Shuru
Apke Nagar Ki App…
துவாக்குடி அருகே உள்ள செடி மலை முருகன் ஆலயத்தில் பங்குனி உத்திரம் முன்னிட்டு பறவை காவடி,பால் காவடி மற்றும் அழகு குத்தி சுமார் 10 கிலோ மீட்டர் தூரம் கடும் வெயிலிலும் பொருள்படுத்தாமல் நடந்து வந்து பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர் திருச்சி துவாக்குடி அருகே உள்ள செடி மலை முருகன் ஆலயத்தில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு மலை மேல் இருக்கும் முருகனுக்கு காவிரியில் இருந்து பறவை காவடி, தீர்த்தம்,பால் காவடி மற்றும் அழகு குத்தி பக்தர்கள் கடும் வெயிலில் பொருட்படுத்தாமல் திருச்சி- தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் நடந்து வந்து தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர் சிறப்பு அபிஷேகம் முடிந்து முருக பெருமான் சிறப்பு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தார் இதில் தெளிவான பக்தர்கள் கலந்து கொண்டு தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர்
பெரியசாமி
துவாக்குடி அருகே உள்ள செடி மலை முருகன் ஆலயத்தில் பங்குனி உத்திரம் முன்னிட்டு பறவை காவடி,பால் காவடி மற்றும் அழகு குத்தி சுமார் 10 கிலோ மீட்டர் தூரம் கடும் வெயிலிலும் பொருள்படுத்தாமல் நடந்து வந்து பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர் திருச்சி துவாக்குடி அருகே உள்ள செடி மலை முருகன் ஆலயத்தில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு மலை மேல் இருக்கும் முருகனுக்கு காவிரியில் இருந்து பறவை காவடி, தீர்த்தம்,பால் காவடி மற்றும் அழகு குத்தி பக்தர்கள் கடும் வெயிலில் பொருட்படுத்தாமல் திருச்சி- தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் நடந்து வந்து தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர் சிறப்பு அபிஷேகம் முடிந்து முருக பெருமான் சிறப்பு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தார் இதில் தெளிவான பக்தர்கள் கலந்து கொண்டு தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர்
More news from தமிழ்நாடு and nearby areas
- Post by பெரியசாமி1
- தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026-னை முன்னிட்டு, 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து வாக்காளர்களுக்கு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இன்று விராலிமலை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட அன்னவாசல் பேருந்து நிலையத்தில் நாட்டுப்புற கலைஞர்கள் மூலம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு கரகாட்டம், கானா பாடல்கள், கும்மிபாட்டு போன்ற கலை நிகழ்ச்சிகள் நடந்தது நிகழ்ச்சிக்கு தேர்தல் நடத்தும் அலுவலரும் இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் கோகுல்சிங் தலைமை தாங்கினார் இதில் கலை நிகழ்ச்சிகள் மூலம் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்த கலை நிகழ்ச்சிகளை பொதுமக்கள் ஆர்வமுடன் பார்வையிட்டனர் பின்னர் அப்பகுதியில் உள்ள கடைகளில் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டு அவ்வழியாக வந்த வாகனங்களில் தேர்தல் விழிப்புணர்வு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது இதில் துணை ஆட்சியர் (பயிற்சி) பிரியங்கா தாசில்தார்கள் (இலுப்பூர்) சக்திவேல் (விராலிமலை) ஜெயபாரதி மண்டல துணை தாசில்தார் (தேர்தல்) சரவணன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்3
