Shuru
Apke Nagar Ki App…
திருமணம் நடைபெறாத வருத்தத்தில் ஒருவர் விஷம் அருந்தி தற்கொலை பெரியகுளம் அருகே தண்ணீர்பந்தல் பகுதியை சேர்ந்தவர் முருகேசன் (46). இவருக்கு தற்போது வரை திருமணம் நடைபெறவில்லை. திருமணம் நடைபெறாத காரணத்தினால் மன வருத்தத்தில் இருந்து வந்த முருகேசன் நேற்று (மார்.9) விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து தேவதானப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Vivek Selvaa
திருமணம் நடைபெறாத வருத்தத்தில் ஒருவர் விஷம் அருந்தி தற்கொலை பெரியகுளம் அருகே தண்ணீர்பந்தல் பகுதியை சேர்ந்தவர் முருகேசன் (46). இவருக்கு தற்போது வரை திருமணம் நடைபெறவில்லை. திருமணம் நடைபெறாத காரணத்தினால் மன வருத்தத்தில் இருந்து வந்த முருகேசன் நேற்று (மார்.9) விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து தேவதானப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
More news from தமிழ்நாடு and nearby areas
- தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருகே உள்ள நாகலாபுரம் பகுதி சார்ந்தவர் காமாட்சி. இவரது மகன் தவசி (13) போடியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறான். இன்று காமாட்சி அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் சித்தப்பா ஒருவருக்கு திதி கொடுப்பதற்காக கம்பம் அருகே உள்ள சுருளி அருவிக்கு இரண்டு வேன்களில் வந்துள்ளனர். தற்போது சுருளி அருகில் முற்றிலும் நீர் வரத்து இல்லாததால் குளிப்பதற்காக கம்பம் சுருளிப்பட்டி செல்லும் சாலையில் உள்ள முல்லைப் பெரியாற்றின் பாலப்பகுதிக்கு வந்துள்ளனர். அங்கு காமாட்சி மகன் தவசி மற்றும் அவரது உறவினர்கள் ஆற்றில் இறங்கி குளித்துக் கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக சிறுவன் தவசி தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளான். இதைக் கண்டு அங்கே குளித்துக் கொண்டிருந்தவர்கள் கூச்சலிட்டனர். அதற்குள் மாணவன் தண்ணீரில் மூழ்கியுள்ளான். இதனை அடுத்து உடனடியாக ராயப்பன்பட்டி காவல்துறையினருக்கும், கம்பம் தீயணைப்பு துறையினருக்கும் தகவல் அளித்துள்ளனர். தகவலின் பெயரில் விரைந்து வந்த தீயணைப்புத் உறையினர் ஆற்றில் இறங்கி தண்ணீரில் மூழ்கிய மாணவனை தேடி வருகின்றனர். மேலும் சுருளிப்பட்டி பகுதியைச் சார்ந்த ஊர் பொதுமக்களும் ஆற்றில் இறங்கி மாணவனை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மாணவனின் நிலை குறித்து இன்னும் தெரியவில்லை. இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.1
- தேனி மாவட்டம் குன்னூர் அருகே அம்மாச்சியாபுரம் வைகை ஆற்றின் நீர் தேக்கத்தின் அடிப்படையில் பல ஏக்கர் நெற்பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக பெய்த மழையினால் இந்த பகுதியில் உள்ள நெற்கதிர்கள் அனைத்தும் சாய்ந்து விட்டது இதனால் இந்த பகுதியில் உள்ள விவசாயிகள் கவலை அடைந்து வருகின்றன1
- தேனியில் உள்ள தேனி அல்லிநகரம் நகராட்சியில் மாதந்திர கூட்டம் நடைபெற்றது,நகராட்சி சேர்மன் ரேணுப்பிரியா பாலமுருகன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு மறைவிற்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.இந்த நிகழ்வில் துணை சேர்மன், வார்டு கவுன்சிலர்கள் துறை சார்ந்த அலுவலர்கள் பங்கேற்றனர்1
- மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே குமாரம் பகுதியில் நடைபெற்ற மாற்றுக் கட்சியினர் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சியில் முன்னாள் சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் மாணிக்கம் கலந்து கொண்டு பேசினார்1
- Post by RAJA news1
- திண்டுக்கல் மாநகராட்சி நாகல்புதூரில் உள்ள மாநகராட்சி தொடக்கப்பள்ளி (குட்டவாத்தியார் பள்ளி ) 1926 ஆம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் துவங்கப்பட்டு அன்று முதல் இன்று வரை சுமார் நூறு ஆண்டுகளைக் கடந்து சிறப்பாக நடைபெற்று வருகிறது. அனைத்து மாணவர்களுக்கும் சிறப்பான கல்வி முறையை பயிற்றுவித்து வருகிறது. இந்நிலையில் இப்பள்ளியின் நூற்றாண்டு திருவிழா திண்டுக்கல் மாநகராட்சி மேயர் இளமதி ஜோதி பிரகாஷ் துணை மேயர் ராஜப்பா மாநகராட்சி ஆணையர் செந்தில்குமார் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் வட்டார கல்வி அலுவலர் விஜயா முன்னிலை வகித்தார். மேலும் சிறப்பு விருந்தினராக 30வது வார்டு மாமன்ற உறுப்பினர் N.A.லட்சுமி மற்றும் 31 வது வார்டு மாமன்ற உறுப்பினர் உமாதேவி பாரதி முருகன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர். இந்த நூற்றாண்டு திருவிழாவில் மாநகராட்சி பள்ளியின் இன்னாள் மற்றும் முன்னாள் தலைமை ஆசிரியர்கள் ஆசிரியர்கள் S.M.C உறுப்பினர்கள் முன்னாள் மாணவர்கள் தற்போதைய மாணவ மாணவிகள் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் திரளாக கலந்து கொண்டனர். இத்திருவிழாவின் இறுதி நிகழ்வாக பல்வேறு விளையாட்டு போட்டிகளில் பங்கேற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. மேலும் மாணவ மாணவிகளுக்கான ஆடலும் பாடலும் நிகழ்ச்சிகளும் நடைபெற்று அவர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்வானது பள்ளியின் நீண்டகால வரலாற்றையும் அதன் கல்வி பங்களிப்பையும் நினைவு கூர்ந்தது.1
- திருமங்கலம் பன்னிரண்டாவது வார்டு முனிசிபல் காலனி பகுதியில் சுமார் மூன்று மாத காலமாக கழிவுநீர் சாக்கடை அடைத்துக் கொண்டிருக்கிறது அதில் கொசு புழு உற்பத்தி ஆகிறது சிறுவர்களுக்கு காய்ச்சல் அப்பப்போது வருகிறது அதனால் சாக்கடை மற்றும் சாக்கடை போகும் பாதையை சரி செய்யுமாறு தங்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறோம் நன்றி4
- பெரியகுளம் அருள்மிகு பகவதி அம்மன் கோவில் திருவிழா 8 வது நாளான இன்று யாதவர் சமுதாயம் மண்டகப்படி முன்னிட்டு வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பெரியகுளம் முக்கிய வீதிகள் ஆன அரண்மனை தெரு தேரடி வீதி மேலரத வீதி சுப்பிரமணியர் சாவடி தெரு உள்ளிட்ட முக்கிய வழித்தடங்களில் இளைஞர்களின் ஆட்டம் மற்றும் மேளதாளத்துடன் சுவாமி வீதி உலா நடைபெற்றது இதில் தெருக்களில் இருந்த பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்1