Shuru
Apke Nagar Ki App…
ஆம்பூர் அருகே அண்ணன் தம்பிக்கு இடை சண்டை ஒருவருக்கு வெட்டு திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் தாலுகா மாதனூர் ஒன்றியம் சோலூர் ஊராட்சி பகுதியில் (இன்று ஏப்ரல் 01) ராஜ்குமார் என்பவரை அண்ணன் பிரகலாதன் என்பவர் சொத்து வீடு தகராறு காரணமாக தம்பியை வெட்டியுள்ளார் இது குறித்து ஆம்பூர் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ராஜ்குமார் தீவிர சிகிச்சையில் உள்ளனர்
Yuvaraj Yuvaraj
ஆம்பூர் அருகே அண்ணன் தம்பிக்கு இடை சண்டை ஒருவருக்கு வெட்டு திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் தாலுகா மாதனூர் ஒன்றியம் சோலூர் ஊராட்சி பகுதியில் (இன்று ஏப்ரல் 01) ராஜ்குமார் என்பவரை அண்ணன் பிரகலாதன் என்பவர் சொத்து வீடு தகராறு காரணமாக தம்பியை வெட்டியுள்ளார் இது குறித்து ஆம்பூர் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ராஜ்குமார் தீவிர சிகிச்சையில் உள்ளனர்
More news from Tamil Nadu and nearby areas
- ஊத்தங்கரையில் அதிமுக வேட்பாளர் அறிமுகக் கூட்டம், அதிமுக துணை பொது செயலாளர் கே.பி. முனுசாமி கலந்து கொண்டு வேட்பாளரை அறிமுக படுத்தி பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.1
- தர்மபுரியில் பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணி பேச்சு - திமுகவால் கிடப்பில் போடப்பட்ட திட்டங்கள் அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்படும் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, தர்மபுரி சட்டமன்ற தொகுதிக்கான பாமக (பாட்டாளி மக்கள் கட்சி) வேட்பாளர் சௌமியா அன்புமணி இன்று தர்மபுரி மாவட்டத்திற்கு வருகை தந்தார். அவருக்கு கட்சி நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சியினரால் உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து தர்மபுரியில் உள்ள அதிமுக அலுவலகத்தில் முக்கிய ஆலோசனை கூட்டம் பாலக்கோடு சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கே.பி. அன்பழகன் தலைமையில் நடைபெற்றது. இதில் பாமக மற்றும் அதிமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த 5 சட்டமன்ற தொகுதிகளின் வேட்பாளர்கள் முக்கிய நிர்வாகிகள் மற்றும் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் வரவிருக்கும் தேர்தலை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய பிரச்சார திட்டங்கள், வாக்காளர் தொடர்பு முறைகள், பூத் வாரியாக அமைப்பு வலுப்படுத்தல் உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. தொடர்ந்து பேசிய சௌமியா அன்புமணி தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து உள்ளதாகவும், கடந்த 5 ஆண்டுகளில் 3 மடங்கு குற்றங்கள் பெருகி உள்ளது என்றும், தருமபுரி மாவட்டத்தில் நீர்ப்பாசன திட்டங்கள், இளைஞர்களின் வேலை வாய்ப்பிற்க்காக தொடங்கப்பட்ட சிப்காட் தொழிற்சாலை உள்ளிட்ட முக்கிய திட்டங்களை திமுக அரசு கிடப்பில் போட்டுள்ளது, மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சி அமைப்போம் என்றும் அப்போது தருமபுரி மாவட்டத்தின் அணைத்து திட்டங்களும் நிறைவேற்றப்படும் என தெரிவித்தார். இந்த ஆலோசனை கூட்டத்தில் கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.1
- எடப்பாடி அருகே சித்தூர் பகுதியில் உள்ள விவசாயிகள் மற்றும் காய்கறி வியாபாரிகளிடம் நூதன முறையில் வாக்கு சேகரித்த நாம் தமிழர் கட்சி வேட்பாளர்... 2026 சட்டமன்றத் தேர்தல் முன்னிட்டு பல்வேறு கட்சியினர் தேர்தல் பிரச்சாரத்தில் விறுவிறுப்பாக ஈடுபட்டுள்ளனர்.இதன் ஒரு பகுதியாக சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சித்தூர் பகுதியில் எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பிரியதர்ஷினி விவசாயிகள் மற்றும் காய்கறி வியாபாரிகளிடம் நூதன முறையில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்... இதனைத் தொடர்ந்து சீமான் தலைமையிலான ஆட்சி அமைத்தால் தமிழகத்தில் பூரண மதுவிலக்கு மற்றும் விவசாயிகளுக்கு பல்வேறு சலுகைகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று விவசாயிகளிடம் உறுதி அளித்தார். மேலும் வீடு வீடாக சென்று இல்லத்தரசிகளிடம் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் கொண்டு வந்தால் மட்டுமே தமிழகத்தை காப்பாற்றும் முடியும் என்று கூறி வாக்கு சேகரித்தார்...1
