வா வாத்தியார் படத்தை பார்க்க திரையரங்கிற்கு வந்த நடிகர் கார்த்திக். பொங்கலை முன்னிட்டு இன்று வெளியான வா வாத்தியார் படத்தை பார்க்க திருப்பூர் திரையரங்கிற்கு வந்த நடிகர் கார்த்திக். ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் தயாரிப்பில், நலன் குமாரசாமி இயக்கத்தில், கார்த்தி, கீர்த்தி ஷெட்டி, சத்யராஜ், ராஜ்கிரண், நடிப்பில் உருவாகி உள்ள வா வாத்தியார் படம் இன்று பொங்கலை முன்னிட்டு வெளியாகி உள்ளது. படத்தின் மீதான வரவேற்பு குறித்து படக்குழுவினர் திரையரங்கங்களுக்கு சென்று மக்களுடன் அமர்ந்து படம் பார்த்து வருகின்றனர். அந்த வகையில் இன்று திருப்பூர் ஸ்ரீ சக்தி திரையரங்கில் வெளியான வா வாத்தியார் திரைப்படத்தை காண்பதற்காக நடிகர் கார்த்திக் வருகை தந்தார். திரையரங்க உரிமையாளர்கள் சங்க தலைவர் சக்தி சுப்பிரமணியம், கார்த்தி ஆகியோர் வரவேற்றார். தொடர்ந்து திரையரங்கிற்குள் சென்ற கார்த்திக் மக்களுடன் அமர்ந்து தான் நடிப்பில் வெளியாகி உள்ள வாத்தியார் திரைப்படத்தை பார்த்து வருகிறார்.
வா வாத்தியார் படத்தை பார்க்க திரையரங்கிற்கு வந்த நடிகர் கார்த்திக். பொங்கலை முன்னிட்டு இன்று வெளியான வா வாத்தியார் படத்தை பார்க்க திருப்பூர் திரையரங்கிற்கு வந்த நடிகர் கார்த்திக். ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் தயாரிப்பில், நலன் குமாரசாமி இயக்கத்தில், கார்த்தி, கீர்த்தி ஷெட்டி, சத்யராஜ், ராஜ்கிரண், நடிப்பில் உருவாகி உள்ள வா வாத்தியார் படம் இன்று பொங்கலை முன்னிட்டு வெளியாகி உள்ளது. படத்தின் மீதான வரவேற்பு குறித்து படக்குழுவினர் திரையரங்கங்களுக்கு சென்று மக்களுடன் அமர்ந்து படம் பார்த்து வருகின்றனர். அந்த வகையில் இன்று திருப்பூர் ஸ்ரீ சக்தி திரையரங்கில் வெளியான வா வாத்தியார் திரைப்படத்தை காண்பதற்காக நடிகர் கார்த்திக் வருகை தந்தார். திரையரங்க உரிமையாளர்கள் சங்க தலைவர் சக்தி சுப்பிரமணியம், கார்த்தி ஆகியோர் வரவேற்றார். தொடர்ந்து திரையரங்கிற்குள் சென்ற கார்த்திக் மக்களுடன் அமர்ந்து தான் நடிப்பில் வெளியாகி உள்ள வாத்தியார் திரைப்படத்தை பார்த்து வருகிறார்.
