logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

தர்மபுரி அருகே தடை செய்யப்பட்ட 225 கிலோ குட்கா மற்றும் மினி வேன் பறிமுதல்! 2 பேர் கைது தர்மபுரி அருகே தடை செய்யப்பட்ட 225 கிலோ குட்கா மற்றும் மினி வேன் பறிமுதல்! கொடுத்தல் விபரங்களுக்கு வீடியோவை பாருங்கள்

1 hr ago
user_Just Now Karimangalam
Just Now Karimangalam
Media company கரீமங்கலம், தருமபுரி, தமிழ்நாடு•
1 hr ago

தர்மபுரி அருகே தடை செய்யப்பட்ட 225 கிலோ குட்கா மற்றும் மினி வேன் பறிமுதல்! 2 பேர் கைது தர்மபுரி அருகே தடை செய்யப்பட்ட 225 கிலோ குட்கா மற்றும் மினி வேன் பறிமுதல்! கொடுத்தல் விபரங்களுக்கு வீடியோவை பாருங்கள்

More news from தமிழ்நாடு and nearby areas
  • தர்மபுரி அருகே தடை செய்யப்பட்ட 225 கிலோ குட்கா மற்றும் மினி வேன் பறிமுதல்! 2 பேர் கைது தர்மபுரி அருகே தடை செய்யப்பட்ட 225 கிலோ குட்கா மற்றும் மினி வேன் பறிமுதல்! கொடுத்தல் விபரங்களுக்கு வீடியோவை பாருங்கள்
    1
    தர்மபுரி அருகே தடை செய்யப்பட்ட 225 கிலோ குட்கா மற்றும் மினி வேன் பறிமுதல்! 2 பேர் கைது
தர்மபுரி அருகே தடை செய்யப்பட்ட 225 கிலோ குட்கா மற்றும் மினி வேன் பறிமுதல்! 
கொடுத்தல் விபரங்களுக்கு வீடியோவை பாருங்கள்
    user_Just Now Karimangalam
    Just Now Karimangalam
    Media company கரீமங்கலம், தருமபுரி, தமிழ்நாடு•
    1 hr ago
  • தேசுப்பள்ளி கிராமத்தில் எழுந்தருளியுள்ள ஓம் ஸ்ரீ சக்தி காளியம்மன் மற்றும் மயான காளியம்மன் திருக்கோயிலில்  மண்டல பூஜை                கிருஷ்ணகிரி மாவட்டம் வரட்டனப்பள்ளி அருகே உள்ள தேசுப்பள்ளி கிராமத்தில் எழுந்தருளியுள்ளஓம் ஸ்ரீ சக்தி காளியம்மன் மற்றும் மயான காளியம்மன் திருக்கோவிலின்மண்டல பூஜையின்  நிறைவினையொட்டி அம்மன் கரகத்துடன் பால்குடம் ஊர்வலத்துடன் பல்வேறு கட்டபூஜைகள்  நடைப்பெற்றது.
    1
    தேசுப்பள்ளி கிராமத்தில் எழுந்தருளியுள்ள
ஓம் ஸ்ரீ சக்தி காளியம்மன் மற்றும் மயான காளியம்மன் திருக்கோயிலில் 
மண்டல பூஜை               


கிருஷ்ணகிரி மாவட்டம் வரட்டனப்பள்ளி அருகே உள்ள தேசுப்பள்ளி கிராமத்தில் எழுந்தருளியுள்ளஓம் ஸ்ரீ சக்தி காளியம்மன் மற்றும் மயான காளியம்மன் திருக்கோவிலின்மண்டல பூஜையின்  நிறைவினையொட்டி அம்மன் கரகத்துடன் பால்குடம் ஊர்வலத்துடன் பல்வேறு கட்டபூஜைகள் 
நடைப்பெற்றது.
