தர்மபுரி தேர்தல் அலுவலர் சதீஷ் தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்து பேட்டி வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் புதிய வாக்களர்களை வாக்களிக்க தேவையான அனைத்து விழிப்புணர்வு மற்றும் வாக்களிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 85 வயதிற்க்கு மேற்பட்ட 9541 வாக்காளர்கள் தருமபுரி மாவட்டத்தில் உள்ளனர். இந்திய தேர்தல் ஆணைய அறிவுறுத்தலின் படி அவர்கள் தபால் ஓட்டுக்களை பயன்படுத்திக் கொள்ளலாம். வாக்குசாவடி மையத்தில் நேரடியாக சென்று வாக்களிக்க விரும்பினாலும் நேரடியாக சென்று வாக்களிக்கலாம், 11345 மாற்றுதிறனாளி வாக்களர்கள் உள்ளனர். 1596 வாக்குசாவடிகளிலும் அவர்களுக்கு தேவையான சாய்வுதளம், சக்கர நாற்காலி உள்ளிட்ட தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ளன, மேலும் மாற்று திறனாளிகளுக்கும் தபால் வாக்குகள் தரப்பட்டு அவர்கள் ஜனநாயக கடமையை ஆற்ற வழிவகை செய்யப்பட்டுள்ளது. முப்படை ரானுவத்தில் பணியாற்றும் 1601 வாக்களர்களுக்கும் தபால் மூலம் வாக்களிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மனு தாக்கல் நிறைவடையும் 10 தினங்களுக்கு முன்னர் வரை படிவம், 6, 7, 8 மூலம் புதிய இளம் வாக்காளர்களை சேர்த்து கொள்ள முடியும், வாக்களர்கள் வாக்களிக்க வசதியாக புதிய நடைமுறைகளை மேற்கொண்டுள்ளது, தருமபுரி மாவட்டத்தில் வாக்கு சதவீதத்தை அதிகப்படுத்த அனைத்து வாக்களர்களுக்கும் தேவையான வசதிகள் தங்கு தடையின்றி செய்து தரப்படும், ஒவ்வொரு வாக்குசாவடியிலும் 1500 லிருந்து 1200 வாக்களர்களாக குறைக்கப்பட்டுள்ளது இதன் மூலம் வாக்காளர்கள் எளிதில் வாக்களித்து விட்டு செல்ல முடியும், மாவட்டத்தில் உள்ள 1596 வாக்குசாவடிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது, இதன் மூலம் மக்கள் யாருடையை அச்சுறுத்தலும் இன்றி தைரியமாக வாக்களித்து செல்ல முடியும், வாக்களர்கள் பகுதி எண், பாகம் எண், எளிதாக கண்டறியும் வாக்கு சீட்டின் வலது புறத்தில் பெரிய எழுத்துக்களில் அச்சிடப்பட்டுள்ளது. செல்போன்களை வாக்குசாவடி மையத்திற்க்குள் அனுமதி இல்லை என்பதால் செல்போன்கள் பாதுகாக்க வாக்கு சாவடி வெளியே தனி கவுண்டர் அமைக்கப்பட்டுள்ளது, வாக்களர்கள் செல்போனை அங்கே ஒப்படைத்து விட்டு வாக்கு செலுத்தி விட்டு திரும்பி செல்லும் போது பெற்றுக் கொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வாக்குசாவடி மையத்தில் இருந்து 100 மீட்டர் தொலைவிற்க்கு அப்பால் தான் மற்றவர்கள் இருக்க வேண்டும், வாக்களர்கள் மட்டுமே அதனை தாண்டி வர முடியும், இந்த முறை வாக்கு பதிவு இயந்திரத்தில் வேட்பாளர்களின் கலர் புகைப்படபம் இடம் பெற்றுள்ளதால் வேட்பாளர்களை எளிதில் அடையாளம் காண வழிவகை செய்யப்பட்டுள்ளது. தேர்தல் முடிந்ததும் அனைத்து வாக்குசாவடி முகவர்களுக்கும் 17 சி என்றபடிவம் வழங்கப்படும், பெண்கள், மற்றும் வயதானவர்களுக்கு தனி வரிசை அமைக்கப்படும், ஒரே மையத்தில் 5 க்கு மேற்பட்ட வாக்கு சாவடி மையங்கள் இருந்தால் வார்டுகள் கண்டறியும் வகையில் பல வண்ணங்களில் அமைக்கப்படும், அனைத்து வசதிகள் மற்றும் துணை ராணுவ படையினரின் பாதுகாப்புடன் தேர்தல் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 130 வாக்குசாவடிகள் பதட்டமான வாக்கு சாவடிகள் என கண்டறியப்பட்டுள்ளது, அதற்கு தேவையான சி.