logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் சத்திரப்பட்டி அருகே அரசு பேருந்து மற்றும் இருசக்கர வாகனம் ஆகியவை மோதிக்கொள்ளும் பரபரப்பான விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த விபத்து தொடர்பான பரபரப்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.

12 hrs ago
user_RAJA news
RAJA news
Oddanchatram, Dindigul•
12 hrs ago

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் சத்திரப்பட்டி அருகே அரசு பேருந்து மற்றும் இருசக்கர வாகனம் ஆகியவை மோதிக்கொள்ளும் பரபரப்பான விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த விபத்து தொடர்பான பரபரப்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.

More news from தமிழ்நாடு and nearby areas
  • தமிழக வெற்றிக்கழக பொதுச் செயலாளரின் பிறந்தநாள் விழா வருகிற 18.07.2026 சனிக்கிழமை அன்று சிறப்பாகக் கொண்டாடப்பட உள்ளதை முன்னிட்டு, திண்டுக்கல் மத்திய மாவட்டம் சார்பில் முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. திண்டுக்கல் மத்திய மாவட்ட செயலாளர் எம். எல். வாசுதேவன் அவர்கள் தலைமையில் இக்கூட்டம் நடைபெற்றது. மாவட்டம் முழுவதும் பொதுச் செயலாளரின் பிறந்தநாளை மக்கள் நலன் சார்ந்த நிகழ்ச்சிகளுடன் சிறப்பாகக் கொண்டாடுவது குறித்து இதில் விரிவாக ஆலோசிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் ஒன்றிய செயலாளர்கள், நகர மற்றும் பேரூராட்சி நிர்வாகிகள், இளைஞர் அணித் தலைவர்கள், மகளீர் அணி, மாணவரணி மற்றும் கட்சி நிர்வாகிகள் திரளாகப் பங்கேற்றனர். பிறந்தநாளை முன்னிட்டு இரத்ததான முகாம், மரக்கன்று நடுதல், அன்னதானம், ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு மக்கள் நலப் பணிகளை மாவட்டம் முழுவதும் ஒருங்கிணைந்து நடத்த முடிவு செய்யப்பட்டது. அனைத்து நிர்வாகிகளும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் பொதுமக்களின் பங்கேற்புடன் சிறப்பான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்று மாவட்ட செயலாளர் எம். எல். வாசுதேவன் அவர்கள் அறிவுறுத்தினார்.
    1
    தமிழக வெற்றிக்கழக பொதுச் செயலாளரின் பிறந்தநாள் விழா வருகிற 18.07.2026 சனிக்கிழமை அன்று சிறப்பாகக் கொண்டாடப்பட உள்ளதை முன்னிட்டு, திண்டுக்கல் மத்திய மாவட்டம் சார்பில் முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. திண்டுக்கல் மத்திய மாவட்ட செயலாளர் எம். எல். வாசுதேவன் அவர்கள் தலைமையில் இக்கூட்டம் நடைபெற்றது. மாவட்டம் முழுவதும் பொதுச் செயலாளரின் பிறந்தநாளை மக்கள் நலன் சார்ந்த நிகழ்ச்சிகளுடன் சிறப்பாகக் கொண்டாடுவது குறித்து இதில் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் ஒன்றிய செயலாளர்கள், நகர மற்றும் பேரூராட்சி நிர்வாகிகள், இளைஞர் அணித் தலைவர்கள், மகளீர் அணி, மாணவரணி மற்றும் கட்சி நிர்வாகிகள் திரளாகப் பங்கேற்றனர். பிறந்தநாளை முன்னிட்டு இரத்ததான முகாம், மரக்கன்று நடுதல், அன்னதானம், ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு மக்கள் நலப் பணிகளை மாவட்டம் முழுவதும் ஒருங்கிணைந்து நடத்த முடிவு செய்யப்பட்டது. அனைத்து நிர்வாகிகளும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் பொதுமக்களின் பங்கேற்புடன் சிறப்பான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்று மாவட்ட செயலாளர் எம். எல். வாசுதேவன் அவர்கள் அறிவுறுத்தினார்.