    user_FAYAZ
    FAYAZ
    பத்திரிகையாளர் கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி, தமிழ்நாடு•
    5 hrs ago
  • மீனாட்சி அம்மன் கோவிலில் வந்து திருநீர், குங்குமம் வைத்து கொண்டார் முதல்வர் அது ஒன்றே போதும் - மதுரை ஆதீனம் பேட்டி. சிவகங்கை மாவட்டம், காளையார்கோவிலில் மருதுபாண்டியர்களின் 225-வது குருபூஜை விழாவை முன்னிட்டு, மதுரை ஆதீனத்தின் 293-வது மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக சுவாமிகள் மருதுபாண்டியர்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த மதுரை ஆதீனம், மருதுபாண்டியர்கள் ஆன்மிகத்திற்காகவும், மக்களின் நலனுக்காகவும் சிறப்பாகச் செயல்பட்டவர்கள் எனத் தெரிவித்தார். தொடர்ந்து தமிழக அரசியல் மற்றும் ஆட்சி குறித்த செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த அவர், தமிழகத்தில் நல்லாட்சி நடைபெற்று வருவதாகத் தெரிவித்தார். குறிப்பாக, த.வெ.க. ஆட்சி சிறப்பான ஆட்சி என்றும், அனைத்து மதங்களையும் மதிக்கும் ஆட்சி என்றும் அவர் குறிப்பிட்டார். மேலும் அண்மையில் மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு வந்த முதல்வர் திருநீர், குங்குமம் வைத்துக்கொண்டது ஒன்றே போதும் என தெரிவித்தார்.
    1
    மீனாட்சி அம்மன் கோவிலில் வந்து திருநீர், குங்குமம் வைத்து கொண்டார் முதல்வர் அது ஒன்றே போதும் - மதுரை ஆதீனம் பேட்டி.
சிவகங்கை மாவட்டம், காளையார்கோவிலில் மருதுபாண்டியர்களின் 225-வது குருபூஜை விழாவை முன்னிட்டு, மதுரை ஆதீனத்தின் 293-வது மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக சுவாமிகள் மருதுபாண்டியர்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த மதுரை ஆதீனம், மருதுபாண்டியர்கள் ஆன்மிகத்திற்காகவும், மக்களின் நலனுக்காகவும் சிறப்பாகச் செயல்பட்டவர்கள் எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து தமிழக அரசியல் மற்றும் ஆட்சி குறித்த செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த அவர், தமிழகத்தில் நல்லாட்சி நடைபெற்று வருவதாகத் தெரிவித்தார். குறிப்பாக, த.வெ.க. ஆட்சி சிறப்பான ஆட்சி என்றும், அனைத்து மதங்களையும் மதிக்கும் ஆட்சி என்றும் அவர் குறிப்பிட்டார். மேலும் அண்மையில் மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு வந்த முதல்வர் திருநீர், குங்குமம் வைத்துக்கொண்டது ஒன்றே போதும் என தெரிவித்தார்.
    user_G Krishnan
    G Krishnan
    பத்திரிகையாளர் பாலக்கோடு, தருமபுரி, தமிழ்நாடு•
    7 hrs ago
  • ஊத்தங்கரையில் தடகள விளையாட்டுப் போட்டி. வெற்றி பெற்ற வீரர்களுக்கு ஆட்சியர் தினேஷ்குமார் பரிசுகள் வழங்கினார். ஊத்தங்கரையில் தடகள விளையாட்டுப் போட்டி. வெற்றி பெற்ற வீரர்களுக்கு ஆட்சியர் தினேஷ்குமார் பரிசுகள் வழங்கினார். கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை உள்விளையாட்டு மைதானத்தில் போச்சம்பள்ளி சிப்காட் பகுதியில் அமைந்துள்ள செய்யார் செஸ் டெவலப்பர்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் ஃபேர்வே எண்டர்பிரைசஸ் யூனிட் 1 & 2 இணைந்து 2026 -27 ஆம் ஆண்டு தடகள விளையாட்டுப் போட்டி நடைபெற்றது. இப்போட்டியை ஊத்தங்கரை வட்டாட்சியர் நடராஜன், துணை காவல் கண்காணிப்பாளர் ராமமூர்த்தி ஆகியோர் துவக்கி வைத்தனர். இவ்விளையாட்டு போட்டிகளில் 100 மீட்டர், 200 மீட்டர், 400 மீட்டர், 800 மீட்டர் ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், உள்ளிட்ட பல்வேறு தடகள விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. இப்போட்டிகளில் முதல் மூன்று இடங்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு மெடல், சான்றிதழ் மற்றும் பரிசுப் பொருளை மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமார் வழங்கினார். இதில் ஊத்தங்கரை காவல் ஆய்வாளர் தென்னரசன், நிறுவனத்தின் சார்பாக ஜெயராஜ் பாபு (நிர்வாக பொது மேலாளர்), அருள் மகாவிஷ்ணு (பொது மேலாளர்) மற்றும் டேவிட் ராஜன் (வெளியுறவுத்துறை தொடர்புகள் தலைவர்) ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர். குரோஸ் அகடாமி விளையாட்டு நிறுவனத்தின் நிறுவனர் கோபிநாத் இந்நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். இப்போட்டியில் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ மாணவிகள் கலந்துக் கொண்டனர்.
