Shuru
Apke Nagar Ki App…
நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் வட்டம் அத்தனூரில் மார்கழி மாத நிறைவு பஜனை விழா மிகச் சிறப்பாக நடைபெற்றன. தினமும் அதிகாலையில் திருவாசகம் தேவாரம் பாடல்களை பாடி திருவீதி உலா பஜனை நடைபெற்று வந்த நிலையில் இன்று இறுதி பஜனை விழா மிகச் சிறப்பாக நடைபெற்று முடிந்தன
கணேஷ் G
நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் வட்டம் அத்தனூரில் மார்கழி மாத நிறைவு பஜனை விழா மிகச் சிறப்பாக நடைபெற்றன. தினமும் அதிகாலையில் திருவாசகம் தேவாரம் பாடல்களை பாடி திருவீதி உலா பஜனை நடைபெற்று வந்த நிலையில் இன்று இறுதி பஜனை விழா மிகச் சிறப்பாக நடைபெற்று முடிந்தன
More news from தமிழ்நாடு and nearby areas
- நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் வட்டம் அத்தனூரில் மார்கழி மாத நிறைவு பஜனை விழா மிகச் சிறப்பாக நடைபெற்றன. தினமும் அதிகாலையில் திருவாசகம் தேவாரம் பாடல்களை பாடி திருவீதி உலா பஜனை நடைபெற்று வந்த நிலையில் இன்று இறுதி பஜனை விழா மிகச் சிறப்பாக நடைபெற்று முடிந்தன1
- எடப்பாடியில் காவல்துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் சாலை பாதுகாப்பு குறித்து ஓவியப்போட்டி நடைபெற்றது... தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தையொட்டி, சேலம் மாவட்டம் எடப்பாடி காவல்துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் சாலை பாதுகாப்பு குறித்து ஓவியப்போட்டி எடப்பாடி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் ஓவிய போட்டியானது காவல் ஆய்வாளர் பேபி தலைமையில் நடைபெற்றது... மேலும் இந்த ஓவியப் போட்டியில் வாகனம் ஓட்டும்போது செல்போனில் பேசக்கூடாது,ஹெல்மெட் கட்டாயம் அணிய வேண்டும்,அதிக வேகமாக செல்ல கூடாது, சாலை விதிகளை கடைபிடிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு சாலை பாதுகாப்பு குறித்து மாணவிகள் ஓவியத்தை வரைந்தனர்... மேலும் சாலை விபத்து குறித்து பள்ளி மாணவிகளிடம் காவல் ஆய்வாளர் எடுத்துக் கோரி பேசினார். அதன் பின்னர் ஓவியப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழை வழங்கினார்.இதில் காவல் உதவி ஆய்வாளர் ஸ்ரீராம், தலைமை ஆசிரியர் செந்தில் ,ஆசிரியர்கள் மற்றும் மாணவிகள் என பலர் கலந்து கொண்டனர்...1
- பென்னாகரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பஞ்சாயத்துகளில் சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது. தமிழர்களின் திருநாளான பொங்கல் பண்டிகை உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் கொண்டாடப்படுவது வழக்கம் இந்த நிலையில் பொங்கல் திருநாள் பல்வேறு இடங்களிலும் அரசு அலுவலகங்களிலும் சமத்துவ பொங்கலாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 23 பஞ்சாயத்துகளிலும் சமத்துவ பொங்கல் இன்று கொண்டாடப்பட்டது அதில் ஒரு பகுதியாக பருவதன அள்ளி பஞ்சாயத்திற்கு உட்பட்ட சமத்துவபுரம் பகுதியில் உள்ள மக்களுடன் ஒன்று இணைந்து ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் சக்திவேல், லோகநாதன் ஆகியோரின் ஏற்பாட்டில் மண்டல தொகுதி அலுவலர் மற்றும் உதவி செயற்பொறியாளர் மகேஷ் குமார் உதவி இயக்குனர் (பயிற்சி) தமிழ்செல்வன் ஆகியோர் தலைமையில் சமத்துவ பொங்கல் வைத்து மக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வில் கோலப்போட்டி, கயிறு இழுத்தல், மியூசிக்கல் சேர், பானை உடைத்தல் உள்ளிட்ட விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டது இறுதியாக சமத்துவபுரம் பகுதியில் மரக்கன்றுகள் நடப்பட்டன. இந்த நிகழ்வில் ஒன்றிய பணி மேற்பார்வையாளர் செல்வம் பருவதன அள்ளி ஊராட்சி செயலாளர் முருகன் மற்றும் அரசு அலுவலர்கள் பொதுமக்கள் சமத்துவ பொங்கல்லில் கலந்து கொண்டனர்.1