- தன்னுடைய #தனலட்சுமி #சீனிவாசன் #கல்லூரி மாணவர்களை தேர்தல் பிரச்சாரத்திற்கு முறைகேடாக பயண்படுத்துவதாக மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கதிரவன் தரப்பினருக்கும், அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளர் பரதன் தரப்பினருக்கும் வாக்குவாதம்.1
- கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளரான வி.சுதாகர், பொதுக்குடி பட்டியில் உள்ள திமுக மாவட்ட துணைச் செயலாளரான இ.கணபதி மற்றும் அப்பகுதியில் உள்ள முக்கிய அதிமுக நிர்வாகிகளை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார் . இந்த நிகழ்வில் கும்மிடிப்பூண்டி தெற்கு ஒன்றிய அதிமுக செயலாளர் டி.சி.மகேந்திரன், வடக்கு ஒன்றிய அதிமுக செயலாளர் கே.எம்.எஸ்.சிவக்குமார் பங்கேற்றனர்.1
- Post by ஸ்ரீதர் கரைமேடு77086981991
- Post by Vinayagam Vinayagam1
- தருமபுரி மாவட்டம் கடைமடை ரெயில்வே கேட் அருகே டீ கடையில் அமர்ந்து தேனீர் சாப்பிட்ட துனை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தருமபுரி மாவட்டத்தில் திமுக வேட்பாளரை ஆதரித்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் காலை அரூர், மற்றும் பாப்பிரெட்டிபட்டி திமுக வேட்பாளரை ஆதரித்து தேர்தல் பறப்புரையில் ஈடுபட்டார் இதனை யடுத்து கடத்தூரிலிருந்து பாலக்கோடு செல்லும் வழியில் கடைமடை ரயில்வே கேட் பகுதியில் ரயில் செல்வதற்காக ரயில்வே கேட் போடப்பட்டதால் 20 நிமிடங்கள் அருகே இருந்த தேனீர் கடையில் அமர்ந்து வேட்பாளர்களுடன்தேனீர் பருகினார் இதைதொடர்ந்து அங்கு காத்திருந்த அரசு பேருந்தில் ஏரி பொதுமக்களிடம் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார் பெண்கள், ஆண்கள் சிலர் துணை முதல்வருடன் செல்பி எடுத்து கொண்டனர் இதையடுத்து ரயில்வே பாதையை கடந்து சென்று தனது பிரச்சார வாகனத்தில் ஏரி பாலக்கோட்டிற்கு சென்றார் துணை முதல்வருடன் பாப்பிரெட்டிபட்டி வேட்பாளர் P. பழநியப்பன், பாலக்கோடு வேட்பாளர். DNV செந்தில்குமார் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.மணி உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்1
- எடப்பாடி அருகே பல வருடங்களாக பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படாத ஆர்.ஓ பிளான்ட்... சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை... சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள ஆவனிப் பேரூர் கீழ்முகம் ஊராட்சி போடிநாயக்கன்பட்டியில் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக குடிநீர் ஆர்வோ பிளான்ட் கட்டி முடிக்கப்பட்டது. அதேபோல் எடப்பாடி அருகே உள்ள செட்டிமாங்குறிச்சி ஊராட்சி அம்மன்கோயில் அரசு மேல்நிலைப்பள்ளி அருகில் குடிநீர் ஆர்ஓ பிளான்ட்கட்டி முடிக்கப்பட்டது... இரண்டு குடிநீர் ஆர்ஓ பிளான்டுகளும் கட்டி முடிக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆகிறது. பல ஆண்டுகளாகியும் குடிநீர் ஆர்ஓ பிளான்டில் குடிநீர் நிரப்பி பொதுமக்களின் பயன் பாட்டிற்கு விடப்படவில்லை... பல லட்சம் ரூபாய் செலவில் கட்டி முடிக்கப்பட்ட குடிநீர் ஆர்ஓ பிளான்ட் மக்களின் பயன்பாட்டிற்கு விடப்படாததால் அரசு பணம் பல லட்சம் விரய மாகி உள்ளதாக பொதுமக்கள் விமர்சித்து வருகிறார்கள். குடிநீர் ஆர்ஓ பிளான்டில் குடிநீர் நிரப்பி பொதுமக்களின் பயன்பாட்டிற்கு விடப்பட வேண் டும் என யூனியன் பிடிஓ மற்றும் ஊராட்சி செயலாளர் ஆகியோருக்கு பலமுறை கோரிக்கை வைத்தும் மக்களின் பயன் பாட்டிற்கு ஆர்ஓ பிலான்டடை கொண்டுவர நடவடிக்கை எடுக்கவில்லை... கோடை வெயில் பாதிப்பு தொடங்கியுள்ள நிலையில் பொதுமக்களின் தாகத்தை தீர்க்க போடிநாயக்கன்பட்டி மற்றும் செட்டிங்குறிச்சி அம்மன் கோவில் ஆகிய இரு இடங்களிலும் கட்டி முடிக்கப்பட்டுள்ள ஆர் பிளான்டில் குடிநீர் ஏற்றி பொதுமக்களின் பயன்பாட்டிற்கு விடப்பட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்...1