    1
    ஊத்தங்கரையில் தடகள விளையாட்டுப் போட்டி.
வெற்றி பெற்ற வீரர்களுக்கு ஆட்சியர் தினேஷ்குமார் பரிசுகள் வழங்கினார்.

ஊத்தங்கரையில் தடகள விளையாட்டுப் போட்டி.
வெற்றி பெற்ற வீரர்களுக்கு ஆட்சியர் தினேஷ்குமார் பரிசுகள் வழங்கினார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை உள்விளையாட்டு மைதானத்தில் போச்சம்பள்ளி  சிப்காட் பகுதியில் அமைந்துள்ள செய்யார் செஸ் டெவலப்பர்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் ஃபேர்வே எண்டர்பிரைசஸ் யூனிட் 1 & 2 இணைந்து 2026 -27 ஆம் ஆண்டு தடகள விளையாட்டுப் போட்டி நடைபெற்றது.
இப்போட்டியை ஊத்தங்கரை வட்டாட்சியர் நடராஜன், துணை காவல் கண்காணிப்பாளர் ராமமூர்த்தி ஆகியோர் துவக்கி வைத்தனர். 
இவ்விளையாட்டு போட்டிகளில் 100 மீட்டர், 200 மீட்டர், 400 மீட்டர், 800 மீட்டர் ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல்,
குண்டு எறிதல், உள்ளிட்ட பல்வேறு தடகள விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன.
இப்போட்டிகளில் முதல் மூன்று இடங்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு மெடல், சான்றிதழ் மற்றும் பரிசுப் பொருளை 
மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமார் வழங்கினார்.
இதில் ஊத்தங்கரை காவல் ஆய்வாளர் தென்னரசன், 
நிறுவனத்தின் சார்பாக ஜெயராஜ் பாபு (நிர்வாக பொது மேலாளர்), அருள் மகாவிஷ்ணு (பொது மேலாளர்) மற்றும் டேவிட் ராஜன் (வெளியுறவுத்துறை  தொடர்புகள் தலைவர்) ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
குரோஸ் அகடாமி  விளையாட்டு நிறுவனத்தின் நிறுவனர் கோபிநாத் இந்நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். இப்போட்டியில் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ மாணவிகள் கலந்துக் கொண்டனர்.
    user_செல்வம்
    செல்வம்
    பத்திரிகையாளர் Krishnagiri, Tamil Nadu•
    8 hrs ago
  • புதூர்நாடு ஊராட்சியில் பருவ மழையின் காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட சாலைகளை மாவட்ட ஆட்சியர் நல்லசிவன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.. திருப்பத்தூர் மாவட்டம் புதூர்நாடு ஊராட்சியில் பருவ மழையின் காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட சாலைகளை மாவட்ட ஆட்சியர் நல்லசிவன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.. திருப்பத்தூர் மாவட்டம் ஜவ்வாது மலை புதூர்நாடு ஊராட்சி சித்தூர் முதல் மேல்பட்டு பகுதியில் வடகிழக்கு பருவமழையின் காரணமாக பெய்த கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்ட சாலைகளை மாவட்ட ஆட்சியர் நல்லசிவன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பாதிக்கப்பட்ட சாலையை சீரமைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ளவும் சாலை ஓரங்களில் உள்ள செடிகள் மற்றும் புற்களை அகற்ற சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார். தொடர்ந்து நெல்லிவாசல்நாடு ஊராட்சி நெல்லிவாசல் சாலையில் உள்ள ஓடை கால்வாயினை மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டு, வடகிழக்கு பருவ மலையை கருத்தில் கொண்டு மலைப்பகுதிகளில் உள்ள சாலைகளின் நிலையை தொடர்ந்து கண்காணிக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையில் தேவையான நடவடிக்கைகளை உடனுக்குடன் மேற்கொள்ளவும் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார். இந்த ஆய்வின் போது மாநில நெடுஞ்சாலைத்துறை திருப்பத்தூர் கோட்ட பொறியாளர் சிவக்குமார், உதவி வன பாதுகாவலர் சுந்தரேசன், வனச்சரகர் குமார் மற்றும் துறை சார்ந்த அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.
