Shuru
Apke Nagar Ki App…
ஸ்ரீதர் கரைமேடு7708698199
More news from தமிழ்நாடு and nearby areas
- Post by ஸ்ரீதர் கரைமேடு77086981991
- நாகப்பட்டினம் சட்டமன்ற தொகுதிக்கு அதிமுக சார்பில் தங்க கதிரவனும் நாம் தமிழர் கட்சியின் சார்பில் பாத்திமா பர்ஹானாவும் போட்டியிடுகின்றனர்.அரசியலில் இரு துருவ பிரச்சாரம் மேற்கொள்ளும் இருவரும் இரவு திட்டச்சேரி பகுதியில் வாக்கு சேகரிப்பு ஈடுபட்டனர் அப்போது கடைத்தெரு பகுதியில் இரு வேட்பாளர்களும் நேருக்கு நேர் சந்தித்தபோது அரசியல் நாகரீகத்தோடு தற்போதைய அரசியல் சூழல் குறித்து ஆரோக்கியமாக விவாதித்து ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர் அதிமுக வேட்பாளர் தங்க கதிரவன் நாம் தமிழர் கட்சிவேட்பாளர் பாத்திமா பர்கானாவிடம் உங்கள் தந்தை தமிழ் முழக்கம் சாகுல் ஹமீது எனக்கு நண்பர் என்றும் சிறுவயதிலிருந்து தெரியும் என்றும் கூறி நினைவுகளை பகிர்ந்து கொண்டார்சுமார் 15 நிமிடம் நீடித்த இந்த சந்திப்பு மற்றும் உரையாடல் பார்ப்போரை வியப்பில் ஆழ்த்தியது1
- நாகப்பட்டினம் மாவட்டம் 164-கீழ்வேளூர் சட்டமன்ற தொகுதி (தனி) இந்த தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் எம்.கார்த்திகா நேற்று தேர்தல் நடத்தும் அலுவலர் டி.இராஜேஸ்வரிடம் வேட்பு மனுத் தாக்கல் செய்த பின்பு செய்தியாளர்கள் கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார்.1
- Post by பெரியசாமி1
- *புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே செவ்வாய்ப்பட்டி பத்ரகாளியம்மன் கோயில் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம் காவடி எடுத்து நேர்த்திக்கடனை செலுத்தி வருகின்றனர்* புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே செவ்வாய்ப்பட்டியில் பிரசித்தி பெற்ற பழமைவாய்ந்த ஸ்ரீ.பத்ரகாளியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலின் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் நடைபெறுவது வழக்கம் அதேபோல இந்த ஆண்டிற்கான பங்குனி திருவிழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. இவ்விழாவில் செவ்வாய்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பக்தர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மேள தாளங்கள் முழங்க பால்குடம், வேல் காவடி, மயில் காவடிகள் எடுத்தும் கரும்பு தொட்டில் கட்டியும் நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்துச் சென்று பக்தர்கள் தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர். மேலும் பத்ரகாளியம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று வருகிறது. வருகை தந்த அணைவருக்கும் அறுசுவை அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.1
- எடப்பாடியார் அறிவித்துள்ள அனைத்து திட்டங்களுக்கும், பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் நிதி உதவி அளித்து தமிழகத்தை எடப்பாடியாருடன் சேர்ந்து முன்னேற்றம் கொண்டு வருவார் - காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் வி.சோமசுந்தரம் அறிமுக கூட்டத்தில் பெருமிதம். __________ தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாகத் ஏப்ரல் மாதம் 23 ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது. காஞ்சிபுரம் மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான வி.சோமசுந்தரம் அவர்கள் காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதியின் வேட்பாளராக கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடியார் அவர்கள் அறிவித்துள்ளார்கள். காஞ்சிபுரம் மாநகர பகுதி செயலாளர் வி.பாலாஜி அவர்கள் ஏற்பாட்டில் வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது. காஞ்சிபுரம் மாநகர கிழக்கு பகுதியில் வெயில் காரணமாக 50% இடங்களில் பிரச்சாரம் மேற்கொண்டு விட்டு வந்த காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதி வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான வி.சோமசுந்தரம் அவர்களை கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட ஏகோபித்து வரவேற்றனர். வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் வி.சோமசுந்தரம் அவர்கள் பேசும்போது, கழகப் பொதுச் செயலாளர் தேர்தல் அறிக்கையில் எண்ணற்ற திட்டங்களை அறிவித்துள்ளார்கள் இது திமுகவினருக்கு கலக்கத்தை ஏற்படுத்துள்ளது எப்படி இந்த திட்டங்களை செயல்படுத்த முடியும் என திமுகவினர் வாட்ஸ் அப்பில் விளையாடி கொண்டுள்ளார்கள். தமிழக மக்கள் மீது அதிக மற்றும் பாசமும் வைத்துள்ள பாரத பிரதமர் அவர்கள் எடப்பாடியார் அறிவித்துள்ள அனைத்து திட்டங்களையும் செயல்படுத்த தாரளமாக நிதி உதவி செய்வார் என உறுதிபட பேசினார்.1
- குடுமியான்மலை அகிலாண்டேஸ்வாரி சமேத சிகாகிரீஸ்வரர் கோவில் தேரோட்டம் நடந்தது இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்தனர். புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே உள்ள குடுமியான்மலையில் 7-ம் நூற்றாண்டை சேர்ந்த பிரசித்தி பெற்ற குடவரைக்கோவிலான அகிலாண்டேஸ்வாரி சமேத சிகாகிரீஸ்வரர் கோவில் உள்ளது.இக்கோவிலில் இந்த ஆண்டுக்காண பங்குனி உத்திரம் திருவிழா கடந்த 23-.ந்தேதி தொடங்கியது. அதனைதொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் ஒவ்வொரு நாளும் மண்டகபடி தாரர்கள் சார்பில் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதிஉலா மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று காலை நடந்தது. இதையொட்டி சிறப்பு அலங்காரத்தில் சிகாகிரீஸ்வரர், அகிலாண்டேஸ்வரி அம்பாளை, தேரில் எழுந்தருள செய்தனர். இதையடுத்து குதிரை ஆட்டம், மேளதாளம் முழங்க திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்தனர். தேர் முக்கிய வீதிகளின் வழியாக அசைந்தாடி வந்தது ஒவ்வொரு வீதியிலும் பக்தர்கள் கூடி நின்று தேங்காய், பூ, பழம் வைத்து அர்ச்சனை செய்து வழிபட்டனர். பின்னர் தேர் நிலையை வந்தடைந்தது. பின்னர் சாமிக்கு சிறப்பு ஆராதனை நடந்தது. இதில் குடுமியான்மலை மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு நீர்மோர், பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது.இதில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் எம்எல்ஏ உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை இலுப்பூர் துணை கண்காணிப்பாளர் திவ்யா தலைமையில் போலீசார் செய்திருந்தனர்.1
- Post by பெரியசாமி1