    user_ALL INDIA REPORTER KPA
    ALL INDIA REPORTER KPA
    ஆத்தூர், திண்டுக்கல், தமிழ்நாடு•
    5 hrs ago
  • திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே உள்ள அ. கலையமுத்தூர் ஊராட்சிக்குட்பட்ட மதுரை வீரன் கோவில் மற்றும் பகவதி அம்மன் கோவில் இடைப்பட்ட பகுதியில் காவிரி குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது. இதனால் குடிநீர் வீணாக விவசாய நிலங்களுக்குள் செல்வதாக மாவட்ட ஆட்சியர் திருமதி துர்கா தேவி அவர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்தத் தகவலைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் உடனடியாக களமிறங்கி குழாயைச் சீரமைக்க உத்தரவிட்டார். மாவட்ட நிர்வாகத்தின் இந்த விரைவான நடவடிக்கையை அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வெகுவாகப் பாராட்டியுள்ளனர்.
    1
    திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே உள்ள அ. கலையமுத்தூர் ஊராட்சிக்குட்பட்ட மதுரை வீரன் கோவில் மற்றும் பகவதி அம்மன் கோவில் இடைப்பட்ட பகுதியில் காவிரி குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது. இதனால் குடிநீர் வீணாக விவசாய நிலங்களுக்குள் செல்வதாக மாவட்ட ஆட்சியர் திருமதி துர்கா தேவி அவர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இந்தத் தகவலைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் உடனடியாக களமிறங்கி குழாயைச் சீரமைக்க உத்தரவிட்டார். மாவட்ட நிர்வாகத்தின் இந்த விரைவான நடவடிக்கையை அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வெகுவாகப் பாராட்டியுள்ளனர்.
    user_Sudharsan
    Sudharsan
    Palani, Dindigul•
    21 hrs ago
  • தேனி மாவட்டம் ஆண்டிபட்டி நுகர்பொருள் வாணிப கழக கிட்டங்கியில் உணவுப் பொருள் வழங்கல்துறை அமைச்சர் வெங்கட்ரமணன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது, கிட்டங்கியில் உணவுப் பொருட்கள் இருப்பு வைக்கப்பட்டிருந்த பகுதி முழுவதும் மிகவும் சுகாதாரமற்ற முறையிலும், குப்பைகள் நிறைந்து அசுத்தமாகவும் இருந்ததை அமைச்சர் கண்டறிந்தார். இதனைப் பார்த்து அதிருப்தியடைந்த அமைச்சர் வெங்கட்ராமன், அங்கிருந்த அதிகாரிகளை கடுமையாக கண்டித்தார். "உங்கள் வீட்டை இப்படித்தான் அசுத்தமாக வைத்துக் கொள்வீர்களா?" என்று கேள்வி எழுப்பிய அவர், சொந்த வீட்டை எவ்வாறு சுத்தமாக வைத்துக் கொள்கிறீர்களோ, அதேபோல் அரசு கிட்டங்கியையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என உத்தரவிட்டார். மேலும், வாணிப கழக கிட்டங்கியை எப்போதும் சுத்தமாக பராமரிக்க வேண்டும் என்றும் அமைச்சர் கண்டிப்புடன் அறிவுறுத்தினார்.
    1
    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி நுகர்பொருள் வாணிப கழக கிட்டங்கியில் உணவுப் பொருள் வழங்கல்துறை அமைச்சர் வெங்கட்ரமணன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது, கிட்டங்கியில் உணவுப் பொருட்கள் இருப்பு வைக்கப்பட்டிருந்த பகுதி முழுவதும் மிகவும் சுகாதாரமற்ற முறையிலும், குப்பைகள் நிறைந்து அசுத்தமாகவும் இருந்ததை அமைச்சர் கண்டறிந்தார்.

