Shuru
Apke Nagar Ki App…
இன்று மதுரை தவிட்டுசந்தையில் புதிதாக திறக்கப்பட்ட செல்வம் கோகனட் ஷாப் இரண்டு நாட்களுக்கு முன் திறக்கப்பட்டது.இதில் ஸ்ரீமீனாட்சி கும்பாபிஷேகம் தினத்தன்று செல்வம் கோகனட் ஷாப் பக்தர்களுக்கு சிறப்பாக அன்னதானம் செய்தனர்
GANESAN S
இன்று மதுரை தவிட்டுசந்தையில் புதிதாக திறக்கப்பட்ட செல்வம் கோகனட் ஷாப் இரண்டு நாட்களுக்கு முன் திறக்கப்பட்டது.இதில் ஸ்ரீமீனாட்சி கும்பாபிஷேகம் தினத்தன்று செல்வம் கோகனட் ஷாப் பக்தர்களுக்கு சிறப்பாக அன்னதானம் செய்தனர்
More news from தமிழ்நாடு and nearby areas
- மதுரையில் இன்று தெற்கு மாரட்வீதியில் ஸ்ரீ மீனாட்சி அம்மன் திருக்குட நன்னீராட்டு விழா மிகச்சிறப்பாக நடைபெற்றது இதில் TVK கட்சியைச்சேர்ந்த .M.M கோபிசன் MLA. அவர்கள் தலைமையில் பக்தர்களுக்கு அன்னதானம் மிகச்சிறப்பு செய்தனர்1
- மதுரை சர்வதேச விமான நிலைய விரிவாக்க பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம் - அமைச்சர் நிர்மல்குமார் ,எம்பிகள் பங்கேற்பு மதுரை சர்வதேச விமான நிலையத்தில் விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வரும் சூழலில் பணியை விரைந்து முடிப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மதுரை விமான நிலையம் கூட்ட அரங்கில் நடைபெற்றது இதில் தமிழக சட்டத்துறை அமைச்சர் சி டி ஆர் நிர்மல் குமார் எம்பிக்கள் மாணிக்கம் தாகூர்,சு. வெங்கடேசன்மதுரை விமான நிலைய இயக்குனர் முத்துக்குமரன் மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரிகள் வருவாய்த்துறையினர் இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டனர் கூட்டத்தில் விமான நிலைய பாதுகாப்பிற்கான சுற்றுச்சுவர் பணியை விரைந்து முடித்திடவும் மதுரை கப்பலூர் சுற்றுச்சாலையை மாற்றி அமைப்பதற்கான ஏற்பாடுகள் குறித்தும் விமான ஓடுபாதை விரிவாக்க பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது1
- மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்ட அமைச்சர்கள். மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவிலில் இன்று நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் அமைச்சர்கள் விஸ்வநாதன், ரமேஷ், பெருமாள் குமார் மற்றும் எம்எல்ஏக்கள் பலர் கலந்து கொண்டனர். லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிலை சுற்றி நின்று கோபுர கலசங்களுக்கு புனித நீர் கூறும் பொழுது கரகோஷம் எழுப்பி தரிசனம் செய்தனர். கும்பாபிஷேக விழாவிற்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுமார் 6000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இன்று இரவு நான்கு மாசி வீதிகளில் சுவாமி ஊர்வலம் நடைபெறவுள்ளது.1
- ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை , கிளி, பரிவட்டம் உள்ளிட்டவைகள் திருப்பதி பிரம்மோற்சவ விழாவிற்கு புறப்பட்டு சென்றது. வரும் 19 ம் தேதி சனிக்கிழமை கருட சேவையன்று மோகினி அலங்காரத்தில் இருக்கும் பெருமாளுக்கு சாற்றப்படுகிறது. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக்களைந்த மாலை திருப்பதியில் நடைபெற்று வரும் பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வான கருட சேவையன்று பெருமாளுக்கு சாற்றப்படுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் திருப்பதியில் நடைபெறும் பிரம்மோற்சவ விழாவின் கருடசேவை 19ஆம் தேதி நடைபெற உள்ளது. கருடசேவையின் மோகினி அலங்காரத்தில் இருக்கும் மலையப்பசாமி எனப்படும் பெருமாளுக்கு சாற்றபடுவதர்காக ஸ்ரீ ஆண்டாளுக்கு சூடிய மாலை, கிளி, பரிவட்டம் ஆகியவைகள் திருப்பதி புறப்பட்டு சென்றது. முன்னதாக நாளை வெள்ளிக்கிழமை (18 ஆம் தேதி) அன்று மாலை தோமாலை சேவையில் திருப்பதி மூலவருக்கு ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை, கிளி உள்ளிட்டவைகள் சாற்றப்படும். இதனை முன்னிட்டு இன்று காலையில் ஸ்ரீ ஆண்டாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் செய்யப்பட்டு பூஜைகள் நடிபெற்றது. தொடர்ந்து மாலைக் கிளி பரிவட்டம் உள்ளிட்டவர்களை பெற்றுக்கொண்ட ஸ்தானிகர் கிச்சப்பன் திருக்கோவில் பிரகாரத்தை சுற்றி வந்து காரில் வைத்து திருப்பதிக்கு அனுப்பி வைக்கப்பட்டது1