    1
    புதூர்நாடு ஊராட்சியில் பருவ மழையின் காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட சாலைகளை மாவட்ட ஆட்சியர் நல்லசிவன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.. 
திருப்பத்தூர் மாவட்டம் 
புதூர்நாடு ஊராட்சியில் பருவ மழையின் காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட சாலைகளை மாவட்ட ஆட்சியர் நல்லசிவன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.. 
திருப்பத்தூர் மாவட்டம் ஜவ்வாது மலை புதூர்நாடு ஊராட்சி சித்தூர் முதல் மேல்பட்டு பகுதியில் வடகிழக்கு பருவமழையின் காரணமாக பெய்த கனமழையால்  நிலச்சரிவு ஏற்பட்ட சாலைகளை மாவட்ட ஆட்சியர் நல்லசிவன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பாதிக்கப்பட்ட சாலையை சீரமைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ளவும் சாலை ஓரங்களில் உள்ள செடிகள் மற்றும் புற்களை அகற்ற சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார். 
தொடர்ந்து நெல்லிவாசல்நாடு ஊராட்சி நெல்லிவாசல் சாலையில் உள்ள ஓடை கால்வாயினை மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டு, வடகிழக்கு பருவ மலையை கருத்தில் கொண்டு மலைப்பகுதிகளில் உள்ள சாலைகளின் நிலையை தொடர்ந்து கண்காணிக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையில் தேவையான நடவடிக்கைகளை உடனுக்குடன் மேற்கொள்ளவும் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார். 
இந்த ஆய்வின் போது மாநில நெடுஞ்சாலைத்துறை திருப்பத்தூர் கோட்ட பொறியாளர் சிவக்குமார், உதவி வன பாதுகாவலர் சுந்தரேசன், வனச்சரகர் குமார் மற்றும் துறை சார்ந்த அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.
    user_V ramani
    V ramani
    திருப்பத்தூர், திருப்பத்தூர், தமிழ்நாடு•
    12 hrs ago
  • வாசன் கண் மருத்துவமனை கிளையின் 16-வது ஆண்டு துவக்க நிகழ்ச்சி கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள வாசன் கண் மருத்துவமனை கிளை, புத்தம் புதிய பொலிவுடன் தனது 16-வது ஆண்டில் வெற்றிகரமாக அடியெடுத்து வைத்துள்ளது. இதனை முன்னிட்டு, மருத்துவமனையில் அதிநவீன கூடுதல் வசதிகளுடன் கூடிய கண் சிகிச்சைப் பிரிவுகளின் தொடக்க விழா சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பல்வேறு துறைகளைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் வருகை புரிந்து விழாவைச் சிறப்பித்தனர். ஓசூர் இஎஸ்ஐ மருத்துவமனை, மருத்துவ கண்காணிப்பாளர், டாக்டர் V. கீதா, இந்திய மருத்துவக் கழகத்தின் ஓசூர் கிளையின் தலைவர், டாக்டர் ராமானுஜர், உதவிசார் கருவூல அலுவலர் ஜி சங்கர் மற்றும் ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் ஓசூர் ஒருங்கிணைப்பாளர் ஜான்சன், அதியமான் பொறியியல் கல்லூரியின் முதல்வர் டாக்டர் ராதாகிருஷ்ணன், ஓய்வூதிய சங்க நிர்வாகி துரை மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். மேலும், இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழக ஓசூர் கிளையின் தலைமை மேலாளர் வைரமுத்து, தி நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் கம்பெனி நிறுவனத்தின் முதுநிலை மண்டல மேலாளர் கைசர் ராஜா, ஓசூர் மருந்தாளுநர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் A. சிவகுமார், ஸ்ரீ ராம் பிரசாத், B. சாதிக் பாஷா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர். வாசன் கண் மருத்துவமனை இயக்குனர் சுந்தர முருகேசன், மண்டல வணிக மேம்பாட்டு மேலாளர் நாகேந்திரா மற்றும் மருத்துவர்கள் ஆகியோருடன் சிறப்பு விருந்தினர்கள் இணைந்து முறைப்படி விழாவை குத்து விளக்கு ஏற்றி வைத்து துவக்கி வைத்தனர். ஓசூர், வைஷ்ணவி நகர், 80 அடி ரோடு, பெங்களூர் பைபாஸ் சாலை பகுதியில் அமைந்துள்ள வாசன் கண் மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற இந்த விழாவில் பங்கேற்ற சிறப்பு விருந்தினர்கள் 16வது ஆண்டில் அடி எடுத்து வைக்கும் மருத்துவமனைக்கு வாழ்த்துக்களை தெரிவித்து உரையாற்றினார்கள். இந்த நிகழ்ச்சியில் ஓசூர் வாசன் கண் மருத்துவமனையில் அர்ப்பணிப்புடன் பணியாற்றி வரும் மருத்துவ நிபுணர்கள் , டாக்டர். கரண் மக்தும்,ஆலோசகர் – கண் பார்வைத் திருத்தம் மற்றும் ஒளிவிலகல் அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவ மற்றும் அறுவை சிகிச்சைப் பிரிவு தலைவர், டாக்டர். தீபக் டி. சுவாமி, ஆலோசகர் – கண்புரை, பார்வைத் திருத்தம் மற்றும் விழித்திரை மருத்துவ நிபுணர், டாக்டர். சமிதா காலே, ஆலோசகர் – கண்ணின் விட்ரியஸ், விழித்திரை, யூவியா மற்றும் ROP நிபுணர், டாக்டர் என். பைரவ ராவ், மூத்த கண் மருத்துவர் மற்றும் டாக்டர். ரக்ஷா வி, கண்புரை அறுவை சிகிச்சை நிபுணர், விழித்திரை மற்றும் யூவியா மருத்துவ நிபுணர், ஆகியோரும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். மேலும், பொதுமக்கள் மற்றும் நோயாளிகளுக்கு மேம்பட்ட மற்றும் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய கண் மருத்துவ சேவைகளை வழங்கும் வகையில் இந்த கூடுதல் வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளன. விழாவில் பங்கேற்ற மருத்துவ வல்லுநர்கள் மற்றும் விருந்தினர்கள் மருத்துவமனையின் புதிய வசதிகளைப் பார்வையிட்டதுடன், பொதுமக்களின் கண் நலன் காப்பதில் வாசன் கண் மருத்துவமனையின் பங்களிப்பைப் பாராட்டிப் பேசினர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஓசூர் மருத்துவமனையின் வணிக மேம்பாட்டு மேலாளர் சதீஷ்குமார் குழுவினருடன் மருத்துவமனை ஊழியர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.
    1
    வாசன் கண் மருத்துவமனை கிளையின் 16-வது ஆண்டு துவக்க நிகழ்ச்சி 
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள வாசன் கண் மருத்துவமனை கிளை, புத்தம் புதிய பொலிவுடன் தனது 16-வது ஆண்டில் வெற்றிகரமாக அடியெடுத்து வைத்துள்ளது. 
இதனை முன்னிட்டு, மருத்துவமனையில் அதிநவீன கூடுதல் வசதிகளுடன் கூடிய கண் சிகிச்சைப் பிரிவுகளின் தொடக்க விழா சிறப்பாக நடைபெற்றது. 
இந்நிகழ்ச்சிக்கு பல்வேறு துறைகளைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் வருகை புரிந்து விழாவைச் சிறப்பித்தனர்.
ஓசூர் இஎஸ்ஐ மருத்துவமனை, மருத்துவ கண்காணிப்பாளர், டாக்டர் V. கீதா, இந்திய மருத்துவக் கழகத்தின் ஓசூர் கிளையின் தலைவர், டாக்டர் ராமானுஜர், உதவிசார் கருவூல அலுவலர் ஜி சங்கர் மற்றும் ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் ஓசூர் ஒருங்கிணைப்பாளர் ஜான்சன், அதியமான் பொறியியல் கல்லூரியின் முதல்வர் டாக்டர் ராதாகிருஷ்ணன், ஓய்வூதிய சங்க நிர்வாகி துரை மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.
