுப்பிரமணியன்
    க.பாலசுப்பிரமணியன்
    Photographer சாத்தூர், விருதுநகர், தமிழ்நாடு•
    3 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.