- சிவகங்கையில் அருகே இரட்டை கொலை வழக்கில் உண்மை குற்றவாளிகளை கைது செய்ய கோரி 3 மணி நேரத்திற்கும் மேலாக சாலை மறியல் – போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சிவகங்கை அருகே கொடிக்காடு கண்மாயில் இரண்டு இளைஞர்கள் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் மாவட்டம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த வழக்கில் உண்மை குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி உயிரிழந்தவர்களின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் இன்று சிவகங்கை அரண்மனை வாயில் பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த வழக்கில் தொடர்புடையதாக ஐந்து பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில், கைது செய்யப்பட்டவர்கள் கூலிப்படையினர் என்றும், தவறான நபர்களை அடையாளம் கண்டு கொலை செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் இந்த விளக்கத்தை ஏற்க மறுத்துள்ள உறவினர்கள், சம்பவத்தின் பின்னணியில் உள்ள உண்மை குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். மேலும், உயிரிழந்த இருவரின் குடும்பத்தினருக்கும் தலா ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும், குடும்ப உறுப்பினர்களுக்கு அரசு வேலை வழங்க வேண்டும், மாவட்ட ஆட்சியர் நேரில் வந்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சிவகங்கை பேருந்து நிலையம் அருகே நடைபெற்று வரும் இந்த சாலை மறியல் காரணமாக முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. மூன்று மணி நேரத்திற்கும் மேலாக நீடித்து வரும் போராட்டத்தால் பயணிகள், வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். போராட்டக்காரர்களிடம் வருவாய் கோட்டாட்சியர் வட்டாட்சியர் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியும் தோல்வியில் முடிந்தது. இந்நிலையில், உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு இன்னும் உடற்கூறு ஆய்வு நடைபெறாததால், நிலவும் பதற்றத்தை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை விரைந்து நடவடிக்கை எடுத்து பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக சிவகங்கை மாவட்டம் முழுவதும் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.1
- சிங்கம்புணரியில் 32-ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விஜர்சன ஊர்வலம் ஆட்டம் பாட்டத்துடன் விமர்சையாக நடந்தது சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் இந்து முன்னனி நடத்திய 32-ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விஜர்சன ஊர்வலம் பிரம்மாண்டமாக நடைபெற்றது. தொழிலதிபர் ஆர்.எம்.எஸ்.சரவணன் கொடி அசைத்து துவக்கி வைத்தார். 9 முதல் 16 அடி உயரமுள்ள 46 விநாயகர் சிலைகள் மின்னொளியில் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டன. சேவுகப்பெருமாள் அய்யனார் கோவில் தெப்பக்குளத்தில் சிலைகள் விஜர்சனம் செய்யப்பட்டன. பாதுகாப்பில் 200க்கும் மேற்பட்ட போலீசார் பணியாற்றினர்.1
- தேனி மாவட்டம் முழுவதும் மழை... வைகை அணைக்கான நீர்வரத்து அதிகரிப்பு... அணை நீர்மட்டமும் 41 அடியாக உயர்ந்ததால் 5 மாவட்ட விவசாயிகள், மக்கள் மகிழ்ச்சி தேனி மாவட்டம் முழுவதும் கடந்த சில மாதங்களாக நிலவிய வறட்சி காரணமாக இதுவரை 5 மாவட்டங்களின் நீர்ஆதாரமாக விளங்கும் வைகை அணை முன் எப்போதும் இல்லாத அளவில் அடியோடு வறண்டது. இதனால் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டதுடன் வைகை அணையில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் திறக்கப்படும் முதல்போக பாசனத்திற்கான தண்ணீர் இதுவரையில் திறக்கப்படவே இல்லை. அதே நேரம் முல்லைப் பெரியாறு அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீரின் மூலம் வைகை அணை சீராக உயர்ந்து வந்தது. இந்த நிலையில் தேனி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பரவலாக பலத்த மழை பெய்தது. இந்த மழையின் காரணமாக வைகை அணைக்கான நீர்வரத்து பல மாதங்களுக்கு பிறகு அதிகரித்தது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு வினாடிக்கு 260 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை வினாடிக்கு 608 கனஅடியாக அதிகரித்துள்ளது. அதேபோல 71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டமும் 41 அடியாக உயர்ந்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் வருகிற 21ந்தேதி வரையில் பலத்த மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதால் இனிவரும் நாட்களில் வைகை அணைக்கான நீர்வரத்து மேலும் அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேனி மாவட்டம் முழுவதும் பெய்த மழையின் காரணமாக வைகை அணைக்கான நீர்வரத்து அதகரித்து நீர்மட்டம் உயர்ந்து வருவது 5 மாவட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.1
- இன்று மதுரை தவிட்டுசந்தையில் புதிதாக திறக்கப்பட்ட செல்வம் கோகனட் ஷாப் இரண்டு நாட்களுக்கு முன் திறக்கப்பட்டது.இதில் ஸ்ரீமீனாட்சி கும்பாபிஷேகம் தினத்தன்று செல்வம் கோகனட் ஷாப் பக்தர்களுக்கு சிறப்பாக அன்னதானம் செய்தனர்1