- பென்னாகரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பஞ்சாயத்துகளில் சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது. தமிழர்களின் திருநாளான பொங்கல் பண்டிகை உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் கொண்டாடப்படுவது வழக்கம் இந்த நிலையில் பொங்கல் திருநாள் பல்வேறு இடங்களிலும் அரசு அலுவலகங்களிலும் சமத்துவ பொங்கலாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 23 பஞ்சாயத்துகளிலும் சமத்துவ பொங்கல் இன்று கொண்டாடப்பட்டது அதில் ஒரு பகுதியாக பருவதன அள்ளி பஞ்சாயத்திற்கு உட்பட்ட சமத்துவபுரம் பகுதியில் உள்ள மக்களுடன் ஒன்று இணைந்து ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் சக்திவேல், லோகநாதன் ஆகியோரின் ஏற்பாட்டில் மண்டல தொகுதி அலுவலர் மற்றும் உதவி செயற்பொறியாளர் மகேஷ் குமார் உதவி இயக்குனர் (பயிற்சி) தமிழ்செல்வன் ஆகியோர் தலைமையில் சமத்துவ பொங்கல் வைத்து மக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வில் கோலப்போட்டி, கயிறு இழுத்தல், மியூசிக்கல் சேர், பானை உடைத்தல் உள்ளிட்ட விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டது இறுதியாக சமத்துவபுரம் பகுதியில் மரக்கன்றுகள் நடப்பட்டன. இந்த நிகழ்வில் ஒன்றிய பணி மேற்பார்வையாளர் செல்வம் பருவதன அள்ளி ஊராட்சி செயலாளர் முருகன் மற்றும் அரசு அலுவலர்கள் பொதுமக்கள் சமத்துவ பொங்கல்லில் கலந்து கொண்டனர்.1
- பொங்கல் பண்டிகை முன்னிட்டு தர்மபுரி மாவட்டத்தில் மட்டி, ரசகதளி மற்றும் செவ்வாழை வாழைப்பழங்கள் வரத்து குறைவு காரணமாக, கடும் விலை உயர்வை சந்தித்துள்ளது. அனைத்து வாழை பழங்களும் 3 மடங்கு விலை உயர்ந்து உள்ளது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புது மண தம்பதியர்களுக்கு சீர்வரிசையுடன் வாழை குலைகளும் கொடுப்பது வழக்கம் அதே போன்று அனைத்து பொங்கல் விழாவிலும் வாழை குலைகள் இடம் பெறும் இதனால் பொங்கல் பண்டிகைக்கு வாழைக்குலைகளின் தேவை அதிகரித்து உள்ளதால் விலை உயர்ந்து உள்ளது இந்த விலை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக வியாபாரிகள் தரப்பில் தெரிவித்தனர். சந்தைகளில் 100 எண்ணம் கொண்ட பெரிய செவ்வாழை பழம் ரூ 1500 ரூபாயாக விலை உயர்ந்து உள்ளது - 10 கிலோ எடை கொண்ட ரசகதளி பழம் 700 ரூபாயாகவும், 100 எண்ணம் கொண்ட வெள்ளை தொழவன் பழம் 500 ரூபாயாகவும், 35 எண்ணம் கொண்ட நாட்டு ஏத்தன் பழம் 350 ரூபாயாகவும், 100 எண்ணம் கொண்ட நாட்டு பேயன் பழம் 700 ரூபாயாகவும் உயர்ந்து உள்ளது அனைத்து வாழை பழங்களும் 3 மடங்கு விலை உயர்ந்து உள்ளது1
- தர்மபுரி நகராட்சி சார்பில் சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது தர்மபுரி நகராட்சி சார்பில் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் சமத்துவ பொங்கல் நகர மன்ற தலைவர் லட்சுமி நாட்டான் மாது தலைமையில் நடந்தது இதில் நகராட்சி ஆணையர் சேகர் முன்னிலை வைத்தனர். சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ மணி கடந்து கொண்டு சமத்துவ பொங்கல் இந்து கிறிஸ்டின் முஸ்லிம் ஆகியோர் கலந்து கொண்டு சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய கழகச் செயலாளர். என் பி பெரியண்ணன் பச்சையப்பன். நகரக் கழக செயலாளர் நாட்டான் மாது. கௌதம். நகராட்சி துணைத் தலைவர் கே அன்பழகன் நகர்மன்ற உறுப்பினர்கள் மாதேஸ்வரன் ஜெகன் பாண்டியன் வாசுதேவன் முல்லைவேந்தன். கட்சி நிர்வாகிகள் நகராட்சி அலுவலர்கள் துப்புரவு பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டு சமத்துவ பொங்கல் அனைவருக்கும் வழங்கப்பட்டது1
- திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் வட்டம், பால்னாங்குப்பம் பஸ் ஸ்டாப் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்ட மழைநீர் வடிகாலில், ஊராட்சி பகுதிகளில் இருந்து கழிவுநீர் கலக்கப்படுகிறது. இது சுற்றுச்சூழல் மாசு மற்றும் பொதுச் சுகாதாரத்திற்கு மிகப்பெரிய ஆபத்தை உருவாக்குகிறது. அந்த வடிகால் திறந்த நிலையில் இருப்பதால், துர்நாற்றம், கொசு உற்பத்தி மற்றும் நோய் பரவும் அபாயம் அதிகமாக உள்ளது. இது Water (Prevention of Pollution) Act மற்றும் Swachh Bharat Mission விதிமுறைகளுக்கு எதிரானது. எனவே, தயவுசெய்து உடனடி ஆய்வு செய்து, கழிவுநீர் கலப்பதை தடுத்து நிறுத்தவும், பொது மக்களின் வேண்டுகோள்1
- எடப்பாடியில் காவல்துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் சாலை பாதுகாப்பு குறித்து ஓவியப்போட்டி நடைபெற்றது... தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தையொட்டி, சேலம் மாவட்டம் எடப்பாடி காவல்துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் சாலை பாதுகாப்பு குறித்து ஓவியப்போட்டி எடப்பாடி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் ஓவிய போட்டியானது காவல் ஆய்வாளர் பேபி தலைமையில் நடைபெற்றது... மேலும் இந்த ஓவியப் போட்டியில் வாகனம் ஓட்டும்போது செல்போனில் பேசக்கூடாது,ஹெல்மெட் கட்டாயம் அணிய வேண்டும்,அதிக வேகமாக செல்ல கூடாது, சாலை விதிகளை கடைபிடிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு சாலை பாதுகாப்பு குறித்து மாணவிகள் ஓவியத்தை வரைந்தனர்... மேலும் சாலை விபத்து குறித்து பள்ளி மாணவிகளிடம் காவல் ஆய்வாளர் எடுத்துக் கோரி பேசினார். அதன் பின்னர் ஓவியப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழை வழங்கினார்.இதில் காவல் உதவி ஆய்வாளர் ஸ்ரீராம், தலைமை ஆசிரியர் செந்தில் ,ஆசிரியர்கள் மற்றும் மாணவிகள் என பலர் கலந்து கொண்டனர்...1
- நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் வட்டம் அத்தனூரில் மார்கழி மாத நிறைவு பஜனை விழா மிகச் சிறப்பாக நடைபெற்றன. தினமும் அதிகாலையில் திருவாசகம் தேவாரம் பாடல்களை பாடி திருவீதி உலா பஜனை நடைபெற்று வந்த நிலையில் இன்று இறுதி பஜனை விழா மிகச் சிறப்பாக நடைபெற்று முடிந்தன1