- பொங்கல் பண்டிகை முன்னிட்டு தர்மபுரி மாவட்டத்தில் மட்டி, ரசகதளி மற்றும் செவ்வாழை வாழைப்பழங்கள் வரத்து குறைவு காரணமாக, கடும் விலை உயர்வை சந்தித்துள்ளது. அனைத்து வாழை பழங்களும் 3 மடங்கு விலை உயர்ந்து உள்ளது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புது மண தம்பதியர்களுக்கு சீர்வரிசையுடன் வாழை குலைகளும் கொடுப்பது வழக்கம் அதே போன்று அனைத்து பொங்கல் விழாவிலும் வாழை குலைகள் இடம் பெறும் இதனால் பொங்கல் பண்டிகைக்கு வாழைக்குலைகளின் தேவை அதிகரித்து உள்ளதால் விலை உயர்ந்து உள்ளது இந்த விலை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக வியாபாரிகள் தரப்பில் தெரிவித்தனர். சந்தைகளில் 100 எண்ணம் கொண்ட பெரிய செவ்வாழை பழம் ரூ 1500 ரூபாயாக விலை உயர்ந்து உள்ளது - 10 கிலோ எடை கொண்ட ரசகதளி பழம் 700 ரூபாயாகவும், 100 எண்ணம் கொண்ட வெள்ளை தொழவன் பழம் 500 ரூபாயாகவும், 35 எண்ணம் கொண்ட நாட்டு ஏத்தன் பழம் 350 ரூபாயாகவும், 100 எண்ணம் கொண்ட நாட்டு பேயன் பழம் 700 ரூபாயாகவும் உயர்ந்து உள்ளது அனைத்து வாழை பழங்களும் 3 மடங்கு விலை உயர்ந்து உள்ளது1
- தர்மபுரி நகராட்சி சார்பில் சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது தர்மபுரி நகராட்சி சார்பில் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் சமத்துவ பொங்கல் நகர மன்ற தலைவர் லட்சுமி நாட்டான் மாது தலைமையில் நடந்தது இதில் நகராட்சி ஆணையர் சேகர் முன்னிலை வைத்தனர். சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ மணி கடந்து கொண்டு சமத்துவ பொங்கல் இந்து கிறிஸ்டின் முஸ்லிம் ஆகியோர் கலந்து கொண்டு சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய கழகச் செயலாளர். என் பி பெரியண்ணன் பச்சையப்பன். நகரக் கழக செயலாளர் நாட்டான் மாது. கௌதம். நகராட்சி துணைத் தலைவர் கே அன்பழகன் நகர்மன்ற உறுப்பினர்கள் மாதேஸ்வரன் ஜெகன் பாண்டியன் வாசுதேவன் முல்லைவேந்தன். கட்சி நிர்வாகிகள் நகராட்சி அலுவலர்கள் துப்புரவு பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டு சமத்துவ பொங்கல் அனைவருக்கும் வழங்கப்பட்டது1
- வேடசந்தூர் பகுதியில் பொங்கல் விழாவை முன்னிட்டு பொதுமக்களுக்கு தேவையான பொருட்களை வியாபாரிகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறார்கள் கரும்பு , மஞ்ச கொத்து,பூழப்பூ , பழங்கள், பூ என பல்வேறு ஜாமான்கள் வாங்கி வருகின்றனர் இதனால் அப்பகுதியில் மக்கள் கூட்டம் அதிகமாக உள்ளது .1
- காவிரி கூட்டு குடிநீர் குழாயில் உடைப்பு திண்டுக்கல்லுக்கு 3 நாட்கள் குடிநீர் விநியோகம் கட் திண்டுக்கல் காவிரி கூட்டு குடிநீர் லைனில் கரூர் வெள்ளியணை துணை மின் நிலையம் அருகே காவிரி கூட்டு குடிநீர் குழாயில் பெரும் உடைப்பு இதனால் குழாய் பாதையை மாற்றி அமைக்கும் வரை திண்டுக்கல், நத்தம், அகரம், தாடிக்கொம்பு, வடமதுரை, அய்யலூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு 3 நாட்களுக்கு (14,15,16) காவிரி குடிநீர் விநியோகம் இருக்காது என குடிநீர் திட்ட ஊழியர்கள் கூறியுள்ளனர்1
- பாரம்பரிய கலைகளைக் கொண்டு பொங்கல் விழாவை கொண்டாடிய கல்லூரி மாணவ மாணவிகள்...நடனமாடி உறியடித்து உற்சாக கொண்டாட்டம்... தமிழர் திருநாளாம் தைத்திருநாள் பொங்கல் பண்டிகை ஜனவரி 15-ம் தேதி தமிழகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில் பொங்கல் விழாவை கொண்டாடும் வகையில் தமிழகம் முழுவதும் உள்ள பள்ளி,கல்லூரிகளில் மாணவ மாணவிகள் பொங்கல் வைத்து கொண்டாடி வருகின்றனர்... அதன் ஒரு பகுதியாக சேலம் மாவட்டம் எடப்பாடியில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பாரம்பரிய கலைகளை கொண்டு தை பொங்கல் பண்டிகையை மாணவ மாணவி உற்சாகத்துடன் கொண்டாடி மகிழ்ந்தனர்... இதில் மாணவ மாணவிகள் வேட்டி சட்டை அணிந்தும்,பட்டுப் புடவை என பாரம்பரிய உடை அணிந்து நூற்றுக்கணக்கான பானைகளில் பொங்கல் வைத்து கொண்டாடினர்... தொடர்ந்து மாணவ மாணவிகள் பங்கேற்ற ஊழியடிக்கும் போட்டி நடைபெற்றது.இதில் மாணவிகள் கண்களை கட்டிக்கொண்டு பானையை உடைக்கும் விளையாட்டு நடைபெற்றது. தொடர்ந்து தப்பாட்டம் என பல்வேறு வகையான பாரம்பரிய கிராமிய பாடல்களுக்கு நடனமாடி குத்தாட்டம் போட்டு பொங்கல் விழாவை மாணவ மாணவிகள் கோலாகலமாக கொண்டாடினர்..1