- மணப்பாறை அருகே கோவில் திருவிழாவில் இரவை பகலாக்கிய வாணவேடிக்கை நிகழ்ச்சி திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த தொட்டியபட்டியில் புகழ்பெற்ற பாம்பாலம்மன் கோவில் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் வெகுவிமரிசையாக திருவிழா நடைபெறும் நிலையில் இங்கு வாணவேடிக்கை நிகழ்ச்சியை காண ஆயிரக்கணக்கான மக்கள் வருவார்கள். அதன்படி கரகம் பாலித்தல் நிகழ்ச்சியோடு திருவிழா தொடங்கிய நிலையில் நள்ளிரவில் கரகம் பாலித்து தாரை தப்பட்டை முழங்க அழைத்து வரப்பட்டது. இதையடுத்து கோவில் அருகே உள்ள குளத்தில் இரவை பகலாக்கும் வகையில் இடைவிடாமல் தொடங்கு வானில் வர்ணஜாலங்கள் நிகழும் வகையில் வாணவேடிக்கை நடைபெற்றது. இதே போல் இடைவிடாமல் பட்டாசு சப்தங்களும் இருந்தது. சில மணி நேரம் நீடித்த இந்த வாணவேடிக்கை நிகழ்வை காண ஆயிரக்கணக்கான மக்கள் அந்த பகுதியில் திரண்டு கண்டு ரசித்தனர். திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளான பொங்கல் வைத்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் இன்று நடைபெறுகின்றது.1
- திருச்சிமாவட்டம் மணப்பாறை அருகே இனாம் கோவில்பட்டி கிராமம். தோப்புப்பட்டியில் விவசாய விளைநிலங்களுக்கு அருகே கல் உடைக்கும் கிரஷர் புதிதாக தனியார் ஒருவர் அமைக்க இருப்பதாகவும், அந்த பகுதியில் கிரஷர் துவங்கினால் விளை நிலங்கள் பாதிக்கப்படுவதோடு, வாகன போக்குவரத்து அதிகரித்து விபத்துக்கள் ஏற்படும் என்றும், குடிநீர் மற்றும் காற்று மாசு ஏற்பட்டு பொதுமக்கள் மற்றும் கால்நடைகள் உள்ளிட்டவைகளுக்கு பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படுவதோடு உயிரிழிப்பு ஏற்படக்கூடும் என்பதால் இந்த பகுதியில் கிரஷர் அமைப்பதற்கு கிராமத்து மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் அதனால் கிரஷர் அமைக்க மாவட்ட நிர்வாகம் கொடுத்த அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என்பதனை வலியுறுத்தி இன்று கிராமத்தில் உள்ள வீடுகளில் கறுப்பு கொடி கட்டினர். அத்துடன் கிரஸர் அமைக்க கொடுத்த அனுமதியை ரத்து செய்ய வேண்டும், அனுமதியை ரத்து செய்யாவிட்டால் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அறிவுப்பு பலகை ஒட்டியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.1
- *புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே செவ்வாய்ப்பட்டி பத்ரகாளியம்மன் கோயில் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம் காவடி எடுத்து நேர்த்திக்கடனை செலுத்தி வருகின்றனர்* புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே செவ்வாய்ப்பட்டியில் பிரசித்தி பெற்ற பழமைவாய்ந்த ஸ்ரீ.பத்ரகாளியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலின் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் நடைபெறுவது வழக்கம் அதேபோல இந்த ஆண்டிற்கான பங்குனி திருவிழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. இவ்விழாவில் செவ்வாய்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பக்தர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மேள தாளங்கள் முழங்க பால்குடம், வேல் காவடி, மயில் காவடிகள் எடுத்தும் கரும்பு தொட்டில் கட்டியும் நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்துச் சென்று பக்தர்கள் தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர். மேலும் பத்ரகாளியம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று வருகிறது. வருகை தந்த அணைவருக்கும் அறுசுவை அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.1
- Post by Natarajan Pitchaimani1
- பங்குனி உத்திரம் முன்னிட்டு இன்று பழனி முருகனுக்கு காவடி எடுத்து வந்த கணக்கன்பட்டி பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு பல்வேறு காலடிகளை எடுத்து வந்து பழனி பாலதண்டாயுதபாணி சாமி தரிசனம் செய்தனர்1
- Post by பெரியசாமி1