Shuru
Apke Nagar Ki App…
காரைக்குடி கழனி வாசலில் பருப்பு ஊரணியில் விநாயகர் சிலை கரைத்தனர் : சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கழனி வாசலில் பருப்பு ஊரணி விநாயகர் சிலை கரைத்தனர் பெரியார் சிலையில் இருந்து விநாயகர் சிலையை டிராக்டரில் மேளம் தாளத்துடன் ஊர்வலமாக வந்து கழனிவாசன் பருப்பு ஊரணியில் கரைத்தனர். ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு கண்டுபிடித்தனர்.
Nirmala Devi R
காரைக்குடி கழனி வாசலில் பருப்பு ஊரணியில் விநாயகர் சிலை கரைத்தனர் : சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கழனி வாசலில் பருப்பு ஊரணி விநாயகர் சிலை கரைத்தனர் பெரியார் சிலையில் இருந்து விநாயகர் சிலையை டிராக்டரில் மேளம் தாளத்துடன் ஊர்வலமாக வந்து கழனிவாசன் பருப்பு ஊரணியில் கரைத்தனர். ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு கண்டுபிடித்தனர்.
More news from தமிழ்நாடு and nearby areas
- திருவாடானை அருகே வயல்வெளிகளில் சாய்ந்த மின்கம்பங்கள்: விவசாயப் பணிகள் கடுமையாகப் பாதிப்பு திருவாடானை தாலுகாவிற்குட்பட்ட பல்வேறு கிராமங்களில் வயல்வெளிகளில் ஆபத்தான முறையில் சாய்ந்துள்ள மின்கம்பங்களாலும், தாழ்வாகச் செல்லும் மின்கம்பிகளாலும் விவசாயப் பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றன.சின்னக் கீரமங்கலம் அருகே பறையனேந்தல் குடியிருப்பு எதிர்ப்புறம் உள்ள வயல்வெளியில் எழும்புக் கூடான மின் கம்பம் ஒன்று மிகவும் சாய்ந்த நிலையில், எப்போது வேண்டுமானாலும் விழும் ஆபத்தில் உள்ளது. இதேபோல, ஆதியூர் அருகே மல்லிக்குடி கிராமத்திலும் மின் கம்பம் ஒன்று ஆபத்தான முறையில் வயல்வெளியில் சாய்ந்து நிற்கிறது.மேலும், மல்லிக்குடி மற்றும் வெளியங்குடி ஆகிய பகுதிகளில் உயர்மின்னழுத்த மின் கம்பிகள் மிகவும் தாழ்வாகச் செல்வதால், அப்பகுதியில் விவசாயப் பணிகளை மேற்கொள்வதில் பெரும் சிக்கல் நிலவுகிறது.நிலத்தை உழுது விதைப்பது முதல், பயிர்களைப் பராமரித்து அறுவடை செய்வது வரை அனைத்துக் கட்டங்களிலும் விவசாயிகள் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டே பணியாற்றும் அவலநிலை நீடிக்கிறது. டிராக்டர் மற்றும் அறுவடை இயந்திரங்களைக் கொண்டுசெல்ல முடியாத சூழல் நிலவுவதால், விவசாயப் பணிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.இதுகுறித்து சம்பந்தப்பட்ட மின்வாரியத் துறை அதிகாரிகளுக்குப் பலமுறை புகார் அளித்தும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அப்பகுதி விவசாயிகள் கவலையுடன் தெரிவிக்கின்றனர். அசம்பாவிதம் ஏதும் நடக்கும் முன், சாய்ந்த மின்கம்பங்களைச் சீரமைத்து, தாழ்வாகச் செல்லும் மின்கம்பிகளை உயர்த்தி அமைக்க மின்வாரியம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.1
- மதுரையில் இன்று தெற்கு மாரட்வீதியில் ஸ்ரீ மீனாட்சி அம்மன் திருக்குட நன்னீராட்டு விழா மிகச்சிறப்பாக நடைபெற்றது இதில் TVK கட்சியைச்சேர்ந்த .M.M கோபிசன் MLA. அவர்கள் தலைமையில் பக்தர்களுக்கு அன்னதானம் மிகச்சிறப்பு செய்தனர்1
- மதுரை சர்வதேச விமான நிலைய விரிவாக்க பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம் - அமைச்சர் நிர்மல்குமார் ,எம்பிகள் பங்கேற்பு மதுரை சர்வதேச விமான நிலையத்தில் விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வரும் சூழலில் பணியை விரைந்து முடிப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மதுரை விமான நிலையம் கூட்ட அரங்கில் நடைபெற்றது இதில் தமிழக சட்டத்துறை அமைச்சர் சி டி ஆர் நிர்மல் குமார் எம்பிக்கள் மாணிக்கம் தாகூர்,சு. வெங்கடேசன்மதுரை விமான நிலைய இயக்குனர் முத்துக்குமரன் மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரிகள் வருவாய்த்துறையினர் இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டனர் கூட்டத்தில் விமான நிலைய பாதுகாப்பிற்கான சுற்றுச்சுவர் பணியை விரைந்து முடித்திடவும் மதுரை கப்பலூர் சுற்றுச்சாலையை மாற்றி அமைப்பதற்கான ஏற்பாடுகள் குறித்தும் விமான ஓடுபாதை விரிவாக்க பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது1
- மணப்பாறையில் தந்தை பெரியாரின் 148-வது பிறந்த நாள் விழா தந்தை பெரியாரின் 148-வது பிறந்தநாளை முன்னிட்டு, மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் ரா. கதிரவன் எம்எல்ஏ அவர்கள், திருச்சி மாவட்டம் மணப்பாறையில் அமைந்துள்ள தந்தை பெரியாரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்வும் நடைபெற்றது. இந்நிகழ்வில் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூராட்சி அணி அமைப்பாளர்கள், கழகத் தோழர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.1
- பிரதமர் மோடியின் பிறந்தநாள்: மணப்பாறையில் பாஜக சார்பில் சிறப்பு வழிபாடு மற்றும் இனிப்பு வழங்கி கொண்டாட்டம் திருச்சி மாவட்டம் மணப்பாறை யில் பாரத பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளையொட்டி, மணப்பாறை நகர பாரதிய ஜனதா கட்சி சார்பில் சிறப்பு வழிபாடுகள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கும் நிகழ்வு வெகுவிமர்சையாக நடைபெற்றது. மணப்பாறை நகரப் பொறுப்பாளர்கள் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இந்நிகழ்வின் தொடக்கமாக, அருள்மிகு வேப்பிலை மாரியம்மன் திருக்கோவிலில் பிரதமர் மோடியின் பெயரில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்படடு, அவரது ஆயுள் மற்றும் ஆரோக்கியத்திற்காக சிறப்பு பிரார்த்தனை மேற்கொள்ளப்பட்டது. தனைத் தொடர்ந்து மணப்பாறை பேருந்து நிலைய வளாகத்தில் திரண்டிருந்த பொதுமக்கள், பயணிகள் மற்றும் வியாபாரிகளுக்கு பாஜகவினர் இனிப்புகளை வழங்கி பிறந்தநாளைக் கொண்டாடினர். மணப்பாறை நகரத் தலைவர் சுரேஷ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், மாநில பொதுக்குழு உறுப்பினர் லலிதா அழகப்பன், மகளிர் அணி மாவட்ட துணைத் தலைவர் ஜெயந்தி கண்ணன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் லட்சுமணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும், நகரச் செயலாளர்கள் புவனேஸ்வரி, ஜீவானந்தம், ஆரோக்கியசாமி, நகர செயற்குழு உறுப்பினர்கள் தங்கபாண்டியன், பெஸ்ட் ராமசாமி மற்றும் தகவல் தொழில்நுட்ப அணி நகரத் தலைவர் சூரிய பிரகாஷ் ராஜா உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் இதில் திரளாகக் கலந்து கொண்டனர்.3
- மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்ட அமைச்சர்கள். மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவிலில் இன்று நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் அமைச்சர்கள் விஸ்வநாதன், ரமேஷ், பெருமாள் குமார் மற்றும் எம்எல்ஏக்கள் பலர் கலந்து கொண்டனர். லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிலை சுற்றி நின்று கோபுர கலசங்களுக்கு புனித நீர் கூறும் பொழுது கரகோஷம் எழுப்பி தரிசனம் செய்தனர். கும்பாபிஷேக விழாவிற்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுமார் 6000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இன்று இரவு நான்கு மாசி வீதிகளில் சுவாமி ஊர்வலம் நடைபெறவுள்ளது.1
- புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் விநாயகர் சிலை ஊர்வலம் புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு, விநாயகர் சதுர்த்தி அன்று வைக்கப்பட்டு பூஜிக்கப்பட்ட விநாயகர் சிலையை திருமயம் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் சிறுவர்கள் ஆட்டம் பாட்டத்துடன் ஊர்வலமாக சென்று திருமயம் குளக்கரையில் கரைத்தனர்.1
- இன்று மதுரை தவிட்டுசந்தையில் புதிதாக திறக்கப்பட்ட செல்வம் கோகனட் ஷாப் இரண்டு நாட்களுக்கு முன் திறக்கப்பட்டது.இதில் ஸ்ரீமீனாட்சி கும்பாபிஷேகம் தினத்தன்று செல்வம் கோகனட் ஷாப் பக்தர்களுக்கு சிறப்பாக அன்னதானம் செய்தனர்1
- மணப்பாறையில் மாவட்ட எஸ்.பி தலைமையில் பாதுகாப்புடன் விநாயகர் சிலைகள் விசர்ஜன ஊர்வலம். திருச்சி மாவட்டம் மணப்பாறையில் கடந்த செப்டம்பர் 14-ஆம் தேதி விநாயகர் சதூர்த்தியை முன்னிட்டு மணப்பாறை, வையம்பட்டி, மருங்காபுரி பகுதிகளில் நூற்றுக்கணக்கான விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு நடைபெற்றது. இதில் பதற்றம் நிறைந்த பகுதியாக கருதப்படும் புத்தாநத்தம் பகுதிகளில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் விசர்ஜன ஊர்வலம் பலத்த போலீஸ் பாதுக்காப்புடன் நேற்று நடைபெற்றது. சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து கொண்டு வரப்பட்ட 13 விநாயகர் சிலைகள் மாரியம்மன் கோயில் பகுதியில் ஒருங்கிணைக்கப்பட்டது. விஷ்வ இந்து பரிஷத் மாநில செயற்குழு உறுப்பினர் என்.ஆர்.என்.பாண்டியன் காவிக்கொடியசைத்து துவக்கி வைத்த நிலையில், இந்து முன்னணி மாநில அமைப்பாளர் ராஜேஷ், ஒன்றிய பொதுச்செயலாளர் மணி திருகுமரன், மாவட்ட செயற்குழு குழந்தைவேல், ஆறுமுகம் ஆகியோர் முன்னிலையில் ஊர்வலம் புத்தாநத்தம் கடைவீதி வழியாக சர்ச்சைக்குரிய இடத்தை கடந்து சென்றது. ஊர்வலத்திற்கு திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பரண்டென்ட் டோங்ரே பிரவீன் உமேஸ் தலைமையில் சுமார் 500 போலீஸார் பாதுக்காப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். மணப்பாறை தாசில்தார் சுந்தரபாண்டியன், சிறப்பு தாசில்தார் சத்தியநாராயணன் ஆகியோர் மேற்பார்வையில் ஊர்வலமாக செல்லப்பட்ட சிலைகள் தெற்கு இடையப்பட்டி சுந்தரவிநாயகர் ஆலய தெப்பக்குளத்தில் கரைக்கப்பட்டது.1