ஆர்.பி.எப் வீரர்கள் உள்ளனர்.அத்தகைய வாக்குசாவடிகள் தொடர்ந்து கண்காணிக்ப்பட்டு வருகிறது, 12 ஆயிரம் அலுவலர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தருமபுரி மாவட்டத்தில் 11 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. மாவட்ட எல்லை வன பகுதியில் உள்ளது அப்பகுதியில் உள்ள சாலைகளையும் கண்காணிப்பு கேமரா மூலம் காண்காணித்து வருகிறோம். 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் பணம் எடுத்து செல்பவர்கள் உரிய ஆவனத்துடன் எடுத்து செல்ல வேண்டும். உரிய ஆவனமின்றி எடுத்து செல்லும் பணம் தங்க நகை பரிசு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு கணக்கில் வைக்கப்படும், உரிய ஆவணங்கள் காட்டி பெற்று செல்லலாம். தர்மபுரி மாவட்டத்தில் கோட்டூர் மலை, ஏரிமலை கிராமங்களுக்கு இதற்கு முன்னர் வாக்கு எந்திரங்களை கழுதைகள் மூலம் கொண்டு செல்லப்பட்டன, தற்போது டிராக்டர் மூலம் எடுத்து செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, தேர்தல் தொடர்பான புகார்களை சி.விஜில் என்ற ஆப்பிலும், 9443947017 என்ற செல்போனில் எண்ணிலும் தகவல் தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

- தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததால், தமிழக அரசு அலுவலகங்களில் உள்ள முதல்வர் படங்கள் அகற்றப்பட்டு வருகின்றன. இதன் தொடர்ச்சியாக, சேலத்தில் சேலம் தெற்கு, மேற்கு, வடக்கு மற்றும் வீரபாண்டி ஆகிய நான்கு சட்டமன்ற உறுப்பினர்களின் அலுவலகங்களுக்கு அதிகாரிகள் அதிரடியாக சீல் வைத்தனர். தேர்தல் முடியும் வரை இந்த அலுவலகங்கள் செயல்பாட்டில் இருக்காது என அறிவிக்கப்பட்டு, அங்குள்ள பெயர் பலகைகளும் மறைக்கப்பட்டுள்ளன.1
- சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் ஒவ்வொரு திங்கட்கிழமையும் நடைபெறும் சிறப்பு குறை தீர்ப்பு முகாமில் வருகை தரும் பொதுமக்கள் அதிகாரிகளிடம் புகார் மனுக்களை நேரடியாக கொடுப்பது வழக்கம். இந்நிலையில் நேற்று முதல் தேர்தல் விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளதால், இன்று திங்கட்கிழமை ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்திருந்த பொதுமக்கள் தங்களுடைய கோரிக்கை மனுக்களை அதிகாரிகளிடம் நேரடியாக வழங்க முடியாமல், அலுவலக வளாகத்தில் வைக்கப்பட்ட புதிய புகார் பெட்டியில் தங்களது கோரிக்கை மனுக்களை செலுத்தினர். இதுகுறித்து அரசு துறை அதிகாரிகள் கூறும்போது, தேர்தல் நடத்தை விதிமுறைகள் தொடர்வதால், பொதுமக்கள் தங்களுடைய கோரிக்கை மனுக்களை அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள சிறப்பு புகார் பெட்டியில் தங்களது மனுக்களை செலுத்தலாம் எனவும், பொதுமக்கள் செலுத்திய மனுக்கள் மீது தேர்தல் முடிந்து, தேர்தல் நடத்தை விதிமுறைகள் வாபஸ் வாங்கிய பிறகு அனைத்து மனுக்கள் மீதும் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் அதிகாரிகளிடம் நேரடியாக மனுக்களை வழங்கலாம் என்று வந்திருந்த ஏராளமான பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்லும் நிலை ஏற்பட்டது.1
- திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் புதிய பேருந்து நிலையம் எதிரே உள்ள அம்பேத்கர் சிலை அருகில் கேஸ் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதை கண்டித்து ஒன்றிய பாஜக மற்றும் கூட்டணி கட்சிகளை கண்டித்து திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி கட்சி நிர்வாகிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் செங்கம் சட்டமன்ற உறுப்பினர் முபெ கிரி தலைமையில் நகர செயலாளர் அன்பழகன் நகர் மன்ற தலைவர் சாதிக் பாஷா ஒன்றிய துணை செயலாளர் செந்தில் முன்னாள் பேரூர் மன்ற தலைவர் சென்னம்மாள் முருகன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் ஏராளமான கலந்து கொண்டனர்1
- திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் தொகுதி தேர்தல் பறக்கும் படை (இன்று மார்ச் 16) ஆம்பூர் தொகுதி தோலப் பள்ளி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர் அப்போது குருராஜாபாளையம் பகுதியை சேர்ந்த அஇஅதிமுக ஒன்றிய செயலாளர் ஜோதி ராம லிங்க ராஜா என்பவரின் காரில் ரூபாய் ஒரு லட்சம் பறிமுதல் செய்து ஆம்பூர் தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரி போஷன் குமார் என்பவரிடம் ஒப்படைத்த பறக்கும் படையினர்1
- Post by R. Suresh1
- ஐயா எங்கு ஊரில் சிந்தாமணிப்பட்டி அருகில் சிந்தாமணிப்பட்டி டு பாளையம் நெடு சாலை அருகில் குடிநீர் பை குடைந்து போகி விட்டது குடிநீர் வீணாக செல்கின்றது உடனடியாக இந்த பைப் சரி பார்க்க வேண்டும் கேட்டுக்கொள்கிறோம் நன்றி நன்றி நன்றி3
- தமிழக சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 23ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், இன்று முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வருவதாக இந்திய தலைமை தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளதை தொடர்ந்து, சேலம் மாநகராட்சி அஸ்தம்பட்டி மண்டல அலுவலகம் அருகே ஒட்டப்பட்டுள்ள அரசியல் கட்சிகளின் போஸ்டர்கள் மற்றும் அரசு சார்ந்த விளம்பர பேனர்கள் அகற்றப்பட்டன. மேலும் அஸ்தம்பட்டி மண்டல அலுவலகத்தில் வைக்கப்பட்ட முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் முன்னாள் அமைச்சர் கருணாநிதி புகைப்படங்களும் அரசு அதிகாரிகளால் அகற்றப்பட்டது. இதனால் இன்று மாலையில் இருந்தே சேலம் மற்றும் அதன் சுற்றுவட்டார அனைத்து பகுதிகளிலும் மாநகராட்சி ஊழியர்கள் அரசியல் கட்சியின் போஸ்டர்கள் மற்றும் பேனர்கள் புகைப்படங்களை அகற்றி வருவது குறிப்பிடத்தக்கது.1
- தேர்தல் தேதி அறிவித்ததை ஒட்டி கரூர் மாவட்டம் குளித்தலை காவல் நிலையத்துக்கு உட்பட்ட மருதூர் வாகன சோதனை சாவடியில் குளித்தலை டிஎஸ்பி செந்தில்குமார் தலைமையில் வாகனங்களில் சட்டத்துக்கு புறம்பாக பண பரிவர்த்தனை ஏதும் நடைபெறுகிறதா என்று சோதனை செய்த குளித்தலை போலீசார்1
- தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ள நிலையில் 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்படும் பணம் தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்படுகிறது. அந்த வகையில் குமரன் சாலையில் பறக்கும் படையினரின் வாகன தணிக்கையின் போது பொள்ளாச்சியில் இருந்து உரிய ஆவணங்கள் இல்லாமல் கார்த்திகேயன் என்பவர் கொண்டுவந்த 6 லட்ச ரூபாயை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.1