மேலும், இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழக ஓசூர் கிளையின் தலைமை மேலாளர் வைரமுத்து, தி நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் கம்பெனி நிறுவனத்தின் முதுநிலை மண்டல மேலாளர் கைசர் ராஜா, ஓசூர் மருந்தாளுநர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் A. சிவகுமார், ஸ்ரீ ராம் பிரசாத், B. சாதிக் பாஷா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர்.
வாசன் கண் மருத்துவமனை இயக்குனர் சுந்தர முருகேசன், மண்டல வணிக மேம்பாட்டு மேலாளர் நாகேந்திரா மற்றும் மருத்துவர்கள் ஆகியோருடன் சிறப்பு விருந்தினர்கள் இணைந்து முறைப்படி விழாவை குத்து விளக்கு ஏற்றி வைத்து துவக்கி வைத்தனர்.
ஓசூர், வைஷ்ணவி நகர், 80 அடி ரோடு, பெங்களூர் பைபாஸ் சாலை பகுதியில் அமைந்துள்ள வாசன் கண் மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற இந்த விழாவில் பங்கேற்ற சிறப்பு விருந்தினர்கள் 16வது ஆண்டில் அடி எடுத்து வைக்கும் மருத்துவமனைக்கு வாழ்த்துக்களை தெரிவித்து உரையாற்றினார்கள். 
இந்த நிகழ்ச்சியில் ஓசூர் வாசன் கண் மருத்துவமனையில் அர்ப்பணிப்புடன் பணியாற்றி வரும் மருத்துவ நிபுணர்கள் , டாக்டர். கரண் மக்தும்,ஆலோசகர் – கண் பார்வைத் திருத்தம் மற்றும் ஒளிவிலகல் அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவ மற்றும் அறுவை சிகிச்சைப் பிரிவு தலைவர், டாக்டர். தீபக் டி. சுவாமி, ஆலோசகர் – கண்புரை, பார்வைத் திருத்தம் மற்றும் விழித்திரை மருத்துவ நிபுணர், டாக்டர். சமிதா காலே, ஆலோசகர் – கண்ணின் விட்ரியஸ், விழித்திரை, யூவியா மற்றும் ROP நிபுணர், டாக்டர் என். பைரவ ராவ், மூத்த கண் மருத்துவர் மற்றும் டாக்டர். ரக்ஷா வி, கண்புரை அறுவை சிகிச்சை நிபுணர், விழித்திரை மற்றும் யூவியா மருத்துவ நிபுணர், ஆகியோரும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.
மேலும், பொதுமக்கள் மற்றும் நோயாளிகளுக்கு மேம்பட்ட மற்றும் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய கண் மருத்துவ சேவைகளை வழங்கும் வகையில் இந்த கூடுதல் வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளன.
விழாவில் பங்கேற்ற மருத்துவ வல்லுநர்கள் மற்றும் விருந்தினர்கள் மருத்துவமனையின் புதிய வசதிகளைப் பார்வையிட்டதுடன், பொதுமக்களின் கண் நலன் காப்பதில் வாசன் கண் மருத்துவமனையின் பங்களிப்பைப் பாராட்டிப் பேசினர். 
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஓசூர் மருத்துவமனையின் வணிக மேம்பாட்டு மேலாளர் சதீஷ்குமார் குழுவினருடன் மருத்துவமனை ஊழியர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.
    user_John
    John
    ஓசூர், கிருஷ்ணகிரி, தமிழ்நாடு•
    2 hrs ago
  • காரிமங்கலம் பிடிஓ அலுவலகம் முன்பு சட்டத் தூண்கள் இயக்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் காரிமங்கலம் பிடிஓ அலுவலகம் முன்பு சட்டத் தூண்கள் இயக்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்
    1
    காரிமங்கலம் பிடிஓ அலுவலகம் முன்பு சட்டத் தூண்கள் இயக்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்
காரிமங்கலம் பிடிஓ அலுவலகம் முன்பு சட்டத் தூண்கள் இயக்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்
    user_Just Now Karimangalam
    Just Now Karimangalam
    Media company கரீமங்கலம், தருமபுரி, தமிழ்நாடு•
    2 hrs ago
  • கணவன் - மனைவி தகராறு: மாமனாரை சுத்தியால் அடித்து, கத்தியால் குத்திய மருமகன் - போலீஸ் வலைவீச்சு! கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் காவல் எல்லைக்குட்பட்ட கண்ணடஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்தன் (49). இவருடைய மகள் கீர்த்தனா (28). இவருக்கும் பர்கூர் பகுதியைச் சேர்ந்த சந்திரசேகரன் (32) என்பவருக்கும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், கணவன் - மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, கடந்த 6 மாதங்களாக கீர்த்தனா தனது கணவரை பிரிந்து தந்தை வீட்டில் வசித்து வந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கீர்த்தனாவின் வீட்டிற்கு வந்த சந்திரசேகரன், தனது குழந்தையைத் தன்னிடம் அனுப்பி வைக்குமாறு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது ஏற்பட்ட மோதலில், ஆத்திரமடைந்த சந்திரசேகரன் வீட்டில் இருந்த சுத்தியலை எடுத்து மாமனார் ஆனந்தனின் முதுகில் பயங்கரமாகத் தாக்கியுள்ளார். மேலும், தான் வைத்திருந்த சூரிக்கத்தியால் ஆனந்தனின் வலது கண் புருவத்தின் மேல் குத்தியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த ஆனந்தனுக்கு, கண் புருவத்தில் பலத்த காயம் ஏற்பட்டு 6 தையல்கள் போடப்பட்டன. மத்தூர் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர் மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து ஆனந்தன் கொடுத்த புகாரின் பேரில் மத்தூர் போலீஸார், வழக்குப் பதிவு செய்து, தலைமறைவாக உள்ள மருமகன் சந்திரசேகரனை தீவிரமாகத் தேடி வருகின்றனர். மேலும் இந்த இடத்தில் இருந்த கேமராவில் இந்த தாக்குதல் சம்பவம் பதிவாகி உள்ள நிலையில் அந்த வீடியோ காட்சி தற்பொழுது சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
    1
    கணவன் - மனைவி தகராறு: மாமனாரை சுத்தியால் அடித்து, கத்தியால் குத்திய மருமகன் - போலீஸ் வலைவீச்சு!
கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் காவல் எல்லைக்குட்பட்ட கண்ணடஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்தன் (49). இவருடைய மகள் கீர்த்தனா (28). இவருக்கும் பர்கூர் பகுதியைச் சேர்ந்த சந்திரசேகரன் (32) என்பவருக்கும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில், கணவன் - மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, கடந்த 6 மாதங்களாக கீர்த்தனா தனது கணவரை பிரிந்து தந்தை வீட்டில் வசித்து வந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு  கீர்த்தனாவின் வீட்டிற்கு வந்த சந்திரசேகரன், தனது குழந்தையைத் தன்னிடம் அனுப்பி வைக்குமாறு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது ஏற்பட்ட மோதலில், ஆத்திரமடைந்த சந்திரசேகரன் வீட்டில் இருந்த சுத்தியலை எடுத்து மாமனார் ஆனந்தனின் முதுகில் பயங்கரமாகத் தாக்கியுள்ளார். மேலும், தான் வைத்திருந்த சூரிக்கத்தியால் ஆனந்தனின் வலது கண் புருவத்தின் மேல் குத்தியுள்ளார்.
இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த ஆனந்தனுக்கு, கண் புருவத்தில் பலத்த காயம் ஏற்பட்டு 6 தையல்கள் போடப்பட்டன. மத்தூர் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர் மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து ஆனந்தன் கொடுத்த  புகாரின் பேரில்    மத்தூர் போலீஸார், வழக்குப் பதிவு செய்து, தலைமறைவாக உள்ள மருமகன் சந்திரசேகரனை தீவிரமாகத் தேடி வருகின்றனர். மேலும் இந்த இடத்தில் இருந்த கேமராவில் இந்த தாக்குதல் சம்பவம் பதிவாகி உள்ள நிலையில் அந்த வீடியோ காட்சி  தற்பொழுது சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
    user_Asif Iqbal
    Asif Iqbal
    போச்சம்பள்ளி, கிருஷ்ணகிரி, தமிழ்நாடு•
    7 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.