- மக்கள் சமூக நீதி பேரவை, சமூக நல்லிணக்கப் பாதுகாப்பு குழு இணைந்து நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம் மக்கள் சமூகநீதி பேரவை சார்பாக வேப்பூரில் கருப்புக்கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் 13.01.2026 அன்று நடந்தது. குரும்பகவுண்டர் சமூகத்தையும், அதன் தலைவர் R.கிருஷ்ணசாமியையும், கோயம்புத்தூரைச் சேர்ந்த பரமசிவம் என்பவர் Whatsapp-Audio பதிவினை வெளியிட்டுள்ளார். பொது அமைதிக்கு பங்கம் விளைவித்ததாகவும், இரு சமூகங்களுக்கு மத்தியில் கலவரத்தை தூண்டிய குற்றசெயலுக்காக, சட்டப்படி நடவடிக்கை எடுக்கக்கோரி 10 மேற்பட்ட மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட மக்கள் புகார் கொடுத்தனர். நடவடிக்கை இல்லாததால், கோவை, தேனி, திருவண்ணாமலை மாவட்டங்களில் சட்ட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. அதற்கும். நடவடிக்கை இல்லை என்பதால், வேப்பூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதில், தலைமையாக மக்கள் சமூகநீதிபேரவை மாவட்ட செயலாளர் பிரபு. முன்னிலையாக மாநில செய்தி தொடர்பாளர் சந்திரசேகர், அயலக அணி தலைவர் மருதமுத்து முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக, மாநில தலைவர் கோபால், மாநில பொருளாளர் சுமதி, கரூர் மாவட்ட செயலாளர் சண்முகம், திருச்சி மாவட்ட செயலாளர் பிச்சைவேல், ஒன்றிய செயலாளர் அஜய் மற்றும் கடலும் மாவட்ட குரும்பகவுண்டர் சமூக நிர்வாகிகள் 100க்கு மேற்பட்டோர் கலந்துக்கொண்டு, சட்ட நடவடிக்கை எடுக்கக்கோரி முழக்கமிட்டனர்.3
- தர்மபுரி ஸ்ரீ கிருஷ்ணா பாரா மெடிக்கல் கல்லூரி சார்பாக புகை இல்லா போகி விழிப்புணர்வு மற்றும் பேரணி நடைபெற்றது அதியமான் கோட்டை காவல் ஆய்வாளர் திருமதி லதா அவர்கள் புகையில்லாத போகி விழிப்புணர்வு பேரணியை கொடியாசித்து துவக்கி வைத்தார் இந்தப் பேரணி சேவல் ஐயா இல்லத்தில் இருந்து தொழில் மையம் ஒட்டப்பட்டி வழியாக சென்று மீண்டும் தேவையா இல்லத்தில் பேரணையானது நிறைவு பெற்றது இந்த பேரணியில் தர்மபுரி ஸ்ரீ கிருஷ்ணா பாரா மெடிக்கல் கல்லூரி தாளாளர் கிருஷ்ணமூர்த்தி இந்தியன் பிலர்ஸ் நிறுவனர் வினோத் குமார் அதியமான் கோட்டை ராமன் ஜெயம் யோகா அறக்கட்டளை நிறுவனர் ஜெயப்பிரியா மற்றும் சேவாலயா ஒருங்கிணைப்பாளர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர் உடன் கல்லூரி பேராசிரியர்கள் ரஞ்சிதா .நந்தினி. குமுதா .கல்லூரி துணைப் பேராசிரியர் சந்தியா .கல்லூரி அலுவலக மேலாளர் அனிதா .கல்லூரி நிர்வாக அலுவலர் ஜோதி பாசு ஆகியோர் ஒன்றிணைந்து பேரணியை நடத்துகிறார்கள் பேரணி முடிந்த பிறகு பொது மக்களுக்கு தலைக்கவசம் அணிவதுடைய நன்மைகளைப் பற்றி காவல்துறை கல்லூரி மாணவர்கள் ஒன்றிணைந்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது காவல் ஆய்வாளர் லதா அவர்கள் வாகனத்தில் சென்று வந்தவர்களுக்கு பூச்செடி கொடுத்து புகையில்லா போகி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள் மற்றும் கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் பெண்கள் பாதுகாப்பு பெண்களுடைய அவசர எண் பெண்களுடைய பாலியல் துன்புறுத்தல் சட்டங்களை பற்றி காவல் ஆய்வாளர் லதா அவர்கள் மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார் இறுதியாக கல்லூரி தாளாளர் மாணவ மாணவிகளுக்கும் மற்றும் காவல் ஆய்வாளர்களுக்கு மற்றும் அனைத்து பொது மக்களுக்கும் ஸ்ரீ கிருஷ்ணா பாரா மெடிக்கல் நன்றி கூறினார்...1