இதனைப் பார்த்து அதிருப்தியடைந்த அமைச்சர் வெங்கட்ராமன், அங்கிருந்த அதிகாரிகளை கடுமையாக கண்டித்தார். "உங்கள் வீட்டை இப்படித்தான் அசுத்தமாக வைத்துக் கொள்வீர்களா?" என்று கேள்வி எழுப்பிய அவர், சொந்த வீட்டை எவ்வாறு சுத்தமாக வைத்துக் கொள்கிறீர்களோ, அதேபோல் அரசு கிட்டங்கியையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என உத்தரவிட்டார். மேலும், வாணிப கழக கிட்டங்கியை எப்போதும் சுத்தமாக பராமரிக்க வேண்டும் என்றும் அமைச்சர் கண்டிப்புடன் அறிவுறுத்தினார்.
    user_Shakthi
    Shakthi
    பத்திரிகையாளர் பெரியகுளம், தேனி, தமிழ்நாடு•
    5 hrs ago
  • தேனி மாவட்டத்தின் மிக முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் வைகை ஆறு, கடந்த ஆறு மாதங்களாக போதிய மழை இல்லாததால் முற்றிலும் வறண்டு மணல்மேடாக காட்சியளிக்கிறது. வருசநாடு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் உற்பத்தியாகும் இந்த ஆற்றை நம்பி வருசநாடு, மயிலாடும்பாறை, கடமலைக்குண்டு மற்றும் கண்டமனூர் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட மலைக் கிராமங்கள் உள்ளன. இந்த ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள உறை கிணறுகள் மூலமே இப்பகுதி மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்த நிலையில், தற்பொழுது நீர்மட்டம் கிடுகிடுவென சரிந்து பெரும்பாலான கிணறுகளில் நீர் சுரப்பது நின்றுபோகும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. நடப்பாண்டில் தென்மேற்கு பருவமழையும் முழுமையாகக் கைவிட்டதால் இப்பகுதியில் கடும் வறட்சி நிலவுகிறது. நிலத்தடி நீர்மட்டம் அதல பாதாளத்திற்குச் சென்றதால், குடிநீருக்காக அமைக்கப்பட்ட ஆழ்துளை கிணறுகளும் வறண்டு போகும் நிலையை எட்டியுள்ளன. இந்த கடுமையான குடிநீர் பற்றாக்குறையை எப்படி கையாள்வது என்று தெரியாமல் உள்ளூர் ஊராட்சி நிர்வாகங்கள் விழிபிதுங்கி தவித்து வருகின்றன. பொதுமக்களின் தாகத்தைத் தீர்க்க மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் தலையிட்டு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுவாக எழுந்துள்ளது.
    1
    தேனி மாவட்டத்தின் மிக முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் வைகை ஆறு, கடந்த ஆறு மாதங்களாக போதிய மழை இல்லாததால் முற்றிலும் வறண்டு மணல்மேடாக காட்சியளிக்கிறது. வருசநாடு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் உற்பத்தியாகும் இந்த ஆற்றை நம்பி வருசநாடு, மயிலாடும்பாறை, கடமலைக்குண்டு மற்றும் கண்டமனூர் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட மலைக் கிராமங்கள் உள்ளன. இந்த ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள உறை கிணறுகள் மூலமே இப்பகுதி மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்த நிலையில், தற்பொழுது நீர்மட்டம் கிடுகிடுவென சரிந்து பெரும்பாலான கிணறுகளில் நீர் சுரப்பது நின்றுபோகும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

நடப்பாண்டில் தென்மேற்கு பருவமழையும் முழுமையாகக் கைவிட்டதால் இப்பகுதியில் கடும் வறட்சி நிலவுகிறது. நிலத்தடி நீர்மட்டம் அதல பாதாளத்திற்குச் சென்றதால், குடிநீருக்காக அமைக்கப்பட்ட ஆழ்துளை கிணறுகளும் வறண்டு போகும் நிலையை எட்டியுள்ளன. இந்த கடுமையான குடிநீர் பற்றாக்குறையை எப்படி கையாள்வது என்று தெரியாமல் உள்ளூர் ஊராட்சி நிர்வாகங்கள் விழிபிதுங்கி தவித்து வருகின்றன. பொதுமக்களின் தாகத்தைத் தீர்க்க மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் தலையிட்டு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுவாக எழுந்துள்ளது.
