பாப்பிரெட்டிப்பட்டி அருகே பயிர்க் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யக் கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம் தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள ஆலாபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி முன்பு, கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்றுள்ள பயிர்க் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தி கரும்பு விவசாயிகள் சங்க தலைவர் ராஜசேகரன்,தலைமையில் செயலாளர் மாதையன், முன்னிலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது , இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள், தேர்தல் வாக்குறுதிப்படி தமிழக அரசு கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்றுள்ள பயிர்க் கடன்களை உடனடியாக முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். மேலும், இதுவரை அந்த வாக்குறுதியை நிறைவேற்றாத அரசைக் கண்டித்தும் கண்டன முழக்கங்களை எழுப்பினர். அத்துடன், நெல் குவிண்டாலுக்கு ரூ.3,500 ஆதரவு விலையும், கரும்பு டன்னுக்கு ரூ.4,500 ஆதரவு விலையும் வழங்க வேண்டும், வேளாண் இடுபொருட்களை இலவசமாக வழங்க வேண்டும், பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும், வரும் வேளாண் பட்ஜெட் கூட்டத் தொடரில் போர்க்கால அடிப்படையில் விவசாயிகள் பெற்றுள்ள அனைத்து பயிர்க் கடன்களையும் முழுமையாக தள்ளுபடி செய்ய அறிவிப்பு வெளியிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
பாப்பிரெட்டிப்பட்டி அருகே பயிர்க் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யக் கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம் தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள ஆலாபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி முன்பு, கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்றுள்ள பயிர்க் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தி கரும்பு விவசாயிகள் சங்க தலைவர் ராஜசேகரன்,தலைமையில் செயலாளர் மாதையன், முன்னிலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது , இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள், தேர்தல் வாக்குறுதிப்படி தமிழக அரசு கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்றுள்ள பயிர்க் கடன்களை உடனடியாக முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். மேலும், இதுவரை அந்த வாக்குறுதியை நிறைவேற்றாத அரசைக் கண்டித்தும் கண்டன முழக்கங்களை எழுப்பினர். அத்துடன், நெல் குவிண்டாலுக்கு ரூ.3,500 ஆதரவு விலையும், கரும்பு டன்னுக்கு ரூ.4,500 ஆதரவு விலையும் வழங்க வேண்டும், வேளாண் இடுபொருட்களை இலவசமாக வழங்க வேண்டும், பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும், வரும் வேளாண் பட்ஜெட் கூட்டத் தொடரில் போர்க்கால அடிப்படையில் விவசாயிகள் பெற்றுள்ள அனைத்து பயிர்க் கடன்களையும் முழுமையாக தள்ளுபடி செய்ய அறிவிப்பு வெளியிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
- பாப்பிரெட்டிப்பட்டி அருகே பயிர்க் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யக் கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம் தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள ஆலாபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி முன்பு, கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்றுள்ள பயிர்க் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தி கரும்பு விவசாயிகள் சங்க தலைவர் ராஜசேகரன்,தலைமையில் செயலாளர் மாதையன், முன்னிலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது , இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள், தேர்தல் வாக்குறுதிப்படி தமிழக அரசு கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்றுள்ள பயிர்க் கடன்களை உடனடியாக முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். மேலும், இதுவரை அந்த வாக்குறுதியை நிறைவேற்றாத அரசைக் கண்டித்தும் கண்டன முழக்கங்களை எழுப்பினர். அத்துடன், நெல் குவிண்டாலுக்கு ரூ.3,500 ஆதரவு விலையும், கரும்பு டன்னுக்கு ரூ.4,500 ஆதரவு விலையும் வழங்க வேண்டும், வேளாண் இடுபொருட்களை இலவசமாக வழங்க வேண்டும், பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும், வரும் வேளாண் பட்ஜெட் கூட்டத் தொடரில் போர்க்கால அடிப்படையில் விவசாயிகள் பெற்றுள்ள அனைத்து பயிர்க் கடன்களையும் முழுமையாக தள்ளுபடி செய்ய அறிவிப்பு வெளியிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.1
- மின் சார வாரியத்தில் பணிபுரிந்து 40வது ஆண்டில் பணி நிறைவு பாராட்டு விழா..! மின் சார வாரியத்தில் பணிபுரிந்து 40வது ஆண்டில் பணி நிறைவு பாராட்டு விழா..! தருமபுரி அடுத்து சோகத்தூர் பகுதியில் உள்ள ஆட்டுக்காரன்பட்டி தனியார் மண்டபத்தில் தமிழ்நாடு மின் சார வாரியத்தில் (22.4.1987) முதல் 39 ஆண்டுகளாக பணி கடந்து 40 வது ஆண்டில் பணியை சிறப்புடன் தொடர்ந்து (31.07.2026) இன்றுடன் அதியமான்கோட்டையில் பணிபுரிந்த சின்னசாமி அவருக்கு பணி நிறைவு பாராட்டு விழா நடைபெற்றது. இதில் தமிழ்நாடு மின் சார வாரியத்தில் பணி புரியும் பணியாளர்கள் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பணி நிறைவு நிகழ்ச்சியினை சிறப்பித்தனர்.1
