பாலக்கோடு பகுதியில் சந்துக்கடை கஞ்சா, லாட்டரி சீட்டை தடை செய்ய கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு. தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியில் சந்து கடை, கஞ்சா, லாட்டரி சீட்டு, அதிகமாக காணப்படுகிறது. பாலக்கோடு பகுதியில் 18 வார்டுகளிலும், பாலக்கோடு காவல் நிலையத்தின் பின்புறம், முஸ்லீம்கலும், இந்துக்களும் விற்பனை செய்து வருகிறார்கள் மற்றும் தளவாஹள்ளி புதூர், தக்காளி மார்க்கெட், மல்லாபுரம், மராண்டஹள்ளி, காட்டுசெடிப்பட்டி, ஜிட்டண்டஹள்ளி, காரிமங்கலம், அனுமந்தபுரம், வெள்ளிச்சந்தை, கொலசனஹள்ளி, எண்டப்பட்டி, ஆரதஹள்ளி, பஞ்சப்பள்ளி போன்ற பகுதிகளில் சட்ட விரோத செயல்பாடுகளில் செயல்படும். சமுக விரோதிகளை உடனடியாக கண்டறிந்து அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்மாறு கேட்டுகொள்ளப்படுகிறது. மேலும் மேலத்தெரு அருந்ததிய காலனி அருகிலும் இந்திரா காலனி, பை பாஸ் ரோடு மாக்கன் கொட்டாய், சர்க்கரை ஆலை ஜக்கசமுத்திரம் ஆகிய இடங்களில் சூதாட்டம், அதிக அளவு நடைபெறுகிறது. இது குறித்து பலமுறை மனு அளித்து அந்த மனுவின் மேல் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று சமூக ஆர்வலர் மற்றும் பீ.ஜே.பி. பொறுப்பாளர் சிவா இது குறித்து பல புகார்கள் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவும் இதனால் என் உயிருக்கும், என் குடும்பத்தாருக்கும் எவ்வித பாதிப்புமின்றி நடவடிக்கை எடுக்கும்மாறு கேட்டுக்கொள்கிறேன் என்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.

- PeriyasamyDharmapuri, Tamil Nadu👏12 hrs ago
- தமிழ்நாடு சத்துணவு அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தமிழ்நாடு சத்துணவு அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் சார்பில் மாவட்டத் தலைவர் சுப்பிரமணியன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தேர்தல் வாக்குறுதிப்படி வருவாய் கிராம உதவியாளருக்கு உள்ளது போல் சிறப்பு பென்சன் 6750 ரூபாய் வழங்க வேண்டும், சத்துணவு அங்கன்வாடி பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், 10 ஆண்டுகள் பணி முடித்த சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்களுக்கு அரசு துறை காலிப் பணியிடங்களை நிரப்பும் போது 50 சதவீதம் சலுகை வழங்க வேண்டும், உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி தமிழக அரசிற்க்கு கண்டன கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர்.1
- கரூர் அண்ணாசாலை அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் மூலவர் கணபதிக்கு மார்கழி மாத சங்கடஹரா சதுர்த்தி விழாவை முன்னிட்டு சிறப்பு பொருட்களால் அபிஷேகம் நடைபெற்று சிறப்பு அலங்காரத்தில் மூலவர் கணபதி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். ஆலயம் வந்து அனைத்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியின் ஏற்பாட்டை ஆலய நிர்வாகிகள் சார்பாக சிறப்பாக செய்தனர்.1
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக1
- குண்டடம் திராவிட பொங்கல் திருவிழ. திருப்பூர் மாவட்டம் குண்டடம் ஜனவரி 3 முதல் ஜனவரி 9ஆம் தேதி வரை திமுக மேற்கு நகரம் பேரூர் மற்றும் ஒன்றிய சார்பாக, வருகின்ற தமிழர் திருநாள் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு, தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தல்படி சூரியநல்லூர். இரக்கம்பட்டி. ஊதியூர் பகுதிகளில் விளையாட்டுப் போட்டி நடைபெற உள்ளது. போட்டியில் வெற்றி பெற்ற நபர்களுக்கு பரிசு வழங்கப்பட உள்ளன.1
- 1600 bitr1
- திண்டுக்கல்லில் நலத்திட்ட உதவிகள் வழங்க வருகை புரிந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை திண்டுக்கல் பகுதியில் சிறப்பான வரவேற்பு அளித்த பொதுமக்கள்1