    user_VIGNESH
    VIGNESH
    Photographer ஆண்டிபட்டி, தேனி, தமிழ்நாடு•
    21 hrs ago
  • கரூர் மாவட்டத்தில் உள்ள 3,084 ஏக்கர் கோயில் நிலங்களை பத்திரப்பதிவு செய்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை முழுமையாக நீக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவின்படி, புகழிமலை முருகன் கோயில் மற்றும் கல்யாண பசுபதீஸ்வரர் கோயில் உள்ளிட்ட கோயில்களுக்குச் சொந்தமான நிலங்களின் பத்திரப்பதிவுக்கான தடையும் விலக்கப்பட்டுள்ளது. கரூர் மாவட்ட ஆட்சியர் அளித்த பரிந்துரையின் அடிப்படையில், அறநிலையத்துறை ஆணையர் இந்த தடை நீக்க உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
    1
    கரூர் மாவட்டத்தில் உள்ள 3,084 ஏக்கர் கோயில் நிலங்களை பத்திரப்பதிவு செய்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை முழுமையாக நீக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவின்படி, புகழிமலை முருகன் கோயில் மற்றும் கல்யாண பசுபதீஸ்வரர் கோயில் உள்ளிட்ட கோயில்களுக்குச் சொந்தமான நிலங்களின் பத்திரப்பதிவுக்கான தடையும் விலக்கப்பட்டுள்ளது. கரூர் மாவட்ட ஆட்சியர் அளித்த பரிந்துரையின் அடிப்படையில், அறநிலையத்துறை ஆணையர் இந்த தடை நீக்க உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
    user_Karur Wood's Tv
    Karur Wood's Tv
    Photographer கரூர், கரூர், தமிழ்நாடு•
    9 hrs ago
  • திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பொள்ளாச்சி சாலையில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் நேற்றிரவு தங்கியிருந்த ஜெபகுமார் (35) மற்றும் சக்கரவர்த்தி (34) ஆகிய இருவரும் மது அருந்திய நிலையில் முதல் மாடியில் நின்று பேசிக்கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக ஜெபகுமார் முதல் மாடியிலிருந்து கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விடுதி மேலாளர் அளித்த தகவலின் பேரில், தனியார் ஆம்புலன்ஸ் மூலம் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட ஜெபகுமாரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள தாராபுரம் போலீசார், விடுதி மேலாளரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், ஜெபகுமார் மது போதையில் தற்செயலாகக் கீழே விழுந்தாரா அல்லது அவரது நண்பர் தள்ளிவிட்டாரா என்ற கோணத்திலும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விடுதியில் தங்கியிருந்த வாலிபர் மாடியிலிருந்து விழுந்து உயிரிழந்த இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    1
    திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பொள்ளாச்சி சாலையில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் நேற்றிரவு தங்கியிருந்த ஜெபகுமார் (35) மற்றும் சக்கரவர்த்தி (34) ஆகிய இருவரும் மது அருந்திய நிலையில் முதல் மாடியில் நின்று பேசிக்கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக ஜெபகுமார் முதல் மாடியிலிருந்து கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

விடுதி மேலாளர் அளித்த தகவலின் பேரில், தனியார் ஆம்புலன்ஸ் மூலம் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட ஜெபகுமாரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள தாராபுரம் போலீசார், விடுதி மேலாளரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், ஜெபகுமார் மது போதையில் தற்செயலாகக் கீழே விழுந்தாரா அல்லது அவரது நண்பர் தள்ளிவிட்டாரா என்ற கோணத்திலும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விடுதியில் தங்கியிருந்த வாலிபர் மாடியிலிருந்து விழுந்து உயிரிழந்த இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    user_Jagan
    Jagan
    தாராபுரம், திருப்பூர், தமிழ்நாடு•
    15 hrs ago
  • திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் சத்திரப்பட்டி அருகே அரசு பேருந்து மற்றும் இருசக்கர வாகனம் ஆகியவை மோதிக்கொள்ளும் பரபரப்பான விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த விபத்து தொடர்பான பரபரப்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.
    1
    திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் சத்திரப்பட்டி அருகே அரசு பேருந்து மற்றும் இருசக்கர வாகனம் ஆகியவை மோதிக்கொள்ளும் பரபரப்பான விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த விபத்து தொடர்பான பரபரப்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.
    user_RAJA news
    RAJA news
    Oddanchatram, Dindigul•
    12 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.