- மூன்று கிலோ மீட்டர் தொலைவிற்கு கிராம மக்கள் தொட்டில் கட்டி சுமந்து சென்றனர். கோத்தகிரி அருகே உள்ள இடுகொரை கிராமத்திற்கு உரிய சாலை வசதி இல்லாததால் இறந்தவரின் சடலத்தை சுமார் மூன்று கிலோ மீட்டர் தொலைவிற்கு கிராம மக்கள் தொட்டில் கட்டி சுமந்து சென்றனர்.1
- பாலக்கோட்டில் அனைத்து துறை ஓய்வூதியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒன்றியத் தலைவர் முருகேசன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், சங்கத்தின் பொருளாளர் சுப்ரமணி, துணைத் தலைவர் முருகன் மற்றும் மூத்த நிர்வாகிகள் ராமசாமி, காவேரியப்பன், ரகீம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து சங்க நிர்வாகிகள் மற்றும் ஏராளமான ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை முழக்கங்களாக எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில், அரசாணை எண் 123-ஐ உடனடியாக ரத்து செய்ய வேண்டும், ஓய்வூதியர்களிடம் மாதந்தோறும் பிடித்தம் செய்யப்படும் ரூ.644 தொகையை ரத்து செய்ய வேண்டும், 10 சதவீத ஓய்வூதிய உயர்வை வழங்க வேண்டும், ஓய்வூதியர்களின் மருத்துவச் செலவுகள் அனைத்தையும் தமிழக அரசே ஏற்க வேண்டும், முதியோர் ஓய்வூதியர்களை தங்களது உரிமைகளுக்காக போராட வேண்டிய நிலைக்கு தள்ளக்கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. மேலும், நீண்ட காலமாக நிலுவையில் உள்ள ஓய்வூதியர் நலக் கோரிக்கைகளை அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்றும், ஓய்வூதியர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் நடவடிக்கைகளை கைவிட வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் சங்க நிர்வாகிகள் முருகேசன், அன்பழகன், சாந்தா, சின்னபாப்பா, ஜெயந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டதுடன், ஏராளமான ஓய்வூதியர்களும் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன முழக்கங்களை எழுப்பினர்1
- தவெக அரசுக்கு எதிராக விவசாயிகளை திரட்டி போராட்டம்! இபிஎஸ் அறிவிப்பு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று சேலத்தில் இருந்து விமான மூலம் சென்னை செல்வதற்கு முன் சேலம் காமலாபுரம் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறும் போது, தமிழக வெற்றிக்கழக அரசு தேர்தல் வாக்குறுதியின் அளித்தபடி விவசாயிகளின் முழு கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், மேலும் கடன் தள்ளுபடி காண அறிவிப்பு நடைபெற உள்ள பட்ஜெட் கூட்டத்தொடரின் போது அறிவிக்க வேண்டும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தோடு விளையாடுவதை விட்டுவிட்டு முதல்வர் மௌனத்தை கலைத்து விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், ஒருவேளை விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய அறிவிப்பு தவறும் பட்சத்தில், தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து விவசாயிகளையும் ஒன்றிணைத்து அதிமுக சார்பில் விரைவில் மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களிடம் இன்று தெரிவித்தார்.1
- கிருஷ்ணகிரியில் மாவட்ட வழங்கல மற்றும் மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் கீதா மாவட்ட வழங்கல மற்றும் மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் கீதா ராணிகேஸ் பொருட்கள்விற்பனை கடைகளில் ஆய்வு கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட வருவாய் அலுவலர் மஞ்சுளா தலைமையில் நடைபெற்ற மாதாந்திர எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், ISI தரச்சான்று இல்லாமல் விற்பனை செய்யப்பட்டு வந்த எரிவாயு ரெகுலேட்டர்கள் மற்றும் எரிவாயு உதிரிபாகங்கள் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டன.பொதுச்செயலாளர் டாக்டர் சந்திரமோகன் உள்ளிட்ட பலர் இருந்தனர்.1
- அம்பலூர் பேருந்து நிறுத்தத்தில் அரசு பேருந்து நிற்காமல் சென்றதால் பள்ளி மாணவ மாணவிகள் அவதி! வாணியம்பாடி தாலுக்கா அம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகள் கொடையாஞ்சி கிராமம் மாணவர் மாணவிகளை அரசு பேருந்துக்காக காத்திருந்தவர்களை இன்று மாலை 5 மணிக்கு பேருந்து வழித்தட எண் 2 பஸ் நிற்காமல் சென்றதால் மாணவ மாணவியர்கள் வீட்டிற்கு நடந்த செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் பல நேரங்களில் இது போன்று நடைபெறுவதால் மாணவ மாணவிகள் அவதி!1
- தர்மபுரியில் மாவட்ட ஆட்சியர் உடன் அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார். தருமபுரி மாவட்டம் ஆட்டுக்காரன்பட்டி மற்றும் சோகத்தூர் ஆகிய இடங்களில் விவசாயின் மல்பெரி தோட்டம் மற்றும் குழு வளர்ப்பு மனைகளை ஆய்வு செய்தார் இதைத்தொடர்ந்து சோகத்தூரில் உள்ள புதிதாக அமைக்கப்பட்டு வரும் ஒருங்கிணைந்த அரசு பட்டுக்கூடு அங்காடி பார்வையிட்டு மற்றும் மின்னணு பரிவர்த்தனை செயல்பாடுகளை குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் மதன் ராஜா ஆய்வு மேற்கொண்டார். இதில் மாவட்ட ஆட்சியர் சரவணன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.1