- பென்னாகரத்தில் சட்டமன்ற உறுதிமொழி குழுவினர் ஆய்வு தர்மபுரி மாவட்டத்தில் இன்று தமிழக சட்டமன்ற ஆணையர் உறுதிமொழிக் குழு தலைவர் வேல்முருகன் தலைமையில் உறுப்பினர்கள் ஆய்வு நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக பென்னாகரம் அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டனர் அப்போது பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் ஜிகே மணி சட்டமன்ற ஆணைய உறுதிமொழிக்குழு தலைவர் வேல்முருகனை வரவேற்றார். உடன் தர்மபுரி மாவட்ட ஆட்சியர் சதீஷ், மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர்.1
- தருமபுரி பேருந்து நிலையத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பாமக இணைந்ததால் தொண்டர்கள் பட்டாசு வெடித்து மகிழ்ச்சி தமிழகத்தில் வரும் 2026 சட்டமன்ற தேர்தலை சந்திக்க கூட்டணி அமைக்கும் பணியில் தமிழக அரசியல் கட்சிகள் விறுவிறுப்பாக செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் வெற்றி கூட்டணியான தேசிய ஜனநாயக கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி தற்போது இணைந்துள்ளது. இன்று காலை தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பாக அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் , பட்டாளி மக்கள் கட்சி தலைவர் மருத்துவர் அன்புமணிராமதாஸ் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையில் தேசிய ஜனநாயக கூட்டணியுடன் பாமக கூட்டணி உறுதியானது, அதனை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி அன்புமணி ஆகியோர் கூட்டணியை அறிவித்தனர். இதனால் மகிழ்ச்சி அடைந்த பாமக தொண்டர்கள் தமிழகம் முழுவதும், பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர். அதனை தொடர்ந்து தருமபுரி பேருந்து நிலையத்தில் முன்னாள் எம்.பி. மருத்துவர் செந்தில் தலைமையில் பாமகவினர் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர். அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் எம்.பி.செந்தில் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பாமக - தேசிய ஜனநாயக கூட்டணி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்த நாளை நாங்கள் மட்டுமல்ல தமிழகமே கொண்டாடுகிறது, இது அறிவிப்பு வந்த நாள் இல்லை தேர்தல் முடிவு வந்த நாள், இன்றிலிருந்து வெற்றி பயணம் தான், எப்படி 2001ல் 2006ல் தமிழகத்தின் முடிவை பாட்டாளி மக்கள் கட்சி மாற்றியதோ அதே போல இந்த மாற்றமும் உறுதியாக நடைபெறும், 5 ஆண்டு காலமாக தமிழகத்தில் ஒரு கொடுங்கோல் ஆட்சி நடத்திய, மக்கள்விரோத ஆட்சி நடத்திய, தமிழகத்தின் எல்லா முன்னேற்றத்திற்க்கும் முட்டுகட்டை போட்ட, பொய் புள்ளி விபரங்களால் ஒரு புனைவை கட்டிய திமுகவை வீட்டிற்க்கு அனுப்ப கூடிய ஒரு தேர்தல், இந்த தேர்தல் மக்களுக்கான தேர்தல், இதுதான் உண்மையான விடியல் என்று காட்ட போகிற தேர்தல் இதனை நாங்கள் கொண்டாடுகிறோம், தமிழகமே கொண்டாடுகிறது, தமிழகத்தில் உள்ள அத்தனை தொகுதிகளும் எங்கள் கூட்டணி வெற்றி பெறும், தருமபுரி மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளிலும் வெற்றி பெற்று எங்கள் கூட்டணி கட்சியினர் சட்டமன்றத்திற்க்கு செல்வார்கள், எடப்பாடியார் முதலமைச்சர் ஆவார் என தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் பாமக மாவட்ட அமைப்பு செயலாளர் பாலகிருஷ்ணன், மாவட்ட அமைப்பு தலைவர் முருகன், சிறப்பு மாவட்ட செயலாளர் சின்னசாமி, நகர செயலாளர் வெங்கடேஷ்ராஜி, நகர தலைவர் பாண்டியன், மாநில இளைஞரணி துணைத் தலைவர் கார்த்திகேயன், நிர்வாகிகள் கவுரப்பன், சங்கர, செந்தில், நகர அமைப்பு தலைவர் முருகன், மற்றும் வணங்காமுடி, கதிரவன், சரவணன், ஜெய்கணேஷ்,அஜித்குமார், செல்வம், தகடுர்தமிழன், முரளி, பூக்கடை ஜெயராமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.1
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக1